31 டிச., 2023

இன்றைய சிந்தனைக்கு

சங்க இலக்கிய களஞ்சியம்

அன்பார்ந்த வாசகர்களுக்கு  முன்பதிவு பற்றிய நினைவூட்டல்....

"சங்க இலக்கியம் உரை வேறுபாட்டுக் களஞ்சியம்"
(20 தொகுதி )
 ரூ.9000 மதிப்புள்ள புத்தகங்கள் முன்பதிவில்
 ரூ.5,500/ க்கு

முன்பதிவிற்கான நாள் வருகின்ற ஜனவரி 31.01.2024 முடிவு பெறுகிறது..... 

இன்றிலிருந்து இன்னும் ஒரு மாத காலம் மட்டுமே உள்ளது...... 

முன்பதிவிற்கு அழைக்கவும்...
NCBH 
மதுரை கிளை
7708683563

நலக்குறிப்புகள்

வாழ்த்துக்கள்

புத்தகப்பிரியர்களுக்கு

அருள்வாக்கு


26 டிச., 2023

சுற்றுச்சூழல்

இன்றைய புத்தகம்

நலக்குறிப்புகள்

இன்றைய சிந்தனைக்கு

சிரிப்புத்தான் வருகுதையா

அருள்வாக்கு

24 டிச., 2023

அருள்வாக்கு

தேசிய கணித தினம்

தாமதமான பதிவு.  பெரிதும் வருந்துகிறேன்! 

கணிதமேதை ஶ்ரீனிவாச இராமானுஜன் பிறந்தநாள்

தாமதமான பதிவு.  பெரிதும் வருந்துகிறேன்! 

இன்றைய சிந்தனைக்கு

ஆன்மீக சிந்தனை

நலக்குறிப்புகள்

குட்டிக்கதை

சனி பகவான்
சற்று ரிலாக்ஸாக இருக்க.....

வலைத்தளத்தில்  படித்ததில் பிடித்தது...!

 ஒருமுறை பார்வதி W/o சிவபெருமான்  அழகா  ஒரு மாளிகை  கட்டினாங்க.... அதோட கிரஹபிரவேசத்துக்கு ஒரு ஜோசியர்கிட்ட  நாள் குறிக்க சொன்னாங்க... அந்த மாளிகை கட்ட  கடக்கால் போட்ட நாளை  ஆராய்ந்த அந்த ஜோசியர் சொன்னார்...

" நீங்க  இந்த மாளிகைய கட்ட கடைக்கால் போட்ட  நேரம் சனி உச்சத்துல  இருந்த நேரம்.. அதனால  நீங்க என்னதான் அக்னி கம்பியும், அல்ட்ராடெக் சிமெண்டும் போட்டு கட்டி இருந்தாலும்  இந்த  மாளிகை நிலைக்காது... அதனால  நீங்களே  இடிச்சுடுங்க"

இத கேட்ட பார்வதி  செம்ம கடுப்பாயிட்டாங்க.... லோகத்துக்கே பெரிய சாமியோட  பொண்டாட்டி நான்.... பிசாத்து சனி  என்னோட மாளிகைய  இடிக்கிறதா.... நெவெர்... அப்படின்னு  பொங்கல் வச்சாங்க....  

புருஷன  கூப்பிட்டு.... "யோவ்..... நீ  இப்போவே  அந்த சனிய பார்த்து..... இன்ன மாதிரி  எம்பொண்டாட்டி  ஒரு  பங்களா  கட்டி இருக்கா.... அதுல  நீ என்னவோ வேலை காட்ட  போறியாம்... அதெல்லாம்  வேண்டாம்"ன்னு  சொல்லிட்டு  வா" ன்னாங்க..

உடனே  சிவன் சொன்னார்...  புரிஞ்சுக்கோ  பாரு..... நான் பெரிய சாமியா  இருந்தாலும்... மத்தவங்க வேலைல குறுக்கிடறது இல்ல.... தவிர... சனி  எப்போவுமே  பெர்பெக்ட்....  நானே சொன்னா  கூட  அவன்  மாத்தமாட்டான் ன்னு  சொன்னார்...

புருஷன் சொன்னத   எந்த பொண்டாட்டி தான் கேட்டிருக்கா.... நம்ம சிவன் பொண்டாட்டி மட்டும் கேட்க??

சோ.....  சிவன  பட்னி போட்டுட்டா.... வேற வழி இல்லாம  சனிய பார்க்கலாம்னு  கிளம்பிட்டார்... ஆனா, போறதுக்கு  முன்னாடி  பாருவ  கூப்பிட்டு..... "இதோ  பார்  பாரு....  உடனே  நீ ஒரு  பொக்லைன்  ரெடி பண்ணி  வை......நான் போய் சனிகிட்ட பேசி  பார்க்கிறேன்.... அவன் ஒத்துகிட்டா  ஒன்னும் பிரச்சினை  இல்ல... இன்கேஸ்  அவன் ஒத்துக்கலன்னா.... நான்  அங்க  இருந்து  என்னோட  உடுக்கைய  அடிக்கிறேன்.....   நீ உடனே  பொக்லைன்  வச்சு  மாளிகைய  இடிச்சுடு.... யாரும்  கேட்டா  , எனக்கு டிசைன் புடிக்கல.... வேற  கட்ட போறேன்னு  கெத்தா  சொல்லிடு..."ன்னு சொன்னார்...

சரின்னு  பார்வதியும் ஒத்துகிட்டாங்க....

சிவன் சனிகிட்ட  போய் " உன்கிட்ட  கேக்க  ஒரு  மாதிரியாத்தான்  இருக்கு.... ஆனா  வேற  வழி  இல்ல....... இந்த பார்வதி  பெரிய  பிரச்சினை செய்றா... நாலுநாளா   உலை கூட  வைக்கல.....  உன்னால  அந்த  பில்டிங்கிற்கு  ஏதும் பிரச்சினை வராம  பார்த்துக்க...." என்றார்...

உடனே  சனி...."அய்யனே... இதுக்கு  நீங்க  நேர்ல  வரணுமா... ஒரு போன் பண்ணி  இருக்கலாமே..."ன்னு சொல்லிட்டு.....  "நீங்களே  சொன்னப்புறம்  நான் எப்படிய்யா  மறுக்க  முடியும்....  சரி.... நான் ஒன்னும்  பண்ணல.... ஆனா  எனக்கொரு  ஆசை.... அத  நீங்கதான்  நிறைவேத்தனும்.."ன்னு கேட்டார்...

சனி  ஒத்துகிட்ட  சந்தோஷத்துல  சிவனும்..."சொல்லு.. சொல்லு.... நம்ம  புள்ள  நீ.... உனக்கு  செய்யாம  வேற  யாருக்கு  செய்ய போறேன்" ன்னு வாக்கு கொடுத்துட்டார்...

"உங்க  உக்கிர தாண்டவத்த  பார்த்து  ரொம்ப  காலமாச்சு.... எனக்காக  ஒருதடவை  ஆடிக்காட்ட  முடியுமா "- சனி

"அதுக்கென்ன.... பேஷா  ஆடிடலாம்" ன்னு  சிவன்  ஆட  ஆரம்பிச்சார்....

 சிவன்  ஆட  ஆட... உடுக்கை  தன்னால  குலுங்கியது.....  உடுக்கை சத்தம் கேட்டதும்... பார்வதி... "ஆஹா.... இந்த  சனிப்பய  ஒத்துக்கல  போல..... எங்கயாச்சும்  சிக்காமையா  போய்டுவான்....  அப்போ  இருக்கு  அவனுக்கு..." என்று  கருவிக்கொண்டே, பொக்லைன் டிரைவர  கூப்பிட்டு  நீ உடனே  அந்த  பில்டிங்க  இடிச்சுடு...ன்னு  ஆர்டர்  போட்டாங்க...

சிவன்  திரும்பி வந்து  பார்த்தா... பில்டிங்  தரைமட்டமா  கெடக்கு..... "ஏன்  பாரு  ... நான் சொன்னதும் தான்  சனி  ஒத்துகிட்டானே.... பின்ன  ஏன்  இடிச்ச...."

"நீங்கதானே  சொன்னீங்க... உடுக்கை சத்தம் கேட்டா  இடிக்க சொல்லி.."ன்னா  பாரு...

ஆக... சனி  நினைச்சுட்டா  யார் தடுத்தாலும்  அவன் நினைச்சத  சாதிச்சுடுவான்...
( என்பது நாம் நடைமுறையில் சொல்வது)
நம்மள ரொம்ப சோதிக்காம எதார்த்த நடையில் எழுதி இருந்ததால் என்னை கவர்ந்த நட்பின் பதிவு .

நான் படிச்ச பதிவுகள்ல அதிகமா சிரிச்சு வச்சதும் சிந்திக்க வைத்தத ஒரு பதிவும் நடைமுறை எதார்த்தத்தை சொன்ன பதிவும் இது.....

20 டிச., 2023

நூல்நயம்

"வேதபுரத்தார்க்கு."
கி ராஜநாராயணன் அவர்கள் எழுதியது. அன்னம் பதிப்பகம் வெளியீடு விலை ரூபாய் 150 மொத்த பக்கங்கள் 184 முதல் பதிப்பு 2014.

எனது 16ஆம் வயதில் முதன் முறையாக வேதபுரி வந்து சென்றிருக்கிறேன். மொத்தம் ஐந்து முறை அப்போது சென்று வந்திருக்கிறேன்.
அப்போதைய வேதபுரி இப்போது புதுவை என்றும் புதுச்சேரி என்றும் பாண்டிச்சேரி என்றும் அழைக்கப்படுகிறது .எவ்வளவோ மாறிவிட்டது .இரண்டு வருடங்களுக்கு முன் சென்று வந்த போதும் கூட அந்த மாற்றத்தை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாத வண்ணம் இருக்கிறது.

           இந்தக் கதையைப் படிக்கும் பொழுது நெஞ்சின் ஒரு ஓரத்தில் புளியமரத்தின் கதை வீச்சமும் ,குழந்தைகள் பெண்கள்ஆண்கள் வாசமும் , பதினெட்டாவது அட்சக்கோடு நெடியும்,,அஞ்சாடியின்  நெஞ்சைத் தொடும் வரிகள் வந்து வந்து போகிறது.
                 எனது பாட்டனார் ,அவரின் முப்பாட்டனாரின் கதைகளை ,வாழ்ந்த கதை வீழ்ந்த கதை ,என்னை தோளில் போட்டுக் கொண்டு தாலாட்டிக்கொண்டு சொன்ன விதம்,பதம், நூறு சதம் நினைவுகள் இந்த புத்தகம் படிக்கும்போது வந்து போகிறது.
            கி .ராஜநாராயணன் அவர்களை ஒரு சகாப்தம் என்று சொல்லலாம் .என்றும் இளமை முறுக்கோடு உள்ள தெளிவோடு தனித்து வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு "நிகழ்வு"(லெஜன்ட் ) அவர். இந்த நூற்றாண்டின் மிகப் பெரும் நிகழ்வு அவர்.
       தன் துணையை இழந்து' தனிமைத் தவம்' செய்து கொண்டிருக்கிறார்.
    வேளாண் கல்லூரியில் படிக்கும் பொழுது கல்வி சுற்றுலா பயணமாக கோவில்பட்டி விவசாய பண்ணைக்கு சென்றோம். அப்பொழுது நண்பர் கவிஞர் ,ஓவியர், திரைப்பட இயக்குனர் ,கங்கைகொண்டான் அவர்கள் இடைசேவல் கிராமம் அழைத்துச் சென்று காணும் பாக்கியம் பெற்றேன். அப்பொழுதெல்லாம் அவரின் அருமை பெருமை எனக்கு தெரியாது. கரிசல்காட்டு கதைகள் இவரால் பெயர் பெற்றது . அந்த மக்களின் மொழியில் மிக அற்புதமாக எழுதி இருக்கிறார் .
   
      கரிசல் காட்டுப் பகுதியில் பிறந்தவர்கள் வெக்கை குடிப்பவர்கள.இவர்களுக்கு எந்த வித சுக வாழ்வு சம்பந்தமும் கிடையாது. விவசாயிகள் தினம்தோறும் வானத்தை பார்த்து மானத்தை காப்பவர்கள். அப்படிப்பட்ட  மக்களின் உணர்வுகளை தின பாடுகளை தனது வெற்றி மொழியால் உலகிற்கு காட்டியவர் கி .ராஜநாராயணன் அவர்கள்.
             அழகிரிசாமி அவர்களும்,கி. ரா. அவர்களும் பால்யகால நண்பர்கள் ;ஒரே தெரு வாசிகள்.;இருவருமே சாகித்திய அகாடமி விருது பெற்றவர்கள்.
            மண்ணையும் அதில் வாழும் மனிதர்களையும் எழுதுவது அத்தனை எளிதல்ல .ஆப்பிரிக்கா எழுத்தாளர்களுக்கு கிடைத்துள்ள உலக அங்கீகாரம் போல கி. ரா. அவர்களுக்கு கிடைக்கவில்லை . புதுவை பல்கலைக்கழகத்தின்* நாட்டார் வழக்காற்றியல் *துறையின் "வருகைதரு பேராசிரியராக "பணியாற்றியவர். 
              கரிசல் எழுத்துக்கு இவர் பீஷ்மர் .புது எழுத்தாளருக்கு இவர் துரோனாச்சாரியார். படித்து பாடம் பெறலாம்.
    '  தூங்காதிருக்க மருந்து 'என்று சொல்லப்படுகிற 'தேயிலை 'ஊருக்குள்ளே எப்படி வந்து எல்லோரையும் ஆட்கொண்டது என்று இவர் தெளிவாகவும் விளக்கமாகவும்  எழுதியது பிரமிக்கத்தக்கது. அதேபோல கழுவேற்றுதல் என்கிற ஒரு நிகழ்வை சரித்திரத்தை இவர் கதை மூலமாக படிக்கலாம் ;படித்து தெரிந்து கொள்ளலாம்.
  பல கதைகள்  பிரெஞ்சு மொழியில், பல மொழிகளில்  மொழிபெயர்க்கப்பட்டுள்ளது .
        நாட்டுப்புறக் கதைகளைச் சேகரித்து ,அது தனிவகை இலக்கியம் என்று பல ஆண்டுகால அவரின் முயற்சி தற்பொழுது ஆயிரம் பக்கத்திற்கு மேலான புத்தகமாக வெளிவந்துள்ளது .
      கரிசல் வட்டார சொற்களைத் தொகுத்து அகராதி உருவாக்கியிருக்கிறார் .
     கடித இலக்கியம் என்ற வகையை மேம்படுத்தியது அவரது கடிதங்கள். கு. அழகிரிசாமி க்கும்  நண்பர்களுக்கும் அவர்கள் எழுதிய கடிதங்கள் ஆழமான இலக்கியத் தன்மை கொண்டது .

******

வேதபுரத்தார்க்கு .இது கிராவின் சுயசரிதை புத்தகம் .நான்கு தொகுதிகளாக எழுதி வெளியிட நிர்ணயிக்கப்பட்டது .முதல் தொகுதி இது .கி.ரா. அவர்கள் தனது 90 ஆவது வயதில் தீராநதி இதழில் 
 எழுதி பின் புத்தகமாக வெளியிடப்பட்டது.

       "வேதபுரத்தாருக்கு நல்ல குறி சொல்லு" என்று ஒரு தொடரை தான் கி.ரா. 
எழுதினார் .வேதபுரம் என்பது பாண்டிச்சேரி குறிக்கும் .பாண்டிச்சேரியில் குடியேறிய,பாரதி, பாரதிதாசன் கி.ரா.போன்றவர்களை குறிக்கும் .வேத புரத்தில் குடியிருப்பவர்களுக்கு ஒரு நல்ல குறிசொல் சொல் என்பதாக இந்த தொடரை எழுதினார் .ஆனால் இது முற்றிலும் முழுக்க முழுக்க சுயசரிதை என்றே சுயதம்பட்டம் போல சொல்லப்பட்டு எழுதப்பட்டது .ஆனால் பல விஷயங்கள் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

     90 வயதில் இவ்வளவு ஆச்சரியப்படத்தக்க நினைவாற்றல் கொண்டு எழுதியிருக்கிறார். தி.க.சி.தூண்டுதலும் கூட இது எழுதிடக் காரணம் என்று அவரே சொல்லியிருக்கிறார்.
1989இல் வேதபுரத்திற்கு குடியேறுகின்ற நிகழ்வோடு இந்த சுயசரிதம் தொடங்குகிறது.

         வேதபுரம் என்பது எல்லோருக்குமே,எல்லா ஊருக்கும்  பொருந்திப் போகின்ற நிகழ்வுகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

      முப்பது அத்தியாயங்களில் இந்தப் புத்தகம் எழுதப்பட்டுள்ளது.

கி ரா அவர்களின் புதுச்சேரி நகரத்தின் வாழ்க்கை பதிவுகள் அடங்கியது  தான் இந்த புத்தகம் இருக்கும் என்று நினைத்து படிக்க ஆரம்பித்தால் ஆரம்பத்தில் அப்படி இருக்கும் .போகப்போக வேறு திசையில் மாறி செல்கிறது.

         பல்கலைக்கழகத்திற்கு வருகைதரு பேராசிரியராக நியமிக்கப்பட்டது, அதிகாரிகளை சந்தித்து ஆய்வுக்கு திட்டமிட்டது உதவியாளர்களை உருவாக்கிக் கொண்டது ,துறை மாணவர்களோடு உரையாடியது என்பதாக இந்த கதை விரிகிறது.

       பள்ளிக் கல்வியை கூட முடிக்காத கி.ரா. அவர்களை புதுவைப் பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியராக
 துணைவேந்தர் க.வெங்கட சுப்பிரமணி அவர்கள் நியமித்தார்கள்.

          அப்போது இருந்து 25வருட புதுச்சேரி வாழ்க்கை நிகழ்வுகளை மட்டும் இதில் எழுதப்படும் என்று நினைத்து படிக்க ஆரம்பித்தேன் .ஆனால் நிறைய மாற்றங்களை உட்படுத்தி ஒரு கதை சொல்லியாக இதனை எழுதி இருக்கிறார் கி.ரா. அவர்கள்.
  தனது கிராம வாழ்க்கையில் இருந்து வெளிப்பட்டு வேதபுரம் வந்து அதன் அடையாளத்திற்குள் இருக்கும் ரகசியங்களை தேடி தேடி கண்டுபிடித்த ரகசியங்களை சுவராசியமாக சொல்வதாகவும் இருக்கிறது அவரின் எழுத்து.

  கி.ரா அவர்கள் இந்த புத்தகத்தில் ஒரு வாசகத்தை எழுதியுள்ளார் ."எல்லா சகதிகளிலும் தாமரை பூப்பதில்லை "
என்று .
ஆனால் கி.ரா. என்கிற தாமரைப்பூ எந்த சகதியிலும் பூக்கும் ஒரு உன்னதமான பொன் தாமரைப்பூ என்பதில் ஐயமில்லை.

        ஆறி விட்ட இட்லி சாப்பிடுவது நன்றாக இருக்காது.இதை விட மிக மோசமானது.
ஆறி விட்ட தோசை சாப்பிடுவது .இதற்கு தணிகாசலம் என்கிற கி.ரா.அவர்களின் உதவியாளர் சென்னாங்கண்ணி பொடி தொட்டு சாப்பிடுகிறார் . அவ்வளவு அருமையாக சுவையாக இருக்கிறது.அதுகுறித்து தெனாலிராமன் கதை கூட எடுத்து விடுகிறார் .நான் முதன்முதலாக கேள்விப்பட்டேன் . சென்னாங்கண்ணி  பொடி குறித்து என் மனைவிக்கு தெரியும் என்று சொன்னார். எனது பாண்டிச்சேரி நண்பர்களிடம் இதுகுறித்து கேட்டிருக்கிறேன் .கிடைத்தால் வாங்கி அனுப்பும்படி...

         மீரா ஒருமுறை வீட்டுக்கு வந்தபோதும், இயக்குனர் பார்த்திபன் ஒரு முறை வீட்டுக்கு வந்த போதும் கோழி கறி சாப்பாடு போடுகிறார்.கோழிக்கறி சமையல் குறித்து ஒரு அத்தியாயமே எழுதியிருக்கிறார்.

     வெள்ளக்கால் என்ற ஊரில் *தேள்* இருப்பதில்லை என்ற ஒரு தகவல் பதிவு செய்யப்படுகிறது..

*சொல்லடி சொல்லடி சக்தி மாகாளி வேதபுரத்து நல்ல குறி சொல்லு *
என்று வேண்டுகிறான் பாரதி .அந்த வரிகளை தான் கீழ அவர்கள் புத்தக தலைப்பாக வைத்திருக்கிறார்.

              30 ஆவது அத்தியாயத்தில் ஆயுள் இருக்கும் வரை *அதை* எழுத முடியும் மட்டுமே எழுதலாம் அல்லது சொல்லலாம் என்கிறார் .*அதை *என்று சொன்னவுடன் எனக்கு வேறு நினைவு போய்விட்டது. ஆனால் அவர் சொல்வது வேறு உயில் எழுதிவிட்டு சொல்வார்களே அதை குறித்து சொல்கிறார் .

    நண்பர்களுக்கு எல்லாம் நன்றி சொல்ல வேண்டும் என்று நினைக்கிறார் .அதை எப்படி சொல்ல வேண்டும் என்பதற்கும் ஒரு கதை சொல்லுகிறார் .

        .ஒரு பெண் விருப்பப்பட்டால் ,
   ஒரு பெண்ணின் வாய்விட்டு கூப்பிட்டு விட்டால் மறுக்கக் கூடாது என்பது நாட்டுப்புறத்தில் இப்பவும் சொல்லுகிற வார்த்தை.

      காம பசியில் துடிக்கும் ஒரு பெண் அரசனை கண்டதும் காதல் ஆகிவிடுகிறாவள் அரசரும்  காதலோடு திருப்தி செய்கிறான் .அப்போது அவள் சொன்னாளாம்," நீ நல்லா இருக்கனும்". என்று .

     அதுபோல என்னுடைய அருமை நண்பர்களுக்கெல்லாம் நான் நன்றி தெரிவிக்க இதுவே தக்க சமயம் ."நல்லா இருங்க "என்று சொல்லுகிறார்.

      எனது உடலை எரித்து சாம்பலாக்கி விடுங்கள் .துக்கத்தை எப்போதும் கொண்டாடாதீர்கள்.
பிறந்தநாளை மட்டும் நினைத்துக் கொள்ளுங்கள் .

    "எனக்கு நினைவு என்பது எனது எழுத்துக்கள் மட்டும் தான்" என்று முடிக்கிறார் ஆசிரியர்.

சிரித்து வாழவேண்டும்

இன்றைய சிந்தனைக்கு

அருள்வாக்கு

17 டிச., 2023

கவிதை நேரம்

முத்துலிங்கம் கவிதைகளிலிருந்து.

இன்றைய புத்தகம்

திரு.பா கருப்பையா அவர்கள் மொழிபெயர்த்த ஹோமியோபதி தத்துவார்த்த நெறிமுறைகள்  என்ற தமிழ் புத்தகத்தின் மொழிபெயர்ப்பு புத்தக விமர்சனம்.


பா கருப்பையா அவர்கள் மொழி பெயர்த்த புத்தகம் ஹோமியோபதி தத்துவார்த்த நெறிமுறைகள் என்ற நூலாகும் ஹோமியோபதியின் அடிப்படைக் கோட்பாடுகள் மற்றும் நெறிமுறைகளை விளக்கும்  டாக்டர் சாமுவேல் ஹனிமன் அவர்களின் organon of medicine ஆறாவது பதிப்பு புத்தகத்தை மையமாக வைத்து தமிழில்  மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது

இந்த மொழிபெயர்ப்பு மிகவும் துல்லியமானதாகவும், புத்தகத்தின் அசல் உள்ளடக்கத்தைப் பற்றிய தெளிவான புரிதலை வழங்குகிறது. 

புத்தகத்தின் அத்தியாயங்கள் அனைத்தும் ஆங்கில வார்த்தைகளுக்கு இணையான சரியான வார்த்தைகளைக் கொண்டும், கடினமான ஆங்கில சொற்றொடர்களை மிகுந்த ஆய்வு செய்து மிக துல்லியமான தமிழ் வார்த்தைகளை பயன்படுத்தி  திறன் பட மொழி பெயர்த்துள்ளார், அசல் ஆங்கில உரைக்கு ஒத்ததாக டாக்டர் போயரிக் மொழிபெயர்த்த ஆங்கில பிரதிக்கு இணையாக காரசாரமாக தமிழில் உள்ளது

இந்த மொழிபெயர்ப்பு ஹோமியோபதியின் அடிப்படைகளைப் பற்றி   தமிழில் அறிய விரும்பும் வாசகர்களுக்கு ஒரு மதிப்புமிக்க புத்தகமாகும். 

மொழிபெயர்ப்பு மிகவும் துல்லியமானது 
புத்தகத்தின் அத்தியாயங்கள் அனைத்தும் மொழிபெயர்க்கப்பட்டு, அசல் தமிழ் மொழிபெயர்ப்பு ஆங்கில புத்தகத்தின் எழுத்து சுவைக்கு ஒத்ததாக தமிழ் மொழிபெயர்ப்பை 
பா கருப்பையா அவர்கள் திறன் பட செய்து உள்ளார் .

இந்த மொழிபெயர்ப்பு ஹோமியோபதியின் அடிப்படைகளைப் பற்றி அறிய விரும்பும் ஆங்கில அறிந்த மற்றும் ஆங்கிலம் புரியாத தமிழ் வாசகர்களுக்கு ஒரு மதிப்புமிக்க நூலாகும்


பா கருப்பையா அவர்கள் ஹோமியோபதி மருத்துவத்தின் மேல் பற்றும்  மிக ஈடுபாடும் கொண்டவர் மிகச் சிறந்த புத்தகங்களை கையாள்வதில் மிகவும் வல்லவர் ஹோமியோபதியை கற்றுக் கொள்பவர்களுக்கு சிறந்த முன் உதாரணம்

இந்த 21 ஆம் நூற்றாண்டு மாணவர்களுக்கு ஹோமியோபதி தத்துவங்களின் மீது எந்த ஈர்ப்பும் அதை சார்ந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஒரு எண்ணமோ இல்லாத காலத்தில் இவர் மேற்கொண்டிருக்கும் இந்த கடினமான உழைப்பு மிகவும் போற்றுதற்குரியது.

ஹனிமன் அவர்கள் கூறினது போல ஹோமியோபதியின் மேல் உள்ள இந்த தாகத்திற்கு அவர்  ஹனிமன் அவர்களின் மூன்று மடங்கு ஆசீர்வாதங்களை பெறட்டும்.

நன்றி :

Dr.Edwin Anto Raj MD(Hom)
Inner Healing 

மற்றும் 
AProCH WhatsApp Group 

இன்றைய சிந்தனைக்கு

அருள்வாக்கு

15 டிச., 2023

சுற்றுச்சூழல்

நன்றி:


இன்றைய புத்தகம்

காலச்சுவடு வெளியீடான
"தகவல் அறியும் உரிமை- ஓர் எழுச்சியின் கதை"
என்னும் நூல் குறித்த பார்வை

”இப்புத்தகம் தரும் ஆழமான விஷயங்கள் வாசகனைச் சிந்திக்க வைக்கும்.”

கட்டுரைக்கான இணைப்பு:
https://bookday.in/thagaval-ariyum-urimai-oru-ezhuchiyin-kathai-book-review-by-s-r-c/

நூலை வாங்க:
காலச்சுவடு இணையதள இணைப்பு:
https://books.kalachuvadu.com/catalogue/thakavalariyumurimai_1246/
அச்சுநூலின் இணைய இணைப்பு:
https://www.amazon.in/dp/B0CL9ZTYMF?
மின்நூலின் இணைய இணைப்பு: https://www.amazon.in/Thakaval-Urimai-ezhuchiyin-ebook/dp/B0CLHXV5T9/

நன்றி :

நலக்குறிப்புகள்

இன்றைய சிந்தனைக்கு