26 ஜூன், 2018

ஒரு வரி உண்மைகள்-1: தண்டனை யாருக்கு?

சாவியை நான் தொலைத்துவிட்டு, தண்டனையை பூட்டுக்குக் கொடுத்தேன்…

வீட்டுக் குறிப்புகள்-2: தேங்காய்த் தண்ணீரை வீணாக்காதீர்கள்

தேங்காய் தண்ணீரை வீணாக்காமல் ரசத்தில் சேர்த்தால் ரசம் மிகவும் ருசியாக இருக்கும்

பயனுள்ள குறிப்புகள்-1: கூகுள் டிரான்ஸ்லேட் ஆப்

கூகுள் டிரான்ஸ்லேட் ஆப் யூஸ் பண்ண இன்டர்நெட் 
இருக்கணும்னு அவசியம் இல்லை இனி ஆஃப்லைனிலும் 
யூஸ் பண்ணலாம்
via Dailyhunt

செயலியை பெற

நலக்குறிப்புகள்-105: ஆரோக்கியமாக வாழ்வது எப்படி? - மருத்துவர் கு.சிவராமன் அவர்கள்

ஆரோக்கியமாக வாழ்வது எப்படி? - மருத்துவர் கு.சிவராமன் அவர்கள்நன்றி: Tamil Pulse and YouTube

இன்று ஒரு தகவல்-66: “மனைவியின் ஏடிஎம் கார்டை கணவர் பயன்படுத்த முடியாது” - நீதிமன்றம்

*“மனைவியின் ஏடிஎம் கார்டை கணவர் பயன்படுத்த முடியாது” - நீதிமன்றம்*

*மனைவியின் ஏடிஎம் கார்டை கணவர் பயன்படுத்த முடியாது, ஏடிஎம் ரகசிய எண்ணை கணவர் உட்பட யாரிடமும் பகிரக்கூடாது என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.*

*பெங்களூருவை சேர்ந்த தம்பதியினர் வந்தனா மற்றும் ராஜேஷ் குமார். கடந்த 2013ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி தனது ஏடிஎம் கார்டை கணவரிடம் கொடுத்த வந்தனா, ரூ.25,000 பணம் எடுத்துவரச் சொல்லியுள்ளார். அதை எடுத்துக்கொண்டு அருகாமையில் இருந்து எஸ்.பி.ஐ வங்கி ஏடிஎம் மையத்திற்கு சென்ற ராஜேஷ், கார்டை செலுத்தி பணத்தை எடுக்க முயன்றுள்ளார்.*

*அப்போது பணம் ரூ.25,500 எடுக்கப்பட்டதாக ரசீது வெளிவந்துள்ளது. ஆனால் பணம் வரவில்லை.*

*இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜேஷ், எஸ்.பி.ஐ உதவி மையத்தின் தொடர்பு எண்ணை அழைத்து விவரத்தை கூறியுள்ளார். உதவி மைய ஊழியர்களும் பணத்தை திரும்பி வழங்க வழி செய்கிறோம் எனக்கூறியுள்ளனர்.*

*ஆனால் கணக்கில் பணம் வரவு வைக்கப்படவில்லை , அதானல் அடுத்த நாள் வங்கி அலுலகத்திற்கு சென்றபோது, பணத்தை தர முடியாது என வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஏன்? என ராஜேஷ் கேட்க, உங்கள் மனைவியின் ஏடிஎம் கார்டை நீங்கள் பயன்படுத்தியது தவறு, உங்கள் மனைவி ஏடிஎம் கார்டின் ரகசிய எண்ணை உங்களிடம் பகிர்ந்திருப்பது எங்கள் விதிமுறைப்படி தவறாகும் எனக்கூறியுள்ளது.*

*இதையடுத்து கடந்த 2014 அக்டோபர் மாதம், நியாயம் கேட்டு பெங்களூரு நுகர்வோர் நீதிமன்றத்தை வந்தனா மற்றும் ராஜேஷ் தம்பதியினர் நாடியுள்ளனர்.*

*ராஜேஷ், வந்தனா தரப்பில் ஏடிஎம் அறையில் இருந்து சிசிடிவி காட்சிகளை ஆதாரமாக சமர்பித்துள்ளனர். அந்தக் காட்சிகளில் பணம் எடுக்கப்பட்டதாக ரசீது மட்டும் வெளிவரும் காட்சிகளும், பணம் வெளிவராத காட்சிகளும் இருந்துள்ளன.*

*வங்கி தரப்பில் தங்கள் விதிமுறைப்படி ஏடிஎம் ரகசிய எண்ணை பகிர்வது தவறு என்றும், அதனால் பணத்தை திரும்பி வழங்க இயலாது என்றும் வாதம் செய்யப்பட்டுள்ளது.*

*இந்த வழக்கு கடந்த மூன்றரை வருடங்களாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், ஏடிஎம் கார்டின் ரகசிய எண்ணை கணவர், நெருங்கிய உறவினர்கள் உட்பட யாரிடமும் மனைவி பகிரக்கூடாது எனக் கூறியது. அத்துடன் ஏடிஎம் கார்டின் ரகசிய எண்ணை யாரும், யாருடனும் பகிரக்கூடாது என அறிவுறுத்தியது.*

*வந்தனா தனது கணவரிடம் கசோலையோ அல்லது வங்கியில் பணம் எடுப்பதற்கான அங்கீகார கடிதத்தையோ வழங்கியிருக்கலாம் என்றும், ரகசிய எண்ணை வழங்கியது தவறு என்றும் கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.*

*கணவன் மனைவிக்கு மட்டும் இந்த விதி பொருந்தும் என எண்ண வேண்டாம். வங்கி விதிகளின் படி, ஏடிஎம் கார்டு என்பது கணக்கு வைத்திருப்பவருக்கு வங்கி கொடுக்கு கார்டு பாஸ் புக். இதனை சம்பந்தப்பட்டவர் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது, கடவு எண்ணை யாருக்கும் தெரிவிக்க கூடாது மற்றும் மாற்றத்தக்கதல்ல என்றும் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்கள்.*

*அடுத்தவர்களிடம் ஏடிஎம் கார்டுகளை கொடுத்து பணம் எடுத்து வரச் சொல்லும் வரை சரி. பணம் வந்து விட்டால் சிக்கல் இல்லை, வரவில்லை என்றால் சிக்கல். அதனால் வங்கி விதிகளை முறையாக படிப்பதும் அதன் அடிப்படையில் செயல்படுவதும் அவசியம்*

*நன்றி : புதியதலைமுறை*

இன்றைய சிந்தனைக்கு-210:

வாய்ப்பு என்பது வடை மாதிரி. நாம்தான் காக்காய் போல தேடிப்போய்த் தூக்கணும்.  பீட்சா மாதிரி வீடு தேடி வரும்னு காத்திருக்கக் கூடாது

நன்றி: www.kavithaiulagam.in

ஆன்மீக சிந்தனை-77: கர்ம வினை

மற்றவர்களுக்குத் தீமை விளைவிக்கும் போது நினைவில் கொள், உனக்கான நாளைய துன்பத்தை இன்று நீ விதைத்துக் கொண்டிருக்கிறாய் - சனாதன தர்ம தத்துவம்

எனக்குப் பிடித்த கவிதை-80: ஞானக்கூத்தனின் ஸ்ரீலஸ்ரீ

ஸ்ரீலஸ்ரீ – ஞானக்கூத்தன்
யாரோ முனிவன் தவமிருந்தான்
வரங்கள் பெற்றான் அதன் முடிவில்
நீர்மேல் நடக்க தீபட்டால்
எரியாதிருக்க என்றிரண்டு

ஆற்றின் மேலே அவன் நடந்தான்
கொடுக்குத் தீயைச் சந்தனம் போல்
உடம்பில் பூசிச் சோதித்தான்
மக்கள் அறிந்தார் கும்பிட்டார்

மறுநாள் காலை நீராட
முனிவன் போனான் ஆற்றுக்கு
நீருக்குள்ளே கால்வைக்க
முடியாதவனாய்த் திடுக்கிட்டான்

கண்ணால் கண்டால் பேராறு
காலைப் போட்டால் நடைபாதை
சிரித்துக் கொண்டு கண்ணெதிரே
ஆறு போச்சு தந்திரமாய்

காலைக் குளியல் போயிற்றா
கிரியை எல்லாம் போயிற்று
வேர்த்துப் போனான்அத்துளிகள்
உடம்பைப் பொத்து வரக்கண்டான்

யாரோ பிணத்தைக் கண்டெடுத்தார்
செத்துப் போக ஒரு நாளில்
தீயிலிட்டார்அது சற்றும்
வேகாதிருக்கக் கைவிட்டார்

நீரின் மேலே நடப்பதற்கும்
தீயாலழியா திருப்பதற்கும்
வரங்கள் பெற்ற மாமுனிவன்
மக்கிப் போக நாளாச்சு

1971

அவருடைய கவிதைகளை வாசிக்க: http://www.gnanakoothan.com/about-2/

சிரித்து வாழவேண்டும்-3: மொபைல் சுவிட்ச் ஆப்

ஒரு நிமிடம் கூட மொபைல் போனை சுவிட்ச் ஆப் செய்யாமல் இருப்பவன் காதலில் விழுந்தவன்.

நிமிடத்திற்கு ஒரு முறை சுவிட்ச் ஆப் செய்பவன் கடனில் விழுந்தவன்.

வாட்ஸ் அப்பில் கிடைத்தது

சிறுகதை நேரம்-3: ஜெயமோகனின் மெல்லிய நூல்

சிறுகதை நேரம்-3: ஜெயமோகனின் மெல்லிய நூல்

ஜெயமோகன் அவரது இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளியிட்ட பன்னிரண்டு கதைகள் இத்தொகுதியில் உள்ளன. இவை வெளிவந்தபோது பெரும் வாசக வரவேற்பைப் பெற்றன. தொடர்ச்சியாக இணையதளத்திலேயே இவ்வளவு சிறுகதைகள் வெளியாகியது தமிழிலக்கியச் சூழலில் முக்கியத்துவம் உடைய முன்னோடி நிகழ்வாகும்.
இக்கதைகள் பின்னர் நூலாக வெளிவந்தபோதும் பாராட்டுக்களைப் பெற்றது. இதில் உள்ள யானைடாக்டர், நூறுநாற்காலிகள் ஆகியவை தனிநூல்களாக வெளிவந்துள்ளன யானைடாக்டர் இலவசப்பிரதியாகவும் வினியோகம் செய்யப்பட்டது. தன் ஐம்பது வயதை ஒட்டி அறவிழுமியங்கள் மீது உருவான ஆழமான அவநம்பிக்கையை வெல்லவே இக்கதைகளை எழுதியதாக ஆசிரியர் குறிப்பிட்டிருக்கிறார். இக்கதைகளில் உள்ள நாயகர்கள் உண்மையான மனிதர்கள். அவர்களின் அறத்தில் ஊன்றிய பெருவாழ்க்கையைச் சொல்வதன் வழியாக தன் நம்பிக்கையை மீட்டுக்கொண்டதாகச் சொல்கிறார். நன்றி: திரு ஜெயமோகன் அவர்கள், Tamil Audio Book and YouTube.

நமக்கு தெரியாமல் நாம் செய்யும் மேஜிக்: சத்குரு ஜக்கி வாசுதேவ்

நமக்கு தெரியாமல் நாம் செய்யும் மேஜிக்...! -
30838 Views ஈஷா அறக்கட்டளை நிறுவனரும், யோகியும் ஞானியுமான சத்குரு ஜகி வாசுதேவ் அவர்களுடன், முன்னாள் லயோலா கல்லூரி Dean திரு. ஜோ அருண் அவர்கள் கலந்துரையாடலில் ஈடுபட்டபோது நடந்த சுவாரஸ்யமான உரையாடலின் ஒரு பகுதியை இந்த ஒளிப்பேழையில் காணலாம். "எல்லோரும் இட்லியை வைத்து தினமும் மேஜிக் செய்கிறார்கள், நான் அதே மேஜிக்கை, கொஞ்சம் விழிப்புணர்வுடன் செய்கிறேன்" இப்படிக் கூறும் சத்குரு, எந்த மேஜிக் பற்றி கூறுகிறார் எனத் தெரிந்துகொள்ள வீடியோவைப் பாருங்கள்!  ​நன்றி: சத்குரு ஜக்கி வாசுதேவ், யூட்யூப் மற்றும்​ திரு ஜோ.அருண் அவர்கள்


17 ஜூன், 2018

வீட்டுக் குறிப்புகள்-1:பழைய டூத் பிரஷ்


வீட்டுக் குறிப்புகள்

பழைய டூத் பிரஷ்
பழைய டூத்பிரஷ்களை தூக்கி எறிந்து விடாதீர்கள் மரக்கதவு கிரில் கேட் பொன்றவற்றின் இடுக்குகளில் உள்ள தூசிகளை அகற்ற இதைவிட சிறந்த பொருள் வேறு எதுவும் கிடையாது.

நலக்குறிப்புகள்-109: வெந்தய டீயின் மகிமைகள்


வெந்தய டீயின் மகிமைகள்

ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதில் வெந்தயத்தை சிறிது சேர்த்து மூடி வைத்து 3 நிமிடம் கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.
பின் அதை வடிகட்டி, தேன் சேர்த்து கலந்து, சூடாகவோ அல்லது குளிர்ச்சியான நிலையிலோ குடியுங்கள்.

வெந்தய டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

மாதவிடாய் காலத்தில் பெண்கள் வயிற்று வலி மற்றும் பிடிப்புவலி ஏற்பட்டால் வெந்தய டீயைக் குடித்தால்,  உடனடி நிவாரணம் கிடைக்கும்.
பூப்படையும் வயதில் உள்ள பெண்கள் வெந்தய டீயைக் குடிப்பது நல்லது. இதனால் மார்பகங்களின் வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கும். ஏனெனில் இந்த டீ வளர்ச்சி ஹார்மோன்களை ஊக்குவிக்கும்.

ஒருவர் தினமும் வெந்தய டீயை குடித்து வந்தால், டைப்-2 சர்க்கரை நோயின் தாக்கத்தைத் தடுக்கலாம்.

கொலஸ்ட்ரால் பிரச்சனையைத் தவிர்க்க தினமும் வெந்தய டீ குடியுங்கள். இதனால் உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனை குறைவதோடு, இரத்த சர்க்கரை அளவும் குறையும்

வெந்தய டீ மிகச்சிறந்த மலமிளக்கியாக செயல்படும். ஆகவே மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாமல் இருக்க, தினமும் ஒரு டம்ளர் வெந்தய டீயைக் குடியுங்கள்.

வெந்தய டீ உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களை கரைப்பதோடு, அடிக்கடி பசி ஏற்படுவதையும் தடுத்து, உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும்.

குடல் மற்றும் சிறுநீரகங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள தினமும் ஒரு டம்ளர் வெந்தய டீ குடியுங்கள். இது கழிவுகளை உடலில் இருந்து எளிதில் வெளியேற்றும்.

இதய நோயின் தாக்கத்தைத் தடுக்க வேண்டுமெனில், தினமும் ஒரு கப் வெந்தய டீ குடியுங்கள்.

வைட்டமின் பி1 குறைபாட்டினால் ஏற்படும் பெரி பெரி நோயின் தாக்கத்தை வெந்தய டீ குறைக்க உதவும்.

பிரசவத்தை நெருங்கும் கர்ப்பிணிப் பெண்கள் வெந்தய டீயைக் குடித்தால், அது பிரசவ வலியைத் தூண்டுவதோடு, எளிதில் பிரசவம் ஆக துணை செய்யும்.

ஆண்கள் மற்றும் பெண்கள் தினமும் வெந்தய டீ குடிப்பதன் மூலும், அவர்களின் பாலியல் வாழ்க்கை சிறக்கும். ஏனெனில் இந்த டீ உடலின் பாலுணர்ச்சியைத் தூண்டி, உறவில் சிறப்பாக ஈடுபட உதவும்.

வெந்தய டீயில் வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. இதை தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் தொடர்ந்து குடித்து வந்தால், தாய்ப்பால் சுரப்பு அதிகரிப்பதோடு, தாய்ப்பாலில் சத்துக்களும் அதிகரிக்கும்.

வெந்தய டீயில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் ஏராளமாக அடங்கியுள்ளது. ஆகவே மூட்டு வலி, முழங்கால் வலி உள்ளவர்கள், வெந்தய டீயைக் குடித்து வந்தால், இந்த பிரச்சனையில் இருந்து முழுவதுமாக தடுக்கலாம்.

வெந்தயம் மிகச்சிறந்த சளி கரைப்பான். ஆகவே உங்களுக்கு சைனஸ் மற்றும் சளித் தொல்லை அதிகம் இருந்தால், தினமும் ஒரு டம்ளர் வெந்தய டீயைக் குடியுங்கள். இதனால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

வெந்தயம் சிறுநீர் பெருக்கியாக செயல்படும். ஒருவர் தினமும் பலமுறை சிறுநீர் கழிப்பதன் மூலம், இரத்தத்தில் உள்ள கசடுகள் வெளியேறும். வெந்தய டீயைக் குடித்தால், அடிக்கடி சிறுநீரைக் கழிக்கலாம்.

காய்ச்சல் அடிக்கும் போது, கண்ட மாத்திரைகளைப் போடாமல், ஒரு டம்ளர் வெந்தய டீயைக் குடியுங்கள். இதனால் காய்ச்சல் உடனே குறைந்துவிடும்.

வெந்தய டீ தொண்டைப் புண்ணை குணப்படுத்தும். அதற்கு வெந்தய டீயை சூடாக குடிக்க வேண்டும்.

வாய் புண் அல்லது வாய் அல்சர் உள்ளதா? அப்படியெனில் தினமும் வெந்தய டீயால் வாயைக் கொப்பளியுங்கள். இப்படி தினமும் வாய் புண் போகும் வரை செய்யுங்கள்.

வெந்தய டீ வாய் துர்நாற்ற பிரச்சனையில் இருந்து விடுவிக்கும். அதிலும் வெந்தய டீயை குளிக்கும் நீரில் கலந்து குளித்தால், உடல் துர்நாற்ற பிரச்சனை நீங்கும்.