31 டிச., 2019

உங்கள் கவனத்திற்கு

30 டிச., 2019


இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார், தஞ்சை மாவட்டத்தில் 06 ஏப்ரல் 1938 ஆம் ஆண்டு பிறந்தார். இவரின் தந்தை ச. கோவிந்தசாமி மற்றும் தாயார் அரங்கநாயகி என்கிற குங்குமத்தம்மாள் ஆகியோர்கள் ஆவார்.(சான்று த.ரெ.தமிழ்மணியின் நம்மாழ்வார் வாழ்க்கைக் குறிப்பு நூல்) இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் விவசாயத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். 2007 ஆம் ஆண்டு காந்திகிராம பல்கலைக்கழகம் இவருக்கு அறிவியலில் மதிப்புறு முனைவர் பட்டம் தந்தது. கோவில்பட்டி மண்டல மழைப்பயிர் ஆய்வகத்தில் 1960ஆம் ஆண்டு ஆய்வு உதவியாளராக பணியில் சேர்ந்து ஆய்வகங்களில் நிலவும் களப்பணியில் ஈடுபடாது செய்யப்படும் பயனில்லாப் பணிகளுக்கு எதிராக குரல் கொடுத்து மூன்றாண்டுகளில் வெளியேறினார். 1963 ஆம் ஆண்டு முதல் 1969 ஆம் ஆண்டு வரை இவர் மண்டல விவசாய ஆராய்ச்சி நிலையத்தில் வேலை செய்தார். ஜப்பானிய சிந்தனையாளர் மற்றும் விவசாயி, மசனோபு ஃபுக்குவோக்காவால் ஈர்க்கப்பட்டு இயற்கை அறிவியலாளர் ஆனார் நம்மாழ்வார்.

*எதிர்த்துப் போராடியவை*

பூச்சி கொல்லிகள்
மீத்தேன் வாயு திட்டம், இந்தியா
மரபணு சோதனைகள்
பி.டி. கத்தரிக்காய்க்கு அனுமதி
வெளிநாடுகளில் இருந்து உணவு தானியங்கள் இறக்குமதி
விவசாய நிலங்களை வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்துதல்

*களப்பணிகள்*

சுனாமியினால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம் மாவட்ட நிலங்கள் சீரமைப்பு
இந்தோனேசியாவில் சுனாமி பாதிக்கப்பட்ட பகுதியில் 30 மாதிரி பண்ணைகள் அமைத்தல்
60க்கும் மேற்பட்ட கரிம விவசாய பயிற்சி மையங்களை தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களில் நிறுவினார்.
மீத்தேன் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் இருந்தார்.
"தமிழின வாழ்வியல் பல்கலைக்கழகம்' என்ற அமைப்பினைத் தொடங்கி, தமிழ்நாட்டின் கிராமப்புறங்கள் எல்லாவற்றையும் கால்நடையாக எட்டி, அங்கு கருத்தரங்கங்களும், பயிற்சி வகுப்புகளும் நடத்தினார். "பேரிகை' என்றொரு இயற்கை உழவாண்மை வாழ்வியல் மாத இதழை வெளியிட்டார்.

*நடைப் பயணங்கள்*

1998 - கன்னியாகுமாரி - சென்னை - சுதேச பயிர் வளர்ப்பின் முக்கியத்துவத்திற்காக
2002 - 25 நாட்கள் பாத யாத்திரை ஈரோடு மாவட்டம் - அங்கக வேளாண்மைப் பிரச்சாரம்.
2003 - பூம்புகார் முதல் கல்லனை வரை 25 நாட்கள் - கரிம வேளாண்மையின் முக்கியத்துவம் குறித்து பிரச்சாரம்
2002 - இயற்கை உழவாண்மைகாக ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் இருந்து கொடுமுடி வரை 25 நாள் நடைபயணம் மேற்கொண்டார்.

*உருவாக்கிய அமைப்புகள்*

1979ல் குடும்பம்
1990 லிசா (1990 – LEISA Network)
1990 – மழைக்கான எக்லாஜிக்கள் நிறுவனம், கொலுஞ்சி , ஒடுகம்பட்டி, புதுக்கோட்டை மாவட்டம்
இந்திய அங்கக வேளாண்மை சங்கம் (Organic Farming Association of India)
நம்மாழ்வார் உயிர் சூழல் நடுவம்
வானகம், நம்மாழ்வார் உயிர் சூழல் நடுவம் உலக உணவு பாதுகாப்பிற்கான பண்ணை ஆராய்ச்சி மையம்
தமிழின வாழ்வியல் பல்கலைக்கழகம்
படைப்புகள் தொகு
தாய் மண் (இயற்கை வழி உழவாண்மை பாடநூல்), வெளியீடு: வானகம்
உழவுக்கும் உண்டு வரலாறு (நூல்) விகடன் வெளியீடு
தாய் மண்ணே வணக்கம் (நூல்) நவீன வேளாண்மை வெளியீடு
நெல்லைக் காப்போம்
வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும், இயல்வாகை வெளியீடு
இனி விதைகளே பேராயுதம், இயல்வாகை வெளியீடு
நோயினைக் கொண்டாடுவோம், இயல்வாகை வெளியீடு
எந்நாடுடையே இயற்கையே போற்றி, விகடன் வெளியீடு
பூமித்தாயே, இயல்வாகை வெளியீடு
நோயினை கொண்டாடுவோம், இயல்வாகை வெளியீடு
மரபை அழிக்கும் மரபணு மாற்று விதைகள் (நூல்) வாகை வெளியீடு
களை எடு கிழக்கு பதிப்பகம்

*விருதுகள்*

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், இவருக்கு சுற்றுச் சூழல் சுடரொளி விருதினை வழங்கியது. திண்டுக்கல்லைச் சேர்ந்த காந்திகிராம கிராமப்புற நிறுவனம் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது.

*இறப்பு*

இவர் 30 திசம்பர் 2013 அன்று பட்டுக்கோட்டை அருகே அத்திவெட்டியில் (பிச்சினிக்காடு சிற்றூரில்) மீத்தேன் வாயு திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்த சென்றிருந்த போது உடல் நலக்குறைவு ஏற்பட்டு காலமானார்.

*நன்றி: தமிழ் விக்கிப்பீடியா*

*இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களது நினைவைப் போற்றுவோம்.  அவர் வழி நடப்போம்*. 

நேர்காணல்-10: எழுத்தாளர் பூமணி


எழுத்தாளர் பூமணி நேர்காணல்

8,090 பார்வைகள்•18 மே, 2018
“Karuppu கருப்பு”

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியருகே ஆண்டிபட்டி என்னும் சிற்றூரில் பிறந்தவர். தந்தை முகம் அறியாமல் தாயின் அரவணைப்பில் வளர்ந்தவர். விவசாயக் குடும்பம். கல்லூரிப் பருவத்திலேயே இலக்கியத் தளத்தில் எட்டுவைத்தவர். பலரைப்போல் கவிதையில் தொடங்கி சிறுகதை, நாவல், கட்டுரை, மொழிபெயர்ப்பு, திரைப்படம் எனத் தளத்தை விரித்துக்கொண்டவர்.

தமிழ்ச் சிறுகதைகளுக்கும் நாவல்களுக்கும் சொந்த முகம் கொடுத்தவர்கள் என்று சிலரை வரிசைப்படுத்தினால்அதில் இவருக்கும் இடமுண்டு. மொழிவளம் நிறைந்த இவரது புனைவுகளில் மண்மீதான ரசனையும் பிரியமும் அமுங்கி அடித்தட்டு மக்களின் குரல்கள் ஓங்கி ஒலிப்பதைக் கேட்கலாம்.

சின்னத் திரைக்காகச் சில கதைகளையும் பேனாமுள் தயாரிப்புப் பற்றிய ஆவணப்படத்தையும் எழுதி இயக்கியுள்ளார். தேசிய திரைப்பட வளர்சிக் கழகத்துக்காக தீப்பெட்டித் தொழிலில் குழந்தை உழைப்பை மையமாகக் கொண்டு 'கருவேலம் பூக்கள்' என்ற திரைப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். அது தமிழக அரசு விருது பெற்றது. சர்வதேசத் திரைப்பட விழாக்களில் கலந்துக்கொண்டது.

இவர் சாகித்ய அகாடெமி விருது உட்பட பல விருதுகளைப் பெற்றவர். இவரது நூல்கள் ஆங்கிலம், இந்தி, வங்காளம், பிரெஞ்சு மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளன.

தமிழக அரசின் கூட்டுறவுத் துறையில் அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வுபெற்ற இவர் தற்போது கோவில்பட்டியில் வசித்து வருகிறார்.
----------------
4 மே 2018 ஆண்டு அவரது வீட்டில் இந்த நேர்க்காணல் எடுக்கப்பட்டது.
நேர்க்காணலின் எழுத்து வடிவமும் இருக்கிறது. இணைப்பு கீழே கமெண்ட்டில் தரப்படும்.

நேர்க்காணல் கண்டவர் - ரெங்கநாதன்
படத்தொகுப்பு - புகழேந்தி
போட் டோஷாப் - ரமேஷ் பெருமாள் 

காந்திஜி நினைவுகள்-5: எழுத்தாளராக விரும்பினார் காந்தி - பார்வதி பேணுஎழுத்தாளராக விரும்பினார் காந்தி

பார்வதி பேணு


காந்தியைப் பற்றி பேசிவிட்டு அவருக்கு பல்லாண்டு காலமாய் வந்த, அவர் எழுதிய, எண்ணற்ற கடிதங்களைப் பேசாமல் எப்படி? அந்தக் கடிதங்கள் இப்போது இணையத்தில் இருக்கின்றன. அவற்றைப் படித்துப் பார்ப்பவர்கள், எவ்வளவு கச்சிதமாகவும் துல்லியமாகவும் காந்தி எழுதுகிறார் என்பதைச் சுலபமாக கண்டு கொள்ளலாம். காந்தியிடம் அலங்கார வார்த்தைகள் கிடையாது, சொல்ல வந்த விஷயத்தை நேரடியாகச் சொல்கிறார்.

இவற்றில் பெரும்பாலான கடிதங்கள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டவை. அது போக இந்தி, குஜராத்தி மொழிகளிலும் எழுதினார் மகாத்மா. அவர் மாணவப் பருவத்தில் லத்தீன் மொழிகூட கற்றிருக்கிறார். ஆங்கில மொழியில் அவர் அவ்வளவு சிறப்பாக எழுத என்ன காரணம் இருக்கும், என்ற கேள்வி எழுந்தது. அவரது உறவினர்கள், பேரன், கொள்ளுப் பேரன் இருவரையும் கேட்டோம்.

மகாத்மா காந்தியின் இரண்டாம் மகன், மணிலால் காந்தி. அவரது பேரன், துஷார் காந்தி, காந்தி ஆய்வு மையத்தின் இயக்குனர். 2005 ஆம் ஆண்டு மீண்டும் தண்டி யாத்திரை சென்றது அவருக்கு புகழ் சேர்த்திருக்கிறது. "பாபுவுக்கு முதலில் அவ்வளவு ஆங்கில மொழித் திறமை இருக்கவில்லை. அவர் அந்த மொழி கற்க போராடினார். உண்மையில், ஆங்கிலம் கற்க முடியவில்லை என்ற காரணத்தால்தான் அவர் சமல்தாஸ் கல்லூரியிலிருந்து வெளியேறினார்."

பின்னர், குறிப்பாக, பிரிட்டிஷ் காலனிய காலகட்டத்தில், ஆங்கிலம் கற்க வேண்டியது அவசியம் என்பதை அவர் உணர்ந்ததும் அதில் அவர் தீவிரமாய் இறங்கி விட்டார். அவர் கடுமையாய் உழைத்ததில் ஆச்சரியமில்லை. இங்கிலாந்து சென்று ஆங்கிலமும் சட்டமும் படிக்க வேண்டும் என்று அவர் முடிவெடுத்த நேரம் அது. அவர் தன் சொந்த முயற்சியில் ஆங்கிலம் கற்றுக் கொண்டார். ஆங்கிலத்தைக் கண்டு அஞ்சிய காலம் போய், மெல்ல மெல்ல அதில் தேர்ச்சி பெற்று, சரளமாக பேசினார்," என்கிறார் துஷார். "அபூர்வமான சொற்களைப் பயன்படுத்தி அவர் தன் திறமையைக் காட்டவில்லை, எப்போதும் துல்லியமான சொற்களைக் கையாண்டார். யாருக்கும் தொல்லை கொடுக்கும் வகையில் அவர் தன் நேரத்தையும் சொற்களையும் வீணாக்கவில்லை." இது போக, "இதே காலத்தில்தான் பாபு லத்தீன் மொழியும் கற்றார். சட்டம் சார்ந்த பதங்களையும் ஆங்கில இலக்கணத்தையும் புரிந்து கொள்ள இது அவருக்கு உதவியாக இருந்தது," என்றும் சொல்கிறார் அவர்.

அடுத்து நாம் காந்தி குடும்பத்தைச் சேர்ந்த ராஜ்மோகன் காந்தியைச் சந்தித்தோம். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அவர், மகாத்மாவின் இளைய மகன் தேவதாஸ் காந்தியின் மகன். காந்தியின் சரிதை எழுதிய அவர், காந்தி பற்றி நிறைய புத்தகங்கள் எழுதியுள்ளார். "பாபு செய்தித்தாள்களை ஆர்வமுடன் வாசித்தார். இது அவரது ஆங்கில மொழித் திறனை வளர்த்தது. புத்தகங்களிலும் அவருக்கு ஆர்வம் இருந்தது. இதனால் அவரால் எழுத்தாற்றலை வளர்த்துக் கொள்ள முடிந்தது. சட்ட நூல்களில் கூட அவருக்கு எழுத்துப் பயிற்சி கிடைத்தது. அவர் முழு நேர எழுத்தாளராகும் ஆசை கொண்டிருந்தார். ஆனால் அனுபவங்களும் சில எதிர்நிகழ்வுகளும் அவரை இந்திய சுதந்திர போராட்ட வீரராய் மாற்றி விட்டன."


நன்றி: Edex Live
ஒளிப்பட உதவி : Amar Ujala
மற்றும் யூடியூப்