எஸ்.ராமகிருஷ்ணன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எஸ்.ராமகிருஷ்ணன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

29 அக்., 2021

நூல் நயம் : காந்தியோடு பேசுவேன் : எஸ்.ராமகிருஷ்ணன்


பொத்தக விமர்சனம்: 112/200
பொத்தகம்: காந்தியோடு பேசுவேன்
ஆசிரியர்: எஸ்.ராமகிருஷ்ணன் 
பக்கங்கள்: 151
விலை:₹175
பதிப்பகம்: தேசாந்திரி 

இந்த பொத்தகத்தில் மொத்தம் 13 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளது. பலரின் எண்ணங்கள் வாழ்கையில் எப்படி உள்ளது? ஒருவரை ஒருவர் எப்படியெல்லாம் புரிந்து கொள்கிறார்கள்?   எதன் மீது பற்றுக் கொண்டு பற்றிக் கொள்கிறார்கள்? இன்றைய சமுதாயத்தில் வேறுபாடான பல மனிதர்கள் உள்ளார்கள். அவர்கள் வாழ்க்கையில் இடம்பெற்ற பல நிகழ்வுகளை அழகாக சுவைபட ஆசிரியர் 
எஸ்.ராமகிருஷ்ணன் எடுத்துரைத்துள்ளார். 

காந்தியோடு பேசுவேன், கடக்க முடியாத பாலம், அஸ்தபோவில் இருவர், பிடாரனின் மகள், ஷெர்லி அப்படித்தான், பசித்தவன், ஒற்றை முள் போன்ற கதைகளை படிக்கும் போது மிகவும் அருமையாக இருந்தது.

இந்த பொத்தகத்தில் காந்தியோடு பேசுவேன் என்ற கதையின் ஒரு பகுதியில்.. உண்மையில் இந்தியர்கள் விசித்திரமானவர்கள். அவர்கள் எதை நேசிக்க விரும்புகிறார்களோ, அதற்கு எதிராகவே செயல்படுகிறார்கள். இந்தியர்களின் பிரச்சினை காந்தியை அவர்களால் இன்னமும் புரிந்துகொள்ள முடியவில்லை என்பதே. அவர்களுக்கு இப்படி ஒரு அதிசயம் எப்படி சாத்தியமானது என்று வியப்பாக இருக்கிறது. உண்மையில் காந்தியின் செயல்பாடுகள், எண்ணங்கள் நமது பலவீனங் களை, குறைபாடுகளை, மனசாட்சியைக் கேள்விகேட்கிறதே என்று பலருக்கும் கோபமாக இருக்கிறது. இன்றைய இளைஞர்களுக்கு
காந்தி ஒரு விளையாட்டு பொம்மை. அவர்கள் உதைத்து விளையாட
விரும்பும் ஒரு கால்பந்து. அவர்களுக்குப் புதிராக இருப்பது எவ்வளவு
உதைத்தாலும் இந்தப் பந்து திரும்பத் திரும்ப அதன் இயல்பிற்கு வந்துவிடுகிறதே என்பதுதான்.

காந்தியை நெருங்கிச் செல்வதற்குத்தான் ஈடுபாடு தேவை. வெறுப்பதற்கு எவ்வளவோ காரணங்கள் முன்னதாக உருவாக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. இந்தியாவில் இவ்வளவு மோசமான வசைகள், அவதூறுகள், தூஷணைகளைச் சந்தித்த மனிதர் வேறு யாராவது இருக்கக் கூடுமா என்ன? அப்படியிருந்தும் காந்தியின் வசீகரம் குறையவேயில்லை. ஒருவேளை காந்தியை வெறுப்பது என்பது அவரை நேசிக்கச் செல்வதற்கான ஒரு பயிற்சிதானோ என்னவோ.

அடுத்ததாக கடக்க முடியாத பாலம் இந்த சிறுகதையில்: 

நகரங்களில் சாதியில்லை என்பது பொய். நகரங்களில் சாதி வேற்றுருவம் எடுத்திருக்கிறது. கிராமம் போல வெளிப்படையாக சாதி கண்ணில் படுவதில்லை. ஆனால் தொழில்பிரிவுகளில், குடியிருப்பில், வணிகத்தில், திருமணத்தில், பழக்கவழக்கங்களில் சாதி நீக்கமற நிறைந்திருந்தது, ஒவ்வொரு சாதிக்கும் ஒரு ரௌடி உருவாகியிருக் கிறான். ஒவ்வொரு சாதியிலும் நாலைந்து அரசியல்வாதிகள் சாதிய நாயகர்களாக மாறியிருக்கிறார்கள்.

பலவரிகளில் பல உணர்வுகளை எளிதாக தன் எழுத்தின் மூலம் நமக்கு கடத்தியுள்ளார் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள். மேலும் இந்த பொத்தகத்தில் இடைப்பட்ட நாட்கள், நிகழ்காலத்தின் சுவர்கள், வெயில்போய் வரும் போன்ற கதைகளை படிக்கும் போது சற்று தொய்வாக இருப்பது போல உணர்ந்தேன். 

நன்றி..
- யாழினியன் 

நன்றி :

திரு.யாழினியன்,
வாசிப்பை நேசிப்போம், 
முகநூல் 

12 அக்., 2021

நூல் நயம் : உறுபசி - எஸ்.ராமகிருஷ்ணன்

Reading Marathon
RM0038
16/25
புத்தகம்: உறுபசி 
ஆசிரியர் : எஸ்.ராமகிருஷ்ணன் 
பக்கங்கள் :154
#நாவல் 

புத்தகங்களில் தொடர்பில் இருக்க ஆசைப்படுவேன்.ஆகையால் ஒரு புத்தகம் வாசித்து முடித்த பிறகு இன்னொரு புத்தகத்தில் இரண்டு பக்கங்களையாவது வாசித்து புக்மார்க் வைத்து விடுவது எனது வழக்கம்.

அப்படி நினைத்துதான் இந்த புத்தகத்தை எடுத்து இரண்டு பக்கங்கள் வாசித்து புக்மார்க் வைத்து  விட்டேன்.ஏனோ சம்பத் என்னை வாசிக்க அழைப்பது போலவே தோன்றியது.

ஒருவன் இறந்த பிறகு அவன் நினைவுகளை அசைபோடும் புத்தகம்.சம்பத் தமிழ் இலக்கியம் படித்த இளைஞன்.அவன் வாழ்வில் சந்தித்த போராட்டங்கள் அவலங்கள் புறக்கணிப்புகள் இவை அனைத்தையும் ஆசிரியர் அழகாக எழுத்துக்களில் வடிவமைத்து இருப்பார்.சம்பத் பற்றி அறிந்துகொள்ள நான் இரண்டு நிகழ்வுகளை உங்களோடு பகிர்கிறேன்.

உணவிற்கே வழியின்றி தன் சொந்த ஊர் திரும்பிய சம்பத் தன் நண்பர்களின் உதவியால் ஒரு நர்சரி பண்ணை அமைக்கிறான்.மனம் நொந்துபோன சம்பத்திற்கு செடிகள் வளர்ப்பது அவ்வளவு ஆசையாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.பதியம் போட்டு செடிகள் அனைத்தும் துளிர்த்துவிட சம்பத்தின் மனைவி இதை எவ்வளவு காசு பார்க்கலாம் என்று எண்ணி கொண்டு இருந்தாள்.ஒருநாள் சம்பத்தின் மனைவி பல செடிகளை  விற்பனைக்கு கொண்டு சென்று விட்டாள்.

செடிகள் அனைத்தையும் விற்று பின் வீடு திரும்பியபோது சம்பத் வீட்டில் இல்லை.செடிகளும் வீட்டில் இல்லை.எங்கே போயிருப்பான் இத்தனை செடிகளையும் எடுத்துக்கொண்டு என்று அவன் மனைவி இரவு முழுவதும் உறங்காமல் விழித்துக் கிடந்தாள்.ஆனால் சம்பத்து வரவே இல்லை.அக்கம்பக்கத்தில் விசாரிக்கையில் ஒரு ட்ரை சைக்கிளில் அத்தனை செடிகளையும் ஏற்றிக்கொண்டு போனதாக சொன்னார்கள்.ஒருவேளை டவுனுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்து இருப்பானோ  என்ற எண்ணத்தில் அவளும் டவுனுக்கு சென்றாள்.எங்கு தேடியும் அவன் கிடைக்கவில்லை.தன் தந்தையின் வீட்டில் தங்கிவிட்டு மறுநாள் தனது குடிசைக்கு வந்த சம்பத்தின் மனைவிக்கு ஆச்சரியம் காத்திருந்தது.சம்பத் வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தான்.கோபமாக திட்டிய சம்பத்தின் மனைவியை பார்த்து சம்பத் சொன்னான்.அந்தச் செடிகள் அனைத்தையும் விற்பதற்கு நமக்கு யார் உரிமை தந்தார்கள்.அதை காசுக்கு விற்க எனக்கு மனம் வரவில்லை அதனால் இரண்டு நாட்களில் எடுத்துக் கொண்டு சாலையில் அனைத்தையும் நட்டுவைத்து வந்து விட்டேன் என்றான்.

இப்படி ஒரு குணம் கொண்டவன் எப்படி வீட்டிற்கு பணம் கொடுக்கப் போகிறான்.பல நாட்கள் கழித்து சம்பத் தன்னுடைய கிராமத்திற்கு தன்  அக்காவை பார்க்க போகிறான்.அங்கே யாரும் இவனோடு பேச தயாராக இல்லை.பணம் இல்லாதவனை மனிதனாய் மதிக்க கூட மதிப்பதில்லை இச்சமூகம்.வந்தவனை பசியோடு அனுப்ப மனமில்லாமல் உணவு கொடுக்க அதை சாப்பிட்டுக் கொண்டிருந்தான் சம்பத்.அந்நேரத்தில் காட்டிலிருந்து வந்த சம்பத்தின் தந்தை அவனை பார்த்ததும் கடும் கோபம் கொண்டார்.
காட்டிலிருந்து சுமையாய் கொண்டுவந்த விறகு கட்டையை எடுத்து சம்பத்தின் முதுகில் அடிக்க ஆரம்பித்த இரண்டு மூன்று அடிகள் பொறுத்துக் கொண்டிருந்த சம்பத்து பின் அந்த விறகு கட்டையை பிடுங்கி அடிக்க ஆரம்பித்தான் தன் அப்பாவை இதை சற்றும் எதிர்பாராத சம்பத்தின் அப்பா தெருவில் ஓட தொடங்கினர் சம்பத்தும் துரத்திக் கொண்டு ஓடி தன் அப்பாவை அடி அடி என்று அடித்து கொண்டிருந்தான் நான்கைந்து பேர் சேர்ந்து அவனைத் தடுத்தனர்.இதை கேள்விப்பட்ட அக்காளின் கணவர் சம்பத்தை அடிக்க ஓடி வர சம்பத் ஊரை விட்டே ஓடிவிட்டான்.

காசைக் கொட்டி படிக்க வைத்த ஆதங்கம் அப்பாவிற்கு.தான் வாழ்வில் எந்த ஒரு வெற்றியும் பெறவில்லை என்ற ஆதங்கம் சம்பத்திற்கு.படித்த படிப்புக்கு வேலை கிடைக்கவில்லை.கிடைத்த வேலையும் அவன் மனசாட்சியின் படி வேலை பார்க்க முடியவில்லை.சம்பத் தன் திருமணத்திற்கு பிறகு ஒரு பத்திரிகையில் பிழை திருத்தும் பணியில் சேர்கிறான். ஆனால் ஏழு நாட்களுக்கு மேல் அந்தப் பணியை அவனால் தொடர முடியவில்லை.காரணம் ஒரு சிறு குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதை சுவாரசியமான வார்த்தைகளால் வர்ணிப்பது அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.இப்படி ஊரோடு ஒத்து வாழ முடியவில்லை...ஒதுங்கியும் அவனால் வாழ முடியவில்லை...

சம்பத்தின் நண்பர்கள் சம்பத் வேலை பார்த்த இடம் என அத்தனையும் கண் முன்னே காட்சியாய் வடிவமைத்திருந்தார் ஆசிரியர்.

வாய்ப்பிருந்தால் வாசியுங்கள்...

#சுதா

நன்றி :

சுதா பழனிச்சாமி, 
வாசிப்பை நேசிப்போம்,
முகநூல்

5 அக்., 2021

நூல் நயம் : பறந்து திரியும் ஆடு : எஸ்.ராமகிருஷ்ணன்


#ஆண்டுவிழா
#குழந்தைகள் இலக்கியம்

புத்தகம்: பறந்து திரியும் ஆடு
ஆசிரியர்: எஸ்.ராமகிருஷ்ணன்
பதிப்பகம்: தேசாந்திரி
விலை: ₹100

            குழந்தைகள் உலகமே மிக விந்தையானது. இயக்குனர் சங்கர் திரைப்படக் காட்சிகள் போல பிரம்மாண்டமும் விசித்திரமும் கலர்கலரான சுற்றுப்புறமும் சேர்ந்து அமைந்த ஒரு சூழலில் சஞ்சரித்துக் கொண்டு இருப்பது.
    "பறந்து திரியும் ஆடு" புத்தகத்தின் பெயரே நம்மை ஒரு அற்புத உலகப் பயணத்திற்கு தயார் செய்கிறது.
            கதைக்குள் செல்வோம். யக்கர் ஒரு ஆட்டு மந்தை வைத்து உள்ள மேய்ப்பர்.
                அவற்றுள் கண் பார்வை இல்லாத ஒரு ஆட்டுக்குட்டி தான் நம்ம ஹீரோ டுவிங்.
           யக்கரின் ஆடுகள் காலையில் மேய்ச்சலுக்கு செல்லும் இடம் ஆகாயத்தில்  உள்ள  ஒரு புல்வெளி.
     காலையிலும் மாலையிலும் அந்த புல்வெளிக்கு போய் வர பறவைகள் போல பறக்கும் விசேஷ சக்தி பெற்றவை யக்கரின் ஆடுகள்.
         அவரது மந்தையில் இருந்து வழி தவறி பல இடங்களை சுற்றி கடைசியாக யக்கரை சேரும் டுவிங்- ன் தேடுதல் பயணமே கதை.
          டுவிங் தனது பயணத்தில் சந்திக்கும் பாத்திரங்கள் அனைவருமே நாம் அன்றாடம் சந்திக்கும் மனிதர்களை போலவே குணமுள்ளவர்கள்.
              டங்கா எனும் பாறை,உயரமான மரம்,அருவி,பூக்கள்,சூரியன், மேகம் என அனைவரும் அவரவர் குறைகளை பெரிதாக நினைத்து வெதும்பி கொண்டு உள்ளார்கள்.
           டுவிங் அவர்களுடைய குறைகளை குறைகளாக பார்க்காமல் மாற்று கோணத்தில் கண்டு அவர்களை பற்றிய ஒரு பெருமித உணர்வை உண்டாக்கி விடுகிறது.
                இவர்கள் அனைவரும் நாம் வாழ்வில் சந்திக்கும் மனிதர்களையே பிரதிபலிக்கின்றன.
   (உ. ம்) பாறை போல இறுகிய குணம் கொண்டவர்கள், தன்னிடம் உள்ள வாசனையால் பெருமை கொள்ளாமல் வண்ணமின்மை நினைத்து கவலை கொண்ட மலர் போன்றோர்,
உயரம் தொட்ட பலர் உடன் பழக ஆள் இன்றி தனித்து இருக்கும் அந்த மரம் போல இருத்தல்
            கதை போகிற போக்கில்  இதுபோல மனதில் படியும் கருத்துகளை விதைத்து விட்டே செல்கிறது. சூழலியல், ஜீகாருண்யம்,பிறரை சார்ந்து இருத்தல்,பிறருக்காக வாழ்தல் போன்ற அத்தியாவசிய கருத்துகள் அவை.
    (உ. ம்) பக்.14
    " அவரது வீட்டிற்கு கதவுகளே கிடையாது.கல்லால் ஆன வீடது.பகலில் சில சமயம் நாய்கள் உள்ளே புகுந்து மீதம் வைத்த உணவை சாப்பிட்டு போவது உண்டு.அப்போதும் அவர் கோபம் கொள்ள மாட்டார்.நாய்களுக்கும் பசிக்கும் தானே?"
             இன்னொரு இடத்தில், உண்மையில் தான் அழுது கொண்டு இருப்பதாய் தன்னிரக்க சூபாவியாய் இருக்கும் அருவியிடம் டுவிங் சொல்லும் கருத்து நமக்கும் சேர்த்து தான்.
          அருவியிடம் டுவிங் " நீ நிச்சயமாக அழவில்லை.அடுத்தவர் பொருட்டு கஷ்டபடுகிறவர் அதை வருத்தமாக நினைப்பதே இல்லை" என்கிறது.(பக்.55)
           மொத்தத்தில் தன் கூட்டத்தில் இருந்து தொலைந்து போன ஒரு குட்டி ஆடு வாழ்க்கை பயணத்தில் நாம் தொலைத்த குழந்தை தனத்தை நமக்கு மீட்டுத் தருகிறது.
          சிறு வயதில் சிந்துபாத் உடன் சேர்ந்து நிம்பஸ் கப்பலில் சாகச பயணம் போன நமக்கு நீண்ட காலத்திற்கு பிறகு டுவிங் உடன் ஒரு சிறு சாகச பயணம் போன மாதிரி இருந்தது.
          நவீன கல்வி உலகம் கூறும் படைப்பாற்றல் (creativity) திறனை குழந்தைகளிடம் மேம்படுத்த இதுபோன்ற இனிய நூல்கள் அவசியம்.
        இக்கதை தந்த குழந்தைப் பருவ அனுபவத்தால் என்னுடைய wishlist இல் இன்னும் சில எஸ். ரா அவர்களின் குழந்தைகளுக்கான புத்தகங்களை add செய்து விட்டேன்.

நன்றி :
ஜெ. மோகனப்பிரியா,
வாசிப்பை நேசிப்போம்,
முகநூல்  


3 டிச., 2020

சிறுகதை நேரம் : பாங்கிணறு - எஸ்.ராமகிருஷ்ணன்


கதை கேட்கலாம் வாங்க |

பாங்கிணறு | எஸ்.ராமகிருஷ்ணன் |

SIVARAMAN STORY TELLER | கதை சொல்லி

1,229 views•May 7, 2020

INDIAN HISTROPEDIA

12.8K subscribers

 

#IndianHistropedia #Sivaraman #கதைசொல்லி #கதைகேட்கலாம்வாங்க #பாங்கிணறு #எஸ்.ராமகிருஷ்ணன் #SivaramanStoryteller

 

கதை கேட்கலாம் வாங்க | பாங்கிணறு | எஸ்.ராமகிருஷ்ணன் | Sivaraman Story teller | கதை சொல்லி

 

Orator : Sivaraman

 

Subscribe -   http://www.youtube.com/c/IndianHistro... 

I will give you more intersting informtion on history and books . Thank you for your support.

 

Catch me in

FB : https://www.facebook.com/siva.raman.7

Instagram : sivaraman.natarajan

twitter: @siva131187

email: nsivaraman87@gmail.com

My whats app number : 9790509087

 

பாங்கிணறு,கதை கேட்கலாம் வாங்க,எஸ்.ராமகிருஷ்ணன்,சிவராமன்,Sivaraman,s.ramakrishnan,s.ramakrishnan stories,s.ramakrishnan writer,s ramakrishnan short stories,தமிழ் பேச்சு,கதை சொல்லி,கதை சொல்ல போறோம்,கதை கேட்க வாங்க,Indian Histropedia,indian histropedia channel,stories,storytelling,story telling,ஒரு கதை கேட்கலாம் வாங்க,tamil stories,எஸ் ராமகிருஷ்ணன் கதைகள்,சிவராமன் பேச்சு,கதை சொல்லி சிவராமன்,கதை,கதைசொல்லி,சிறுகதை,தமிழ் சிறுகதை,storyteller,Sivaraman story teller

 

Grateful thanks to SIVARAMAN STORY TELLER | கதை சொல்லி, INDIAN HISTROPEDIA and YouTube and all the others who made this video possible