VIDEO
மனதை மாற்றி கண்ணீர் வரவைக்கும் பாடல் வரிகள்
714,337 views
Jul 11, 2017
Tamil discourse தேடல் முன்னோர்கள் வழி
29.6K subscribers
வள்ளலார் பாடல்கள் : முறையீடு
1. மருந்தறியேன் மணியறியேன் மந்திர மொன் றறியேன்
மதியறியேன் விதியறியேன் வாழ்க்கைநிலை யறியேன்
திருந்தறியேன் திருவருளின் செயலறியேன் அறந்தான்
செய்தறியேன் மனமடங்குந் திறத்தனிலோ ரிடத்தே
இருந்தறியேன் அறிந்தோரை ஏத்திடவும் அறியேன்
எந்தைபிரான் மணிமன்றம் எய்தவறி வேனோ ?
இருந்திசை சொலவறியேன் எங்ஙனம் நான் புகுவேன் ?
யார்க்குரைப்பேன் என்ன செய்வேன் எதுமறிந் திலனே !
2. அகங்காரக் கொடுங்கிழங்கை அகழ்ந்தெறிய அறியேன்
அறிவறிந்த அந்தணர்பாற் செறியுநெறி அறியேன்
நகங்காண முறுதவர்போல் நலம்புரிந்து மறியேன்
நச்சுமரக் கனிபோலே இச்சைகனிந் துழன்றேன் ;
மகங்காணும் புலவரெலாம் வந்துதொழ நடிக்கும்
மணிமன்றந் தனையடையும் வழியுமறி வேனோ ?
இகங்காணத் திரிகின்றே னெங்ஙனநான் புகுவேன் ?
யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதுமறிந் திலனே !
3. கற்குமுறை கற்றறியேன் : கற்பனகற் றறிந்த
கருத்தர்திருக் கூட்டத்திற் களித்திருக்க அறியேன் :
நிற்குநிலை நின்றடியே னின்றாரி னடித்தேன் :
நெடுங்காமப் பெருங்கடலை நீந்தும்வகை அறியேன் :
சிற்குணமாம் மணிமன்றிற் றிருநடனம் புரியுந்
திருவடியென் சென்னிமிசைச் சேர்க்கவறி வேனோ ?
இற்குணஞ்செய் துழல்கின்றே னெங்ஙனநான் புகுவேன்
யார்க்குரைப்பே னென்செய்வே னேதுமறிந் திலனே !
4. தேகமுறு பூதநிலைத் திறஞ்சிறிது மறியேன்
சித்தாந்த நிலையறியேன் சித்த நிலையறியேன் :
யோகமுறு நிலைசிறிது முணர்ந்தறியேன் சிறியேன்
உலகநடை யிடைக்கிடந்தே உழைப்பாரிற் கடையேன் :
ஆகமுறு திருநீற்றி னொளிவிளங்க அசைந்தே
அம்பலத்தி லாடுகின்ற அடியையறி வேனோ ?
ஏகவனு பவமறியே னெங்ஙனநான் புகுவேன் ?
யார்க்குரைப்பே னென்செய்வே னேதுமறிந் திலேன் !
5. வரையபர மார்க்கமொடு பரமார்க்கம் அறியேன்
மரணபயந் தவிர்த்திடுஞ்சன் மார்க்கமதை அறியேன் :
திரையறுதண் கடலறியேன் அக்கடலைக் கடந்தே
தெள்ளமுத முணவறியேன் சினமடக்க அறியேன் :
உரையுணர்வு கடந்துதிரு மணிமன்றந் தனிலே
ஒருமைநடம் புரிகின்றார் பெருமையறி வேனோ ?
இரையுறுபொய் யுலகினிடை யெங்ஙனநான் புகுவேன் ?
யார்க்குரைப்பே னென்செய்வே னேதுமறிந் திலனே
" வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் , வாடினேன் " என்று பாடிய வாள்ளலாரின் இனிமையான பாடல் வரிகள் .
இவர் பாடிய ஆறாயிரம் பாடல்களின் திரட்டு , திருவருட்பா என்று அழைக்கப்படுகிறது .
நன்றி: Tamil discourse தேடல் முன்னோர்கள் வழி மற்றும் யூட்யூப்.
வள்ளலார் ஸ்ரீராமலிங்க ஸ்வாமிகளின் திருவடிகளைப்
போற்றுகின்றேன்.