பாடல் 1296 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாடல் 1296 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

23 அக்., 2021

இன்றைய திருமந்திரம் : பாடல் 1296


திருமந்திரம் - பாடல் #1296: நான்காம் தந்திரம் - 10. வயிரவச் சக்கரம் (மானசீக சக்கர அமைப்பில் பைரவர் வழிபாடு)

வேண்டிய வாறு கலகமு மாயிடும்
வேண்டிய வாறினுள் மெய்யது பெற்றபின்
வேண்டிய வாறு வரும்வழி நீநட
வேண்டிய வாறது வாகுங் கருத்தே.

விளக்கம்:

பாடல் #1295 இல் உள்ள முறைகளின் படி பைரவரை பூஜித்து வழிபாட்டின் மூலமாகவும் பாடல் #1293 இல் உள்ளபடி ஏற்கனவே பெற்ற ஆறு விதமான அருள்களின் மூலமாகவும் சாதகர்கள் தம்மை நாடி வருகின்ற தீமைகளையும் நன்மைகளாக மாற்றி விட முடியும். அந்த ஆறு விதமான அருள்களுக்கு உள்ளிருக்கும் பேருண்மையான பரம்பொருளையும் தமக்குள் பெற்று உணர்ந்த பிறகு சாதகர்களுக்குள்ளிருந்து பரம்பொருள் கொடுக்கின்ற வழியைப் பின்பற்றி அவர்கள் சாதகம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்து வந்தால் அவர்கள் என்ன நினைத்தாலும் அது அப்படியே நடக்கும்.

நன்றி :