30 ஜூன், 2020

எனக்குப் பிடித்த பாடல் : பூவரையும் பூங்கொடியே பூமாலை போடவா ..


பூவரையும் பூங்கொடியே பூமாலை போடவா ..

படம் : இதயத்தில் நீ பாடல் : வாலி இசை : விஸ்வநாதன் - ராமமூர்த்தி பாடியவர் : P.B.ஸ்ரீனிவாஸ்

5,061 views•Mar 11, 2019
GoldenCinema - RhythmZone

நன்றி: GoldenCinema - RhythmZone மற்றும் யூடியூப்.

மேலே குறிப்பிட்ட அனைவருமே அமரர் ஆகிவிட்டனர். அவர்களுக்கு இதய பூர்வமான அஞ்சலி.நெல்லையப்பன் கவிதைகள் : அன்புள்ள அப்பா-1

ஆன்மீக ஞானிகள் : வள்ளலார்


வள்ளலார் வாழ்க்கை வரலாறு

44,469 views•Jun 3, 2020
Adiguru ஆதிகுரு
66.8K subscribers

இராமலிங்க அடிகளார் திருவருட்பிரகாச வள்ளலார் என்னும் சிறப்புப்பெயர் பெற்றவர். இவர் கடலூர் மாவட்டம் மருதூரில் பிறந்தார். பெற்றோர்இராமையா - சின்னம்மையார்.

ஜீவகாருண்ய ஒழுக்கம், மனுமுறை கண்டவாசகம் ஆகிய நூல்கள் இவர் எழுதியவை. இவர் பாடல்கள் அனைத்தும் திருவருட்பா என்னும் தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளன.

சமரச சன்மார்க்க நெறியை வழங்கியவர் இவரே. இவர் அனைத்து மத நல்லிணக்கத்திற்காக  சன்மார்க்க சங்கத்தையும், பசித்துயர் போக்கி மக்களுக்கு உணவளிக்க அறச்சாலையையும் அமைத்தவர். அறிவுநெறி விளங்க ஞானசபையையும் நிறுவியவர்.

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடிய கருணை மனம் இவருடையது. வடலூர் சத்திய தருமச்சாலையில் பசியால் வாடும் மக்களுக்குச் சோறிட இவர் அன்று மூட்டிய அடுப்பு இன்றும் அணையாமல் தொடர்ந்து பசிப்பிணி தீர்த்து வருகிறது. இவர் வாழ்ந்த காலம் 05.10.1823 முதல் 30.01.1874 வரை ஆகும்.

நன்றி: ஆதிகுரு மற்றும் யூடியூப்.  

மனித உறவுகள் மேம்பட ...


18 தத்துவங்கள் மனித உறவுகள் மேம்பட

வேதாத்திரி மகரிஷி

731 views•Apr 20, 2019
COIMBATORE - MADURAI JUNCTION
1.78K subscribers

நன்றி: COIMBATORE - MADURAI JUNCTION மற்றும் யூடியூப்.

இன்றைய தத்துவம் : கெஸ்டால்ட் தத்துவம்

மேலே உள்ள படத்தை ஒரு முறை பாருங்கள்.

பார்த்து விட்டீர்களா?

நல்லது. அந்தப் படத்தில் இருப்பது என்ன என்று உங்களுக்குத் தோன்றுகிறது?

‘அது ஒரு மெழுகுவர்த்தியின் படம்”

இல்லை; இல்லை 'அது இரண்டு முகங்களின் படம்’

அந்தப் படத்தைப் பற்றி மேலே சொல்லப்படும் இரண்டு பார்வைகளில் எது சரி? இரண்டுமே சரிதான். மேலே இருக்கும் படத்தை மேலெழுந்தவாரியாகப் பார்க்கும் போது அது மெழுகுவர்த்தியின் படமாகவும், சற்று உற்று நோக்கும் போது இரண்டு முகங்களின் படமாகவும் தெரிகிறது. இது ஜெர்மானிய உளவியல் சார்ந்த ஜெஸ்டால்ட் (Gestalt) ஓவியம் ஆகும். இது போன்ற ஜெஸ்டால்ட் ஓவியங்கள் நிறைய இருக்கின்றன. ஜெஸ்டால்ட் என்ற ஜெர்மன் சொல்லுக்கு ‘முழு வடிவம்’ (whole form) என்று பொருள். நமது அன்றாட வாழ்வில் எத்தனையோ பொருட்களைப் பார்க்கிறோம். ஆனால், அவற்றை முழு வடிவமாகப் பார்க்கிறோமா என்ற கேள்வியை இந்த வடிவக் கொள்கை எழுப்புகிறது.

சரி. இப்போது ஓவியத்துக்கு வருவோம். இந்த ஓவியத்தை ‘மெழுகுவர்த்திதான்’ என்று அடித்துச் சொல்பவர்களை ‘மெழுகுவாதிகள்’ என்று அழைப்போம். ‘முகங்கள்தான்’ என்று பிடிவாதம் பிடிப்பவர்களை ‘முகவாதிகள்’ என்று அழைப்போம். ஆக, இந்த ஒரு படம் இரண்டு கோட்பாட்டுவாதிகளை உருவாக்கி விட்டது. எப்படி ஒரு ஓவியம் இது போல் ஒன்றுக்கு மேற்பட்ட பொருளைக் கொண்டிருக்கிறதோ, அது போலவே ஒரு சொல்லுக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட பொருள்கள் உண்டு. உதாரணமாக, ‘படி’ என்ற சொல்லுக்கு படிப்பது, படிக்கட்டில் உள்ள படி, படிப்படியான வளர்ச்சி, படி நிலை, படி என்ற அளக்கும் கருவி, படிந்து போவது, என்று அரை டஜன் அர்த்தங்கள் இருக்கின்றன. அதே போல், பால் என்ற சொல் பசு தரும் பால், ஆண்பால்-பெண்பால் திணை போன்ற அர்த்தங்களைத் தாங்கி நிற்கிறது. ஆக, ஒரு சொல்லுக்கும் அதன் பொருளுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. அர்த்தங்கள் கால தேச வர்த்தமானங்கள் சார்ந்து ஆக்கிக் கொள்ளப்படுகின்றன. ஒரு சொல்லைப் போலவே ஒரு பிரதியும் ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தங்களைக் கொண்டது. பிரதியை உருவாக்கும் ஆசிரியன் சொல்லும் அர்த்தம் ஒன்று. அதை வாசிக்கும் வாசகன் புரிந்து கொள்ளும் அர்த்தம் வேறு. முன்னது கட்டமைப்பு (Construction). இரண்டாவது கட்டவிழ்ப்பு (Deconstruction). உலகில் உள்ள எல்லா கலை, இலக்கியம், தத்துவம் எல்லாமே கட்டவிழ்ப்பில் வேறு புதிய பொருளைத் தருகின்றன. தெரிதா பல பிரதிகளைக் கட்டவிழ்த்துக் காட்டினார். பழைய வாசிப்பை (Reading) தனது மறு வாசிப்பில் (Re-reading) தவறிய வாசிப்பு (misreading) என்று சுட்டிக்காட்டினார். தெரிதா மேற்கத்திய பிரதிகளை கட்டவிழ்ப்பு செய்து காட்டினார். நாம் ஒரு சங்க இலக்கியப் பாடல் ஒன்றை கட்டவிழ்த்துப் பார்க்கலாம். கணியன் பூங்குன்றனார் இயற்றிய புறப்பாடல் இது. புகழ் பெற்ற பாடலான இது உலகத் தமிழ் மாநாடு, தமிழ்ச் செம்மொழி மாநாடுகளில் முகப்பு வரிகளாக ஏற்று கொண்டாடப் படுவது.

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர் தர வாரா
நோதலும் தணிதலும் அவற்று ஓர் அன்ன
சாதலும் புதுவது அன்றே வாழ்தல்
இனிது என மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னாது என்றாலும் இலமே மின்னோடு
வானம் தான் துளி தலை இ ஆனாது
கல் பொருது இரங்கும் மல்லல் பேர் யாற்று
நீர் வழிப் படூம் புணை போல் ஆருயிர்
முறை வழிப்படூஉம் என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின் மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.

இந்தப் புறப்பாடலின் முதல் வரியும், கடைசி இரு வரிகளும் பிரபலமானவை. தமிழன் எல்லாம் என் ஊரே; அனைத்து மக்களும் என் உறவினரே என்று பிரகடனம் செய்வதாக ஒரு வாசிப்பு உண்டு. அதே போல் கடைசி இரு வரிகளும் கணியன் பூங்குன்றனாரின் பரந்த மனத்தை எடுத்துக் காட்டுவதாகவும் கூறுவார்கள். இடையில் உள்ள வரிகள் பெரும்பாலும் பொருட்படுத்தப்படுவதில்லை. ஏனெனில், அந்த வரிகள் விதி வலியது, நன்மை தீமை எல்லாமே விதிப்படிதான் நடக்கும் என்று புலம்புகின்றன. பகுத்தறிவுக்கு எதிராக இருப்பதால் அந்த வரிகள் இருட்டடிப்பு செய்யப்படுகின்றன.

மேற்கண்ட பாடலை நாம் மறுவாசிப்பு செய்து பார்ப்போம்.

நன்றி : திரு. நேயம் சத்யா,  தத்துவங்களைத் தேடி,  முகநூல் குழு 

இன்று ஒரு தகவல்

வாவ்! படங்கள்

போராடாமல் வாழ்க்கை இல்லை!

மக்களின் வேதனை!

கொரோனாவிலிருந்து மீண்ட அனுபவக் குறிப்பு

கொரோனா தொற்றிலிருந்து மீண்டுவந்த செவிலியரான தோழர் கமலா தேவி அவர்களின் அனுபவம்:👇

நிறையபேர்  கொரோனா அனுபவம் பத்தி எழுதுங்கனு கேட்ருந்தீங்க அதுக்காகத்தான் இந்த பதிவு..

நான் செவிலியர்ன்றதால வார்ட்டுல பேசன்ட் கிட்ட நெருங்கி போய்தான் ஆகனும் அப்படின்ற சூழல்ல தான் தொற்று ஏற்பட்டது. நான் நோயாளிக்கிட்ட எக்ஸ்போஸ் ஆகி மூனாவது நாளே அறிகுறி வந்துடுச்சு. ஆனால் முதல் டெஸ்ட் நெகடிவ் வந்தது. அறிகுறி குறையல. 10 வது நாள் மீண்டும் எடுத்த டெஸ்ட்ல தான் பாசிட்டிவ் வந்தது. 

அறிகுறி:
 காலையில் எழுந்திரிக்கும் போதே தலைவலி
காய்ச்சல் இருப்பது போன்ற உணர்வு ( டெம்ப்ரச்சர் நார்மல் காட்டுச்சு)
இரவு தூக்கமின்மை( காலைல 4 மணிக்கு தான் தூக்கமே வந்தது)
சதை வலி ( கால் கைகளில் உள்ள சதை மட்டும் பயங்கர வலி)
10 நிமிசத்துக்கு மேல நிற்க முடியல. கால் சோர்வா இருந்தது. வாக்கிங் போக முடியல..
உடல் சோர்வு..படுத்தே இருக்கனும் போன்ற உணர்வு
 அரிப்பு கைகளில் அலர்ஜி மாதிரி வந்துச்சு
முதுகு பக்கத்தில் வலி
சளி
இருமல்
குரல் மாறியிருந்தது( நிறைய பேரோட போன் அட்டன்ட் பண்ணாததுக்கு இதான் காரணம்)

அறிகுறிகள் ஆரம்பித்து இதெல்லாம் ஓரளவு சரியாக எனக்கு 20 நாட்கள் ஆச்சு😔

அட்மிசன் 11ம் தேதி ஆனேன். 

அரசு கொடுத்த உணவு;
காலை 6.30மணி - கபசுர குடிநீர் கசாயம்

காலை 7 மணி - டீ

காலை 8 மணி- இட்லி2 தோசை-1 பொங்கல்/கிச்சடி/உப்புமா - (எதாவது ஒன்னு)
சட்னி சாம்பார் 
முட்டை 1

11 மணிக்கு - லெமன் இஞ்சி எல்லாம் போட்ட புதினா எல்லாம் கலந்த டீ

11.30 - ஆரஞ்சு பழம் தினமும் 1

1மணிக்கு -மதிய உணவு சாப்பாடு சாம்பார் ரசம் தயிர் இரண்டு வகை கூட்டு
(சுண்டல் பயிரு கண்டிப்பாக கூட்டில் கலந்திருக்கும் )
வாழைப்பழம் -1

வாரத்தில் இரண்டு நாட்கள் சிக்கன் பிரியாணி 

மாலை4.30 மணிக்கு- டீ (சுண்டல்/ பயிறு)

6மணிக்கு - வெஜிடபுள் கிளியர் சூப்

இரவு 7 மணி - இடியாப்பம் -2  கடலை கறி சிறுதானிய உப்புமா/கிச்சடி தோசை - 1

தினமும் இதே முறைதான் 14 நாட்களும்

5 லிட்டர் தண்ணீர் அளந்து வச்சு குடிச்சேன். வெண்ணீர் 

மருத்துவம்; 

அலோபதி மருந்துகள் -ஆன்டிபயாடிக் +சத்து மாத்திரைகள்+ அறிகுறிக்கு தகுந்தால் போல. தினமும் இரண்டுமுறை வந்து பாத்துடுவாங்க. நேரடியா நம்மளோட குறைகள கேக்குறவங்க இவங்கதான்.

ஹோமியோபதி- போன்ல பேசுவாங்க தினமும். அறிகுறிகளுக்கு தகுந்த மாதிரி மாத்திரை சிரப் கொடுத்தனுப்பினாங்க. அந்த சிரப்லாம் சாப்டு தான் இருமல் சரியாச்சு.

சித்தா- காலையில் எழுந்த உடனே கபசுர குடிநீர் கசாயம்

மருந்துகளை விட உணவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. தனிமைப்படுத்துவது தான் மிகவும் அவசியம். நான் ரூம் விட்டு 14 கழித்து தான் வெளில வந்தேன். மருத்துவர்கள் செவிலியர்கள் எப்போதும் பணியில் இருப்பாங்க. நம்பர் குடுத்து எதாவதுனா போன் பண்ணிடுங்கனு சொல்ற அளவுக்கு கவனிச்சுகிட்டாங்க. நடுவுல ஒரு நாள் திடீர் நெஞ்சுவலி வந்துச்சு இரவில் .ப்ரசர் கொஞ்சம் கூடியிருந்தது. காரணம் Stress தான். தூங்குறதுக்கு மாத்திரை குடுத்து தூங்க வச்சிட்டாங்க.12 மணி நேரம் தொடர்ந்த தூக்கம்.  காலையில் ப்ரசர் நார்மல் ஆயிடுச்சு. அவ்ளோதான்.

எனக்கான பொழுது போக்காக போகும் போதே புக் எடுத்துட்டு போனேன். அத படிச்சேன். அது போக இந்த மூஞ்சுபுக் தான். 

ஆரம்பத்தில் என்ன தான் செவிலியரா இருந்தாலும் வலி ஒன்னுதானே.கொஞ்சம் ஜெர்க் ஆனது உண்மைதான். தலைவலி அந்தளவுக்கு இருந்துச்சு. டெய்லி ஆவி பிடிச்சுகிட்டேன் Hospital ல வச்சே ( கொண்டு போகனும் Steam Inhealer) கொஞ்சம் கொஞ்சமா குறஞ்சது. 

இப்போ ட்ரீட்மெண்ட் முடிஞ்சது. இருந்தாலும் தனியா தான் இருக்கேன். அடுத்தவங்களுக்கு நம்மால நோய் பரவிடக்கூடாது கண்டிப்பா அதுநால.

சாதாரண காய்ச்சல் வந்தா என்னென்ன பண்ணுமோ எல்லாம் பண்ணும் அவ்ளோதான். மற்ற பிரச்சனை இல்லாதவங்க ஈசியா கடந்து வந்துடலாம். ஆனா சமூகத்தில் ஒரு பயத்த உருவாக்கிட்டாங்க. காரணம் பரவும் வேகம் அதிகமா இருக்குறது தான். நம்மளோட மனதைரியம் ரொம்ப முக்கியம் இதுல.

 சாப்பாடு+தன்னம்பிக்கை+ மருந்து
இதுபோதும் கொரோனாவ தொரத்துவதற்கு. 
தன்னம்பிக்கையோட விழிப்புணர்வோட எதிர்கொள்வோம். கொரோனாவ துரத்துவோம்.

#கொரோனா_அனுபவம்
#நன்றி_தோழர்

தி. ஜானகிராமன் நினைவுகள்

தி.ஜானகிராமன்.
நூற்றாண்டு.

1921  ஜூன் 28ல் இந்த பூமியில் சுவாசிக்கத் துவங்கினார்.

1982 நவம்பர் 18ம் தேதிவரை இந்த பூமியை நேசித்திருந்தார்.

தான் கண்டு, கேட்ட, உணர்ந்த, வாழ்ந்த, பார்த்த மனிதர்களின் உள்ளங்களில் அன்பைக் கண்டுணர்ந்திருந்தார்.

தான் கண்டுணர்ந்திருந்த மனிதர்களை, தான் வாழ்ந்த வாழ்வின் அற்புத சிருஷ்டியாக எழுத்தில் எழுதிச் சென்றார்.

நாம் வாழ்ந்த வாழ்க்கையில், உணர்ந்த உணர்வில், கொண்ட கொள்கையில் மிகச் சவுகரியமாக அமர்ந்து கொண்டு அவர்மீதான நம் கனவுகளை விரித்துக்  கொண்டிருக்கிறோம்.

"பிராமிணியம்" எனும் சொல்கொண்டு அதீதமாக அளவிடும் அனைவர்மீதும்
அன்பு கொண்டு இன்றும் புன்னகைக்கிறார் தி.ஜா.

உயர்ந்தவர் தி.ஜானகிராமன்.

இன்று அவரது நூற்றாண்டு துவக்கம்.

அன்பும் சந்தோசமும்..
தியாகரஜன்.

ஆன்மீக சிந்தனை

கிராமங்களில் சூழ்ந்திருக்கும் அச்சமும் மன அழுத்தமும்

காதியாஸ் ரேஷன் கடை

இன்றைய சிந்தனைக்கு

உண்மையா!?

இயற்கை உணர்த்தும் பாடம்!

நண்பரின் *அக்கா மகன் Dr.அருணாச்சலம் நேற்று காலை 5.15 மணி அளவில் *சென்னை வானகரம் அப்போலோ மருத்துவமனையில்                      "" கொரோனா"" பாதிப்பால் மரணம் அடைந்தார் என்பதை வருத்தத்துடன் பதிவு செய்து இந்த கட்டுரையை அவருக்கு சமர்ப்பிக்கிறேன்.


 *இயற்கையோடு ஒட்டி வாழப் பழகிக் கொள்.* 

 *பிறகு, வைரஸோடு வாழப் பழகிக் கொள்வோம்.* 

🙂🙂
*'மதி கெட்ட மானுடமே" இனியாவது உணர்ந்து கொள்.*
*இயற்கையை பொறுத்தவரை நீயும் ஒரு உயிரினமே*.

*அதற்கு அம்பானி, அதானி, அலிபாபா, மோடி, ரஜினி, டிரம்ப் இப்படி யாரையுமே தெரியாது.*

*இன்று பார் அடங்கி கிடக்கின்றது உலகம்!

*சூரியன் அதன்போக்கில் உதிக்கின்றது, மழை அதன் போக்கில் பெய்கின்றது, வழக்கமான உற்சாகத்துடன் அடிக்கின்றது அலை.*

*மான்கள் துள்ளுகின்றன, அருவிகள் வீழ்கின்றன, யானைகள் உலாவுகின்றன,முயல்கள் விளையாடுகின்றது,மீன்கள் வழக்கம் போல் நீந்துகின்றன‌.*

*தவளை கூட துள்ளி ஆடுகின்றது, பல்லிக்கும் பயமில்லை, எலிகளும் அணில்களும் அதன் போக்கில் ஓடுகின்றன, காக்கைகளும் புறாக்களும் மைனாக்களும் சிட்டு குருவிகளும் ஏன் குளவிகளும் கூட அஞ்சவில்லை.*

*மானிட இனம் அஞ்சிகிடக்கின்றது , சக மனிதனையும் அதனால் நேசிக்க தயங்குகின்றது, கூட்டை மூடி பூட்டு போட்டு அடங்கி கிடக்கின்றது.*

*முடங்கியது உலகமல்ல, மானிடன் கண்டு வைத்த கற்பனை உலகம். அதில் அவன் மட்டும் வாழ்ந்தான் அவன் மட்டும் ஆடினான், அவனுக்கொரு உலகம் சமைத்து அதுதான் உலகமென்றான்.*

*மாபெரும் பிரபஞ்சத்தில் தானொரு தூசி என்பது அவனுக்கு தெரியவில்லை, உழைப்பென்றான் சம்பாத்தியமென்றான் விஞ்ஞானமென்றன் என்னன்னெவோ உலக நியதி என்றான்.*

*உலகம் பிறந்ததும், உயிர்கள் பிறந்ததும் எனக்காக , நதியும் கடலும் எல்லாமும் எனக்காக என்றான்.*

*ஆடினான், ஆடினான் அவனால் முடிந்தமட்டும் ஆடினான்.*

*ஒரு கிருமி கண்ணுக்கு தெரியா ஒரே ஒரு கிருமி சொல்லி கொடுத்தது பாடம்.*

*முடங்கி கிடக்கின்றான் மனிதன் , கண்ணில் தெரிகின்றது பயம், நெஞ்சில் தெரிகின்றது கலக்கம்.*

*பல்லிக்கும் பாம்புக்கும் நத்தைக்கும் ஆந்தைக்கும் கூட உள்ள பாதுகாப்பு தனக்கில்லை, இவ்வளவுதான் நான் என விம்முகின்றான்.*

*மண்புழுவுக்கும் கூட நான் சமமானவன் பலமானவன் இல்லையா என்பதில் அழுகின்றான்.*

*முளைத்து வரும் விதை கூட அஞ்சவில்லை, நிலைத்துவிட்ட மரமும் அஞ்சவில்லை எனில் மரத்தை விட கீழானவானா நான் என அவனின் கண்ணீர் கூடுகின்றது.*

*மாமரத்து கிளி அவனை கேலி பேசுகின்றது, கண்ணீரை துடைகின்றான்.*

*காட்டுக்குள் விலங்குகளும் பறவைகளும் மரங்களும் நீர் வீழ்ச்சிகள் கூட அவர்கள் பாஷையில் பேசுகின்றன‌.*

*ஆட்டுமந்தை கூட்டங்களும் , கோழிகளும் கூட பரிகாசம் செய்வதாகவே அவனுக்கு தோன்றுகின்றது.*

*தெய்வங்கள் கூட தனக்காக கதவடைத்துவிட்ட நிலையில் காகங்களும் புறாக்களும் ஆலய கோபுரத்தில் அமர்ந்திருப்பதை சிரிப்புடன் பார்க்கின்றான் மனிதன்.*

*கோவில் யானை உள்ளிருக்க, பசுமாடு உள்ளிருக்க மனிதனை வெளிதள்ளி பூட்டுகின்றது ஆலய கதவு.*

*அவன் வீட்டில் முடங்கி கிடக்க, வாசலில் வந்து நலம் விசாரிக்கின்றது காகம்.*, 
*கொஞ்சி கேட்கின்றது சிட்டு*,
*கடல் கரை வந்து சிரிக்கின்றது மீன்.*

*தெருவோர நாய் பயமின்றி நடக்க, வீட்டில் ஏழு பூட்டொடு முடங்கி கிடக்கின்றான் மனிதன்*. 
*தெரு நாயினை விட அவன் ஒன்றும் இப்பொழுது உயர்ந்தவன் அல்ல.*.

*மரத்தில் கனியினை கடித்தபடி இதை பார்த்து சிரிக்கின்றது அணில், வானில் உயர பறந்து கொரோனா நோயாளியினை உண்டாலும் எனக்கும் பயமில்லை என்கின்றது கழுகு.*

*அவமானத்திலும் வேதனையிலும் கர்வம் உடைத்து கவிழ்ந்து கிடந்து கண்ணீர்விட்டு ஞானம் பெறுகின்றது மானிட இனம்.*

*இனியாவது திருந்துவார்களா ?

வருத்தத்துடன்...

நன்றி: 
ஸ்ரீ நிழல் சித்தர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிறுவனர் மற்றும் தலைவர் புயல் சிங்காரவேலு பாலுமணி.

கோவிட்-19 மாதிரி உணவு அட்டவணை

29 ஜூன், 2020

நெல்லையப்பன் கவிதைகள் : அன்புள்ள அப்பா-2 - அப்பா வாசம்

சிரித்து வாழவேண்டும்!

வாவ்! படங்கள்

இன்றைய சிந்தனைக்கு

பரிந்துரைக்கவில்லை!

மூலிகை உலகம்

கைவண்ணம்

     திரு கண்ணன் ஜிகே.      
 ஜ. அவர்களுக்கு நன்றியும்.             பாராட்டுதல்களும்!

கொரோனா பயம்!

குட்டிக்கதை


*முன்பு ஒரு காலத்தில் மன்னன் ஒருவன் இருந்தான்..*

*ஒரு நாள் இரவு...* *மன்னனின் காதில் ஒரு பூச்சி நுழைந்து விட்டது.*

*காதில் இருந்த பூச்சியை எடுக்கமன்னனைச் சேர்ந்தவர்கள் படாத பாடுபட்டார்கள்.*

*அவர்கள் முயற்சி எதுவும் பலிக்கவில்லை.*

*ராஜவைத்தியரிடம் பிரச்னையைச் சொன்னான் மன்னன்.*

*அவரும் எவ்வளவோ பாடுபட்டார்.*

*தொலைதூரத்தில் இருந்து மூலிகைகள் வரவழைக்கப் பட்டன !*

*மூலிகையைப் பிழிந்து சாறு எடுத்து மன்னனின் காதிற்குள் விட்டார்கள்.*

*எதற்கும் பலன் இல்லை.*

*மன்னனின் காதில் உள்ள பூச்சி பிரச்னையைத் தீர்த்து வைப்பவர்களுக்கு பிரமாண்டமான பரிசுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.*

*எங்கிருந்தெல்லாமோ வைத்தியர்கள் வந்தார்கள் ,யாராலும் அந்தப் பூச்சியை வெளியே எடுக்க முடியவில்லை.*

*மன்னனின் காதிற்குள் அந்தப் பூச்சி அங்கும் இங்கும், பறந்து கொண்டிருந்ததால், அவனால் நிம்மதியாக தூங்க முடியவில்லை.*

*உணவு சாப்பிடுவது  குறைந்து* 
*மன்னன் தன் பொலிவு இழந்தான்.*

*ராஜ கம்பீரமாக உலா வந்து கொண்டிருந்தவன்*,
*இப்போது பஞ்சத்தில் அடிபட்டவனைப்போல் காணப்பட்டான் !*

*எந்த நேரமும் படுக்கையிலேயே இருந்தான்.*

*தன்னுடைய முடிவு நெருங்கிவிட்டது என்பதாக உணர்ந்தான்.*

*இந்த நேரத்தில் இமயமலையிலிருந்து ஒரு துறவி சீடர்கள் புடை சூழ நாட்டிற்கு வந்திருப்பதாக செய்திகள் வந்தன.*

*அரண்மனைக்கு வந்து சேர்ந்த துறவி*
*மன்னனின் காதை நன்றாகப் பரிசோதித்தார்.*

*பின் சிறிதுநேரம் தியானத்தில் ஆழ்ந்தார்.*

*"இது மிகவும் அபூர்வ வகை பூச்சி அரசே!*

*நம் பக்கத்து மூலிகைகளுக்கு இது கட்டுப்படாது.*

*இங்கிருந்து நூறு யோஜனை தூரத்தில் உள்ள ஒரு காட்டில் விளையும் அபூர்வமான ஒரு மூலிகைக்குத்தான் இந்தப் பூச்சி கட்டுப்படும்.*

*இன்றே என் சீடர்களை அனுப்பி அந்த மூலிகையை கொண்டு வர செய்கிறேன்,அதன்பின் உங்கள் பிரச்னை முற்றிலுமாகத் தீர்ந்துவிடும்." என்றார்.*

*அந்த மூலிகையை எப்படி இனம் கண்டுகொள்ள வேண்டும் என்று விளக்கிச் சொல்லி,தன் சீடர்களில் சிறந்தவர்கள் இருவரை அனுப்பி வைத்தார் துறவி.*

*மூன்றே வாரங்களில் சீடர்கள் மூலிகையுடன் வந்தார்கள்.*

*அது 'ராஜ மூலிகை' என்பதால்*
*அதை வைத்து ஒரு நாள் முழுவதும் பூஜை செய்யவேண்டும் என்று துறவி சொல்லி விட்டார்.*

*மறுநாள் காலை விடிவதற்கு முன்னால் ,பிரம்ம முகூர்த்த நேரத்தில் மன்னனின் காதில் அந்த மூலிகைச் சாறு அரைத்து ஊற்றப்பட்டது !*

*அடுத்த சில நொடிகளில் செத்த பூச்சி வெளியில் வந்து விழுந்தது.*

*மன்னனிடம் அந்தப் பூச்சியைக் காட்டினார் துறவி!*

*துறவியின் கால்களில் விழுந்து வணங்கினான் மன்னன்.*
*மன்னன்இப்போது நிம்மதியாகத் தூங்கினான்.*

*நன்றாக உண்டான்,பழைய பொலிவு திரும்பி விட்டது !*

*துறவி விடை பெற்றுக்கொண்டார்.*

*அவர்கள் நாட்டு எல்லையைத் தாண்டியதும், துறவியின் சீடர்களில் ஒருவன் கேட்டான் !*

*""குருதேவா...!!! அந்த அற்புதமான மூலிகை பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்...!!!'*

*துறவி புன்னகை பூத்தார் !*

*"பூச்சி அத்தனை நாள் எங்கே இருந்தது என்று நினைக்கிறீர்கள்?*

*மன்னனின் செவிக்குள்!*
*அதுதான் இல்லை !*

*மன்னனின் காதிற்குள் பூச்சி போனது உண்மையாக இருந்திருக்கலாம்.*

*போன சிறிது நேரத்திலேயே அது செத்திருக்கும் ,இல்லை வெளியே வந்திருக்கும் !*

*அந்தச் சிறிது நேரத்தில்*
*அது மன்னனின் செவிகளுக்குள் ஒரு குறுகுறுப்பு உணர்வை ஏற்படுத்திவிட்டது!*

*அது மன்னனின் மனதில் அது  குறுகுறுப்பு உணர்வை ஆழமாகப் பதிந்துவிட்டது !*

*எனவே அந்தப் பூச்சி காதுக்குள் உயிருடன் இருப்பதாகவே மன்னன் நினைத்துக் கொண்டிருந்தான் !*

*"குருதேவா அதை விளக்கிச் சொல்லி மன்னனை குணப்படுத்தியிருக்கலாமே...???''*

*மனோவியாதியை அப்படி எளிதாகக்குணப்படுத்திவிட முடியாது அப்பனே....!!!*

*பிரச்னை தீவிரமானது என்று மன்னன் நினைத்துக்  கொண்டிருந்தான்!*

*அதனால் தான் நானும் சிகிச்சை தீவிரமானது என்று பாசாங்கு செய்தேன்.*

*தொலைதூரத்தில் இருந்து மூலிகை வர வேண்டும் என்று பொய் சொன்னேன்* 

*அந்த மூலிகை நம் ஊரில் சாதாரணமாக விளையும் திருநீற்று பச்சிலைதான்.*

*ஆனால் அதை யாரும் கவனிக்காமல் பார்த்துக் கொண்டேன் !*

*பின் ஒருநாள் பூஜை செய்து*
*காலை இருட்டு நேரத்தில்* *மூலிகைச் சாற்றை மன்னனின் காதில் விட்டு*
*ஏற்கனவே பிடித்து வைத்திருந்த ஒரு செத்த பூச்சியைக்காட்டினேன்!*

*மன்னன் நம்பி விட்டான் !*
*அவன் நோயும் தீர்ந்தது.*

*சீடர்கள் வியப்புத் தாளாமல் தங்கள் குருவைப் பார்த்தார்கள்.*

*இன்று மனித இனத்தைப்* *பிடித்திருக்கும் நோய்களில் பெரும்பான்மையானவை*நம் மனங்களில் தான் இருக்கின்றன.*

*காதில் நுழைந்த பூச்சி செத்துவிட்டாலும், மனதில் நுழைந்தபூச்சிதான் நம்மைச் சாகடித்துக் கொண்டிருக்கிறது!*

*பூச்சி காதில் இல்லை ,மனதில் இருக்கிறது !*

*.''இது நகைச்சுவை அல்ல;*

*இது வாழ்வியல் கருத்தை நச்சென்று சொல்லும்  விளக்கம்.*

*காதில் இல்லாத பூச்சிக்காகத் தன் உடல்நலத்தைக் கெடுத்துக் கொண்ட மன்னன் போல,*

*இல்லாத பிரச்னையை, இருப்பதாக நினைத்துக்கொண்டு, நம்மில் பலபேர் தவித்துக் கொண்டிருக்கிறோம்!*

*("கொரோனா, இல்லவே யில்லை", என்று சொல்லவில்லை. அது கொடுக்கும் தொல்லையை விட,*

*"அதைப் பற்றி ஏற்படுத்தப்  பட்டிருக்கிற பயமே", அதிக தொல்லை கொடுக்கிறது!*

*அவரவர்கள் " கொரோனா தொற்றை" -   "கொரோனாவை" அல்ல!*
*"தொற்றை"-*
*கட்டுப்படுத்துவதிலேயே "போட்டி போட்டுக் கொண்டு"* *- பந்தயத்தில் ஓடுவது போல், ஓடிக்கொண் டிருக்கிறார்கள்!* *ஆச்சர்யமாக இருக்கிறது!*

 *இத்தனைக்கும் -*
*இது , "கொல்லும் நோய் அல்ல"!*
*இதனால் பாதிக்கப் பட்டவர்களில் 80 சதவிகிதம் பேர் சாதாரண சிகிச்சையில் குணம் அடைகிறார்கள்.* 
*15 சதவீதம் பேருக்கு ஆக்ஸிஜன் தேவைப் படுகிறது, மற்றவர்களுக்கு தான் பிளாஸ்மா தெரபி முதலியவை செய்யவேண்டி வரும்!", என்றெல்லாம் சொல்லப் பட்டிருக்கிறது!*

*"தொற்றை கண்டுபிடிப்பதில் காட்டும்*
*முயற்சியை" விட*

*"எல்லோருக்கும்,நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான முயற்சி", அதிகமாக இருக்க வேண்டியது அவசியம் இல்லையா?*

*Immunity to be increased -* *நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும்.*

*ஏழு கோடி பேருக்கு, பதினாலு கோடி மாஸ்க் கொடுப்பதை விட,*

*ஏழு கோடி பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகளும் கப சுர சூரணமும் கொடுப்பது சிறந்தது!*

*மாஸ்க் கொடுப்து - நோய்க்கு பயப்படுவது - பயந்துகொண்டே இருக்க வேண்டியது தான்!*

*நோய் எதிர்ப்பு மருந்தைக் கொடுப்பது - நோயை (நம்மிடம்  வருவதற்கு) - அஞ்சும்படி செய்வது!*

*இதில் எது சரி? நாம் , கொரோனாவிற்கு அஞ்சிக் கொண்டே யிருப்பதா?*

*அல்லது*

*கொரோனாவை, நம்மிடம் வருவதற்கு, அஞ்சும்படி செய்வதா?

சுற்றுச்சூழல் : இலவச மரக்கன்றுகள் !

Mr. Ravi R
Mr. Ravi Ramanathan, The Senior Advocate, Thiruchirapalli.

நேற்று காலை உத்திரமேரூர் அருகே குன்னவாக்கத்தில் உள்ள வன விரிவாக்க மரக்கன்றுகள் பண்ணைக்கு சென்றிருந்தேன்..

ஏற்கனவே 1000 மரக்கன்றுகளை பற்றி பதிவு செய்து இருந்தேன்.. அதை எடுப்பதற்கு..

Forest Officer திரு கிருஷ்ணன் உடன் இருந்தார்.. மிகவும் sincere ஆக மரக்கன்றுகள் வளர்த்து இருக்கிறார்கள்..2 - 3 அடி வளர்ந்த கன்றுகளும் உள்ளன..

அவர் மழை ஆரம்பிக்கும் முன்னரே கொடுத்து விட ஆசைப்படுகிறார்.. Close to *ஒன்றரை லட்சம்* மரக்கன்றுகள் அங்கே இருக்கிறது. இதுவரை ஐம்பதாயிரம் கூட போகவில்லை..

"எங்க team கஷ்டப்பட்டு இவ்வளவும் தயார் பண்ணி இருக்கிறோம் சார்.. நீங்கள் கம்ப்யூட்டரில் போட்டு நாலு பேருக்கு சொல்லுங்கள்.. தாராளமாக என்னுடைய போன் நம்பர் கொடுத்து கூப்பிட சொல்லுங்கள்..எவ்வளவு வேண்டுமானாலும் மரக்கன்றுகள் தருகிறேன்..!"என்று கூறியுள்ளார்..

இது முற்றிலும் இலவசம்..

திரு. கிருஷ்ணன், Forester, செல் நம்பர்.. +919524506991

நேற்று அவர்களிடம் இருந்த மரக்கன்றுகள் தேக்கு, மகாகனி, பூவரசு, செஞ்சந்தனம், ஈட்டி, குமிழ் தேக்கு, வேங்கை, நெல்லி, பலா ஆகியன.

உடனே கூப்பிட்டு பயன் பெறவும்..?மரம் வளர்ப்போம்!!🌳*
*நம் தலைமுறை காப்போம்!!🌳*

*ஆயிரங்காலத்து பயிர் என கூறப்படும் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு*

*🌱மிகக்குறைந்த விலையில் மரக்கன்றுகள் வழங்கப்படும்.🌱*

*****************
*ரூ 15/- மட்டுமே*
*****************
*உங்கள் இல்லம் தேடி வந்து கொடுக்கப்படும்*

*☘டிம்பர் மரங்கள்*
-----------------------------
1.தேக்கு, 
2.குமிழ், 
3.மஹோகனி, 
4.ரோஸ்வுட் (ஈட்டி),
5.வேங்கை, 
6.பூவரசு, 
7.நீர்மருது, 
8.மலைவேம்பு,

*☘பூ மரங்கள்*
--------------------
1.மகிழம், 
2.செண்பகம்,

*☘ஸ்தல விருட்சங்கள்*
-------------------------------------
1.வில்வம்,
2.அரசு, 
3.வேம்பு, 
4.நாகலிங்கம்.

*☘பழ மரங்கள்*
-----------------------
1.பலா, 
2.நெல்லி
3.நாவல்.

*☘நிழல் மரங்கள்*
----------------------------
1.சொர்க்கம், 
2.புங்கன், 
3.இலுப்பை.

----------------------------------

மிகக்குறைந்த விலையில் மரக்கன்றுகள் கிடைக்கும்.

உங்கள் கரமும், நீங்கள் நடும் மரமும் தழைக்க செய்யட்டும் தமிழகத்தை.....

இயற்கை முறையில் உருவாக்கப்பட்ட விலை மதிப்புள்ள தரமான மரக்கன்றுகள் குறைந்த விலையில் கிடைக்கும்.

ரூ. 7/- மட்டும்

டிம்பர் மரங்கள்
-----------------------------
தேக்கு, குமிழ், மஹோகனி, ரோஸ்வுட் (ஈட்டி), சிசு, செஞ்சந்தனம், வேங்கை, கருமருது, காயா, தான்றிக்காய், பூவரசு, நீர்மருது, மலைவேம்பு, மஞ்சக்கடம்பு.

பூ மரங்கள்
--------------------
மகிழம், மந்தாரை, சரக்கொன்றை, செண்பகம், ஜகாராண்டா, லெகஸ்டோமியா, தபோபியா, அவலாண்டா, மேஃபிளவர், ஃபாரஸ்ட் பிளேம்.

ஸ்தல விருட்சங்கள்
-------------------------------------
வில்வம், அரசு, வேம்பு, நாகலிங்கம்.

பழ மரங்கள்
-----------------------
பலா, நெல்லி, மாதுளை, கொய்யா, எலுமிச்சை, நாவல்.

நிழல் மரங்கள்
----------------------------
சொர்க்கம், புங்கன், இயல்வாகை, வாதாணி, இலுப்பை.

Address:
ஈஷா நர்சரி
மேலக்கால் மெயின் ரோடு,
ஜெயபாரத் ஹோம்ஸ் உள்ளே,
கோச்சடை,
மதுரை.
Contact no: 94425 90015

மற்ற கிளைகள்
----------------------------------------
சென்னை 94440 47049

அம்பத்தூர் 98416 75987

செங்கல்பட்டு 94425 90076

சோளிங்கர் 93608 03551

வேலூர் 94890 45022

திருவண்ணாமலை 94425 90080

விழுப்புரம் 94890 45023

புதுச்சேரி 94890 45025

நெய்வேலி 94425 90029

நாகப்பட்டினம் 94425 90049

திருவாரூர் 94425 90050

கும்பகோணம் 99443 41220

பட்டுக்கோட்டை 94425 90034

பேராவூரணி 94878 95073

மன்னார்குடி 94878 95073

தஞ்சாவூர் 94425 90069

திருச்சி 94425 90033

பெரம்பலூர் 94425 90075

புதுக்கோட்டை 94425 90073

கரூர் 94425 90070

கோவை 94425 90074

ஊர்கூடி மரம் வளர்ப்போம்!!
உலகை பசுமை ஆக்குவோம்!!
*இலவச மரக்கன்றுகள் வழங்கும் இளந்தளிர் நாற்றுப்பண்ணை...!*

மற்ற நண்பர்கள் இப்பதிவை பகிர்ந்து உதவவும்.

நன்றி.

மன முதிர்ச்சி (Maturity of Mind)

*மன முதிர்ச்சி என்றால் என்ன?*

 *What is Maturity of Mind ? *


1. மற்றவர்களை திருத்துவதை விட்டுவிட்டு 
    நம்மை திருத்திக்கொள்வது.
1. Correcting ourselves without trying to correct others.

2. அனைவரையும் அப்படியே (குறைகளுடன்)
    ஏற்றுக்கொள்வது.
2. Accepting others with their short comings.

3. மற்றவர்களின் கருத்துக்களை அவர்கள் 
கோணத்திலிருந்து புரிந்துகொள்ளுதல்.
3. Understanding the opinions of others from their perspectives.

4. எதை விட வேண்டுமோ அதை விட பழகிகொள்தல்.
4. Learning to leave what are to be avoided.

5. மற்றவர்களிடமிருந்து எதிர்பார்ப்பதை விடுதல்.
5. Leaving the expectations from others.

6. செய்வதை மன அமைதியுடன் செய்வது.
6. Doing whatever we do with peace of mind.

7. நம் புத்திசாலித்தனத்தை மற்றவர்களிடம் 
    நிரூபிப்பதை விடுவது.
7. Avoiding to prove our intelligence on others.

8. நம் செயல்களை மற்றவர் ஏற்க வேண்டும் 
என்ற நிலையை விடுதல்.
8. Avoiding the status that others should accept our actions.

9. மற்றவர்களுடன் நம்மை ஒப்பிடுவதை விடுதல்.
9. Avoiding the comparisons of ourselves with others.

10. எதற்குமே சஞ்சலப்படாமல் மனதை அமைதியாக வைத்துக்கொள்ள முயற்சித்தல்..
10. Trying to keep our peace in our mind 
      without worrying for anything.

11. நம் அடிப்படை தேவைக்கும், நாம் அடைய 
    விரும்புவற்றிற்கும் உள்ள வேறுபாட்டினை உணர்தல்.
11. Understanding the difference between the basic needs 
      and what we want.

12. சந்தோசம் என்பது பொருள் சம்பந்தப்பட்டது அல்ல
     என்ற நிலையை அடைதல்.
12. Reaching the status that happiness is not connected 
      with material things.

*இந்த 12 ல் குறைந்தது ஒரு ஏழெட்டையாவது கடைபிடிக்க முயற்சித்தால் வாழ்க்கை எளிதாகிவிடும்*
*Our life will be simple if only we practice 7 or 8 of the above 12*

Live your Life & Love your Life.

இன்றைய தத்துவம் : அழகியல் (AESTHETICS)

[6/28, 14:09] Neyam-Satya: இன்றைய தத்துவம் 👇🏽

Aesthetics என்று அழைக்கப்படும்
அழகியல் கோட்பாடு
[6/28, 14:29] Neyam-Satya: அழகியல் 

Aesthetics அல்லது æstheticsஅல்லது esthetics என்பது அழகின்தன்மையை ஆராய்வதும், கலைப்படைப்புகளில் அழகை இனம் கண்டு இரசிப்பதும், சுவையுடன் படைப்புகளைப் படைப்பதும் பற்றிய இயலாகும். அறிவியல் வழியே உணர்வுகளையும் உணர்வுகளுடன் இணைந்த உணர்ச்சிகளையும் ஆராயும், மதிப்பு, உள்ளுணர்வுகள் மற்றும் இரசனை இவற்றை அளவிடும் கல்வியாகவும் வரையறுக்கலாம்.சற்றே விரிவான நோக்கில், கலை, பண்பாடு மற்றும் இயற்கையைபிரதிபலிக்கும் துறையாகவும் அறிஞர்கள் வரையறுக்கின்றனர்."அழகியல் உலகை புதிய கோணங்களில் காணவும் புரிந்து கொள்ளவும் முயல்கிறது.


இந்திய மரபில் அழகியல் இன்பத்தை ‘ரசம்’ எனும் பதத்தினால் குறித்தனர். இப் பதம் இருக்கு வேதத்திலிருந்து தோன்றியிருப்பதைக் காண முடிகின்றது. இருக்கு வேதத்தில் சோமாவதை எனும் தாவரத்திலிருந்து பெறப்பட்ட பாணத்தைக் குறிக்க ரசம் பயன்பட்டது (சோமரசம்). அவ்வாறே கலை வெளிப்பாடுகளில் பல்வேறு சுவைகளை உள்ளடக்கிய பண்பு, ரசம் எனும் எண்ணக்கருவை தருகின்றது. ரசக் கோட்பாட்டின் விரிவான வளர்ச்சியை பரதரின் நாட்டிய சாஸ்திரத்தில் காணமுடிகின்றது. நாட்டிய சாஸ்திரம் மிகத் தொன்மையான நூலாகும். அதில் நாடகங்களின் மனவெழுச்சி விளைவுகளைத் துல்லியமாக இனங்காட்டக் கூடியவாறு ரசக் கோட்பாட்டினை பரத முனிவர் வைத்துள்ளார். அதில்,

சிருங்காரம் – காதல்

ஹாஸ்யம் – நகைச்சுவை

கருணை – இரக்கம்

ருத்திரம் – கோபம்

வீரம் – திண்டிறல்

பயானகம் – அச்சம்

பீபஸ்தம் – வெறுப்பு

அற்புதம் – வியப்பு

பரதர் முன்வைத்த எட்டு ரசங்களோடு அபிநவகுப்தர் முன்வைத்த சாந்தம்எனும் ரசம் சேர்ந்து ‘நவரசங்கள்’ எனப்படுகின்றன. ரசங்கள் பொதுவாக உடலால், உரையால், உடையால் துலக்கம் பெற்றிருந்தன.
[6/28, 14:44] Neyam-Satya: அழகியல் : ஒரு மெய்யியல் பகுப்பாய்வு

அறிவுப்பூர்வமான பரந்த முறையியல் அணுகுமுறை கொண்ட ஒரு நுண்ஆய்வே மெய்யியல் (Philosophy) ஆகும். அதாவது, யதார்த்தத்தைப் பற்றிய விரிவான முறையியல் நுணுக்கப் பார்வையைச் செலுத்துவதே மெய்யியல் எனப்படுகின்றது. எனவே தான் மெய்யியலானது அழகியல் உட்பட விஞ்ஞானங்கள் அனைத்துக்குமான பொதுவான முறையியல் அடிப்படைகளைத் தருகின்றது. முறையியல் என்பது விஞ்ஞானப் பூர்வமான அறிவைப் பெறுவதற்குரிய கருவியாகும். புராதன காலம் முதலே அழகியலும் மெய்யியலின் ஒரு பிரிவாகவே வளர்ந்து வந்துள்ளது.

அழகியல் ஆங்கிலத்தில் Aesthetics எனப்படுகின்றது. Aesthetics என்னும் சொல் Aisthetickos என்கின்ற கிரேக்க சொல்லை வேர் சொல்லாகக் கொண்டு உருவானது. கிரேக்க சொல் உணர்திறன், புலனுணர் திறன் (Sense Perception) என்று பொருள்படும். Aesthetics என்னும் சொல்லை முதன்முதலாக பிரடரிக் ஊல்ஃப் என்னும் பிரஞ்சு மெய்யியலாளரின் மாணவரும், ஜெர்மன் தேசத்து கலைக்கொள்கையாளருமான அலக்சாண்டர் பாம்கார்ட்டன் (Alexander Baumgarten; 1714-1762) என்பவரினால் பயன்படுத்தப்பட்டது. அவர் aisthetica என்னும் நூலை எழுதினார். அதன் முதற்பாகம் 1750ல் வெளியிடப்பட்டது. அதிலிருந்து இந்தச் சொல் விஞ்ஞான அறிவின் ஒரு துறையைக் குறிக்கும் சொல்லாகப் பயன்படலாயிற்று. இவரது காலப்பகுதியிலிருந்தே எல்லா ஐரோப்பிய மொழிகளிலும் அழகியல் என்பது Aesthetics என்ற பெயரினால் வழங்கப்பட்டது. ஆனால், இதை வைத்துக் கொண்டு, விஞ்ஞான ரீதியான அழகியல் பாம்கார்ட்டன் காலத்திலிருந்துதான் தொடங்கியது என்று எந்த விதத்திலும் பொருள் கொண்டுவிடக் கூடாது. அதன் தொடக்கம் நம்மைத் தொன்மை காலத்துக்கே அழைத்துச் செல்கின்றது.

அழகியல் குறித்த விசாரணைகள் புராதன கிரேக்க காலத்திலிருந்தே பரீட்சயமானவை. ‘அழகு என்றால் என்ன என்று சொல்வாயா?’ என்றார் சோக்ரட்டீஸ் (469-399 BC). இந்த வினாவுக்கான தேடல் இன்றும் தொடர்கின்றது.

உலகில் காணப்படும் காட்சிகளின் அழகினை உய்த்துணர்தலே, அழகியலுக்கு அடிப்படை என்று பிளேட்டோ (428-347 BC) கருதினார். அழகினை எடுத்துக் காட்டும் பொருட்கள் எல்லாவற்றிலும் ஒரு பொதுவான நல்லியல்பு உள்ளது. மனிதன் அழகுடைய பொருட்களில் ஈடுபட்ட பின் அழகிய அமைப்புகளில் ஈடுபடுகிறான். இந்த நிலைக்குப்பின் மனிதன் அழகு என்னும் கருத்தையே துய்க்கும் நிலையை அடைகிறான். ஒழுங்கும் அமைப்பும் அழகுக்கு அடிப்படையானவை. இக்கருத்துக்களை பிளேட்டோவின் ‘சிம்போசியம்’ என்னும் நூலிற் காணலாம்.

கிரேக்க இலக்கியத்திற் காணப்படும் மெய்யியல் கோட்பாடுகள் அழகியலுக்கு அடிப்படையாக அமைந்தன. மகிழ்ச்சியை ஒரு பொருளில், எழுத்தில் அல்லது ஒலியில் சித்தரிப்பது கலைஞனின் குறிக்கோள் ஆகும். பொருள், மனிதன், நிகழ்ச்சிகள் போன்றவற்றை நுட்பமாக மெய்போல் படைப்பதே கலை ஆகும். இதில் பார்த்துச் செய்தலின் கூறுகள் இருந்த போதிலும் ஒரு பொதுவான முழுத்தத்துவம் இருத்தல் வேண்டும். இக்கருத்தையே அரிஸ்டோட்டில் (384-322 BC) வற்புறுத்தினார்.

காண்ட் (1724-1804) போன்ற மெய்யியலாளர்கள் பொருள்களால், எழுத்துப் படைப்பால், காட்சியால் மக்கள் உள்ளத்தில் எழுவதே அழகு என்றும், அறிவுக்கும் கற்பனைக்கும் பொருந்திய நிலையில் இருக்கும் பொருள்களே அழகுடையனவாகக் கருதப்படல் வேண்டும் என்றும் கூறினார்கள் (வாழ்வியற் களஞ்சியம் ; தொகுதி ஒன்று ; 1991 : 894).

ஹெகல் (1770-1831) முதன்முதலில் ‘அழகியல்’ என்ற சொல்லை அதற்குப் பயன்படுத்தப்படும் பொருளில் அறிமுகப்படுத்தினார். இவருக்கு முன்னர், காண்ட் கூட ‘அழகியல்’ என்ற சொல்லை ‘புலன் அறிவு’ என்ற வகையிலேயே பயன்படுத்தினார். ஹெகல் அதனை அழகியல் கோட்பாட்டுத் தொடர்புடைய ஆழமான கருத்தில் பயன்படுத்தினார்.

காண்ட் மெய்யியல் பற்றிக் கூறிய பல கருத்துக்கள் அழகியல் வரலாற்றிலும் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகின்றன. அவர் தன்னுடைய ‘தீர்ப்புக்கள் பற்றிய விமர்சனம்’ என்ற நூலில் கூறும் பல கருத்துக்களை மேலும் தெளிவாக ஆழமான கருத்தோடு ஹெகல் முன்வைக்கின்றார். குறிப்பாக உயர்ந்த ரசனைப் பற்றிய கருத்தில் பகுப்பாய்வு, சார்பற்ற அழகு, அகநிலை சார்ந்த பொதுமை, கடந்த நிலைப்பகுப்பாய்வு போன்ற காண்ட் உடைய எண்ணக் கருக்களுக்கூடாக ஹெகலும் தனது கருத்தை எடுத்துக் கொண்டார். காண்ட் உடைய அழகியல் பற்றிய கருத்து அகநிலை சார்ந்த அனுபவத்தின் பொதுமையாக வெளிப்படுகின்ற போதிலும், அவற்றுக்கான அறிவியல் சார்ந்த அல்லது புலச்சார்பற்ற கூறுகளை வெளிப்படுத்துவதிலும் அவர் ஈடுபட்டிருந்தார். ஹெகல் அதனை ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட இயங்கியல் வாத அடிப்படையில் அறிவியலுக்கூடாக வெளிப்படுத்தினார். காண்டின் அகநிலைசார்ந்த உய்த்தறிமுறை ஹெகல் உடைய இயங்கியல் வாத மெய்யியல் அமைப்புக்குள் புறநிலை சார்ந்த கருத்துவாதமாக வெளிப்படுகிறது. அதனுடைய மெய்யியல் அமைப்பின் உள்ளார்ந்த பகுதியாகவே அழகியல் அமைகின்றது.

மார்க்சிய அழகியலின் தோற்றமானது, அழகியல் வரலாற்றிலும், கலை விமர்சனத்திலும் ஒரு புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்திற்று. மனிதனின் உலகு பற்றிய அழகியல் உணர்திறனைக் கட்டுப்படுத்தும் விதிகளைத் தொகுத்தளிக்க மார்க்சிய அழகியல் உதவுகிறது. இந்த விதிகள் பூரணமாகவும், முழுக்க விரிவாகவும் கலைகளில் தான் வெளிப்படுகின்றன என்று எடுத்துச் சொல்லும் போது, முதன்மையாக அழகியல் என்பது கலையின் சாராம்சம். கலையின் அடிப்படை விதிகள், கலைப்படைப்பாக்கத்தின் இயல்பு ஆகியவை பற்றிய விஞ்ஞானமாக அமைகின்றது. இவ்வாறு அழகியலைப் புரிந்துகொள்ளுதலின் பல்வகைப்பட்ட வெளிப்பாடுகளின் அனுபவங்களை விஞ்ஞான பூர்வமாகத் தெளிவு படுத்துகிறது. இருத்தலுக்கான போராட்டத்தில் மார்க்சிய அழகியல் தற்போது ஓரு முக்கிய களமாகும்.

மார்க்சிய மூலவர்கள் அழகியல் பற்றிய கோட்பாடுகளைத் தனியாக வகுத்துக் கொடுக்கவில்லை. மார்க்சியத்தின் அடிப்படையான இயக்கவியல், வரலாற்றுப் பொருள் முதல்வாதத்தை அடிப்படையாகக் கொண்டும், மார்க்சிய மூலவர்கள் அழகியல் பற்றி அவ்வப்போது உதிரியாகக் கூறியுள்ள கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டுமே மார்க்சிய அழகியல் உருவாக்கப்பட்டுள்ளது.

மனித இருப்புக்கு ஓர் அழகியல் பரிமாணம் உண்டு என்றும் இது வரலாற்றுரிதியாக வளர்ச்சி பெறுவது என்றும், மனிதப் புலன்கள் விலங்குகளின் புலன்களிலிருந்து வேறுபட்டு மனிதத்துவம் அடைவது. வான்கோவின் மஞ்சளையும் ஆரஞ்சுப் பழத்தின் மஞ்சளையும் வேறுபடுத்திக் காண்கிற கண், கல்யாணி ராகத்தில் ஓர் அபசுரம் தட்டினால் புரிந்துக் கொள்கிற காது, சுவைப்பதன் மூலமாக ஒவ்வொருவகைத் தேனீரையும், மதுவையும் வேறுபடுத்திக் கொள்கிற நாக்கு, குழந்தையின் மிருதுத் தன்மையையும், பூவின் மென்மையையும், பட்டின் மென்மையையும் தொட்டு உணரும் சருமம், குழப்பமான வாசனைகளிலிருந்து பெட்ரோலின் நெடியை, எரியும் ரப்பரின் நாற்றத்தை, அத்தரின் மணத்தை வெவ்வேறாகச் சொல்லும் மூக்கு. இவை உருவாவது மனிதவயப்படுத்தப் பட்ட இயற்கை மூலமாகவே என்றும் மார்க்ஸ் கண்டடைகிறார். முதலாளித்துவ சமூகத்தின் வரலாற்று, பொருளாதாரச் சுழலில் சிதிலமடைந்த மனிதனை மீண்டும் ஒருமுறை முழுமையானவனாகக் காணும் முயற்சியில் தான், மனித இருப்பில் அழகியல் துறையின் மையமான பங்கை அவர் புரிந்து கொண்டார். மனிதன் ஒரு படைப்பாளி என்பதனாலேயே உலகத்தை அழகுமயமாக்காமல் இருக்க அவனால் முடியாது.

‘புலன்கள் தமது செயல்பாடுகளில் நேரடியான தத்துவஞானிகளாக மாறிவிடுகின்றன. மனிதனின் சுயக் கண்ணோட்டத்திலிருந்து அழகியல் உணர்வு உண்டாகின்றது’ என்று “1844 – பாரீஸ் கையெழுத்துப் படிகள்” நூலில் மார்க்ஸ் குறிப்பிடுகின்றார் (சச்சிதானந்தன் ; மார்க்ஸிய அழகியல் : ஒரு முன்னுரை ; 1985 : 18,22).

அழகியல் துறைப்பிரச்சினைகள் பற்றி மலையளவு நூல்கள் எழுதப்பட்டுள்ளன; எழுதப்படுகின்றன. ஜர்மனிய அழகியல் வாதிகள் (Aestheticians) தங்களுக்கே உரியவாறு வித்தியாசமான கோணங்களில் அழகியலை ஆராய்ந்துள்ளனர். ஆங்கிலய, பிரான்சிய அழகியல்வாதிகள் தங்களுக்கே உரிய நூறு வித்தியாசமான வழிகளில் இப்பிரச்சினையை அணுகியுள்ளனர். காண்ட், ஷெலிங், ஹெகல், ஷோபனவர், றேபட், ஸ்பென்சர் முதலான முன்னணி மெய்யியலாளர்கள் தமக்குரியதனிப்பட்ட சித்தாந்தங்களை இத்துறையில் தந்திருக்கின்றனர் (பார்க்க, எம்.எஸ்.எம்.அனஸ் ; ‘அழகியல் பற்றி அல்-கஸ்ஸாலி’ ; அல்-அக்ஸா வெள்ளி விழா மலர் ; 1980).

வரலாற்றுக் கண்ணோட்டத்தோடு அவதானிக்கின்ற பொழுது, அழகியல் என்பது கலைத்துறையுடன் சம்பந்தப்பட்ட ஒரு கலைச்சொல்லாகவே (Technical Term) பயன்படுத்தப் பட்டிருக்கின்றது. கலை- இலக்கிய அனுபவங்களின் கோட்பாடு ரீதியான பொதுமைப்பாடே அழகியலாகும். கலை – இலக்கியங்களை விமர்சன ரீதியில் ஆராய்வதற்குரிய சாதனமாக அழகியல் உள்ளது என்று பேராசிரியர் சோ.கிருஷ்ணராஜா ‘விமர்சன மெய்யியல்’ (1989:23) நூலில் குறிப்பிடுகின்றார்.

தமிழில் அழகியல் என்பது அழகை ஆய்வுப்பொருளாகக் கொண்ட ஓர் கற்கை நெறியாகவே கொள்ளப்படுகின்றது. 

‘க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி’ (1992:52) அழகியல் என்பதை “(கலைகளில்) அழகைப் பற்றிய கொள்கை” என்றே சொல்கின்றது. அழகியல் என்பது அழகு பற்றிய கருத்துக்களும் உணர்வுகளும் ஆகும் என்ற கருத்தே பொதுவாக முன்வைக்கப் படுகின்றது.

அழகு பற்றிய கருத்துக்களும் உணர்வுகளும்தான் அழகியல் என்று கூறுவது பொருத்தமானது அல்ல. அழகுணர்வையும், அழகியலையும் நாம் பிரித்துப்பார்க்க வேண்டும். ஆங்கிலத்தில் Aesthetic, Aesthetics உள என்னும் இரண்டு சொற்கள் உள்ளன. முதலாவது பெயரடை. இரண்டாவது பெயர். இவை இரண்டுக்கும் நிகரான சொல்லாகவே அழகியல் என்ற சொல் தமிழில் பயன்படுத்தப் படுகின்றது. இது பெயரடையாகவும் பெயராகவும் வழங்குகின்றது.

ஆங்கிலத்தில் Aesthetics என்பது பொதுவாக கலை பற்றிய மெய்யியல் (Philosophy of Art ) என்று வரையறுக்கப்படுகின்றது. இது ஒரு தனி ஆய்வுத்துறை ஆகும். கலைபற்றிய எல்லா பிரச்சினைகளையும் இது உள்ளடக்குகின்றது. கலை என்றால் என்ன, கலை எவ்வாறு தோன்றுகின்றது, கலையின் பயன்பாடு என்ன, கலையின் பண்புக்கூறுகள் யாவை போன்ற கலையின் பல்வேறு விடயங்களை இது ஆராய்கின்றது. இவ்வகையில் கலைக்கோட்பாடு (Theory of Art) என்பதும் அழகியல் என்பதும் ஒன்றுதான்.

Aesthetic என்பது கலை அம்சம் அல்லது கலைத்துவம் (Artistic), அழகுணர்வு ( sense of beauty) என்ற பொருளில் வழங்குகின்றது. கலைத்துவமும் அழகுணர்வும் ஒன்றல்ல. அழகுணர்வு என்பது பொதுவானது. நமது அழகு பற்றிய உணர்வினை அது குறிக்கும். கலைத்துவம் என்பது குறிப்பானது. அது கலையோடு சம்பந்தப்பட்டது. கலையின் படைப்பாக்கம் அல்லது செய்நேர்த்தி பற்றியது. கலை இலக்கிய விமர்சனத்தில் இந்த இரண்டாவது பொருளிலேயே அழகியல் என்ற சொல் பயன்படுத்தப்படுகின்றது (விரிவான விளக்கத்துக்காக பார்க்க, எம்.ஏ.நுஃமான் ; ‘மார்க்சியமும் இலக்கியத் திறனாய்வும்’ ; 1987 : 74 – 83).

அழகியல் என்பது கலை ஏற்படுத்தும் பாதிப்பும் அப்பாதிப்பை ஏற்படுத்துவதற்குக் கலைஞன் கையாளும் வழிமுறைகளும் அவை சம்பந்தமான கொள்கைகளும் ஆகும். எனவேதான் அழகியல் கலைக்குரிய ரசனையின் இயல்பைப்பற்றி ஆராய்கின்றது.

நன்றி: -- எழுத்தாளர்.ஆனந்த் மற்றும் திரு நேயம் சத்யா இன்று ஒரு தகவல் : விவசாயப் பழமொழிகள்

நம் பண்டைய விவசாயப் பழமொழிகள்...

🌝 தவளை கத்தினால் மழை
🌝 அந்தி ஈசல் பூத்தால்
அடை மழைக்கு அச்சாராம்
🌝 தும்பி பறந்தால் தூரத்தில் மழை
🌝 எறும்பு ஏறில் பெரும் புயல்
🌝 மார்கழி மழை மண்ணுக்கு உதவாது
🌝 தை மழை நெய் மழை
🌝 மாசிப் பனி மச்சையும் துளைக்கும்

https://www.facebook.com/groups/890190134726721

🌝 தையும் மாசியும் வீடு மேய்த்து உறங்கு
🌝 புற்று கண்டு கிணறு வெட்டு
🌝 வெள்ளமே ஆனாலும்
பள்ளத்தே பயிர் செய்
🌝 காணி தேடினும் கரிசல் மண் தேடு
🌝 களர் கெட பிரண்டையைப் புதை
🌝 கெட்ட நிலத்துக்கு எட்டு வன்னி
கெட்ட குடும்பத்துக்கு எட்டு வெள்ளாடு
🌝 நன்னிலம் கொழுஞ்சி
நடுநிலம் கரந்தை
கடை நிலம் எருக்கு
🌝 நீரும் நிலமும் இருந்தாலும்
பருவம் பார்த்து பயிர் செய்
🌝 ஆடிப்பட்டம் பயிர் செய்
🌝 விண் பொய்த்தால் மண் பொய்க்கும்
🌝 மழையடி புஞ்சை
மதகடி நஞ்சை
🌝 களரை நம்பி கெட்டவனும் இல்லை மணலை நம்பி வாழ்ந்தவனும் இல்லை
🌝 உழவில்லாத நிலமும்
மிளகில்லாத கறியும் வழ வழ
🌝 அகல உழவதை விட
ஆழ உழுவது மேல்
🌝 புஞ்சைக்கு நாலு உழவு
நஞ்சைக்கு ஏழு உழவு
🌝 குப்பை இல்லாத வெள்ளாமை சப்பை
🌝 ஆடு பயிர் காட்டும்
ஆவாரை கதிர் கட்டும்
🌝 கூளம் பரப்பி கோமியம் சேர்
🌝 ஆற்று வண்டல் தேற்றும் பயிரை
🌝 நிலத்தில் எடுத்த பூண்டு
நிலத்தில் மடிய வேண்டும்
🌝 காய்ச்சலும் பாய்ச்சலும் வேண்டும்

https://www.facebook.com/groups/890190134726721

🌝 தேங்கி கெட்டது நிலம்
தேங்காமல் கெட்டது குளம்
🌝 கோரையை கொல்ல கொள்ளுப் பயிர் விதை
🌝 சொத்தைப் போல்
விதையை பேண வேண்டும்
🌝 விதை பாதி வேலை பாதி
🌝 காய்த்த வித்திற்கு பழுது இல்லை
🌝 பாரில் போட்டாலும் பட்டத்தில் போடு
🌝 கோப்பு தப்பினால்
குப்பையும் பயிராகாது
🌝 ஆடி ஐந்தில் விதைத்த விதையும் புரட்டாசி பதினைந்தில் நட்ட நடவும் பெரியோர்கள் வைத்த தனம்
🌝 கலக்க விதைத்தால்
களஞ்சியம் நிறையும்.
அடர விதைத்தால் போர் உயரும்.

https://www.facebook.com/groups/890190134726721

*சித்தர் அறிவியல்*

கண்டுபிடிப்பு!

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்து!

28 ஜூன், 2020

நெல்லையப்பன் கவிதைகள் : அன்புள்ள அப்பா-3: திகைத்து நின்ற தருணங்கள்

சிறுகதை நேரம் : பக்கத்தில் வந்த அப்பா - சுந்தர ராமசாமிபக்கத்தில் வந்த அப்பா - சுந்தர ராமசாமி

கதை கேட்க வாங்க - பவா செல்லத்துரை 

51,059 views•Apr 29, 2019
Shruti TV
588K subscribers

நன்றி: திரு பவா செல்லதுரை , ஸ்ருதி டிவி  மற்றும் யூடியூப்.

எனக்குப் பிடித்த பாடல் : பூஜைக்கு வந்த மலரே வா

     

பூஜைக்கு வந்த மலரே வா

2,703,222 views•Sep 21, 2016
VENBHA TV
8.26K subscribers 

படம்: பாதகாணிக்கை 
பாடல் : கவிஞர் கண்ணதாசன் 
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் 
பாடியவர்கள் : PB ஸ்ரீனிவாஸ் &  எஸ்.ஜானகி 

இவர்கள் அனைவருக்கும் நன்றி.

மேலும் யூடியூப்.நலக்குறிப்புகள் : இதயத்தில் அடைப்பே இருக்காது !
இதை சாப்பிட்டால் 

இதயத்தில் அடைப்பே இருக்காது

178,871 views•Jun 22, 2020
Nalam Pera

நன்றி:   நலம் பெற மற்றும் யூடியூப்.  

இன்றைய தத்துவ மேதை : கனடா

இன்றைய  தத்துவ மேதை 


கனடா 
என்று அழைக்கப்படும் இந்தியத் தத்துவஞானி வைஷேஷிகா பள்ளியை நிறுவியவர் மேலும் முந்தைய இந்தியஇயற்பியலில் இவரின் கருத்துக்கள் பிரதிபலிக்கின்றன.
பண்டைய இந்திய இயற்கை விஞ்ஞானி மற்றும் தத்துவஞானி ஆவார். 
கிமு 6 ஆம் நூற்றாண்டு முதல் 2 ஆம் நூற்றாண்டு வரை வாழ்ந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது, அவரது வாழ்க்கையைப் பற்றி அதிகம் அறியப்படவில்லை. அவரது பாரம்பரிய பெயர் "கானடா" வழிமுறையாக "அணு ஆட்கொல்லி", அவர் சமஸ்கிருத உரை Vaiśeṣika சூத்திரத்தில் இயற்பியல் மற்றும் தத்துவம் ஒரு atomistic அணுகுமுறையின் அடித்தளங்களை புகழ்பெற்றவராக இருக்கிறார். அவரது உரை கனட சூத்திரங்கள் அல்லது கனடாவின் அபோரிஸம் என்றும் அழைக்கப்படுகிறது. 
கனாடா நிறுவிய பள்ளி ஒரு அணு கோட்பாட்டை முன்வைத்து, தர்க்கத்தையும் யதார்த்தத்தையும் பயன்படுத்துவதன் மூலம் பிரபஞ்சத்தின் உருவாக்கம் மற்றும் இருப்பை விளக்குகிறது, மேலும் இது மனித வரலாற்றில் ஆரம்பத்தில் அறியப்பட்ட முறையான யதார்த்தவாத ஆன்டாலஜி ஒன்றாகும். எல்லாவற்றையும் உட்பிரிவு செய்ய முடியும் என்று கனாடா பரிந்துரைத்தார், ஆனால் இந்த உட்பிரிவு என்றென்றும் செல்ல முடியாது, மேலும் பிரிக்க முடியாத மிகச்சிறிய நிறுவனங்கள் ( பரமாணு ) இருக்க வேண்டும், அவை நித்தியமானவை, அவை தனித்துவமான அடையாளத்துடன் சிக்கலான பொருட்கள் மற்றும் உடல்களைக் கொடுக்க வெவ்வேறு வழிகளில் திரட்டுகின்றன,  வெப்பத்தை உள்ளடக்கிய செயல்முறை, மற்றும் இது அனைத்து பொருள் இருப்புக்கும் அடிப்படையாகும். மோக்ஷத்திற்கு ஒரு தத்துவமற்ற வழிமுறையை உருவாக்க ஆத்ம (ஆத்மா, சுய) என்ற கருத்துடன் இந்த யோசனைகளைப் பயன்படுத்தினார். இயற்பியலின் பிரிவிலிருந்து பார்த்தால், அவரது கருத்துக்கள் பார்வையாளருக்கு ஒரு தெளிவான பங்கைக் குறிக்கின்றன. கனடாவின் கருத்துக்கள் இந்து மதத்தின் பிற பள்ளிகளிலும் செல்வாக்கு செலுத்தியது, மேலும் அதன் வரலாறு முழுவதும் இந்து தத்துவத்தின் நயா பள்ளியுடன் நெருக்கமாக தொடர்புடையது. 
கனடாவின் அமைப்பு பெயரிடக்கூடிய மற்றும் அறியக்கூடிய ஆறு பண்புகளை (பதார்த்தங்கள்) பேசுகிறது. பார்வையாளர்கள் உட்பட பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தையும் விவரிக்க இவை போதுமானவை என்று அவர் கூறுகிறார். இந்த ஆறு பிரிவுகள் திராவ்ய (பொருள்), குண (தரம்), கர்மன் (இயக்கம்), சமன்யா (உலகளாவிய), விசா (குறிப்பாக), மற்றும் சமவயா (உள்ளார்ந்த). ஒன்பது வகை பொருட்கள் (திராவ்யா) உள்ளன, அவற்றில் சில அணு, சில அணு அல்லாதவை, மற்ற அனைத்தும் பரவலாக உள்ளன. 
கனடாவின் கருத்துக்கள் பலதரப்பட்ட துறைகளைக் கொண்டுள்ளன, அவை தத்துவத்தை மட்டுமல்ல, சரகா சம்ஹிதாவாக தப்பிப்பிழைத்த ஒரு மருத்துவ உரையை எழுதிய சரகா போன்ற பிற துறைகளில் உள்ள அறிஞர்களையும் பாதித்தன.

நன்றி : திரு. நேயம் சத்யா,  தத்துவங்களைத் தேடி,  வாட்ஸ்அப் குழு 

உணவே மருந்து

பயனுள்ள குறிப்புகள்

வாவ்! படங்கள்

ஆன்மீக சிந்தனை

சிரிக்கவும் சிந்திக்கவும்

மனிதம் போற்றும் அரசும் & திறமையான ஆளுமைகளும்

கேரளாவின் பெரிந்தல்மண்ணா 
காவல் நிலையத்திற்கு ஒரு பெண் வருகிறார் . அவருடைய நடை , உடை, பாவனை எல்லாம் தமிழ்நாட்டுப் பெண் போலிருக்கிறது .

அவருக்கு சானிடைசர் கொடுத்து 
உள்ளே அனுப்புகிறார்கள் .
     
உள்ளே சென்றவர் காவல் 
நிலையத்தின் மக்கள் தொடர்பு அதிகாரியான (PRO) ஷாஜியை சந்திக்கிறார் ....
     
ஷாஜியிடம் , தான் ஒரு ஜவுளி 
நிறுவனத்தில் வேலை பார்ப்பதாகவும் , 
கேரள அரசு பஸ்ஸில் 
பயணிக்கும்போது ,

தன்னுடைய பர்சும் , பர்சிலிருந்த 
பத்தாயிரம் ரூபாயும் தொலைந்து 
விட்டதாகவும் , அதற்காக புகார் அளிக்க 
வந்திருப்பதாகவும் கூறினார் .
     
அதற்கு ஷாஜி புகாரை எழுதித் 
தருமாறு கேட்டுள்ளார்..
புகார் எப்படி எழுத வேண்டும் என்று தனக்குத் தெரியாது என்று கூற , ஷாஜி ஏற்கெனவே அங்கு இருந்த ஒரு புகாரைக் காட்டி அதை மாடலாக கொண்டு எழுதச் சொல்லியிருக்கிறார் .

அதோடு பிற அதிகாரிகளுக்கு 
தகவலும் சொல்லியிருக்கிறார் . அந்த பெண்ணும் புகாரை எழுதிக் கொடுத்துள்ளார்.
     
ஷாஜி புகாரில் போன் நம்பரையும் 
எழுத சொன்னபோது புகார் இருக்கட்டும்...
 ஆனால் இதை வளர்த்துக் கொண்டு போக விரும்பவில்லை என்று கூறியிருக்கிறார் . 

பெண் தமிழ்நாட்டுக்காரர் 
என்பதால் மலையாளம் தெரியவில்லை .

அதனால் அவரிடம் ஷாஜி 
எளிமையான மலையாளத்திலும், ஆங்கிலத்திலும் உரையாடியிருக்கிறார் .
     
மேலும் ஷாஜி , கேரள அரசுப் 
பேருந்து டெப்போவுக்கு போன் செய்து விபரங்களையெல்லாம் கூறியிருக்கிறார்  .

ஆனால் அங்கிருந்து எந்தத் 
தகவலும் கிடைக்கவில்லை .
     
பணத்தைத் தவிர வேறெதுவும் போகவில்லை என்பதால் பணத்தை யாராவது திருடியிருக்க வேண்டும் .

இல்லையென்றால் பணப்பை நழுவி கீழே விழுந்திருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
     
காவல் நிலையத்தில் பெண்ணை 
அமர வைத்து நல்லவிதமாகத்தான் நடத்தியிருக்கிறார்கள்....
பயணம் செய்யும்போது எப்படி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று புத்திமதியும் கூறியிருக்கிறார்கள்.. 

இடையில் பெண் அனுமதி பெற்று பாத்ரூமுக்கும்  போய் வந்திருக்கிறார் .
     
தொடர்ந்து புகாரை பதிவு செய்யப் போகிறோம் , ரசீதைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்ல , 
அந்தப் பெண் வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார். 

அவர்கள் மீண்டும் 
வற்புறுத்த அந்தப் பெண் சொல்லியிருக்கிறார் ....

"நான் ASP ( உதவி காவல் கண்காணிப்பாளர்) யாக முதல் முறையாக சார்ஜ் எடுக்க வந்திருக்கிறேன்" என்று கூறுகிறாா் . 

அவா் சொன்னதை 
யாரும் கண்டு கொள்ளவில்லை .

யாரும் நம்பிய மாதிரியும் தெரியவில்லை .

பக்கத்தில் இருக்கையில் அமர்ந்து இருந்த ஷாஜியிடமும் எந்த அசைவும் இல்லை .
     
பெண் மீண்டும் , 
"நான் ஹேமலதா IPS---ASP யாக 
சார்ஜ் எடுக்க வந்திருக்கிறேன்" என்று பெயரோடு சொன்னதும் , ஷாஜி உட்பட எல்லோரும் படாரென்று எழுந்து சல்யூட் அடித்திருக்கிறார்கள் .

தமிழ் நாட்டைச் சேர்ந்த ஹேமலதா 
IPS-க்கு முதல் முறையாக ASP-யாக 
போஸ்டிங் பெரிந்தல்மண்ணா-வில் 
கிடைத்திருக்கிறது ....

சார்ஜ் எடுப்பதற்கு முன்னால் 
காவல் நிலையம் எப்படி இருக்கிறது , அங்குள்ள அதிகாரிகள் எப்படி இருப்பார்கள் , புகார் கொடுக்க வருபவர்களிடம் எப்படி நடந்து கொள்வார்கள் ,

என்றெல்லாம் தெரிந்து கொள்ள 
சார்ஜ் எடுப்பதற்கு முதல் நாள் காவல் நிலையம் சென்றபோது நடந்தது தான் இதெல்லாம்.

ஹேமலதா , எல்லோரையும் வெகுவாக பாராட்டுகிறார் . 

சாதாரண தமிழ்நாட்டுப் பெண்ணாக புகார் கொடுக்கச் சென்ற தனக்கு சானிடைசர் கொடுத்து உள்ளே அனுப்பியது ,
     
உள்ளே சென்ற பிறகு உட்கார 
வைத்துப் பேசியது , மலையாளம் தெரியாத  தன்னிடம் ஷாஜி எளிமையான மலையாளமும், ஆங்கிலமும் கலந்து பேசியது ,
     
தேவையில்லையென்றாலும் 
பாத்ரூம் போக அனுமதி கேட்டபோது அனுமதித்தது .

பணத்தைத் தொலைத்ததற்காக புத்திமதி கூறியது ..... 

மொத்தத்தில் புகார் அளித்தவரை மரியாதையாக நடத்தியது என்று எல்லோரையும் பாராட்டியிருக்கிறார்.
     
குறிப்பாக PRO ஷாஜியை கை தட்டி பாராட்டியிருக்கிறார் !

இதேபோல் நமது பட்டுக்கோட்டை சேர்ந்த ஒரு தமிழச்சியும் கேரள வனத்துறையில் ஃபாரஸ்ட் ரேஞ்சர் ஆக சேர்ந்து வனவிலங்குகளை காப்பதில் குறிப்பாக யானைகளை வேட்டையாடுபவர்களை வேட்டையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது...

கேரளாவை கலக்கும் நமது தமிழ் பெண்மணிகளுக்கு.....

வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்...

மனிதம் போற்றும் அரசும் & வழிமுறைளும் & திறமையான ஆளுமைகளும்.

தலைவணங்குகிறேன்.