29 செப்., 2018

புத்தகப்பிரியர்களுக்காக-1: காரைக்குடி புத்தகத் திருவிழா

ஹோமியோ செய்தி-1:

குட்டிக்கதை-18: நம்பிக்கை வை

*நம்பிக்கை வை*

ஒரு முறை "சிவனும் பார்வதியும்" பேசிக்கொண்டிருந்தார்கள்.
அப்போது பார்வதி கேட்டார் .
“ஐயனே கங்கையில் குளித்தால் அனைவருக்கும் மோட்சம் என சொல்கிறார்களே?
குளிக்கும் அத்தனை பேரும் மோட்சத்துக்கு வந்தால் மோட்சம் தாங்காதே,
அது ஏன் அப்படி நடக்கவில்லை? “ என கேட்டார்.
சிவன் சொன்னார் ”அது ஏன் எனும் காரணத்தை விளக்குகிறேன் என்னோடு வா,
ஆனால் இப்படியே வராதே இருவரும் வயதான பெரியவர்களாக போவோம் வா” என அழைத்து சென்றார்.

கங்கைக்கரையினை அடைந்த சிவன் ”நான் இப்போது கங்கையில் விழுந்து விடுவேன் நீ உதவிக்கு யாரையாவது கூப்பிடு ஆனால் இது வரை பாவமே செய்யாதவர்கள் மட்டுமே வந்து காப்பாற்றுங்கள் என்று சொல் "
என கூறிச்சென்று ஆற்றில் விழுந்ததை போல நடித்தார்.
உடன் பார்வதி தேவி அங்கிருந்தவர்களை உதவிக்கு அழைத்தார்.
அழைத்தவுடன் ஓடி வந்தவர்களிடம் தேவி ”பாவம் செய்யாதவர்கள் மட்டும் போய் காப்பாற்றுங்கள்” என கூறினார்.
உடனே ஓடி வந்தவர்கள் அனைவரும் பின்வாங்கினார்கள்,
அனைவரும் தயங்கி தயங்கி செய்வதறியாது சிலையென நின்றார்கள்.
சிவபெருமானோ நன்றாகவே நடித்து கொண்டிருந்தார்.
அப்போது எங்கிருந்தோ ஓடி வந்த இளைஞன் ஒருவன் ஓடி சென்று சிவபெருமானை காப்பாற்றி கரை சேர்த்தான்.
மக்களுக்கு எல்லாம் அதிர்ச்சி எப்படி ஒருவன் பாவமே செய்யாமல் இருக்க முடியும் ?
என நினைத்து அவனை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
உடன் பார்வதி அன்னை
“ அப்பா நீ பாவமே செய்யவில்லையா? “
என வினவினார்.
"அவன் சொன்னான்”
எனக்கு எதுவுமே தெரியாது அம்மா.
கங்கையில் குளித்தால் பாவம் போகுமென கேள்விப்பட்டு இருக்கிறேன்.
அப்படியிருக்கும்போது கங்கையில் இறங்கியவுடன் என் பாவங்கள் மறைந்து விடுமல்லவா அப்புறம் என்னால் அவரை காப்பாற்ற முடியுமென நினைத்தேன்.
நம்பி செய்தேன் அவ்வளவுதான் அம்மா” என்றான்.
முதியவராகிய சிவபெருமான் சொன்னார்.
" குளிக்கும் அனைவரும் நம்பிக்கையோடு குளிப்பதில்லை கடமைக்கு தான் கங்கை ஸ்நானம் செய்கிறார்கள்."
"நம்பி செய்பவர்கள் மட்டுமே மோட்சம் போக முடியுமென்பது அவர்களுக்கு தெரியாது அதனால் தான் மோட்சம் நிரம்பவேயில்லை

"" மனதார நம்பியவர்க்கு மட்டுமே நம்பிவேண்டிய அனைத்தும் கிடைக்கும்..

நலக்குறிப்புகள்-99: தேன் நெல்லி

எங்கள் தமிழகம்-10:

அன்றாட வாழ்வில் அபாயங்கள்-23: கதிரியக்க ஆபத்து

🌾 *பள்ளி சிறுமிகள்* 5 பேர் தங்கள் வகுப்புத் தேர்வுக்காக செய்த ஒரு சிறிய ஆராய்ச்சி, *உலக உயிரியல் மற்றும் கதிரியக்க விஞ்ஞானிகளின்* கவனத்தை அவர்கள் பக்கம் திருப்பியுள்ளது.

🌾 டென்மார்க் நாட்டில் உள்ள வடக்கு ஜட்லேண்ட் தீவில் *9-ஆம் வகுப்பு படிக்கும் 5 மாணவிகளுக்கு உயிரியல் வகுப்பில் செய்முறைத் தேர்வு வந்தது*.

🌾 அந்த செய்முறைத் தேர்வுக்கு சிறிய அளவில் ஆய்வை மேற்கொள்ளத் திட்டமிட்டனர்.

🌾ஐந்து மாணவிகளும் *ஸெஸ்* எனப்படும் *புல்வகையில் 400 விதைகளை 12 தட்டுகளில்* விதைத்தனர்.

🌾 *தட்டுகளை ஆறு ஆறாகப் பிரித்து, ஆறு தட்டுகளை சாதாரண அறையில் வைத்தனர்*.

🌾 *மீதம் ஆறு தட்டுகளை வைஃபை கருவி உள்ள அறையில் வைத்தனர்.*

👉இந்த வைஃபை கருவியும் செல்போன் வெளியேற்றும் அதே அளவிலான கதிர் வீச்சைத் தான் வெளியேற்றும்.

🌾இரண்டு அறைகளில் உள்ள தட்டுகளுக்கும் *ஒரே அளவிலான தண்ணீர், சூரிய ஒளி* ஆகியவற்றை அளித்தனர்.

🌾12 நாள்களுக்குப் பின்னர் ஆய்வு முடிவுகளைப் பார்த்த சிறுமிகள் வியந்துவிட்டனர்.

🌾 *சாதாரண அறையில் வைத்திருந்த தட்டுகளில் உள்ள விதைகள் முளைத்து செழிப்பாக வளர்ந்திருந்தன.*

🌾 *வைஃபை கருவி உள்ள அறையில்* *வைத்திருந்த தட்டுகளில் விதைக்கப்பட்ட விதைகள்* *வளராமலும், சில விதைகள் அழுகி உயிரிழந்தும் போயிருந்தன*.

🌾 இந்த ஆய்வு முடிவுகள் உலக அளவில் உள்ள ஆராய்ச்சியாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

🌾இங்கிலாந்து, ஹாலேண்ட், ஸ்வீடன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த ஆய்வை பெரிய அளவில் மேற்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.

🌾ஸ்வீடன் நாட்டிலுள்ள கரோலின்ஸ்கா மருத்துவப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஓல் ஜொஹன்சன் என்ற பேராசிரியர் இது குறித்து கூறுகையில், *"இந்தச் சிறுமிகள் மிகவும் புத்திசாலித்தனமாகவும் நேர்த்தியாகவும் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளனர்*.

🌾 இதுபற்றி மாணவிகள் கூறியது,
"எங்களில் சிலர் இரவில் செல்போனை அருகில் வைத்துக் கொண்டே தூங்குவதால் அடுத்த நாள் வகுப்பைக் கவனிப்பதில் சிரமம் ஏற்பட்டது.

🌾சிலருக்கு செல்போன் இரவில் அருகில் இருப்பதால் தூங்குவதில் பிரச்னை இருந்தது.

இதுகுறித்து சாதாரணமாக பேசிக் கொண்டிருக்கையில், அதைப் பற்றியே ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

🌾தற்போது இந்த ஆய்வு முடிவுகளைப் பார்த்த பிறகு யாரும் *செல்போனை அருகில் வைத்துக்கொண்டு தூங்க மாட்டோம். செல்போன், லேப்டாப் உள்ளிட்டவற்றை வேறு அறையில் வைத்துவிட வேண்டும் அல்லது தூரமாக வைத்து விட வேண்டும் என்று முடிவு செய்துள்ளோம்*.

🌾 வைஃபை கருவிக்கு அருகில் உங்கள் படுக்கை இருந்தாலும் அதனை உடனே மாற்றிவிடுங்கள்.

தூங்கும்போது தொழில்நுட்ப கருவிகளுக்கு விடை கொடுங்கள்'' என்கின்றனர் அந்தச் சிறுமிகள்.

சிறிய புல்லுக்கு விதைத்த விதை மிகப்பெரிய மரமாக முளைத்துள்ளது!

👤📝 *அன்புடன்: சங்கீதா, ஆங்கில பட்டதாரி ஆசிரியர். சேலம்.*

வீட்டுக் குறிப்புகள்-34:

வேதனைச் செய்திகள்-8:

இன்று ஒரு தகவல்-99: அமெரிக்கா செல்வதற்கு கொடுக்கும் விலைகள்


அமெரிக்கா செல்வதற்கு கொடுக்கும் மறைமுகமான விலைகள் சில உண்டு. அவற்றைப் புரிந்துகொண்டு செல்லுங்கள்.

அவை:

1. திரும்ப வரமாட்டீர்கள்…

இது கட்டாயம், நூறு சதவிகிதம் நிகழும் ஒரு விளைவு.
போய்விட்டு படிப்பு முடித்துவிட்டு உடனே வருகிறேன் என்று சொல்வதெல்லாம் பொய். அந்த நாடு உங்கள் மேல் படரும் நாடு. ஒரு ஆக்டோபஸ், அல்லது மலைப்பாம்பின் இறுக்கம் போல அது உங்களை விடாது. அதன் கிரெடிட் கார்டு சமூகத்தில் உங்களை மூன்றாவது தலைமுறை வரை கடன் வாங்க வைத்துவிடுவார்கள். மீளவே முடியாத கடன் சொர்க்கம் அது. அதைத் தெளிவாக அறிந்து கொள்ளுங்கள்.

2. அங்கே போனபின் உறவு, பாசம் இவற்றுக்கெல்லாம் புதிய அர்த்தங்கள் தோன்றும்.

எதற்காக அப்பா அம்மாவைக் கவனித்துக்கொள்ள வேண்டும். அவர்கள் கடமையைச் செய்தார்கள். வருஷம் ஒரு முறை ஃபாதர்ஸ் டே, மதர்ஸ் டே கார்டு அனுப்பினால் போதுமே… அல்லது அவ்வப்போது நூறு டாலர், இருநூறு டாலர்… இப்படித் தோன்றும் இந்த எண்ணத்தையும் தவிர்க்க முடியாது. குறிப்பாக, பிசுநாரித்தனம் அங்கு கொஞ்சம் அதிகமாகும்.

3. அங்கே போய் நிறைய சம்பாதிக்கத் தொடங்கியதும் இந்திய விஷயங்கள் மேல் ஒரு ஏளனம் தோன்றும்.

என்னப்பா உங்க ஊர்ல சரியா ஒரு டாய்லெட் கட்டமாட்டாங்களா. வாட் ட்ராஃபிக்! ஐம் கெட்டிங் ம்யாட். ரோடுல ஒண்ணுக்கு போறவரைக்கும் உங்க தேசம் உருப்படாது… (கவனிக்கவும் உங்க ஊர்....உங்க தேசம்)

4. தமிழ் பேசும் வழக்கத்தையும் மெள்ள இழக்க வேண்டியிருக்கும்.

நாங்கள் தமிழில் பேசினால் நீங்கள் இங்கிலீஷில் பதில் சொல்வீர்கள். நாளடைவில் தமிழ் படிக்கவே மறந்து போய்விட்டது என்று புளுகுவீர்கள். இந்தப் பக்கவிளைவுகள் எல்லாம் பரவாயில்லை என்றால் தாராளமாக வெளிநாடு செல்லுங்கள்.

அண்மையில் நான் ஹாசன் சென்றிருந்தேன். கர்நாடக மாநிலத்தின் மத்தியில் உள்ள சிறிய டவுன். அங்கே இன்சாட் 2-இ செயற்கைக்கோளின் கட்டுப்பாட்டுக் கேந்திரம் உள்ளது. பல இளம் இன்ஜினீயர்களைச் சந்தித்தேன்.

24 மணி நேரமும் இந்தியாவின் செயற்கைக்கோளை திசை பிசகாமல் கட்டுப்படுத்தும் ஷிஃப்ட் வேலை பார்க்கிறார்கள். அவர்களில் ஒருவரைக் கேட்டேன். அமெரிக்கா போயிருக்கலாமே…

அவர், போயிருக்கலாம். அட்மிஷன் கூட கிடைத்தது, ஸ்காலர்ஷிப்புடன் என்றார்.
ஏன் போகலை?

எல்லாரும் போய்ட்டா எப்படி? ஒன்றிரண்டு பேர் தங்கி நாட்டுக்கு சேவை செய்ய வேண்டாமா? என்றார்.

கார்கிலிலிருந்து துவங்கி நம் பிற்பட்ட கிராமங்களில் வயற்புறங்கள் வரை பணிபுரியும் இளைஞர்கள் இருக்கிறார்கள். இவர்கள் மேல்தான் எனக்கு மரியாதை. என்னைக் கேட்டால் இங்கேயே இருந்துகொண்டு எல்லா அசௌகரியங்களுக்கு மத்தியிலும் எதாவது சாதிக்கும் இளைஞர்கள் இந்நாட்டின் கண்கள்… நீங்களோ, நீங்கள் அனுப்பப்போகும் டாலரோ அல்ல! தாராளமாக செல்லுங்கள். சம்பாதியுங்கள். ஆனால், இந்தியாவைக் கேலி செய்யாதீர்கள்.

- சுஜாதா

நன்றி: திரு பிரகாஷ் ராமசாமி

ஆன்மீக சிந்தனை-100:

மனிதனுக்குள் இருக்கும் தெய்வீக இயல்பை வெளிப்படுத்துதற்கான ஒரே வழி துன்பப்படுவோர்க்கு உதவுவதுதான் - சுவாமி விவேகானந்தர்

எங்கள் இந்தியா-8: கருக்கலைப்பு

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 80 லட்சம் கருக்கலைப்பு செய்யப்படுகிறது.

80 சதவிகிதம் பெண்களுக்கு கருக்கலைப்பு பற்றிய சட்டம் பற்றித் தெரியாது.

பாதுகாப்பற்ற முறையில் செய்யப்படும் கருக்கலைப்பு காரணமாக இந்தியாவில் தினம் 10 பெண்கள் இறக்கின்றனர்.

நன்றி: ஜெ.நிவேதா

புதிர்கள்-4:

நன்றி: www.puthisali.com

வாவ்! படங்கள்-8:

படித்தேன்-4: ஜெயமோகனின், "இன்றைய காந்தி"

இன்றைய காந்தி - ஜெயமோகன்

ஜெயமோகன் அவர்களைப் பற்றிப் பேசும்போதெல்லாம் பிரமிப்பு என்ற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்துகிறேன். இதுவும் அவரது பிரமிக்கத்தக்க படைப்பே. தெளிவான சிந்தனை, ஆழமான புரிதல், எளிய நடை. மகாத்மாவைப் பற்றி அவர் நிறையப் படித்திருக்க வேண்டும், ஆழமாகச் சிந்தித்திருக்க வேண்டும். கண்மூடித்தனமாக அவரை வழிபடுபவர்கள், வெறுப்பவர்கள், அவதூறு பேசுபவர்கள் மத்தியில் அவரைப் பற்றிய ஒரு பாரபட்சமற்ற உண்மையான சித்திரத்தைத் தந்துள்ளார்.

என்னைப் பொறுத்தவரை இந்த வாசிப்பு காந்தி ஒரு மகாத்மா, ஒரு மகான் என்பதை ஒரு சரியான புரிதலோடு உறுதி செய்துகொள்ள உதவியுள்ளது. காந்தியை எனக்கு இன்னும் நெருக்கமானவராக உணரமுடிகிறது.

ஜெயமோகன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியும், பாராட்டுக்களும்.

அனைவரும் படிக்கவேண்டிய அற்புதமான புத்தகம்.

இன்றைய சிந்தனைக்கு-233:

பயனுள்ள குறிப்புகள்-16:

சுற்றுச்சூழல்-11:

24 செப்., 2018

அன்றாட வாழ்வில் அபாயங்கள்-22: சிஎஃப்எல் பல்புகள்

எங்கள் தமிழகம்-9: பனை நடுவோம்

பனை மரங்கள் நடுவோம்,
தமிழகம் பாலைவனம் ஆகாமல்
தடுப்போம்!

வேதனைச் செய்திகள்-7:

இன்று ஒரு தகவல்-98:

விநாயகரை ‘விதை’ நாயகர் ஆக்கிய தொண்டு நிறுவனம்... 

இளைஞர் சுவரஜித் கோவையில் நடத்தும் தொண்டு நிறுவனம் ’So Aware’ இயற்கையைக் காக்க புது முயற்சியாக விதை விநாயகர் சிலைகளை தயாரிக்கின்றனர்.

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளுள் ஒன்று விநாயகர் சதுர்த்தி. சென்ற 13ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது. வண்ண வண்ண பளபளக்கும் பிள்ளையார் சிலைகள் கடைகளில் விற்பனை செய்யப்பட்டன.

ஆனால் விநாயகர் சிலைகளை கடல், குளம், குட்டைகளில் கரைப்பது ஆண்டுதோறும் சர்ச்சைகளை ஏற்படுத்துகிறது. இரசாயனங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதால் ஏற்படும் மாசு குறித்து சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதற்கு ஒரு தீர்வாக கோவையைச் சேர்ந்த ‘சோ அவேர்’ தொண்டு நிறுவனத்தினர் ‘கிரீன் கணபதி’ எனும் விதை நாயகர் சிலையை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.

சுவரஜித் நண்பர்களோடு இணைந்து உருவாக்கிய இந்த சோ அவேர் தொண்டு நிறுவனம்.
கல்வி, உணவு, மரம் நடுதல், இயற்கை பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

பிளாஸ்டர் ஆப் பாரிஸ் போன்ற, ரசாயனப் பொருட்களை தவிர்த்து, முற்றிலும் களி மண்ணைக் கொண்டு இந்த விநாயகர் சிலைகள் வடிவமைக்கப் படுகின்றன. இந்த சிலைகளின் நடுவில் விதைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்தச் சிலைகளை விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் முடிந்தபிறகு, சிறுதொட்டியில் வைத்து நீர் ஊற்றி வர வேண்டும். 10 நிமிடத்தில் களிமண் முழுவதும் கரைந்து விடும், பின் அதன் உள்ளே இருக்கும் விதை முளைக்க ஆரம்பிக்கும். பின்னர் இதனை தொடர்ந்து தொட்டியிலோ அல்லது நிலத்திலோ நட்டு வைத்து வளர்க்கலாம்.

பாரம்பரிய கலாசாரத்தை பாதிக்காத, அதேசமயம் இயற்கைக்கு தீங்கு விளைவிக்காத இந்த விதை விநாயகர் சிலைகளுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

திரு சுவரஜித், அவரது நண்பர்கள் மற்றும் 'So Aware' அமைப்பிற்கும் நமது மனமார்ந்த பாராட்டுக்கள்.

(விநாயகர் சதுர்த்திக்கு முன்னர் வரவேண்டிய தகவல் தவிர்க்க முடியாமல் தாமதமாக பதிவிடுகிறேன். மன்னிக்கவும்)

நன்றி: ஜெயசித்ரா மற்றும் YourStory Media P Ltd

ஆன்மீக சிந்தனை-99:

அகந்தையை துறப்பவனே இறைவனின் அருளைப் பெறத் தகுதியானவன் - ரமண மகரிஷி

எங்கள் இந்தியா-7:

புதிர்கள்-3:

வாவ்! படங்கள்-7:

படித்தேன்-3: ஜெயமோகன் அவர்களின் "அறம்"

ஜெயமோகன் அவர்களின் அற்புதமான சிறுகதைகளின் தொகப்பு. உண்மை மனிதர்களின் கதை. மறக்கமுடியாத சீரிய சிறுகதைகள். அனைவரும் கட்டாயம் வாசிக்கவேண்டிய கதைகள்.

இன்றைய சிந்தனைக்கு-232:

பயனுள்ள குறிப்புகள்-15: பேசும் மேறைகள்

சுற்றுச்சூழல்-10:

சிரித்து வாழவேண்டும்-36:

வீட்டுக் குறிப்புகள்-33: துணிகள் பளிச்சிட...

நலக்குறிப்புகள்-98: செவ்வாழையின் பயன்கள்

ஆரோக்கிய உண்மைகள்-5: சாப்பிடும் முறை


*சாப்பிடும் முறை*

1.நின்று கொண்டு சாப்பிடும் பழக்கத்தை மாற்றி. குடும்பத்துடன் அமர்ந்து ஒன்றாய் சாப்பிடுங்க...

2. எந்த வகை சாப்பாடாக இருந்தாலும் நன்றாக மென்று, கூழாக்கி சாப்பிடுங்கள்...

3. பேசிக் கொண்டு, தொலைக்காட்சி, புத்தகம் பார்த்து கொண்டே சாப்பிட கூடாது...

4. சாப்பிடும் பொழுது இடையில் தேவையில்லாமல் தண்ணீர் குடிக்காதிங்க. கடைசியில் தண்ணீர் குடிக்க மறக்காதீங்க.
போதிய அளவில் தண்ணீர் பருகுங்கள்...

5. அவசர அவசரமாக சாப்பிட வேண்டாம்...

6. பிடிக்காத உணவுகளை கஷ்டபட்டு சாப்பிட வேண்டாம்...

7. பிடித்த உணவுகளை அளவுக்கு அதிகமாகவும் சாப்பிட வேண்டாம்...

8. ஆரோக்கிய உணவுகளை அதிகம் சாப்பிடப் பழகவும்...

9. இரவு உணவில், முள்ளங்கி மற்றும் கீரை உணவுகளை சேர்க்க வேண்டாம்...

10.சாப்பாட்டுக்கு அரை மணிநேரம் முன்பு பழங்கள் சாப்பிடுங்கள்... பின்பு பழங்கள் சாப்பிட வேண்டாம்...

11. சாப்பிடும் முன்பு சிறிது நடந்துவிட்டு பின்பு சாப்பிடவும். இரவு சாப்பிட்ட பின், நடப்பது நலம்...

12. சாப்பிட வேண்டிய நேரம்...காலை - 7 to 9 மணிக்குள் மதியம் - 1 to 3 மணிக்குள் இரவு - 7 to 9 மணிக்குள்

13. சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து தான் தூங்க வேண்டும்...

14. சாப்பிடும் முன்பும் பின்பும் கடவுளுக்கு நன்றி சொல்ல மறக்காதீர்கள்...

குட்டிக்கதை-17: இறைவன் ஒரு முடிவிலா உண்மை

1979 ம் வருடம்..

திருவனந்தபுரம் கடற்கரை ஓரத்தில் பெரிய மனிதர் தோரணையில் இருந்த ஒருவர் அமர்ந்து பகவத்கீதையை படித்து கொண்டிருந்தார்..

அப்போது நாத்திக இளைஞன் ஒருவன் அருகில் வந்து அமர்ந்தான்..

அந்த வயதானவரை பார்த்து இந்த விஞ்ஞான உலகில் முட்டாள்கள் தான் இந்த பழம் பஞ்சாங்கமான பகவத் கீதையை படிப்பார்கள் என கிண்டல் செய்தான்.

இதை படித்த நேரத்தில் அறிவியலை கற்றிருந்தால் இன்னேரம் நீங்கள் உலகப்புகழ் அடைந்திருக்கலாம் என்றான்...

அந்த வயதானவரோ, தம்பி நீ என்ன படித்திருக்கிறாய் ? என்றார்..

இளைஞன், நான் கொல்கத்தாவில் படித்து அறிவியல் பட்டதாரி ஆனேன். தற்போது பாபா அணு ஆராய்ச்சி கழகத்தில் ஆராய்ச்சி படிப்பில் சேர்ந்துள்ளேன் என்றான்.

நீங்களும் இப்படி வீணா கீதையை படித்து பொழுதை கழிப்பது விடுத்து அறிவியல் ஆராய்ச்சி யில் ஈடுபடலாமே என்றான்.

பதில் பேசாமல் சிரித்து கொண்டே அந்த முதியவர் எழுந்தும் எங்கிருந்தோ வேகமாக நாலு பாதுகாவலர்கள் ஓடி வந்து அவரை சுற்றி நின்றனர். விலையுயர்ந்த கார் ஒன்று மெல்ல உருண்டு வந்து அவர் பக்கத்தில் நின்றது..

அதிர்ந்து போன இளைஞன் ஐயா நீங்கள் யார் என்றான்.

அதற்கு அவரோ சிரித்து கொண்டே நான் விக்ரம் சாராபாய். பாபா அணு ஆராய்ச்சி கழகத்தின் தலைவர் என்றார்.

அந்த நேரத்தில்13 பாபா அணுமின் நிலையங்கள் இயங்கி வந்தன. அத்தனைக்கும் தலைவர் இவரே.

இப்பொழுது அதிர்ந்து போன இளைஞன் தடாலென சாராபாய் கால்களில் விழுந்தான்.

சாராபாய் சிரித்து கொண்டே கூறினார்...

தம்பி. ஒவ்வொரு படைப்பின் பின்னும் ஒரு படைப்பாளி இருக்கிறான். அது மகாபாரத காலமாக இருந்தாலும் சரி. இந்த விஞ்ஞான யுகமாக இருந்தாலும் சரி. கடவுளை மறக்காதே. இன்று நாத்திகர்கள் அறிவியல் யுகமென ஆட்டம் போடலாம். ஆனால் வரலாறு சொல்லும். அறிவியலை உருவாக்கியது கடவுள் நம்பிக்கையாளர்கள் தான் என்று. இறைவன் என்பது ஒரு முடிவில்லா உண்மை.

23 செப்., 2018

வேதனைச் செய்திகள்-6: 500 அரசு பள்ளிகள் மூடப்படும்!

500 பள்ளிகளை இழுத்து மூடுது அரசு

மாற்றம் செய்த நாள்: செப் 23,2018


தமிழகம் முழுவதும், 500 அரசு பள்ளிகளை குறைக்க, பள்ளிக்கல்வி துறை திட்டமிட்டு உள்ளது. இதற்கான கணக்கெடுப்பு பணிகள் துவங்கியுள்ளன.

மத்திய அரசின் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ், தமிழக அரசு தாக்கல் செய்த அறிக்கைப்படி, 31 ஆயிரத்து, 266 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. 

இவற்றின் உள் கட்டமைப்பு வசதிகள் மற்றும் நிர்வாக பணிகளுக்கு, மத்திய அரசிடமிருந்து, தமிழக அரசு, நிதியுதவி கேட்டுள்ளது.அப்போது, ஒரு ஆசிரியருக்குகுறைந்த பட்சம், 30 மாணவர்கள் என்ற விகிதத்தில், பள்ளிகளை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டது. 

இதன்படி கணக்கிட்டதில், 826 பள்ளிகளில், மாணவர்களின் எண்ணிக்கை விகிதத்தை விட, ஆசிரியர்களின் விகிதம் அதிகமாக உள்ளது. மாணவர் எண்ணிக்கை, 1,053 பள்ளிகளில், மிக குறைவாக உள்ளதாக, தமிழக அரசு தெரிவித்து உள்ளது.

மாணவர் குறைந்த, 1,053 பள்ளிகளையும், தலா இரண்டு அல்லது மூன்று பள்ளிகளை ஒன்றாக இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என,
மத்திய அரசுக்கு, தமிழக அரசு சமர்ப்பித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதன்படி, தற்போது இயங்கும் பள்ளிகளில், 10க்கும் குறைவான மாணவர்கள் உள்ள, 500 பள்ளிகள் மூடப்படும் என, தெரிய வந்துள்ளது.

- தினமலர் நமது நிருபர் -

நன்றி: தினமலர்

இன்று ஒரு தகவல்-97: சில முக்கிய தொலைபேசி எண்கள்

*நம் மொபைல் போனில் சேமித்து வைத்திருக்க வேண்டிய முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்...!* 📲

🗡
🚌பேருந்துகள் சரியான நேரத்திற்கு வராதது, நடத்துநர் மீதி சில்லரையைக் கொடுக்காதது அல்லது குடித்துவிட்டோ, செல்போன் பேசிக்கொண்டோ ஓட்டுநர் பேருந்தை ஓட்டுவது போன்ற புகார்களுக்கு :— 93833 37639

🗡
🛍பொருட்கள் வாங்கும் கடைகளில் ஏமாற்றப்படுகிறீர்கள் என்றால் மாநில நுகர்வோர்க்கு:-Toll Free No :- 180011400,, 94454 64748,, 72999 98002,, 72000 18001,, 044- 28592828

🗡
👴🏼👩🏻மனரீதியாக பாதிக்கப்பட்ட,ஆதரவற்ற பெண்களைப் பாதுகாக்க:- 044 – 26530504 / 26530599

🗡
👩🏻வாடகைத் தாய்களாகப் போய், புரோக்கர்களிடம்ஏமாறும் பெண்கள்– 044- 26184392 / 9171313424

🗡
🚂🚃ரயில் பயணங்களின்போது பெண்களுக்கு ஆபத்து ஏற்பட்டால்:  044-25353999 / 90031 61710 / 99625 00500

🗡
🚕ஆட்டோவில் அளவுக்கதிகமான குழந்தைகளை ஏற்றிச்சென்றால்—044-24749002 / 26744445

🗡
🏃🗣சென்னைக் கல்லூரிகளில் ராகிங் என்ற     95000 99100 ( SMS )

🗡
🗣👤மனிதஉரிமைகள் ஆணையம் ————-––      044-22410377

🗡
🚌மாநகரபேருந்தில அத்துமீறல்————–—-      09383337639

🗡
🚨🚔📲
போலீஸ் SMS :- —————————————-      9500099100

🗡
👮👞💸போலீஸ் மீது ஊழல் புகாருக்கு SMS :—-—-      9840983832

🗡
🚎போக்குவரத்து விதிமீறல் SMS : ———-—–       98400 00103

🗡
💳வங்கித் திருட்டு உதவிக்கு ———————-      9840814100

🗡
👩🏻வன்கொடுமை, பாலியல் ரீதியாக ———-      044-28551155
பெண்களுக்கான உதவி : ——-—-–———-         044-23452365

🗡
👩🏼தமிழ்நாடு மகளிர் ஆணையம் —————        044-25264568

🗡
🐯🦁🐶🐒🐘🐎🐅
விலங்குகள் பாதுகாப்பு ————————     044 – 22354959 / 22300666

🗡
👮🏽🚓போலீஸ் : —————————————–——   100

🗡
🚒தீயணைப்புத்துறை:————————-—–101

🗡
🚑ஆம்புலன்ஸ் : —————————————-        102, 108

🗡
🚌🚦போக்குவரத்து விதிமீறல———————–         103

🗡
🚌🚨விபத்து :———————————————-–           100, 103

🗡
👩🏻பெண்களுக்கான அவசர உதவி : ——-—-–        1091

🗡
👶🏻🙇குழந்தைகளுக்கானஅவசர உதவி :——-–         1098

🗡
🚨🚑அவசர காலம் மற்றும் விபத்து : ———-—        1099

🗡
👴🏼முதியோர்களுக்கான அவசர உதவி:—-—        1253

🗡
🛣🚌தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி:         1033

🗡
🏝🏖கடலோர பகுதி அவசர உதவி : ———-—–         1093

🗡
💉🌡ரத்த வங்கி அவசர உதவி : —————-—–          1910

🗡
👁👁கண் வங்கி அவசர உதவி : —————-—–          1919

🗡
📲🇮🇳நமது அலைபேசியில் 911 என்ற எண் மட்டும் எந்த நிலையிலும் எப்போதுமே, எல்லா மாநிலம், எல்லா தேசத்திலும் இயங்கும்.

📲🔐நமது அலைபேசி லாக்கில் இருந்தாலும், இந்த எண்கள் மட்டும் இயங்கும்.இது அனைத்திற்குமான அவசர உதவி எண்.

வாட்ஸ்அப்பில் கிடைத்தது