31 ஜன., 2021

இலக்கிய இன்பம்


பொய்யான் புலாலொடு கள் போக்கி தீயன
செய்யான் சிறியார் இனம் சேரான் – வையான்
கயல் இயல் உண் கண்ணாய், கருதுங்கால் என்றும்
அயல அயலவர் நூல் (பாடல் 14)

ஏலாதி

விளக்கவுரை :-

ஏலாதி நூலை எழுதியவர் கணிமேதாவியார். கணித்தலில் மேதையாக இவர் இருப்பதாக இவரது பெயர் சுட்டுவதால் இவர் சோதிடத்தில் வல்லவராக இருத்தல் வேண்டும் எனக் கருதப்படுகிறது. இறைவாழ்த்து நீங்கலாக எண்பது பாடல்களைக் கொண்டது ஏலாதி. அருகக் கடவுளை இவர் வாழ்த்துவதால் இவர் சமண சமயத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிகிறது.

ஏலாதி என்ற பெயர் ஏன்
ஏலாதி சூர்ணம் பழைய தமிழ் மருத்துவ நூல்களில் காணப்படும் முக்கியமான ஒரு சூர்ணம். ஏலம் ஒரு பங்கும்,இலவங்கப்பட்டை இரண்டு பங்கும்,நாககேசரம் மூன்று பங்கும், மிளகு நாலு பங்கும், திப்பிலி ஐந்து பங்கும் சுக்கு ஆறு பங்கும் கலந்த ஒரு கலவை ஏலாதி சூர்ணம்.அரிய மருத்துவ குணங்கள் கொண்ட இந்த சூர்ணம் உடல் நலத்தைச் சீராகக் காக்கும் ஒரு அற்புத சூர்ணம்.
இதே போல மன நலத்தையும் அதை முதலாகக் கொண்ட வாழ்க்கை நலத்தையும் சீராக ஆக்கிக் கொள்வதற்கான வழிமுறைகளைக் காண்பிக்கும் வாழ்வியல் நூல் என்பதால் இதற்கு ஆசிரியர் கணிமேதாவியார் ஏலாதி என்ற அதிசயப் பெயரை, அற்புதப் பெயரைச் சூட்டியுள்ளார்.அத்தோடு ஏலாதி சூர்ணத்தை உருவாக்குவதில் ஆறு மூலப்பொருள்கள் இருப்பது போல ஏலாதி பாடல்களில் ஆறு பொருள்களை கணிமேதாவியார் வகுத்து வலியுறுத்துகிறார்.
அற ஸ்பரிசஸங்கள் அன்றாடம் வாழ்க்கையில் ஏற்பட ஏற்பட அறம், பொருள்,இன்பம், வீடு ஆகிய பெறுதற்கரிய நான்கு பேறுகளையும் பெறலாம் என்பதை அனைத்து அறநூல்களும் வலியுறுத்துகின்றன.
இல்லற நூல், துறவற நூல், நல்லற நூல்
இந்த நூலின் சிறப்புப் பாயிரம்
“இல்லற நூல் ஏற்ற துறவற நூல் ஏயுங்கால்
சொல்லறநூல் சோர்வின்றித் தொக்குரைத்து – நல்ல
அணிமேதையாய் நல்ல வீட்டு நெறியும்
கணிமேதை செய்தான் கலந்து” என்று வலியுறுத்துவது போல ஏலாதி ஒரு இல்லற நூல்; அத்தோடு துறவிலக்கணம் கூறும் துறவற நூல் அனைத்து அறங்களையும் வலியுறுத்துவதால் ஒரு நல்லற நூல் என்பது நூலைப் படித்தால் விளங்கும்.
பழங்காலத்தில் உளவியல் அடிப்படையில் வாழும் நல் மன வாழ்க்கையைப் பெரியோர் பெரிதும் வற்புறுத்தி வந்தனர். அதற்கான செம்மையான நலங்களை அறநெறி நூல்கள் சுட்டிக் காட்டின.ஆகவே அவற்றைக் கடைப்பிடித்தோர்க்கு மனத்தினால் உண்டாகும் நோய்கள் அறவே இல்லாமல் போனது; அவர்களுக்குப் புகழுடைய வாழ்க்கையும் அமையப் பெற்றது.
யாருக்கு இந்த அறநூல் தேவை இல்லை!
கணி மேதாவியார், அற நூல் எதுவும் தேவை இல்லை என்று அறுதியிட்டு உறுதி கூறுகையில் யாருக்குத் தேவை இல்லை என்ற வினா ‘சஸ்பென்ஸாக’ நம் மனதில் எழுகிறது.
பொய்யான் புலாலொடு கள் போக்கி தீயன
செய்யான் சிறியார் இனம் சேரான் – வையான்
கயல் இயல் உண் கண்ணாய், கருதுங்கால் என்றும்
அயல அயலவர் நூல் (பாடல் 14)
பொய்யே சொல்லாதவன், மாமிசம், மது இவற்றை நீக்கியவன், மற்றவர்க்குத் தீங்கு செய்யாதவன், சிறியவர் சேர்க்கையைக் கொள்ளாதவன் மற்றவர்க்கு இன்னாதவற்றைச் சொல்லாதவன் ஆகிய நல் குணங்களைக் கொண்டவனுக்கு மீன் போன்ற கண்களை உடையவளே அறநூல்கள் தேவை இல்லை என்ற பாடலைப் படித்தவுடன் அதில் உள்ள பொருளின் ஆழம் நமக்குப் புரியும்.

நன்றி :

நலமளிக்கும் முத்திரைகள் : தாரணசக்தி முத்திரை

ஆன்மீக சிந்தனைகள்

இன்றைய சிந்தனைக்கு

நூல்மயம் : செவக்காட்டு சொல்கதைகள் - கழனியூரன்

இன்றைய திருமந்திரம்

திருமந்திரம் - பாடல் #1032: நான்காம் தந்திரம் - 4. நவகுண்டம் (மந்திர சித்தி பெற்றவர் தமது தொழிலுக்கு ஏற்ப ஹோமம் செய்யும் ஒன்பது வகை குண்டங்கள்)

பத்திட்டங் கெட்டிட்டு ஆறிட்டு நாலிட்டு
மட்டிட்ட குண்டம் மலர்ந்தெழு தாமரை
கட்டிட்டு நின்று கலந்தமெய் யாகமும்
பட்டிட்டு நின்றது பார்ப்பதி பாலே.

விளக்கம்:

பாடல் #1031 இல் உள்ளபடி தமக்குள் அறிந்து கொண்ட இறை சக்தியானது உடலினுள் ஆறு சக்கரங்களில் மேன்மை கொண்ட சக்தி மயங்களாக இருக்கின்றது. நான்கு இதழ்கள் கொண்ட மூலாதாரத்தில் அடங்கியிருக்கும் குண்டலினியை நவகுண்ட யாகத்தின் மூலம் எழுப்பி ஆறு இதழ்கள் கொண்ட சுவாதிட்டானம் வழியே மேலேற்றி அதற்கு மேலிருக்கும் நான்கு சக்கரத்திலும் ஒவ்வொன்றாக நிலை நிறுத்திக் கொண்டு சென்று தலை உச்சியில் இருக்கும் எழாவது சக்கரமான சகஸ்ரதளத்தில் வீற்றிருக்கும் இறை சக்தியோடு கலந்துவிட்டால் சாதகம் செய்பவர்கள் இறைவனாகவே மாறிவிடுவதை உலகத்தின் தலைவனாகிய இறைவனின் அருளால் உணர்ந்து கொள்வார்கள்.

மனமார்ந்த நன்றிகள் :

இன்றைய குறள்


நன்றி :

தகவல் பலகை : இன்று போலியோ சொட்டு மருந்து நாள்

நலக்குறிப்புகள்

காலை நற்சிந்தனைகள்

இயற்கையை நேசிப்போம்!


நன்றி :

இனிய காலை வணக்கம்!

30 ஜன., 2021

இன்றைய முக்கிய தலைப்புச் செய்திகள் - ஜனவரி 30, 2021 - சனிக்கிழமை

இன்றைய முக்கிய தலைப்புச் செய்திகள் - தினமலர் சென்னை,  ஜனவரி 30,  2021 - சனிக்கிழமை 

1. முன்கூட்டியே முடிகிறது பட்ஜெட் கூட்டத்தொடர் 

2. விரைந்து பட்டா வினியோகம் - கலெக்டர்களுக்கு முதல்வர் உத்தரவு 

3. தமிழகத்தில் கொரோனா தடுப்புக்கு ரூ. 7605 கோடி செலவு

4. தமிழகத்தில் ஒரே நாளில் 24,352 பத்திரங்கள் பதிவு 

5. நாளை ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தவறாமல் போலியோ சொட்டுமருந்திற்கு அறிவுரை 

6. மகாராஷ்டிராவிலிருந்து 54,000 ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் வருகை 

7. திருவருட்பிரகாச வள்ளலார் மறைந்த தினம் 

8. சர்வதேச விமானங்கள் ஏப்ரல் 14 முதல் இயங்கும்? 

9. ரூ. 52,250 கோடி முதலீடுகளுக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் 

10.இந்தியாவின் முதல் கொரோனாவுக்கு இன்று வயது ஒன்று - கேரளாவில் ருத்ர தாண்டவம் ஆடுகிறது 

தினமலர் சென்னை இணைப்பு 

1. உலக தரத்திற்கு மாறும் பிராட்வே பேருந்து நிலையம் 

2. ராயபுரத்தில் மாதிரி அங்கன்வாடி - குழந்தைகளை கவர சிறப்பம்சம் 

3. தேசிய செய்தித்தாள் தின கொண்டாட்டம்

4. விதிமீறல் கட்டடங்களுக்கு சிஎம்டிஏ நோட்டீஸ் 

5. வடகிழக்கு பருவமழை ஓய்ந்தது - ரூ. 80 கோடியில் சாலை சீரமைப்பு 

தினமலர் சிறுவர் மலர்  இணைப்பு 

தேர்வு & தொகுப்பு - சூரி

நன்றி : தினமலர் நாளிதழ், சென்னை, ஜனவரி 30, 2021,  சனிக்கிழமை

தகவல் பலகை

நூல்மயம்

தகவல் பலகை

நலக்குறிப்புகள்

இன்றைய திருமந்திரம்

திருமந்திரம் - பாடல் #1031: நான்காம் தந்திரம் - 4. நவகுண்டம் (மந்திர சித்தி பெற்றவர் தமது தொழிலுக்கு ஏற்ப ஹோமம் செய்யும் ஒன்பது வகை குண்டங்கள்)

அந்தமில் லானுக் ககலிடந் தானில்லை
அந்தமில் லானை அளப்பவர் தாமில்லை
அந்தமில் லானுக் கடுத்தசொற் றானில்லை
அந்தமில் லானை அறிந்துகொள் பத்தே.

விளக்கம்:

பாடல் #1030 இல் உள்ளபடி நவகுண்டத்திலிருந்து எழுந்த முடிவில்லாத இறை சக்தியானது அண்டத்திலுள்ள அனைத்திலும் இருக்கின்றது. அந்த சக்தியின் அளவை அளக்கக் கூடியவர்கள் யாருமே இல்லை. அந்த இறைசக்தியைக் குறிக்கும் மந்திரத்திற்கு மேலான மந்திரம் வேறு எதுவும் இல்லை. முடிவில்லாத இந்த இறைசக்தியை நவகுண்டத்தின் மூலம் யாகம் செய்து தமக்குள் அறிந்து கொள்ளலாம்.

மனமார்ந்த நன்றிகள் :

இன்றைய குறள்


நன்றி :

சிரித்து வாழவேண்டும்!

காலை நற்சிந்தனைகள்

இயற்கையை நேசிப்போம்!

இனிய காலை வணக்கம்!

29 ஜன., 2021

இன்றைய முக்கிய தலைப்புச் செய்திகள் - ஜனவரி 29, 2021 - வெள்ளிக்கிழமை

இன்றைய முக்கிய தலைப்புச் செய்திகள் - தினமலர் சென்னை,  ஜனவரி 29,  2021 - வெள்ளிக்கிழமை 

1. இன்று பட்ஜெட் கூட்டத்தொடர் - புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் முடிவு 

2. தினமும் 1000 பேருக்கு தடுப்பூசி  - சுகாதார இயக்குனர் சுற்றறிக்கை 

3. நம்ம சென்னை - அடையாள சிற்பம் திறப்பு 

4. சிவகங்கையில் கொரோனா தடுப்பூசி - 5 மருத்துவ பணியாளர்கள் மயக்கம் 

5. ரயில்வே பணிகள் நிதியின்றி நிறுத்தம் 

6. மகாத்மா காந்தியடிகளின் 74வது நினைவு நாள் 

7. ஜார்ஜ் பெர்னாண்டஸ் நினைவு நாள் 

8. ஆறு  நாட்களில் பத்து லட்சம் தடுப்பூசிகள் - உலக அளவில் இந்தியா சாதனை 

9. பட்ஜெட்டில் என்ன எதிர்பார்க்கலாம்? 

10. கொரோனா பாதிப்பிலிருந்து 96.94 சதவிகிதம் பேர் குணம் 

11. ஊட்டியில் உறைபனி - பொது மக்கள் பாதிப்பு 

12. கொரோனா தடையை மீறி பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம் - திருவண்ணாமலையில் 

13. பாதுகாப்பு கவுன்சில் : அமெரிக்கா திடீர் பல்டி 

14. இலங்கைக்கு 5 லட்சம் டோஸ் தடுப்பூசி -இந்தியா இலவசமாக வழங்கியது

தினமலர் சென்னை இணைப்பு 

1. காஞ்சியில் விபத்தைத் தடுக்க 3 மேம்பாலம், 18 சிறு பாலம் 

2. அசோக் நகரில் 22 மாடி கட்டடம் 

3. எப்போது துவக்கப்படும் உலர் துறைமுக திட்டம்?  ரூ. 100 கோடி குத்தகை நிலம் பாழ்! 

4. பராமரிப்பு பணிகளுக்காக சென்னை கடற்கரை - செங்கல்பட்டு ரயில்கள் பாதி வழியில் ரத்து 

5. புதிய மெட்ரோ பாதையில் 31ல் கமிஷனர் சோதனை 

தினமலர் ஆன்மீக மலர் இணைப்பு 

1. மனதை அடக்க வழியிருக்கு - திருப்பூர் கிருஷ்ணன் 

2. வெற்றிக்கான சூத்திரம் - நீதிக்கதை 

3. தலை வணங்காமல் நீ வாழலாம் - வழிகாட்டுகிறார் புத்தர் 

4. மனம் உங்களின் வசம் இருக்கட்டும் - அறிவுறுத்துகிறார் சிவானந்தர் 

தேர்வு & தொகுப்பு - சூரி

நன்றி : தினமலர் நாளிதழ், சென்னை, ஜனவரி 29, 2021,  வெள்ளிக்கிழமை

இன்றைய குறள்

குறள் : 749
முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து
வீறெய்தி மாண்ட தரண்

மு.வ உரை :
போர் முனையில் பகைவர் அழியும் படியாக (உள்ளிருந்தவர்செய்யும்) போர்ச் செயல்வகையால் பெருமைப் பெற்றுச் சிறப்புடையதாய் விளங்குவது அரண் ஆகும்.

கலைஞர் உரை :
போர் முனையில் பகைவரை வீழ்த்துமளவுக்கு உள்ளே இருந்து கொண்டே தாக்குதல் நடத்தும் வண்ணம் தனிச்சிறப்புப் பெற்றுத் திகழ்வதே அரண் ஆகும்.

சாலமன் பாப்பையா உரை :
போர் தொடங்கிய உடனே பகைவர் அழியும்படி உள்ளிருப்போர் செய்யும் போர்த்திறத்தால் சிறந்த விளங்குவதே அரண்.

Kural 749
Munaimukaththu Maatralar Saaya Vinaimukaththu
Veereydhi Maanta Tharan

Explanation :
A fort is that which derives excellence from the stratagems made (by its inmates) to defeat their enemies in the battlefield.

இன்றைய திருமந்திரம்

திருமந்திரம் - பாடல் #1030: நான்காம் தந்திரம் - 4. நவகுண்டம் (மந்திர சித்தி பெற்றவர் தமது தொழிலுக்கு ஏற்ப ஹோமம் செய்யும் ஒன்பது வகை குண்டங்கள்)

எடுக்கின்ற பாதங்கண் மூன்றெழு கையுங்
கடுத்த முகமிரண் டாறுகண் ணாகப்
படித்தெண்ணு நாவேழு கொம்பொரு நாலும்
அடுத்தெழு கண்ணான தந்தமி லாற்கே.

விளக்கம்:

நவகுண்டத்திலிருந்து எழுகின்ற அக்னியில் வெளிச்சம் சத்தம் காற்று ஆகிய மூன்றும் கைகளாக எழுகின்றது. இடகலை பிங்கலை ஆகிய நாடிகள் கூர்மையான முகங்களாக இருக்கின்றது. ஆறு சக்கரங்கள் கண்களாக இருக்கின்றது. இதன் மூலம் உடலை குண்டமாக வைத்து நான்கு வேதங்களில் உள்ள மந்திரங்களை விடாமல் ஓதி உச்சரித்து மூலாதாரத்திலுள்ள குண்டலினியை ஆறு சக்கரங்களுக்கும் மேலெழுப்பிச் செல்லும் போது அந்த சக்கரங்களில் வீற்றிருக்கும் முடிவில்லாத இறை சக்தியை அறிந்து கொள்ளலாம்.

.மனமார்ந்த நன்றிகள் :

ஆன்மீக சிந்தனை

கருத்து மேடை

எங்கள் தமிழகம் : கன்னியாகுமரியின் எழில்மிகு தோற்றங்கள்!


தகவல் நேரம்

சிரித்து வாழவேண்டும் !

நலக்குறிப்புகள்