VIDEO
துயர் தீர்க்கும் திருப்பதிகம்
மாசில் வீணையும் மாலை மதியமும்
திருநாவுக்கரசு சுவாமிகள்
388,739 views
Jun 2, 2019
Thiruneriya Thamizhosai
#MaasilVeenaiyum |
#ThirunavukkarasarThevaram |
#ThiruneriyaThamizhosai
" எவ்வளவு பெரிய துன்பம் வந்தாலும் இந்த பதிகப்பாடலை படியுங்கள் துன்பங்கள் அனைத்தும் விலகி போகும் ." பெருந்தீ கொழுந்து விட்டு எரியும் நீற்றரையின் உள்ளே அடைத்த போது பாடி அருளிய திருப்பதிகம் . திருநாவுக்கரசு சுவாமிகள் பாடி அருளிய சிறப்புப் பொருந்திய இத்தேவாரப் பதிகங்களை அனுதினமும் பாராயணம் செய்வதால் , பெரும் துன்பங்களில் இருந்தும் எளிதில் விடுபெறலாம் என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை .
திருமுறை : ஐந்தாம் திருமுறை 090 வது திருப்பதிகம்
அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசு சுவாமிகள்
பதிக குரலிசை :
திரு மதுரை முத்துக்குமரன் ஓதுவார்
கடம்பூர் கரக்கோயிலான் " தன் கடன் அடியேனையும் தாங்குதல் , என் கடன் பணி செய்து கிடப்பதே " என்று பின்னாளில் பாடியதற்கு ஏற்ப . சிவபிரான் பேரில் அசையாத நம்பிக்கை கொண்டு , இறைவனது பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட நாவுக்கரசரின் வாழ்க்கையில் இறைவன் நிகழ்த்திய இரண்டாவது அதிசயம் . முதல் அதிசயம் சூலை நோயிலிருந்து மீட்டது .
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே . ..... (01)
நமச்சிவாயவே ஞானமும் கல்வியும்
நமச்சிவாயவே நானறி விச்சையும்
நமச்சிவாயவே நா நவின்று ஏத்துமே
நமச்சிவாயவே நன்னெறி காட்டுமே . ..... (02)
ஆளாகார் ஆளானாரை அடைந்து உய்யார்
மீளா ஆட்செய்து மெய்ம்மையுள் நிற்கிலார்
தோளாத சுரையோ தொழும்பர் செவி
வாளா மாய்ந்து மண்ணாகிக் கழிவரே . ..... (03)
நடலை வாழ்வு கொண்டு என் செய்தீர் நாணிலீர்
சுடலை சேர்வது சொல் பிரமாணமே
கடலின் நஞ்சு அமுது உண்டவர் கைவிட்டால்
உடலினார் கிடந்தூர் முனி பண்டமே . ..... (04)
பூக்கைக் கொண்டு அரன் பொன்னடி போற்றிலார்
நாக்கைக் கொண்டு அரன் நாமம் நவில்கிலார்
ஆக்கைக்கே இரை தேடி அலமந்து
காக்கைக்கே இரையாகிக் கழிவரே . ..... (05)
குறிகளும் அடையாளமும் கோயிலும்
நெறிகளும் அவர் நின்றதோர் நேர்மையும்
அறிய ஆயிரம் ஆரணம் ஓதிலும்
பொறியீலீர் மனம் என்கொல் புகாததே . ..... (06)
வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும்
தாழ்த்த சென்னியும் தந்த தலைவனைச்
சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே
வீழ்த்தவா வினையேன் நெடுங்காலமே . ..... (07)
எழுது பாவை நல்லார் திறம் விட்டு நான்
தொழுது போற்றி நின்றேனையும் சூழ்ந்து கொண்டு
உழுத சால் வழியே உழுவான் பொருட்டு
இழுதை நெஞ்சம் இது என் படுகின்றதே . ..... (08)
நெக்கு நெக்கு நினைபவர் நெஞ்சுளே
புக்கு நிற்கும் பொன்னார் சடை புண்ணியன்
பொக்கம் மிக்கவர் பூவும் நீரும் கண்டு
நக்கு நிற்பர் அவர் தம்மை நாணியே . ..... (09)
விறகில் தீயினன் பாலில் படுநெய் போல்
மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்
உறவுக் கோல் நட்டு உணர்வுக் கயிற்றினால்
முறுக வாங்கிக் கடைய முன் நிற்குமே . ..... (10)
பொருளுரை : சிவபிரான் அரணிக் கட்டையில் தீ போலவும் , பாலினில் நெய் போலவும் , சாணை பிடிக்கப்படாத மாணிக்கக் கல்லில் பிரகாசம் போலவும் நமது கண்களுக்கு புலப்படாமல் நிற்கின்றான் . ஆனால் நமக்கும் அவனுக்கும் இடையே இருக்கும் ஆண்டவன் பக்தன் என்ற உறவாகிய மத்தினை நட்டு உணர்வு என்னும் கயிற்றினால் அந்த மத்தினை இறுக்கமாக கட்டி கடைந்தால் இறைவன் நமது முன்னே வந்து தோன்றுவான் .
குறிப்பு : இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது . பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம் .
Subscribe Us :
https://www.youtube.com/c/Thiruneriya...
" மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம் "
Grateful
thanks to
Thiruneriya Thamizhosai
திரு மதுரை முத்துக்குமரன் ஓதுவார்
and
YouTube and all the others who made this video possible .