29 செப்., 2022

சிறுநீர் சிகிச்சை : உலக இதய தின வாழ்த்துக்கள்

இதய நோயாளிகள் தங்கள் சொந்த சிறுநீரை குடிப்பதன் மூலமும், பிற பயன்பாடுகளால் மிக விரைவாக குணமடைவார்கள், ஏனெனில் சிறுநீரில் மனித சிறுநீரில் இருந்து தயாரிக்கப்படும் "யூரோ கினேஸ்" என்ற மருந்து உள்ளது, உலக இதய தின வாழ்த்துக்கள்!

இன்று ஒரு தகவல்

27 செப்., 2022

நூல்மயம்

இன்றைய குறள்

சிறுநீரின் அற்புதங்கள்

அருள்வாக்கு

சுற்றுச்சூழல்

25 செப்., 2022

சிறுநீர் சிகிச்சை விழிப்புணர்வு கூட்டம்

*NATIONAL CATERING COLLEGE,  COLLEGE ROAD,  காரைக்குடி*
(காரைக்குடி பழைய,  புதிய பேருந்து நிலையங்களிலிருந்து டவுன்பஸ் வசதி உள்ளது)

*செப்டம்பர் 25, 2022*
*ஞாயிற்றுக் கிழமை*

*காலை 10 மணி - மாலை 4 மணி*

*திரு RMR ராஜசேகரன் குடும்பத்தினர் கலந்து கொள்கின்றனர்*

*RMRRன் புதல்வி, பேராசிரியை புவனேஸ்வரி, மற்றும் மாரிமுத்து ஐயா ஆகியோர் சிறப்புரை ஆற்றுவர்*

*தொடர்பு :*

*Dr A செல்வராஜ்*
*ஒருங்கிணைப்பாளர்* 
*கைபேசி : 9443288902*

*காரைக்குடி வட்டாரத்தை சேர்ந்த அன்பர்கள் அனைவரும் அவசியம் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்*
💚💚💚💚💚💚💚💚💚💚💚

அருள்வாக்கு

அருள்வாக்கு

...

22 செப்., 2022

காரைக்குடியில் சிறுநீர் சிகிச்சை விழிப்புணர்வு கூட்டம்

*NATIONAL CATERING COLLEGE,  COLLEGE ROAD,  காரைக்குடி*
(காரைக்குடி பழைய,  புதிய பேருந்து நிலையங்களிலிருந்து டவுன்பஸ் வசதி உள்ளது)

*செப்டம்பர் 25, 2022*
*ஞாயிற்றுக் கிழமை*

*காலை 10 மணி - மாலை 4 மணி*

*திரு RMR ராஜசேகரன் குடும்பத்தினர் கலந்து கொள்கின்றனர்*

*RMRRன் புதல்வி,  பேராசிரியை புவனேஸ்வரி சிறப்புரை ஆற்றுவார்*

*காலை, மாலை தேநீர் மற்றும் மதிய உணவு வழங்கப்படும்*

*நன்கொடை : நபர் ஒன்றுக்கு ரூ 200/-*

*விவரங்களுக்கு:*

*Dr A செல்வராஜ்*
*ஒருங்கிணைப்பாளர்* 
*கைபேசி : 9443288902*

*முன்பதிவு அவசியம்*

*வாய்ப்புள்ள அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்*
💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚

அருள்வாக்கு

20 செப்., 2022

நூல்மயம்

இன்றைய குறள்

இன்று சில தகவல்கள்

சிரிப்புத்தான் வருகுதையா!

அருள்வாக்கு

ஆன்மீக சிந்தனை

நலக்குறிப்புகள்

16 செப்., 2022

ஹோமியோபதி

போற்றுதலுக்குரியோர்

முன்னேற்றப் பாதை

கவிதை நேரம்

பட்டினப்பாலை பத்துப்பாட்டு நூல்களில் ஒன்று. சோழன் கரிகால் பெருவளத்தானை கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடியது. அந்த நூலில்,

நீரின் வந்த நிமிர்ப் பரிப்புரவியும்,
காலின் வந்த கருங்கறி மூடையும்
வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்
குடமலை பிறந்த ஆரமும் அகிலும்
தென்கடல் முத்தும் குணகடல் துகிரும்,
கங்கை வாரியும் காவிரிப் பயனும்
ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும்”

என்று காவிரிப்பூம்பட்டினம் வந்தடைந்த பல்பொருள் வளங்கள் பேசும் பாடல் அடிகள் இவை. பொருளும் சொன்னால் பாடலின் அருமை அர்ததமாகும் என்பதால் அரங்கின்றி வட்டாடுகிறேன்.

கடல்மார்க்கமாக நிமிர்வும் விரைவும் உடைய குதிரைகள் வந்தன. நிலத்தின் வழி காளைமாட்டு வண்டிகளில் கரிய மிளகு மூடைகள் வந்தன. வடமலையில் தோன்றிய மாணிக்கங்களும் பொன்னும் வந்தன.குடகுமலை பிறந்த சந்தனமும் அகிலும் வந்தன. தென்கடல் கொற்கையில் பிறந்த முத்துக்கள் வந்தன. கிழக்குக் கடலில் இருந்து பவளங்கள் வந்தன. கங்கையாற்று வளத்தால் விளைந்தவையும் காவிரியாற்றுப் பயனும் வந்தன. ஈழத்தின் , கடாரத்தின் பண்டங்கள் வந்தன.

நன்றி : திரு நாஞ்சில் நாடன் அவர்கள்

பாரதி நினைவுகள்


பாரதி உயிரோடு இருந்த போது அவரையும் அவரின் குடும்பத்தையும் வறுமையின் கோரப் பிடியில் உழல விட்டு,  கண்டும் காணாது போலிருந்தது அவரைச் சுற்றி வாழ்ந்திருந்த  சமூகம்.

குனிந்த தலை நிமிராமல் வரும் மனைவி செல்லம்மாளின் கையைப் பிடித்துக் கொண்டு பீடு நடை போட்டு வரும் பாரதியை பைத்தியக்காரன் என செல்லம்மாள் காது படவே சத்தம் போட்டுச் சொல்லி கேலி செய்தது அந்த சமூகம்.

பாரதி சாதம் சாப்பிடும் முறையே விசித்திரமாக இருக்கும்! 

சாப்பிட உட்காரும் போதும் ஒரு மஹாராஜா உட்காருவது போல தரையில் உட்காருவார்.
கட்டை விரல் நடுவிரல் மற்றும் மோதிர விரல் மட்டுமே பயன்படுத்துவார். 

அவருக்குப் பிடித்த உணவே சுட்ட அப்பளம் தான். வறுமையின் கோரப் பிடியினால் மாதத்தில் பத்து நாட்கள் மட்டுமே ஏதாவது காய்கறி இருக்கும். மற்ற நாட்களில் சுட்ட அப்பளம் தான்.

பாரதி பார்த்தசாரதி கோயில் யானையால் தாக்கப்பட்டு உடல் நலிவுற்றுக் காலமானதாக இக்கணம் வரை பள்ளிப்பாடங்களிலும் தவறாகச் சொல்லப்படுகிறது.

அத்துயர நாளில் பாரதி யானைக்குத் தேங்காய் பழம் கொடுக்கச் சென்ற போது பலரும் தடுத்து எச்சரித்தார்கள்.

ஆனால் பாரதி நெருங்கிய போது யானை அமைதியாகவே இருந்தது.

ஆனால் துதிக்கையால் தேங்காய் பழத்தைப் பற்றாமல் பாரதியின் இடுப்புக்கு மேலே சுற்றி தன் நான்கு கால்களுக்கும் நடுவே வீசியது..

கண்ணிமைக்கும் நேரத்தில் குவளைக்கண்ணன் என்ற பாரதியின் சிநேகிதரான அந்த புண்ணிய ஆத்மா, தன் உயிரையும் பொருட்படுத்தாது யானையின் கால்களுக்கு நடுவே புகுந்து, குனிந்து பாரதியை  தன் தோளில் போட்டுக் கொண்டார்.

யானை நினைத்திருந்தால் தன் கால்களுக்கு நடுவே இருக்கும் இருவரையும் அக்கணமே நசுக்கி சட்னி செய்திருக்க முடியும்.

ஆனால் தான் பண்ணிய மாபெரும் தவறு அதற்கு உரைத்ததோ என்னவோ அதற்குப் பிறகு அதனிடத்தில் எந்த சலனமும் இல்லை.

கீழே பாரதி விழுந்த போது முண்டாசு இருந்ததால் பின்புற மண்டை தப்பியது.
ஆனால் கட்டாந்தரையில் விழுந்ததில் முகம், மூக்கு, தோள்பட்டை, முழங்கை மற்றும் முழங்கால்களில் பலத்த ரத்தக்காயத்தோடு பாரதி மயங்கினார்.

காயம்பட்ட கவிஞனை ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் நண்பர் சீனுவாசாச்சாரியார் கொண்டு போய்ச் சேர்த்தார்.

பகைவனுக்கும் அருளச் சொன்ன பாரதி தன்னைப் பழுதாக்கிய யானையை பழித்தாரா? இல்லவே இல்லை!

கொஞ்சம் நினைவு வந்ததும் சொன்னாராம், 
''யானை முகவரி தெரியாமல் என்னிடம் மோதி விட்டது. என்ன இருந்தாலும் என்னிடம் இரக்கம் அதிகம் தான். இல்லையென்றால் என்னை உயிரோடு விட்டிருக்குமா?''

அங்கங்களின் காயம் ஆறத் தொடங்கியது.
பாரதியும் 
சுதேசமித்திரன் ஆபீஸூக்கு ஐந்தாறு மாதங்கள் சிரமத்தோடு சென்று வந்தார்.

காயம் ஆறியதே தவிர,  அந்த அதிர்ச்சியோ அவசர வியாதிகளை அழைத்து வந்தது.

சீதபேதி பாரதியின் உடலைச் சிதைக்கத் தொடங்கியது.

மீண்டும் அதே ராயப்பேட்டை ஆஸ்பத்திரி.

செப்டம்பர் 11, அதிகாலை இரண்டு மணி.

வெளியேறத் துடிக்கும் உயிரோ பாரதியின் உடலை உதைத்துக் கொண்டிருக்கிறது.

சில நிமிடங்களில் அந்த 39 வருஷக்
கவிதைக்கு மரணம் முற்றுப்புள்ளி வைத்தது.

ஒரு யுக எரிமலை எப்படி அணைந்ததோ?

ஒரு ஞானக்கடல் எப்படித் தான் வற்றியதோ?

குவளைக்கண்ணன், லட்சுமண ஐயர், ஹரிஹர சர்மா, சுரேந்திரநாத் ஆர்யா, நெஞ்சு கனத்துப் போன நெல்லையப்பர் ஐவரின் தோள்களும் அந்த ஞான சூரியனின் சடலத்தைச் சுமந்து கிருஷ்ணாம் பேட்டை மயானம் நோக்கி நடந்தன.

இறுதி ஊர்வலத்தின் எண்ணிக்கையோ வெறும் பதினொன்று, சுமந்தவர்களையும் சேர்த்து.

மகா கவிஞனுக்கு மரியாதை பார்த்தீரோ?

அவர் உடம்பில் மொய்த்த ஈக்களின் எண்ணிக்கையில் கூட ஆட்கள் வரவில்லையே.

இது புலிகளை மதிக்காத புழுக்களின் தேசமன்றோ.

தூக்கிச் சென்றவர்களோ தோளின் சுமையை இறக்கி வைத்தார்கள். ஆனால் துயரத்தின் சுமையை?

எரிப்பதற்கு முன் ஒரு இரங்கல் கூட்டம்...

பாரதியின் கீர்த்தியை சுரேந்திரநாத் ஆர்யா சொல்லி முடிக்க,  ஹரிஹர சர்மா சிதைக்குத் தீ மூட்டுகிறார்.

ஓராயிரம் கவிதைகளை 
உச்சரித்த உதடுகளை
ஞான வெளிச்சம் வீசிய 
அந்த தீட்சண்ய விழிகளை
ரத்தம் வற்றினாலும் 
கற்பனை வற்றாத 
அந்த இதயத்தை... 

தேடித்தேடித் தின்றன 
தீயின் நாவுகள்.

*மகா கவிஞனே!*
எட்டையபுரத்து கொட்டு முரசே!

உன்னைப் பற்றி உள்ளூரே புரிந்து 
கொள்ளாத போது, 
இவ்வுலகதிற்குப் புரிவது ஏது?

உன் எழுத்துக்களை வாழ்க்கைப் படுத்தினால் அன்றி உன் பெயரை உச்சரிக்கக் கூட எமக்கு யோக்கியதை தான் ஏது?.. 

பகிர்வு

நன்றி :

அருள்வாக்கு