4 ஜூலை, 2013

இன்றைய சிந்தனைக்கு-166:

இன்று சுவாமி விவேகானந்தரின் நினைவு நாள்.  சுவாமிஜியை மனதால் நினைத்து, அவர்களுடைய திருவடிகளை வணங்கி, அவருடைய சிந்தனைகள் சிலவற்றை இங்கே பதிகின்றேன்.

சிந்தனை, சொல், செயல் ஆகிய மூன்றாலும் ஒன்றிணைந்த மனிதனால் இந்த உலகத்தையே ஆட்டிப் படைக்க முடியும்.  எதையும் சாதிக்கும் துணிச்சல் அவன் உள்ளத்தில் நிறைந்திருக்கும்.

மற்றவர்களுக்காக நாம் மேற்கொள்ளும் மிகக் குறைந்த அளவு உழைப்புகூட, நமக்குள்ளே இருக்கும் சக்தியை தட்டி எழுப்பிவிடும்.

நீங்கள் மகத்தான பணியைச் செய்யப் பிறந்தவர்கள் என்பதில் நம்பிக்கை கொள்ளுங்கள்.

வலிமையே வாழ்க்கை, பலஹீனமே மரணம்.
விரிந்துகொண்டே (வளர்ந்துகொண்டே) போவதுதான் வாழ்க்கை, சுருங்க்கிக்கொண்டே (குறுகிக்கொண்டே) போவதுதான் மரணம்.

அன்பே வாழ்க்கை, துவேஷமே (வெறுப்பே) மரணம்.

2 ஜூலை, 2013

ஆன்மீக சிந்தனை-39:

எந்த இடத்தில் இருந்தாலும், எந்தப் பணியில் ஈடுபட்டாலும், மனம் கடவுளின் திருவடிகளையே சிந்தித்துக் கொண்டிருக்கட்டும் காஞ்சிப் பெரியவர்


நன்றி:  தினமலர் நாளிதழ்

இன்றைய சிந்தனைக்கு-165:

உண்மை, தூய்மை, சுயநலமின்மை இவை மூன்றும் ஒருவரின் இயல்பாகி விட்டால், அவரை வெல்லக் கூடிய சக்தி உலகில் எங்கும் கிடையாது சுவாமி விவேகானந்தர்