20 மே, 2016

இன்றைய சிந்தனைக்கு-193: எஸ்.ராமகிருஷ்ணன்

வாழ்வில் விலையில்லாத சந்தோஷங்கள் நிறைய இருக்கின்றன. சூரியனும், நிலவும், மலைச்சிகரங்களும், புல்வெளிகளும், அருவிகளும், ஆறுகளும், கடலும், வானும், ஒளிரும் நட்சத்திரங்களும், பறவைக் கூட்டங்களும் எல்லோருக்கும் மகிழ்ச்சியைத் தருகின்றன. இவை விலையில்லாத சந்தோஷங்கள். இதன் அருமையை நாம் முழுமையாக உணர்வதே இல்லை – “இந்திய வானம்”, எஸ்.ராமகிருஷ்ணன், ஆனந்த விகடன், 24.2.2016