ராகுல் சாங்கிருத்யாயன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ராகுல் சாங்கிருத்யாயன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

28 செப்., 2021

நூல் நயம் : ஊர்சுற்றிப் புராணம் - ராகுல் சாங்கிருத்யாயன்


#ஆண்டுவிழா #பயணம் தொடர்பானவை 

புத்தகம்.                   ஊர்சுற்றிப் புராணம்
ஆசிரியர். ராகுல் சாங்கிருத்யாயன்
பதிப்பகம். நியூசென்சுரி புக் ஹவுஸ்
பக்கங்கள். 150

இந்த உலகத்துலயே பழமையான மதம் ஒன்னு இருக்குன்னா, அது "ஊர்சுற்றுதல்" மட்டும் தான்னு சாங்கிருத்யாயன் ஆரம்பிக்கிறாரு. அதாவது ஊர்சுற்றுதல் மட்டும் தான் எந்த மத எல்லைக்கும் உட்படாதது, எல்லா மதங்களுக்கும் பொதுவானதுனு சொல்ற சாங்கிருத்யாயன், உதாரணத்துக்கு பழம்பெரும் ஊர்சுற்றிகளான புத்தர், இயேசுல இருந்து பாகியான், யுவான் சுவாங் வரையும் கவிஞர்கள்ல காளிதாசரில் இருந்து இரஷ்யாவின் புஷ்கின் வரைக்கும் உதாரணத்துக்கு கொடுக்குறாரு.

ஊர்சுற்றுதலின் தோற்றம். 
மனித சமுதாயத்துடைய வளர்ச்சியும், நாகரீகங்களுடைய தோற்றமும் நதிக்கரையில் இருந்து தான் ஆரம்பிச்சது. அதுவே போதும்னு மனுஷன் ஒரே இடத்துல தங்கி இருந்தா, அவனுடைய அறிவு குறுகிய பார்வை உடையதாக தான் இருந்திருக்கும். இவ்ளோ பரந்துபட்ட சமுதாயம் உலகத்துல தோன்றி இருக்காது.

ஊர்சுற்றும் மனப்பான்மை.
"ஒரு புகைப்படத்தைப் பார்த்து, நீங்கள் இமயமலையின் அடிவாரத்தில் உள்ள அடர்ந்த காடுகளையும், பனிமூடிய மலைச்சிகரங்களின் இயற்கை அழகையும், அதன் மனமகிழ் மணத்தையும் எப்படி அனுபவிக்க முடியாதோ, அதைப்போலவே ஊர்சுற்றிக்குக் கிடைக்கக்கூடிய நிறைவான இன்பம் பயண நூல்களைப் படித்து நீங்கள் பெற முடியாது." - ராகுல் சாங்கிருத்யாயன்.

இப்படி பயணக்கட்டுரைகள்ல இருந்து, ஊர்சுற்றுதல் பக்கம் நம்மள திசைத்திருப்புற சாங்கிருத்யாயன், ஊர்சுற்றுதலுக்கு வழிகாட்டவும் செய்றாரு.

ஊர்சுற்றும் விரதம். 
ஊர்சுற்றுதல் மனப்பான்மை ஒருத்தங்களுக்கு 12 லிருந்து 14 வயசுக்குள்ள வரணும்னு சொல்ற சாங்கிருத்யாயன், அந்த விரதத்தை 16 வயசுல இருந்து 24 வயசுக்கு மேல தான் தொடங்கணும்னு சொல்றாரு.

ஊர்சுற்றுதலுக்கு அடிப்படையான பூகோள அறிவும், வரலாறும், கணிதமும் தெரிந்து இருக்குறது இன்னும் நலம்னும், உலக வரைபடங்கள், தேச வரைபடங்கள் பற்றிய தெளிவும் அங்க நிலவுற தட்பவெப்ப நிலை, நிலப்பகுதி சார்ந்த அறிவும் அவங்களுக்கு ஊர்சுற்ற கைக்கொடுக்கும்னு சாங்கிருத்யாயன் குறிப்பிடுறாரு.

பணமும், செல்வமும் ஊர்சுற்றி விரதத்திற்கு இருக்குற தடைக்கற்கள்னு சொல்ற அவரு, ஊர்சுற்றுகிறவர்கள் உடல் உழைப்பை நம்பி இருக்கணும், தச்சுத் தொழில், சிகையலங்காரம் செய்ய தெரிஞ்சு இருக்குறது Extra Qualification. மொழி தெரியாத இடங்கள்ல கூட இந்த அனுபவ அறிவு கைக்கொடுக்கும்னு தன்னுடைய சொந்த அனுபவங்களைப் பகிர்ந்துக்கிறாரு.

கலை மீதான தாகம்.
ஒரு ஊர்சுற்றி எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமா பயணப்படுறானோ, அவ்வளவுக்கு அவ்வளவு அறிவை சேகரிக்க முடியும்னும் அதை எழுத்து, ஓவியம், சிற்பங்கள் மூலம் வடிக்கிறதால தன்னுடைய தேசத்துக்கும், தன்னுடைய ஊர்சுற்றி விரதத்திற்கும் பெருமை சேர்க்க முடியும்னு சொல்றாரு சாங்கிருத்யாயன்.

பழங்குடியின மக்கள் இடையே ஊர்சுற்ற கிளம்புறவங்க, அவங்க மொழி தெரியலனா கூட நடனம், இசை, வாத்தியங்கள் மூலமா அவங்களோட ஒன்றிணையலாம்னு பரிந்துரைக்கிற சாங்கிருத்யாயன், உதவிக்கு எடை குறைவாக இருக்குற புல்லாங்குழலை ஊர்சுற்றிகளுடைய கைகள்ல கொடுக்குறாரு.

ஊர்சுற்றுதலில் பெண்கள்.
ஊர்சுற்றுதல்ல ஆண்கள் மட்டும் தான் ஈடுபடனுமா, பெண்கள் ஈடுபடக் கூடாதானு கேட்கிற பெண்களுக்கு சாங்கிருத்யாயன், ஊர்சுற்றும் விரதம் ஆண்கள் - பெண்கள் இருவருக்கும் பொது தான். ஆனா பெண்கள் தனியா இல்லாம, 3 பேர் கொண்ட குழுவா இயங்கினா இன்னும் பாதுகாப்பா இருக்கும்னு சொல்றாரு.

தன்னுடைய அனுபவத்துல தான் 1930, 40 கள்ல பார்த்த பெண்களுடைய பயணங்களை உதாரணத்துக்கு கொடுக்குறாரு.

ஊர்சுற்றிகளின் காதல்.
இதையெல்லாம் பேசுற சாங்கிருத்யாயன் காதலை மட்டும் மறந்திடுவாரா. ஊர்சுற்றிப் பயணத்துல தடைகற்களா இருக்குற அப்பா, அம்மா, உறவுகளையே உதறி வர சொல்றவரு. காதலுடைய இயல்பை ஏற்றுக்கிறாரு.

 நட்பும், அன்பும் ஊர்சுற்றிகளுடைய அடிப்படை பண்பா இருக்கும் போது, ஊர்சுற்றிகளுக்கு அதுவும் இளைஞர்களுக்கு, யுவதிகளுக்கு காதல் ஏற்படுறது இயல்பும்னும் அதை வெட்கம், சங்கோஜத்தால பாதுகாத்துக்கணும்னு சொல்ற சாங்கிருத்யாயன், மனுஷனை ஒரே இடத்துல கட்டிப் போடுற எதையும் நான் வெறுக்கிறேன். ஆனா அப்படி இல்லாம, இரண்டு ஊர்சுற்றிகளுக்கு நடுவுல வரல காதல் ஏற்புடையதும்னும், அந்த காதல் Extra இரண்டு கால்களையும், நாலு கால்களையும் கொடுத்திடாமலும், ஊர்சுற்றி விரதத்தைக் கெடுத்திடாமலும் இருந்தால் சரினும் சொல்றாரு.

ஒட்டுமொத்தமா ஊர்சுற்றி புராணம், ஊர்சுற்ற கிளம்புறவங்களுக்கு Guidelines. நிச்சயம் படிங்க.

மகேஸ்வரன் முருகேசன் 🖋️
28 Sept 2021

நன்றி :

திரு.மகேஸ்வரன் முருகேசன்
வாசிப்பை நேசிப்போம்