31 ஜூலை, 2018

குட்டிக்கதை-1: உண்ணாவிரதம்


குட்டிக்கதை - உண்ணாவிரதம் 

ஒரு மரத்தில் குடியிருந்த குரங்குகளெல்லாம் கூடி வாரம் ஒரு நாள் உண்ணா விரதம் மேற் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தன

எனவே தலைவர் குரங்கிடம் போய் மற்ற குரங்குகள் எல்லாம் விஷயத்தைச் சொன்னவுடன், தலைவர் குரங்காரும் ''சரி அவ்வாறே செய்து விடுவோம்.

அதற்கு முன்னால் உண்ணா விரதம் முடிந்தவுடன் உண்ணுவதற்கான பழங்களைச் சேகரித்து வைத்து விடுங்கள்.

ஏனெனில் விரதம் முடியும் பொழுது பசியாக இருக்கும். எனவே அப்பொழுது போய் பழங்களைத் தேடிக் கொண்டிருக்க முடியாது'' என்று அறிவுரை சொன்னார்.

அதை அமோதித்த மற்ற குரங்குகளும் அருகில் இருந்த தோட்டத்திலிருந்து நிறைய வாழைப்பழங்களைக் கொண்டு வந்து தலைவர் முன் வைத்தன.

உடனே தலைவர் ''சரி உண்ணா விரதத்தை ஆரம்பித்து விடுவோம்'' என்றார்.

அப்பொழுது கூட்டத்தில் இருந்த ஒரு மூத்த அனுபவமுள்ள குரங்கு ''தலைவரே விரதம் துவங்குவதற்கு முன் அவரவர் பழங்களை பிரித்து கொடுத்து விடுவோம். இல்லையென்றால் விரதம் முடிந்தவுடன் சண்டையிட்டுக் கொள்வார்கள்'' என்று யோசனை சொல்லிற்று.

அதை ஆமோதித்த தலைவரும் அவ்வாறே பழங்களை பகிர்ந்தளித்தார்.

அப்பொழுது ஒரு குரங்கு எழுந்து, பழத்தின் தோலை உரித்து வைத்து விடுவோம். அந்த நேரத்தில் உரித்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை என்றவுடன். பழத்தின் தோல் உரித்து முன்னே வைக்கப்பட்டது.

உடனே ஒரு குட்டிக் குரங்கு எழுந்து தலைவரே ஒரு நாள் விரதம் இருக்கப் போகிறோம். தோல் நீக்கிய இந்தப் பழங்களின் மேல் தூசிகள் படிந்து விடும். எனவே இந்த பழங்களெல்லாம் கனிந்து அழுகிப் போவதற்கு வாய்ப்பு உள்ளது. நமக்குதான் உணவை வாயில் ஒதுக்கி வைத்துக் கொள்ளும் வசதி இருக்கிறதே ? எனவே பழங்களை அவரவர் வாயில் ஒதுக்கி வைத்துக் கொள்வோம் என்றது.

அவ்வளவுதான் பழங்கள் அனைத்தும் வாயில் ஒதுக்கி வைக்கப்பட்டன.

சற்று நேரம்தான் ஆகியிருந்தது. ஒதுங்கியிருந்த பழங்களெல்லாம் தானாகவே தொண்டைக் குழியை நோக்கி போகத் துவங்கின. இவ்வாறு குரங்குகளின் விரதம் நிறைவுக்கு வந்தது.

இவ்வுலகில் பெரும்பாலானவர்களின் தியான மற்றும் விரத முயற்சியும் இவ்வாறுதான் இருக்கிறது.

உலக ஆசையை விட்டு விட வேண்டும் என்று எண்ணினாலோ, முயற்சித்தாலோ, அது நடக்கவே நடக்காது

ஏனெனில் அது எதிர்மறை சிந்தனையாகவும், முயற்சியாகவும் அமைந்து விடுகிறது.

மாறாக, பரம்பொருள் அல்லது ஆன்ம  நாட்டத்தை அதிகப்படுத்திக் கொள்ளும் அளவு உலக ஆசைகள் ஒவ்வொன்றாக விட்டு ஓடி விடுவதை உணரலாம்.

அதனால் தான் அன்றே சொன்னார்கள்

*மனம் ஒரு குரங்கு* என்று மிகச் சரியாக சொன்னார்கள்

30 ஜூலை, 2018

சாதிக்க நினைக்கும் இளைஞர்களுக்கு-4: வெற்றிகரமான வாழ்க்கைக்கு அத்தியாவசியமான ஒன்று

வெற்றிகரமான வாழ்க்கைக்கு அத்தியாவசியமான  ஒன்று 

இதுவரை இந்த வீடியோவை பார்த்தவர்கள் 13,137 பேர் 

பதிவு செய்தவர் எம்.ஹிஷாம் 
பதிவு செய்த  நாள் ஜூன் 9, 2018https://www.youtube.com/watch?v=FC6LAFNSY80


நன்றி: திரு எம்.ஹிஷாம் மற்றும் யுடியூப். 

ஒரு வரி உண்மைகள்-8: விளம்பரம்...

நம்மதான் விளம்பரம் போடுறப்பல்லாம் சேனலை மாத்திடுறோமே,  
அப்புறம் ஏன் இவ்வளோ செலவு பண்ணி விளம்பரம் பண்றாங்க ?

வீட்டுக் குறிப்புகள்-8: கீரை வாங்கும்போது...

கீரை வாங்கும்போது மஞ்சள் நிறமுள்ள இலைகள் அதிகமிருந்தால் வாங்குவதைத் தவிர்க்கவும். ஓட்டைகள் மற்றும் பூச்சிகளின் முட்டைகள் உள்ள கீரைகளையும் வாங்கக்கூடாது. பூக்கள் பூக்க ஆரம்பித்து விட்டாலும் அந்தக் கீரையை வாங்கவேண்டாம். 

சிரித்து வாழவேண்டும்-12:


"மாப்ளே! எது செஞ்சாலும் என் வீட்டுக்காரி குறுக்கே நிக்கிறாடா!"

"கார் ஓட்டிப் பாறேன் மச்சி!"

ஆன்மீக சிந்தனை-83: அன்புவழி

இறைவனை அடைய அன்பைவிடச் சிறந்த, எளிய வழி இருக்கிறதா?


இன்றைய சிந்தனைக்கு-219: கை தவறினால்...

கை தவறினால் பொருள் உடையும் என்று யோசிப்பவர்கள், வாய் தவறினால் மனம் உடையும் என்பதை யோசிக்க மறந்துவிடுகிறார்கள். 

நலக்குறிப்புகள்-118: நுங்கு

நுங்கு 

கோடையில் ஏற்படும் வயிற்றுக்கு கோளாறுகள் மற்றும் சருமப் பிரச்சினைகளுக்கு சிறந்த மருந்து மற்றும் உணவு. குறைந்த விலையில் கிடைக்கும் இனிமையான, குழுஉமையான உணவு. 

மேலும் நுங்கைப் பற்றி சில தகவல்கள்: 


நுங்கில் வைட்டமின் பி, சி, இரும்புச்சத்து, கால்சியம், துத்தநாகம், சோடியம், மக்னீசியம், பொட்டாசியம், தயாமின், அஸ்கார்பிக் அமிலம் மற்றும் புரதம் போன்ற சத்துகள் உள்ளன.

நுங்குக்குக் கொழுப்பைக் கட்டுப்படுத்தி, உடல் எடையைக் குறைக்கும் ஆற்றல் உண்டு. 

நுங்கு பசியையும் தூண்டும். மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப் போக்கு இரண்டுக்குமே மருந்து. 

வரலாற்றில் முத்திரை பதித்தவர்கள்-9: அறிவியல் மேதை ஆர்க்கிமிடிஸின் கதை


அறிவியல் மேதை ஆர்க்கிமிடிஸின் கதை 

Archimedes Life history in Tamil - Part 1

1,127 viewshttps://www.youtube.com/watch?v=wS_-PCgXoi0

Video Published by TAMIL FIRE on Jul 24, 2016
Biography of famous people in Tamil - Archimedes Part 1

Biography of Archimedes - ஆர்க்கிமிடிஸ் வாழ்க்கை வரலாறு
நாம் ஒரு பிரச்சினையை தீர்த்துவிட்டாலோ அல்லது நெடுநாள் தேடிக்கொண்டிருந்த விடையை கண்டுபிடித்து விட்டாலோ ஆனந்தமடைவதும் துள்ளி குதித்து மகிழ்ச்சியை தெரிவிப்பதும் இயற்கை. ஏற்கனவே தீர்க்கபட்ட பிரச்சினைகளை அல்லது கண்டுபிடிக்கப்பட்ட விடைகளை மீண்டும் கண்டுபிடிப்பதிலேயே அவ்வளவு மகிழ்ச்சி இருக்குமென்றால் உலகம் இதுவரை கண்டிராத புதிய கண்டுபிடிப்புகளை விஞ்ஞானிகள் கண்டறியும்போது அவர்களிம் மனநிலை எந்தளவுக்கு மகிழ்ச்சி கடலில் மூழ்கியிருக்கும் நாம் அவர்களது மனநிலையில் இருந்தாலொழிய. அந்த உணர்வுகளை வார்த்தைகளில் வருணிப்பது சிரமம். ஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்தும்போது ஒரு விஞ்ஞானி எவ்வளவு ஆனந்தம் அடைகிறான் என்பதை படம் பிடித்து காட்ட வரலாற்றில் ஒரு சுவாரசியமான சம்பவம் உண்டு.

http://vaanamvasapadume.blogspot.sg/2...

Salute to the greatness of Archimedes and Grateful thanks to TAMIL FIRE and YouTube.