என் தாய்மொழி தமிழுக்கென்றே இவ்வலைப்பூ. எனது எண்ணங்கள், எனக்குப் பிடித்த கருத்துக்கள், கவிதைகள், கதைகள் மற்றும் என்னை ஈர்த்த செய்திகள், நாட்டுநடப்புகள், நம் அனைவரின் வாழ்வோடு தொடர்புடைய மற்றனைத்தும் இதில் இடம் பெறும். (பின்புலப் புகைப்படத்தை எடுத்த ஜோன் சல்லிவனுக்கும், அதை வழங்கிய பப்ளிக்-டொமைன்-ஃபோட்டோஸ்.காமிற்கும் நன்றி)
Click Me
கருத்து மேடை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கருத்து மேடை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
6 நவ., 2025
23 அக்., 2025
19 அக்., 2025
15 அக்., 2025
கருத்து மேடை
_புன்னகையோடு வலம் வந்தேன்_
_*"கள்ளச்சிரிப்பு"*_என்றார்கள்!_
_கோபங் கொண்டேன்_
_*" சிடுமூஞ்சி"*_ _என்றார்கள்!_
_அதிகம் பேசாமலிருந்தேன்_
_*" ஊமையன்"*_ _என்றார்கள்!_
_சளசளவென்று_ _பேசினேன்_
_*"ஓட்டவாய்"*_ _என்றார்கள்!_
_தகவல் பல பரிமாறினேன்_
_*"கருத்து கந்தசாமி "*_ _என்றார்கள்!_
_பிறரின் வார்த்தைகளுக்கு
செவி சாய்த்தேன்-
_*"ஜால்ரா"*_ _என்றார்கள்!_
_செயல்கள் பல_
_முன் நின்று_ _செய்தேன்_
_*"முந்திரிக்கொட்டை"*_ _என்றார்கள்!_
_அவர்களைப் பின் தொடர்ந்தேன்,_
_*"நடிப்பு"*_ _என்றார்கள்!_
_யாரைப் பார்த்தாலும்
வணங்கினேன்_
_*"ஏமாற்றுக்காரன்"*_ _என்றார்கள்!_
_வணங்குவதை நிறுத்தினேன்_
_*"தலைக்கனம்"*_ _என்றார்கள்!_
_ஆலோசனை வழங்கினேன்_
_*" படிச்ச திமிர்"*_ _என்றார்கள்!_
_சுயமாக முடிவெடுத்தேன்_
_*"அதிபுத்திசாலி"*_ _என்றார்கள்!_
_கண்ணீர் விட்டு அழுதால்_
_*"வேஷக்காரன்"*_ _என்றார்கள்!_
_நான் சிரித்த போதெல்லாம்_
_*"மரை கழண்டுப் போச்சு"*_
_என்றார்கள்!_
_எதிர்கேள்வி கேட்டால்_
_*"வில்லங்கம்"*_ _என்றார்கள்!_
_ஒதுங்கி இருந்தால்_
_*"பயந்தாங்கொள்ளி"*_ _என்றார்கள்!_
_உரிமைக்குப் போராடினால்_
_*"கலகக்காரன்"*_ _என்றார்கள்!_
_எதற்கும் கலங்காமல் இருந்தால்_
_*"கல் நெஞ்சன்"*_ _என்றார்கள்!_
_*"நாலுபேர்*_ _*என்ன*_ _*நினைப்பார்கள்*_
_*நாலுபேர் என்ன பேசுவார்கள்?"*_
_*என்றஞ்சி,*_
_யாரோ_
_நாலு பேருக்காக வாழ்ந்தேன்!_
_*தொலைவில் கிடந்தது*_
_*என் வாழ்க்கை!*_
_*அந்த*_ _*நாலுபேரை*_ _*கழற்றி விட்டு,*_
_*என்னை அணிந்து கொண்டேன்!*_
_துலங்கத்_ _துவங்கியது_
_எனக்கான_ _வாழ்வின் துளிர்!_
_*வாழ்கிறேன்...*_
_*முழுமையாக,*_ _*இன்பமாக!*_
_*குறிப்பாக...*_
_*மிக நிம்மதியாக!*_
1 அக்., 2025
23 செப்., 2025
28 ஜூலை, 2025
13 ஜூலை, 2025
3 ஜூலை, 2025
12 ஜூன், 2025
11 மே, 2025
4 மே, 2025
1 மே, 2025
29 ஏப்., 2025
28 ஏப்., 2025
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)