#rm222
சில நேரங்களில் சில மனிதர்கள் - ஜெயகாந்தன்.
ஜெயகாந்தனின் கிளாசிக் நாவல்களில் எப்போதுமே ஒரு தனி இடத்தை பிடித்திருக்கும் இந்நாவலை படிக்கும் வாய்ப்பு இப்போது தான் கிடைத்தது. ஒரு மெயின்ஸ்ட்ரீம் படமே ஓட்டி விட்டார்.
35 வாரங்கள் தொடர்ந்து தொடராக தினமணி கதிரில் ஜெயகாந்தன் எழுதி வெளிவந்த கதை தான் காலத்தின் மாற்றம்.
அதுவே பின்னாளில் சில நேரங்களில் சில மனிதர்கள் என்று மாறியது.
கங்கா என்னும் ஒரு பெண்ணை சுற்றி நடக்கும் கதை, அவளின் வாழ்க்கையை சமூகம் எப்படி பார்க்கிறது. அவளின் பார்வையில் சமூகம் எப்படி இருக்கிறது, காலம் அந்த சமூகத்தில் வாழும் மனிதர்களை எவ்வாறு மாற்றுகிறது என்பதை ஜெயகாந்தன் வரியிலிருந்து நாம் பார்க்கும் கதை தான், "சில நேரங்களில் சில மனிதர்கள்".
இளம்வயதிலேயே உளவியல் சிக்கலுக்கு ஆளான கங்கா, அதோடையே தன் இளம்வயதை கடந்து, கல்லூரி முடித்து, வேலைக்கும் செல்கிறார். ஆனாலும் அவருக்கு அந்த இளவயது சம்பவத்து தாக்கம் இருந்துகொண்டேயிருக்கிறது. அதனாலேயே கங்காவிற்கு கலியாணத்திற்கு விருப்பமில்லை, சமூகத்தின் மீது ஒரு வெறுப்பான பார்வையோடேயே சமூகத்தில் அவள் வலம் வந்து கொண்டிருக்கிறாள்.
தனிமையிலேயே தன் துக்கத்தை பகிரக்கூட ஆளில்லாமல் உழன்று கொண்டிருந்த கங்காவின் வாழ்வில், பிரபுவின் வருகை மூலம் அவளின் தனிமை நீக்குகிறது. கங்கா இந்நிலைக்கு ஆளாக முக்கிய காரணமான ஒருவரோடையே அவள் நட்பு கொள்கிறாள். அவர்களின் நட்பு ஐஸ்கிரீம் டின்னர் வீடு வாக்கிங் என தினந்தோறும் தொடர்கிறது. ஆனால் பிரபுவுக்கென்று ஒரு மனைவி, மூன்று குழந்தைகள் உள்ளது. அது தெரிந்தும் அவரோடு தினம் பழகுவது தவறு சரியென்று கங்காவிற்கு எந்த ஒரு விடயமும் தடுக்கவேயில்லை.
ஒரு கட்டத்தில் கங்காவிற்கு திருமண பொருத்தம் வருகிறது. அப்போது பிரபுவை விட்டு கங்கா பிரிந்தாரா? திருமணம் செய்து கொண்டு புது வாழ்க்கை வாழ தயாரானாளா? அல்ல அப்படியே கலியாணம் பன்னிக்காம தொடரந்து பிரபுவோட அதே நட்புறவோட இருந்தாளா? என்னும் கேள்விகளுக்கு பதிலோடு கதையும் முடிகிறது.
அந்த காலத்திலேயே ஒரு மனுஷன் இந்த அளவுக்கு கதை எழுதிருக்காரே னு நான் வியந்த இடங்கள் ஏராளம். நான் ஜெயகாந்தன் எழுதி படித்த முதல் நாவல் இதுதான். முதல் பாலிலேயே மனதில் சிக்சர் அடித்து விட்டார்.
70 களில் அவர் இத்தொடரை எழுதியிருக்கிறார். ஆனால் பார்ப்பதற்கு இது 90 களின் கதை போலவே உள்ளது. அந்த அளவிற்கு அப்போதைய காலத்தில் ஒரு அட்வான்ஸ்டான ஒரு படைப்பை கொடுத்திருக்கிறார். அதற்கே அவருக்கு ஒரு ஹேட்ஸ் ஆப்.
ஒரே கான்செப்ட் அதை வைத்து 400 பக்கம் எழுத முடியுமா என்றால், நிச்சயமாக முடியும் என்று முடித்தும் காட்டியிருக்கிறார். அவ்வளவாக திருப்பம் இல்லை. யூகிக்கும் கதையாக தான் உள்ளது ( except climax). ஆனாலும் சிறிதளவும் சுவாரசியம் குன்றவில்லை. நான் 150 பக்க புத்தகத்தை ஒரு வாரமெல்லாம் எடுத்து படித்திருக்கிறேன். ஆனால் 350 க்கும் மேல் உள்ள இத்தொடரை வெறும் இரண்டே நாட்களில் படித்து விட்டேன். எல்லோரும் பெரும்பாலும் இதை தான் சொல்லுவார்கள்.
சுருக்கமாக சொன்னால், ஒரு சுவாரசியமான ஹார்ட் ஹிட்டிங்க் நாவல் - சில நேரங்களில் சில மனிதர்கள்!