என் தாய்மொழி தமிழுக்கென்றே இவ்வலைப்பூ. எனது எண்ணங்கள், எனக்குப் பிடித்த கருத்துக்கள், கவிதைகள், கதைகள் மற்றும் என்னை ஈர்த்த செய்திகள், நாட்டுநடப்புகள், நம் அனைவரின் வாழ்வோடு தொடர்புடைய மற்றனைத்தும் இதில் இடம் பெறும். (பின்புலப் புகைப்படத்தை எடுத்த ஜோன் சல்லிவனுக்கும், அதை வழங்கிய பப்ளிக்-டொமைன்-ஃபோட்டோஸ்.காமிற்கும் நன்றி)
Click Me
கேள்வியும் பதிலும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கேள்வியும் பதிலும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
10 நவ., 2022
20 அக்., 2019
20 செப்., 2019
கேள்வியும் பதிலும்-38:
நதிநீர் இணைப்பில் முதலிடம் பிடித்த மாநிலம்? *– ஆந்திரா*
தடுப்பணைகள் கட்டுவதில் முதலிடம் பிடித்த மாநிலம்? – குஜராத்
அணை கட்டுவதில் முதலிடம் பிடித்த மாநிலம்
– கர்நாடகா*
ஆற்று மணல் திருட்டை தடுத்த மாநிலம்?
*– கேரளா*
மழைநீர் சேமிப்பு, சொட்டுநீர் பாசனத்தில் முதலிடம் பிடித்த மாநிலம்? *– ராஜஸ்தான்*
மண் பரிசோதனையில் முதலிடம் பிடித்த மாநிலம்? *– மத்திய பிரதேசம்*
கால்நடை வதை தடுப்பு, மாற்று வருவாய் உத்திரவாதம் வழங்குவதில் முதல் இடம்? *– உத்திரபிரதேசம்*
விவசாயிகளுக்கு வறட்சி, பயிர் காப்பீட்டில் முதலிடம்? *– மகாராஷ்ட்ரா*
இயற்கை விவசாயத்திற்கு ஊக்கமளித்து முதலிடம் பிடித்த மாநிலம்?
*– சிக்கிம்*
ஆன்லைன் சந்தை மூலம் விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைக்க செய்யும் மாநிலம்?
*– சட்டீஸ்கர்*
செயற்கை நீர்நிலைகளை உண்டு பண்ணி அதில் விவசாயிகள் மீன் வளர்ப்பதை ஊக்குவிக்கும் மாநிலம்?
*– மேற்கு வங்கம்.*
25 பிப்., 2019
கேள்வியும் பதிலும்-37: பயம்: ஏன் வருகிறது? எப்படி தடுப்பது?
பயம்: ஏன் வருகிறது? எப்படி தடுப்பது? : சத்குருவின் பதில்
44,559 views
Sadhguru Tamil
Published on Dec 30, 2018
'அரண்டவன் கண்ணுக்கு
இருண்டதெல்லாம் பேய்!' என்ற பழமொழி பய உணர்வினால் ஒருவரின் கண்ணோட்டம் முழுவதுமே தவறாகிவிடுவதைக் காட்டுகிறது. பெரும்பாலானோருக்கு பயம் வாழ்க்கையின் வெற்றிக்கும், உடல் ஆரோக்கியத்திற்கும், மனதின் சமநிலைக்கும் பெரும்சவாலாக உள்ளது. இந்த பயம் ஏன் வருகிறது என்பதை வீடியோவில் கூறி தெளிவுபடுத்துகிறார் சத்குரு!
சதகுருவின் திருவடிகளுக்கு நம்காரம்.
நன்றி: "Sadhguru Tamil" மற்றும் யூடியூப்.
23 பிப்., 2019
கேள்வியும் பதிலும்-36: கோபம் வந்தால் என்ன செய்யவேண்டும்?
கோபம் வந்தால் என்ன செய்யவேண்டும்?
சத்குரு
316,044 views
Sadhguru Tamil
Published on Apr 18, 2018
கோபமே வராத நிலையை எட்டுவதற்குதான் யோகாவெல்லாம் செய்கிறோம்! ஆனாலும் கோபம் வந்துவிடுகிறதே?! கோபம் வருகையில் நாம் செய்யவேண்டிதென்ன என்பதை சத்குரு வீடியோவில் கூறுகிறார்!
நன்றி: வணக்கத்திற்குரிய சத்குரு அவர்கள், "Sadhguru Tamil" மற்றும்
யூடியூப்.
22 பிப்., 2019
கேள்வியும் பதிலும்-35: கரும வினை என்றால் என்ன?
கரும வினை என்றால் என்ன?
சுகி சிவம் ஐயா அவர்களின் அருமையான சொற்பொழிவு கேட்டுமகிழுங்கள்
80,681 views
தமிழ் பேச்சு
Published on Dec 9, 2018
நன்றி: திரு சுகி சிவம் அவர்கள், "தமிழ் பேச்சு" மற்றும் யூடியூப்.
16 பிப்., 2019
கேள்வியும் பதிலும்-34: குரு பௌர்ணமி ஏன் கொண்டாடுகிறோம்? |
குரு பௌர்ணமி ஏன் கொண்டாடுகிறோம்? |
Sadhguru Tamil | Why is Guru Purnima
Celebrated?
13,848 views
“Sadhguru Tamil”
Published on Jul 17, 2018
பாரத கலாச்சாரத்தில் கொண்டாடப்படும் முக்கிய விழாக்களில் 'குரு பௌர்ணமி' குறிப்பிடத் தகுந்த ஒரு திருவிழா. குரு பௌர்ணமி நாளின் முக்கியத்துவம் குறித்து இந்த வீடியோவில் எடுத்துரைக்கும் சத்குரு, வரும் ஜூலை 27ல் ஈஷாவில் நிகழ்கின்ற குரு பௌர்ணமி கொண்டாட்டத்திற்கு அனைவரையும் அழைக்கிறார்.
சத்குரு அவர்களின் திருவடிகளுக்கு நமஸ்காரம்.
நன்றி: “Sadhguru Tamil” மற்றும் யூடியூப்.
1 பிப்., 2019
கேள்வியும் பதிலும்-33: மனித இனம் எப்படி அழியும்?: சதகுரு ஜக்கி வாசுதேவ்
மனித இனம் எப்படி அழியும்?:
சத்குரு ஜக்கி வாசுதேவ்
63,494
views
Sadhguru
Tamil
Published
on Feb 25, 2015
கி.பி. 2000 வருடத்தில் உலகம் அழிந்துவிடும் என்று வதந்திகள் பரவின. பின் 2012லும் பரபரப்பாக பேசிக்கொண்டனர். ஆனால், தொடர்ந்து இந்த பூமி இயங்கிக்கொண்டுதான் இருக்கிறது. உலகம் அழியப்போகிறது என்று சொல்வது பற்றி திரைப்பட இயக்குனர் திரு.A.R.முருகதாஸ் அவர்கள், ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவிடம் கேட்டபோது, சத்குரு என்ன கூறினார் என்பதை அறிய, இந்த வீடியோவைப் பாருங்கள்! உண்மையில், மனித இனம் எப்படி அழியப்போகிறது என்பதை சத்குரு விளக்குகிறார்!
நன்றி: சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்கள், "Sadhguru Tamil" மற்றும் யூடியூப்.
29 ஜன., 2019
கேள்வியும் பதிலும்-32: எது தர்மம்? - சுகி சிவம்
எது தர்மம்? -
சுகி சிவம் அவர்களின் அற்புதமான பேச்சு
இதுவரை பார்த்து/கேட்டு ரசித்தவர்கள்: 21,402 பேர்
பதிவிட்டவர்கள்: "Tamil Pulse"
பதிவிட்ட நாள்: ஏப்ரல் 20, 2018
நன்றி: திரு சுகி சிவம் அவர்கள், "Tamil Pulse" மற்றும் யூடியூப்.
26 ஜன., 2019
கேள்வியும் பதிலும்-31: ஏழு ஜென்மங்கள் இருப்பது உண்மையா?
ஏழு ஜென்மங்கள் இருப்பது உண்மையா? -
சத்குருவின் பதில்
61,815 views
"Sadhguru Tamil"
Published on Feb 1, 2015
ஒருவருக்கு ஏழு ஜென்மங்கள் உண்டு
என்ற ஒரு கருத்து பொதுவாக பேசப்படும் விஷயமாக இருந்தாலும், சிலர் அதனை நம்புகிறார்கள்;
பலர் அதனை மறுக்கிறார்கள். எது உண்மை என்பதை எப்படி அறிந்துகொள்வது. ஆம், இதே கேள்வியை
இந்த வீடியோவில் திருமதி.பூர்ணிமா பாக்கியராஜ் அவர்கள் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும்
ஞானியுமான சத்குருவிடம் கேட்கிறார். அதற்கு சத்குரு அளிக்கும் பதில் உண்மையை தெளிவாக்குகிறதா?
வீடியோவைப் பார்த்து அறிந்துகொள்ளுங்கள்!
சத்குருவை வணங்கி நன்றியுடன் இதைப் பதிவிடுகிறேன்.
19 ஜூன், 2010
கேள்வியும் பதிலும்-30:
உண்மையைப் பேசும் அரசியல் பேச்சாளர்கள் யார்? (தி.விஜயலட்சுமி, பெரம்பூர்)
அரசியல் கட்சியில் சேர்ந்த பிறகு உண்மையைக் குழிதோண்டிப் புதைப்பவர்கள்தானே இன்று நூறு சதவிகிதம் உள்ளனர். கட்சியில் சேர்ந்து, மேடை ஏறிய பின், உண்மை எங்கிருந்து வரும்? (அந்துமணி)
நன்றி: அந்துமணி கேள்வி-பதில், தினமலர் வாரமலர், மே 9 , 2010 .
அரசியல் கட்சியில் சேர்ந்த பிறகு உண்மையைக் குழிதோண்டிப் புதைப்பவர்கள்தானே இன்று நூறு சதவிகிதம் உள்ளனர். கட்சியில் சேர்ந்து, மேடை ஏறிய பின், உண்மை எங்கிருந்து வரும்? (அந்துமணி)
நன்றி: அந்துமணி கேள்வி-பதில், தினமலர் வாரமலர், மே 9 , 2010 .
20 ஏப்., 2010
கேள்வியும் பதிலும்-29:
பிராயச்சித்தம் என்றால் என்ன? (ஸ்வேதா அரவிந்த், தஞ்சாவூர்)
மெகா சீரியல்கள் போட்டு மக்களை அழவைக்கும் சேனல்கள், தனியாக நகைச்சுவை சேனல்கள் ஆரம்பிப்பதுதான்!
- நானே கேள்வி, நானே பதில்!, ஆனந்த விகடன், 10.3.2010.
நன்றி: ஸ்வேதா அரவிந்த் & ஆனந்த விகடன்.
மெகா சீரியல்கள் போட்டு மக்களை அழவைக்கும் சேனல்கள், தனியாக நகைச்சுவை சேனல்கள் ஆரம்பிப்பதுதான்!
- நானே கேள்வி, நானே பதில்!, ஆனந்த விகடன், 10.3.2010.
நன்றி: ஸ்வேதா அரவிந்த் & ஆனந்த விகடன்.
14 அக்., 2009
கேள்வியும் பதிலும் -28: இயற்கைக்கும் மனிதனுக்கும் உள்ள உறவு - மாதா அமிர்தானந்தமயி
அவசியம் படிக்க வேண்டிய, தெரிந்துகொள்ள வேண்டிய உண்மைகள்.
தமிழில் அதை வாசிக்க கீழே 'க்ளிக்' செய்யவும்:
Relationship between Human & Nature - Madha Amirthananthamayi
Shared via AddThis
நன்றி: 'Webdunia.com' & 'AddThis'
தமிழில் அதை வாசிக்க கீழே 'க்ளிக்' செய்யவும்:
Relationship between Human & Nature - Madha Amirthananthamayi
Shared via AddThis
நன்றி: 'Webdunia.com' & 'AddThis'
20 ஜன., 2009
கேள்வியும் பதிலும்-27:
"ஒரு மனிதனைப்போல் இன்னொருவர் இருப்பதும் இல்லை, பிறப்பதும் இல்லை. அப்படியிருக்க, நான் அவரைப்போல் வர ஆசைப்படுகிறேன், இவரைப்போல் வரவேண்டும் என்பது என் லட்சியம் என்றெல்லாம் கூறுவது ஏன்?" (விஜயலட்சுமி, பொழிச்சலூர்)
"ஒரு 'இன்ச்பிரேஷனுக்குத்தான்!' மூக்கு, கண், வாய் ஒரே மாதிரி இல்லாமல் இருக்கலாம். லட்சியங்கள் ஒரே மாதிரி இருக்க முடியும் அல்லவா? 'மாவீரன் அலெக்சாண்டர் போல நானும் வரவேண்டும்' என்று ஆசைப்பட்டவர் ஜூலியஸ் சீசர். செங்கிஸ்கானைப்போல ஆக வேண்டும் என்று தைமூர் விரும்பினான். அப்பாவைப் பின்பற்றி மகனும் பிற்பாடு எவரெஸ்ட் சிகரம் ஏறி கொடி நாட்டியது உங்களுக்குத் தெரியுமா? - டென்சிங் மகன்!
நன்றி: ஆனந்த விகடன், 22.10.2008.
27 டிச., 2008
கேள்வியும் பதிலும்-26: "கவிஞன் யார்?" "எது கவிதை?"
கேட்டேன் என்பவன் சமூக மருத்துவன். பலநேரங்களில் யதார்த்தம் முன் கற்பனை உலகிலேயே வாழும் கோமாளியாகவும் வாழ்ந்து மறைந்து போகிறான். பார்த்ததைப் புதிதாய்ப் பார்ப்பவன் பாவலன். பார்த்ததை மீண்டும் பார்ப்பவன் பாமரன். கவிஞன் என்பவன் தலைசிறந்த ரசிகனாகவும் இருக்கிறான். அதேபோல் கவிதையில் புதுக்கவிதை, மரபுக்கவிதை என்ற பேதமில்லை. கவிதைகளுக்கு வார்த்தைகளே தேவையில்லை. வாசிக்கும் முன்பே புரிந்துவிடக்கூடியதுதான் கவிதை. எளிமைதான் அதன் ஆகச் சிறந்த இயல்பு. இந்த இடத்தில் எனது கவிதை ஒன்றினைப் பகிர ஆசைப்படுகிறேன்:
மொழியின்முன் மண்டியிட்டு
வார்த்தை வரம் கேட்டேன்.
அரசியல்வாதிகள் வந்து
அள்ளிக்கொண்டு
போய்விட்டார்கள்.
கட்டுரையாளர்கள் சிலர்
கேட்டு வாங்கிப்போனார்கள்.
மீதமிருந்ததை பேசவும் ஏசவும்
மனைவியர் வாங்கிப்
போனார்கள்.
தாமதமாக வந்து நிற்கிறாயே,
தமிழ்க் கவிஞனே என்று
மொழி மிகவும் வருந்தியது.
வேறு வழியின்றி வெற்றுக்
காகிதத்தை மடித்து
வழியில் என் காதலியிடம் தந்தேன்.
வாங்க மறுத்த அவள்,
நீ என்ன எழுதியிருப்பாயென
எனக்குத் தெரியுமென்றாள்.
வார்த்தைகளே இல்லாத
கவிதையை
வாசிக்காமலேயே அவள்
புரிந்துகொண்ட பிறகுதான் தெரிந்தது,
கவிதைக்கு வார்த்தைகள்
அவசியமில்லையென்று.
- "ஏர்வாடி எஸ்.இராதாகிருஷ்ணன் நேர்காணலிலிருந்து ஒரு பகுதி"
"இனிய உதயம்", மாத இதழ், நக்கீரன் வெளியீடு, டிசம்பர் 2008.
நன்றி: திரு எஸ்.இராதாகிருஷ்ணன் & "இனிய உதயம்"
15 டிச., 2008
கேள்வியும் பதிலும்-25:
வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கிறேன். எந்த சாமியைக் கும்பிட்டால் வாழ்க்கையில் முன்னேறலாம்? (கா.வீரபாபு, பூண்டி)
மூன்று சாமிகளைக் கும்பிடவேண்டும். அவை, தன்னம்பிக்கை சாமி, தைரியசாமி, தளராமுயற்சி சாமி! (அந்துமணி பதில்)
நன்றி: தினமலர், வாரமலர், டிசம்பர் ௧௪, ௨00௮ ("அந்துமணி பதில்கள்")
மூன்று சாமிகளைக் கும்பிடவேண்டும். அவை, தன்னம்பிக்கை சாமி, தைரியசாமி, தளராமுயற்சி சாமி! (அந்துமணி பதில்)
நன்றி: தினமலர், வாரமலர், டிசம்பர் ௧௪, ௨00௮ ("அந்துமணி பதில்கள்")
3 டிச., 2008
கேள்வியும் பதிலும்-24:
வாழ்க்கையில் உயர என்ன வழி? (பா.ராஜசேகர், விழுப்புரம்)
செய்யவேண்டிய வேலையை தள்ளிப்போடாமல், மூளையைப் பயன்படுத்தி உழைத்தாலே உயர முடியும். இன்றுள்ள பொருளாதார நெருக்கடியான காலகட்டத்தில், உழைத்துக்கொண்டே இருந்தால் மட்டுமே உயர முடியும். (அந்துமணி பதில்கள், தினமலர், வாரமலர், 30.11.2008)
நன்றி: தினமலர்.
23 அக்., 2008
கேள்வியும் பதிலும்-23:
கம்ப்யூட்டர் மூலம் மாப்பிள்ளை பார்க்க முடியுமா? (எல்.மகாலட்சுமி, மானாமதுரை)
ஒரு பழைய ஜோக் நினைவுக்கு வருகிறது. "அழகாக இருக்க வேண்டும். ஆனால் அதிக உயரமாக இருக்கக் கூடாது. நீச்சல் தெரிந்திருக்க வேண்டும். குளிர் பிரதேசத்தில் வாழத்தயாராக இருக்கவேண்டும். கூட்டத்தில் ஒருவராக ஒத்துப் போகவேண்டும். எனக்கு ஒரு ஜோடி தேடிக்கொடு" என்று கம்ப்யூட்டரிடம் விண்ணப்பித்தான் ஒரு இளைஞன்.
சில நிமிடங்கள் யோசித்த கம்ப்யூட்டர் கேட்டது: "டால்ஃபினை கல்யாணம் பண்ணிகொள்ளத் தயாரா?" (தமிழன்)
நன்றி: தமிழன் கேள்வி-பதில், குங்குமம், 9.4.1999.
15 அக்., 2008
கேள்வியும் பதிலும்-22:
உண்மையான துறவி யார்? (பா.அச்சுதன், வயலூர்)
அரசியலில் ஊடுறுவாத, ஆடம்பர வாழ்க்கை வாழாத, கொழுத்த உடலைக் கொண்டிராத, மதஉணர்வுகளைத் தூண்டிவிடாதமக்களோடு மக்களாகக் கலந்து வாழும், தன்னையும் ஒரு கடவுளாக எண்ணிக்கொள்ளாத எளிய மனிதர். (அரசு பதில்)
நன்றி: குமுதம், அக்டோபர் 15, 2008.
அரசியலில் ஊடுறுவாத, ஆடம்பர வாழ்க்கை வாழாத, கொழுத்த உடலைக் கொண்டிராத, மதஉணர்வுகளைத் தூண்டிவிடாதமக்களோடு மக்களாகக் கலந்து வாழும், தன்னையும் ஒரு கடவுளாக எண்ணிக்கொள்ளாத எளிய மனிதர். (அரசு பதில்)
நன்றி: குமுதம், அக்டோபர் 15, 2008.
14 அக்., 2008
கேள்வியும் பதிலும்-21:
விலங்குகளிடம் நீங்கள் பார்த்துப் பொறாமைப்படும் விஷயம்? (ஏ.ஜி.கல்யாணசுந்தரம், கோவை)
இரண்டு. தங்களுக்க நேரக்கூடிய ஆபத்தைப் பற்றி அவை கவலையே படுவதில்லை. தங்களைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதைப் பற்றியும் அலட்டிக் கொள்வதில்லை. (அரசு பதில்)
நன்றி: குமுதம், அக்டோபர் 15, 2008 ("அரசு பதில்கள்").
இரண்டு. தங்களுக்க நேரக்கூடிய ஆபத்தைப் பற்றி அவை கவலையே படுவதில்லை. தங்களைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதைப் பற்றியும் அலட்டிக் கொள்வதில்லை. (அரசு பதில்)
நன்றி: குமுதம், அக்டோபர் 15, 2008 ("அரசு பதில்கள்").
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
