எங்கள் தமிழகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எங்கள் தமிழகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

31 டிச., 2020

எங்கள் தமிழகம் : நூறாண்டு கால செட்டிநாட்டு வீடு


நூறாண்டு கால செட்டிநாட்டு வீடு 

A TOUR IN 150 YEARS OLD CHETTINAD HOUSE

276,013 views

•Dec 15, 2020

Tastee with Kiruthiga

132K subscribers

SUBSCRIBED

Welcome to tastee with me kiruthiga!! Thanks so much for watching! While we planned for the trip to Karaikudi i said to Arun we should visit at least one old house from Karaikudi. This was a real surprise for me. We got lot of information from Mr.Thenappan sir. That too the way how the wood reached our Harbour was a surprise fact. The architecture was mesmerizing. Kindly all of you do watch the whole video i believe that you all will love it. There is lots of information in this video. Its free !!! Do like, share and subscribe my youtube channel. https://www.youtube.com/tasteewithkir... #karaikudihometour #truestory Follow me on : https://www.instagram.com/tasteewithk...

https://www.facebook.com/Tasteewithki...

For queries & details : tastee2018@gmail.com

 

Grateful thanks to Tastee with Kiruthiga  and YouTube and all the others who made this video possible 

31 மே, 2019

எங்கள் தமிழகம்-63: திருநெல்வேலி


யாதும் ஊரே | திருநெல்வேலி

44,987 views
News 18 Tamil Nadu
Published on Oct 31, 2016

திருநெல்வேலி மக்களின் பண்பாடு, மரபு, வாழ்வியலை படம்பிடிக்கும் தொகுப்பு... 

நன்றி: நியூஸ் 18 தமிழ் நாடு மற்றும் யூடியூப். 

22 மே, 2019

எங்கள் தமிழகம்-62: மதுரையின் வரலாறு


மதுரையின் வரலாறு :

Documentary of Madurai by VIJAY MAL

808,813 views
“Animator Vijay Mal”
Published on Jul 27, 2016

நன்றி: “Animator Vijay Mal”  மற்றும் யூடியூப். 

5 மே, 2019

எங்கள் தமிழகம்-61:2000 ஆண்டுகள் பழமையான தமிழனின் கட்டுமானம் - கல்லணை



உலகிலேயே 2000 ஆண்டுகள் பழமையான தமிழனின் கட்டுமானம் - கல்லணை
1,297,620 views

"Crazy Talk"
Published on May 6, 2017

Kallanai is an ancient dam, which is built (in running water) across the Kaveri river in Trichy District in the state of Tamil Nadu in South India. Located at a distance of 15 km from Tiruchirapalli, the dam was originally constructed by the Chola king Karikalan in 2nd century AD. This dam is beautiful #tourist place in tamilnadu.

நன்றி: "Crazy Talk"  மற்றும் யூடியூப். 



27 ஏப்., 2019

எங்கள் தமிழகம்-58: ஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து




ஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்ற 

தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து 

23,276 views
Sathiyam News
Published on Apr 23, 2019
#GomathiMarimuthu | Gomathi | AsianAthleticsChampionship2019

நன்றி: தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து, 

சத்தியம் நியூஸ் தொலைக்காட்சி மற்றும் யூடியூப். 

  

24 ஏப்., 2019

எங்கள் தமிழகம்-57: இரும்பை கண்டுபிடித்தவர் யார் ?

இரும்பை கண்டுபிடித்தவர் யார் என கேட்டால் விடையாக Henry Bessmer, Engaland - 1856 என்று தானே சொல்வோம் இதுவரை...

இனி அப்படி சொல்வோமா???

ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கிடைத்துள்ள முதுமக்கள் தாழி, எலும்பு கூடுகள், இரும்பு மற்றும் பித்தளை பொருட்கள், கலைப்பொருட்கள், ஆயுதங்கள், தங்க ஆபரணங்கள் போன்றவை கிறித்து பிறப்பிற்கு முந்தைய காலத்தை சேர்ந்தவை.

அதில் ஒரு பொருளின் அகவை கி.மு.905, மற்றொரு பொருளின் அகவை கி.மு.791 என்றும் தெரியவந்துள்ளது. அதாவது கி.மு 10 ஆம் நூற்றாண்டு மற்றும் கி.மு.8 ஆம் நூற்றாண்டு என்கிறது (CARBON -14. TEST) ஆய்வறிக்கை.

கி.மு. 8-ஆம் நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழன் நாகரீகத்தோடு வாழ்ந்திருகின்றான். உலோக பொருட்களையெல்லாம் கையாண்டு இருக்கின்றான். அதிலும் குறிப்பாக இரும்பு அவன் வாழ்வியலோடு ஒன்றர கலந்திருக்கிறது என்பதெல்லாம் நமக்கு வியப்பான செய்திகள்.

இரும்பு வடித்தன்ன கருங்கைக் கானவன்

இரும்பு வடித்தன்ன மடியா மென்தோல் கருங்கை வினைஞர் காதலம் சிறாஅர். - என

பழந்தமிழர்களுக்கும் இரும்புக்குமான உறவை எட்டுத் தொகையும் பத்துப்பாட்டும் பறைச்சாற்றுகிறது.


அதியமான் நெடுமான் அஞ்சி
அவரது தலைநகர் - தகடூர்.


இரும்பை வெட்டியெடுத்து அதை தகடாக்கும் தொழில் செய்யும் ஊர் என்பதால் அதற்கு தகடூர் என்று பெயர். இரும்பு வணிகத்தில் கொடிகட்டிப் பறந்த அதியமான், கடல் கடந்து பல்வேறு தேசங்களில் தனது இரும்பு வணிகத்தை நிலை நாட்டினார். அதிலொன்று துருக்கி நாடு. உருக்கி என்பது தான் துருக்கி என்று விளங்கியிருக்க கூடும். அந்த துருக்கியில் இன்றும் அதியமான் பெயரில் நகரம் இருக்கிறது.

ஆனால், பதினெட்டாம் நூற்றாண்டின் பாதியில் வந்த அந்த வெள்ளக்காரன்தான் இரும்பை கண்டுப்பிடித்தான் என்று திரித்து எழுதப்படுகிறது வரலாறு. ஆதிச்சநல்லூர் வரலாறு மட்டுமல்ல ; ஆதிதமிழர்களின் வரலாறுகளிலும் இந்த திரிபுவாத கும்பலில் கைங்கர்யம் நிறைய உண்டெனும் புரிதல் ப்ரியனுக்கு உண்டு.

தாழி பானை ஓடுகளில் காணப்படும் எழுத்துக் கீறல்களெல்லாம் விட்டுத்தள்ளுங்கள், இந்த தாளிப்பனைகள் பெற்றெடுத்த ஓலைச்சுவடிகளில் உழுத எழுத்தாணி ஒன்றுபோதுமே, தமிழர் இருப்பின் வரலாற்றுக்கு சாட்சியாக, இரும்பின் வரலாற்றுக்கு சாட்சியாக.

ரிக் வேதத்தின் உண்மையான பெயரே உருக்கு வேதம் என்பது தான். அதாவது உலோகங்களை உருக்கும் தொழில் நுட்ப ரகசியம் தான்.

ஆதிச்சநல்லூர் என்கிற
ஆதி எச்ச நல்லூர் மட்டுமல்ல;

அதையும் தாண்டி, நமது கவனத்தை திருவள்ளூர் மாவட்டம் வடமதுரை மீதும் வைத்தாக வேண்டியது வரலாற்றின் தேவையாகும்.

பலநூற்றாண்டுகள் பழமை வாய்ந்த
பழைய கற்காலக் கல் ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டது அங்குதான் என்பது மட்டுமல்ல; எம் வள்ளுவப் பாட்டன் பிறந்த ஊர் வடமதுரை என்பதாலும்..!


தகவல்: சமரன்

16 பிப்., 2019

எங்கள் தமிழகம்-50: சிங்கப்பூரில் தமிழ்!



சிங்கப்பூரில் தமிழ்! 
சிங்கப்பூர் பற்றிய இந்த உண்மைகள்

#Unbelievable facts about Singapore |Tamil
531,202 views

"TAMIL ULTIMATE"
Published on Aug 12, 2017

#Singapore, an island city-state off southern Malaysia, is a global financial center with a tropical climate and multicultural population. Its colonial core centers on the Padang, a cricket field since the 1830s and now flanked by grand buildings such as City Hall, with its 18 Corinthian columns. In Singapore's circa-1820 Chinatown stands the red-and-gold Buddha Tooth Relic Temple, said to house one of Buddha's teeth.

TAMIL ULTIMATE is a channel featured for gives a new experience ,feel and get something new,tamil ultimate passionated to deliver world wide mysteries,amazing facts,aliens,space news,unknowns facts around the peculiar world,science and little bit of localized and worldwide viral issues,always keep with us in the mysterious journey.......

நன்றி: "TAMIL ULTIMATE" மற்றும் யூடியூப். 

16 ஜன., 2019

எங்கள் தமிழகம்-48: திருவள்ளுவர் நினைவுகள்!

இன்று திருவள்ளுவர் தினம்...

என்னுயிர் தமிழர்களே,
இரண்டாயிரம் முதல் ஐயாயிரம் ஆண்டுகள் பின்னோக்கிச் சிந்தியுங்கள் !

குமரி மாவட்டம், திருநயினார் குறிச்சி எனும் சிற்றூரில்  ஏதோ ஒரு மூலையில் ஒருவன் உலகத்திற்கே நெறி வகுத்துக் கொண்டிருந்தான். அவன் தாடியோடு இருந்தானா, அவன் வீட்டுத் திண்ணையில் இருந்து அதை எழுதினானா, மாளிகையில் இருந்து எழுதினானா, அவன் எந்தச் சாதியைச் சேர்ந்தவன், அவன் எந்த மதம், அவன் அடையாளம் என்ன, அவன் ஆண்ட பரம்பரையா, முற்றும் துறந்த சித்தனா, பித்தனா..? என்றெல்லாம் அடையாள ஆராய்ச்சியில் ஈடுபடும் ஓர் இழிவான தமிழ்ச் சூழலில் அவன் பிறக்கவில்லை.

அவன் படைத்த திருக்குறளில் எங்கும் தமிழ் என்ற வார்த்தை இல்லை, ஒரு தெய்வத்தின் பெயர் இல்லை, ஒரு மதத்தையோ சாதியையோ குறிப்பிட்டுப் பதிவுகள் இல்லை, ஓர் அரசையோ ஆளும் வர்க்கத்தையோ உயர்த்தியோ தாழ்த்தியோ ஒரு பதிவும் இல்லை. இப்படி எந்த ஒரு அடையாள அரசியலுக்குள்ளும் சிக்காமல் ஒரு நெறி வகுக்கக் கூடிய பக்குவம் அன்று எம் முப்பாட்டனுக்கு இருந்தது.

எந்த ஒரு மதமும் போதிக்காத மனிதத்துடனும் , எந்த ஓர் அடையாளத்துக்குள்ளும் அடங்காத நடுநிலைமையுடன் எழுதப்பட்ட இப்படி ஒரு பொது மறை நூலை வேறெங்காவது காண முடியுமா?

பிற்காலத்தில் நாற்பொருளில் மையம் கொண்ட தமிழர்கள் அறத்தின் வழி நின்று பொருள் தேடி முறையாக இன்பம் துய்த்து வீடுபேறடைதல் என்ற அடிப்படையில் தம் வாழ்வியல் நெறியைக் கட்டமைத்தாலும், வீடு என்ற தனி மனித பகுத்தறிவுக்கு மட்டுமே புலப்பட வேண்டிய கருத்தியலையும் தவிர்த்து ஒரு நன்னெறி வகுத்த பெருந்தகை எங்கள் வள்ளுவன்.

இவ்வளவு தெளிவான ஒரு படைப்பைப் படைக்க ஒருவன் எப்பேர்ப்பட்ட ஞானியாக இருக்க வேண்டும் என்று சிந்தித்துப் பாருங்கள். மதங்களின் வேத நூல்களில் இல்லாத பக்குவமும் தெளிவும் திருக்குறளில் இருக்கிறது.

அப்படி என்றால் அந்தக் காலம் எப்படி இருந்திருக்கும். இத்தகைய படைப்பைப் படைக்க அவனுக்கு எது ஊன்றுகோலாய் இருந்திருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள். மாளிகையிலும் திண்ணையிலும் இருப்பவனால் இப்படிப் பட்ட நூலை எழுத முடியுமா?

இதைப் படைத்தவன் கண்ட காட்சிகள் எப்படி இருந்திருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள்:-

அவன் சுற்றுச் சூழல்,
அவன் சொந்தங்கள்,
அவன் நண்பர்கள்,
அவன் கண்ட அரசர்கள்,
அவன் கொண்ட காதல்,
அவன் கற்ற கல்வி,
அவன் பெற்ற செல்வம்,
அவன் வாழ்ந்த மண்,
அவன் நெறி கற்ற ஆசிரியர்கள்,
அவன் மொழி கற்ற அறிஞர்கள்,
அவன் உண்ட உணவு,
அவன் கண்ட கனவு
எல்லாம் எவ்வளவு மேன்மையானது என்று எண்ணிப் பாருங்கள்.

எங்கிருந்தோ வந்த இலக்கியங்களையும், சித்தாந்தங்களையும் படித்துப் பூரிக்கும் நம்மவர்கள் நம் முப்பாட்டன் விட்டுச் சென்ற இச்செல்வத்தைப் புறக்கணிக்கலாமா...
இவனுக்கு அடையாளமாக மதம் இல்லை, சாதி இல்லை, வெறும் தமிழே இவன் அடையாளமாக இருக்கிறது. அன்று அவன் ஏந்திய அடையாளம் தமிழ் மட்டும் தான். ஆனால் இன்று நாமோ, மதம், சாதி, தேசம் என்ற கண்ட கண்ட அடையாளங்களை ஏற்றுப் பெருமை பேசிக்கொண்டு திரிகின்றோம், ஆனால் தமிழன் என்று சொல்ல மட்டும் தான் தயக்கம்,... தமிழன் என்று சொன்னால் அங்கே மதத்திற்கும் சாதிக்கும் வேலை இல்லாமல் போய் விடும், அங்கு ஒரு சமத்துவம் வந்து விடும் என்ற அச்சமா?

நான் தமிழன் என்ற திமிர் ஒவ்வொரு தமிழனுக்கும் வரும் வரை, வள்ளுவன் நம்மிடம் இருந்து அன்னியப்பட்டுத் தான் இருப்பான்.
சிந்தியுங்கள் !

*அய்யன் வள்ளுவன் அடிதொடர சூளுரைப்பீர் ! உய்ய வழி வேறில்லை, திருக்குறளை தோள் சுமப்பீர்*