குட்டிக்கதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குட்டிக்கதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

29 மார்., 2026

குட்டிக்கதை

*பாவத்தின் தந்தை யார்...🤔*
============================


_*அரசன் ஒருவனுக்குத்*_ _*திடீரென்று சந்தேகம் ஒன்று*_ 
_*வந்தது.*_

_பாவத்தின் தந்தை யார்?_

_*அரசவையில் இருந்த பண்டிதரை தனது நண்பன் போலவே அவன் நடத்தி வந்தான். அவரை நோக்கி, “பாவத்தின் தந்தை யார்? இதற்கான சரியான பதிலை நீங்கள் சொல்ல வேண்டும்.” என்றான்.*_

_பண்டிதருக்கோ பெரும் குழப்பம் ஏற்பட்டது._
_யார் பாவத்தை உருவாக்கினார்கள்?_ _யாரைப் பாவத்தின் தந்தை என்று சொல்வது?_

_*அவரது முகத்தில் நிலவிய குழப்பத்தைக் கண்ட அரசன், “சரி, இதற்கு உடனடியாகப் பதில் சொல்ல வேண்டாம். ஒரு வாரத்திற்குள் பதில் சொல்லுங்கள். ஆனால் சரியான பதிலைச் சொல்லாவிட்டால் தகுந்த தண்டனை உண்டு” என்று எச்சரித்தான்.*_

_வீடு திரும்பிய பண்டிதர் தனக்குத் தெரிந்த நூல்களை எல்லாம் புரட்டினார். சரியான பதிலைக் காணோம். தெரிந்தவர்களிடம் கேட்டுப் பார்த்தார். அவர்கள் உதட்டைப் பிதுக்கினர். நாட்கள் கழிந்தன._

_*ஊரில் ஓடும் நதிக்கரையின் ஓரமாக சோகமான முகத்துடன் அவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.*_
_*நாளைக்குள் பதில் சொல்ல வேண்டுமே!*_

_அவர் முகத்தில் நிலவிய குழப்பதைப் பார்த்த தாசி ஒருத்தி பண்டிதரை அழைத்தாள்._
_“என்ன பண்டிதரே!_ _எப்போதும்_ _உற்சாகமாகப் போவீர்கள். இன்று ஒரே சோகமாக இருக்கிறது முகம். என்ன விஷயம்?” என்று கேட்டாள்._

_*பண்டிதர், “பாவத்திற்குத் தந்தை யார் என்று தெரியாமல் தவிக்கிறேன்” என்று புலம்பினார்.*_

_“அட, இது தெரியாதா? எனக்குத் தெரியுமே” என்று அவள் லேசாகச் சொன்னாள்._

_*பண்டிதருக்குத் தூக்கிவாரிப் போட்டது.*_
_*இவ்வளவு நம்பிக்கையுடன் சொல்கிறாளே, பதில் தெரியும் என்று!!*_

_“பதிலைச் சொல்லேன்” என்று கெஞ்சினார் பண்டிதர்._
_“சொல்கிறேன்._ _ஆனால் இங்கல்ல,_ _எனது வீட்டிற்கு வாரும். அங்கு வர தட்சிணையாக ஒரு பொன் காசு_ _தருகிறேன்.” என்ற அவள் ஒரு பொற்காசைத் தந்தாள்._

_*அதை வாங்கிக் கொண்ட பண்டிதர் தன் மனதிற்குள் இதற்கு பிராயச்சித்தம் செய்து கொள்ளலாம் என்று தனக்குத் தானே சமாதானம் சொல்லிக் கொண்டார்.*_

_தாசியின் வீட்டை அடைந்த பண்டிதர், “இப்போது பதிலைச் சொல்லேன்” என்றார்._

_*“என் படுக்கை அறைக்கு வாருங்கள். இருபது பொற்காசு தந்து பதிலைச் சொல்கிறேன்” என்றாள் அவள்.*_

_பண்டிதர் அவளது படுக்கை அறைக்குச் சென்றார். அடடா, என்ன அற்புதமான சயன அறை!_
_“சரி, இப்போது பதிலைச் சொல்லேன்” என்றார் பண்டிதர்._

_*“வந்தது வந்தீர்கள். என் மடியில் அமரந்து கொண்டு பதிலைக் கேளுங்கள். வாயில் கொஞ்சம் சுவையான மாமிசத்தை வேறு சாப்பிடலாம்” என்றாள் அவள்.*_

_“சும்மா உட்கார வேண்டாம். நூறு பொற்காசுகள் தருகிறேன். என் மார்பை அலங்கரிக்கும் வைர மாலையையும் கூடவே தருகிறேன்” என்றாள் அவள்._

_*பண்டிதருக்கு,  அவள் மார்பில்  அலங்கரிக்கும் வைர மாலை கண்களைக் கவர்ந்தது.*_

_“சரி, பெரிதாக பிராயச்சித்தம் செய்து கொள்ள வேண்டியது தான்!” என்று அவர் மனதை சமாதானப் படுத்திக் கொண்டு அவள் மடியில் படுத்தார்._

_*ஒரு மாமிசத் துண்டை கையில் எடுத்து வாயில் போட இருந்த தருணம், அந்த தாசி திடீரென் எழுந்தாள். பண்டிதரைத் தூக்கித் தள்ளியதோடு பளார் என்று ஒரு அறை அவரது கன்னத்தில் விட்டாள்.*_

_பண்டிதர் துடிதுடித்துப் போனார்._

_*“இப்போது தெரிந்ததா, விடை? பாவத்தின் தந்தை ஆசை. பண்டிதரே, பேராசை. தெரிந்ததா, பதில்?”"*_ 

_தாசியின் குரல் பண்டிதரின் மனதில் ஆழப் பதிந்தது._
_அவருக்கு க்ஷண நேரத்தில் ஞானம் கிட்டியது._
_கையில் இருந்த பொற்காசுகளை எல்லாம் தூக்கி எறிந்தார்._

_*சாலை வழியே “விடை தெரிந்து விட்டது, விடை தெரிந்து விட்டது” என்று கத்திக் கொண்டே ஓடலானார். நேராக அரண்மனைக்குச் சென்ற பண்டிதர் மன்னரைச் சந்தித்தார். மக்கள் கூட்டமும் பெருகி விட்டது.*_

_“மன்னா! விடை தெரிந்து விட்டது. பாவத்தின் தந்தை யார் என்று எனக்குத் தெரிந்து விட்டது” என்று சொல்லி விட்டு நடந்ததை அனைத்தும் அப்படியே சொன்னார்._

_*“மன்னா! எனக்குத் தகுந்த தண்டனை கொடுத்து விடுங்கள். பண்டிதராய் இருந்தும் ஒரு இழிவான காரியத்திற்கு இணங்கினேன்.*_ _*என்னை தேச பிரஷ்டம் செய்து விடுங்கள்” என்று உருக்கமாக வேண்டினார்.*_

_“ஆஹா! பாவத்தின் தந்தை பேராசையா. சரியான பதில்” என்று மகிழ்ச்சியுடன் கூவிய மன்னன் பண்டிதரை நண்பன் என்ற முறையில் கட்டிக் கொண்டார்._ 

_*“நாட்டை விட்டு வெளியேறுவதா? ஒருக்காலும் இணங்க மாட்டேன் அதற்கு! உங்களுக்கு ஞானம் வந்து விட்டதை உணர்கிறேன். இந்தக் கணம் முதல் நீங்களே எனது குரு. ஒரு நாளும் தவறான வழியில் செல்ல முடியாத நீங்களே எனக்குத் தகுந்த வழிகாட்டி. என்னை சீடனாக ஏற்றுக் கொள்ளுங்கள்” என்றான் மன்னன். பண்டிதரை அடி பணிந்து வணங்கினான்.*_

_ஆமாம், *பாவத்தின் தந்தை #பேராசை தான்...🙄*_

27 மார்., 2026

குட்டிக்கதை

Author: Stasyan117
licensed under the Creative Commons Attribution-Share Alike 4.0 International license.
Via WIKIMEDIA COMMONS 


ஒரு மனிதன் தன் குரங்குகளுடன் ஒரு படகில் பயணம் செய்து கொண்டிருந்தான். அந்தப் படகில் இருந்த மற்ற பயணிகளில் ஒரு தத்துவஞானியும் இருந்தார். அந்தக் குரங்கு இதற்கு முன் படகில் பயணம் செய்ததில்லை, அதனால் அது சங்கடமாக உணர்ந்தது. அது கத்தவும் மேலும் கீழும் குதிக்கவும் தொடங்கியது, படகில் இருந்த யாரையும் நிம்மதியாக உட்கார விடவில்லை. படகோட்டி எரிச்சலடைந்தார், மேலும் இந்தக் குழப்பத்தால் படகு மூழ்கிவிடுமோ என்று பயணிகள் கவலைப்பட்டனர்.  குரங்கு அமைதியாகவில்லை என்றால், அது படகை மூழ்கடிக்கக் காரணமாகிவிடும்.

அந்த மனிதன் இந்தச் சூழ்நிலையால் கலக்கமடைந்தான், ஆனால் குரங்கை அமைதிப்படுத்த எந்த வழியையும் அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. தத்துவஞானி எல்லாவற்றையும் கவனித்துவிட்டு உதவ முடிவு செய்தார்.
அவர், “நீங்கள் அனுமதித்தால், இந்தக் குரங்கை ஒரு வீட்டுப் பூனையைப் போல என்னால் அமைதியாக்க முடியும்,” என்றார்.

அந்த மனிதன் உடனடியாக ஒப்புக்கொண்டான். இரண்டு பயணிகளின் உதவியுடன், தத்துவஞானி குரங்கைத் தூக்கி ஆற்றில் வீசினார். தண்ணீரில் மிதக்கப் போராடிய குரங்கு, வெறித்தனமாக நீந்தத் தொடங்கியது.

அது சாகும் தருவாயில் இருந்தது, தன் உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்தது. சிறிது நேரத்திற்குப் பிறகு, தத்துவஞானி குரங்கை மீண்டும் படகிற்குள் இழுத்தார். இப்போது குரங்கு அமைதியாகி ஒரு மூலையில் சென்று அமர்ந்தது.
குரங்கின் மாறிய நடத்தையைக் கண்டு அந்த மனிதனும் அனைத்துப் பயணிகளும் ஆச்சரியப்பட்டனர்.

அந்த மனிதன் தத்துவஞானியிடம், “முன்பு அது அமைதியின்றி அங்குமிங்கும் குதித்துக் கொண்டிருந்தது. இப்போது அது ஒரு வளர்ப்புப் பூனையைப் போல அமர்ந்திருக்கிறது. ஏன்?” என்று கேட்டான்.

தத்துவஞானி பதிலளித்தார், “நான் இந்தக் குரங்கைத் தண்ணீரில் வீசியபோது, ​​அது நீரின் சக்தியையும், தன் வாழ்வின் மதிப்பையும், படகின் பயனையும் புரிந்துகொண்டது.”

இந்தியாவில் எல்லாவற்றையும் தொடர்ந்து விமர்சித்து, கருத்துரைத்து, எதிர்க்கும் நபர்களை ஆறு மாதங்களுக்கு வட கொரியா, ஆப்கானிஸ்தான், சோமாலியா, தெற்கு சூடான், சிரியா, ஈராக், பாலஸ்தீனம், பாகிஸ்தான், இலங்கை அல்லது சீனாவிற்கு அனுப்ப வேண்டும். இந்தியாவிற்குத் திரும்பிய பிறகு, அவர்கள் தானாகவே ஒரு வளர்ப்புப் பூனையைப் போல அமைதியாகி, நாடு முன்னேற வழிவகுப்பார்கள்.

“இந்தியா”வைத் தவறாகப் பயன்படுத்தி அவதூறு பரப்பும் அனைத்து நண்பர்களுக்கும் அர்ப்பணம்.

 ஜெய்ஹிந்த் 🇳🇪🇳🇪

18 ஜன., 2026

குட்டிக்கதை

Unknown author 
Public domain 
Via Wikimedia Commons 



இராமகிருஷ்ண மடத்தைச் சேர்ந்த ஒரு துறவியிடம் நியூயார்க் பத்திரிக்கையாளர் ஒருவா் பேட்டி எடுப்பதாக இருந்தது. திட்டமிட்டபடி பத்திரிக்கை நிருபர் பேட்டியை ஆரம்பித்தார்.

 நிருபர் : ஐயா உங்களுடைய முந்தய சொற்பொழிவில் 'தொடர்பு' மற்றும் இணைப்பு' என்பது பற்றி பேசினீர்கள், அது உண்மையிலேயே மிகவும் குழப்பமாக இருந்தது. சற்று விளக்கி சொல்ல முடியுமா? என்றார்.

துறவி புன்முறுவலோடு நிரூபர் கேட்ட கேள்வியிலிருந்து விஷயத்தை  திசைதிருப்புகின்ற விதமாக, அந்த நிருபரிடம் கேள்வி கேட்டார், நீங்கள் நியூயார்கில் தான் வசிக்கிறீர்களா?

 நிருபர் : ஆம்.

 துறவி : வீட்டில் யாரெல்லாம் இருக்கிறார்கள்?

 இந்த துறவி  என் சொந்த வாழ்வைப் பற்றியும், தேவையற்ற கேள்விகளையும் கேட்டு தன்னுடைய கேள்விக்கு பதில் தருவதை தவிர்க்க முயற்சிக்கிறார், என்று நி்ருபா் நினைத்தார், இருந்தாலும் துறவியின் கேள்விக்கு "என் தாயார் இறந்து விட்டார், தந்தையார் இருக்கிறார், மூன்று சகோதரா்கள் மற்றும் ஒரு சகோதரி இருக்கிறார், அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது " என்று பதிலளித்தார்

துறவி முகத்திலே புன்னகையுடன், "நீங்கள் உங்கள் தந்தையுடன் பேசுகிறீா்களா?" என்று மீண்டும் கேட்டார். இப்போது நி்ருபா் சற்று எரிச்சலடைந்துவிட்டார்....

 துறவி : "நகடைசியாக எப்போது அவரிடம் பேசினீா்கள்?".

 நிரூபர் : எரிச்சலை அடக்கிக்கொண்டு, "ஒரு மாதத்திற்கு முன்பு இருக்கலாம்" என்றார்.

 துறவி : "உங்களுடைய சகோதர சகோதரிகளை அடிக்கடி சந்திப்பதுண்டா?  குடும்பமாக சந்தித்தது கடைசியாக எப்போது?" என்றார். இப்போது அந்த நிரூபரின் நெற்றியில் வியர்வை தெரிந்தது. இதைப் பார்த்தால் துறவிதான் நிருபரை பேட்டி காண்பது போல இருந்தது.
 
நீண்ட பெருமூச்சுடன் நிருபர் சொன்னார், "இரண்டு வருடங்களுக்கு முன் கிருஸ்துமஸ் சமயத்தில் சந்தித்தோம்" .

 துறவி : எல்லோரும் சேர்ந்து எத்தனை நாட்கள் இருந்தீர்கள்?

புருவத்தின் மீது வடிந்த வியர்வையை துடைத்தவாறே நிருபர் "மூன்று நாள்" என்றார்.

 துறவி : "உங்களுடைய அப்பாவின் அருகில் அமர்ந்து, அவரோடு  எவ்வளவு நேரம் கழித்தீர்கள்?".

இப்போது நிருபர் பதட்டத்துடனும் சங்கடத்துடனும் ஒரு  காகிதத்தில் ஏதோ கிறுக்க ஆரம்பித்தார்...

 துறவி : "எல்லோரும் ஒன்றாய் அமர்ந்து காலை உணவு, மதிய உணவு அல்லது இரவு உணவை சாப்பிட்டீர்களா? அம்மா இறந்த பிறகு நாட்களை எப்படி கழிக்கிறீர்கள் என்று அப்பாவிடம் கேட்டீர்களா?"

இப்போது நிருபரின் கண்களில் இருந்து கண்ணீர் துளிகள் கீழே விழத் தொடங்கியது. துறவி அந்த நிரூபரின் கைகளை பற்றியவாறு கூறினார், "சங்கடப் படாதீர்கள், மனம் உடைந்து போகாதீர்கள், கவலையும் கொள்ளாதீர்கள். தெரியாமல் உங்கள் மனதை நான் புண்படுத்தி இருந்தால் என்னை மன்னியுங்கள்... ஆனால் இதுதான் நீங்கள் 'தொடர்பு மற்றும் இணைப்பு' பற்றி கேட்ட கேள்விக்கான பதில். நீங்கள் உங்களுடைய அப்பாவுடன் தொடர்பில் இருக்கிறீர்கள் ஆனால் அவரோடு நீங்கள் இணைப்பில் இல்லை. நீங்கள் அவரோடு இணைக்கப்படவில்லை. இணைப்பு என்பது இதயத்துக்கும் இதயத்துக்கும் இடையே இருப்பது. ஒன்றாய் அமர்ந்து, உணவை பகிர்ந்து, ஒருவர்மீது ஒருவர் அக்கரை கொண்டு, தொட்டுக் கொண்டு, கைகுலுக்கி, கண்களை நேருக்கு நேர் பார்த்து, ஒன்றாய் சேர்ந்து , நேரத்தை செலவிடுவதுதான் இணைப்பு (connection). நீங்கள், உங்கள் சகோதர சகோதரிகளுடன் தொடர்பில் (contact) இருக்கிறீர்கள் ஆனால் நீங்கள் யாரும் இணைப்பில் இல்லை என்றார்.

இப்போது நிருபர் கண்களை துடைத்துக் கொண்டு, "எனக்கு அருமையான மற்றும் மறக்க முடியாத பாடத்தை சொல்லித் தந்ததற்கு மிக்க நன்றி ஐயா" என்றார்.

இதுதான் இன்றைய USA வாழ்வின் நிஜமாக இருக்கிறது. வீட்டில் ஆகட்டும் அல்லது சமுதாயத்தில் ஆகட்டும் ஒவ்வொருவரும் நிறைய தொடர்பை வைத்திருக்கின்றனர் ஆனால் இணைப்பில் இருப்பதில்லை. எல்லோருமே அவரவர் சொந்த உலகில் மிகவும் பரபரப்பாக இருக்கின்றனர்.

              ******
அந்தத் துறவி வேறு யாருமல்ல,  விவேகானந்தா் தான் அவா்.

ஜனவரி 12 சுவாமி விவேகானந்தர் பிறந்தநாள்.

12 ஜன., 2026

குட்டிக்கதை

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
திரௌபதிக்கு அறிவுரை கூறிய கிருஷ்ணன்....

அஸ்தினாபுரம் அரண்மனை மாடத்தில் இருந்து, அஸ்தினாபுர நகரைச் சுற்றி பார்த்துக் கொண்டிருந்தாள் திரௌபதி. ஒரு சில ஆண்கள் மட்டுமே காணப்பட்டனர். விதவைகள் அதிகமாக இருந்தனர். அனாதைகள் அங்குமிங்கும் சுற்றித் திரிவதையும் கண்டாள். இவை அனைத்திற்கும் தானே காரணம் என்று அவளது மனம் சொல்லியது. அப்போது கிருஷ்ணர் அங்கு வந்தார். அவரைப் பார்த்ததும் அழத் தொடங்கினாள். 

அவளிடம் என்ன நடந்தது? என்று கேட்டார் கிருஷ்ணர். திரௌபதி அமைதியுடன் இருந்தாள். அவளின் எண்ணத்தை அறிந்த கிருஷ்ணர் பேச ஆரம்பித்தார். திரௌபதி விதி மிகவும் கொடூரமானது. நாம் நினைப்பது போல் வேலை செய்யாது. நம்முடைய செயல்கள் பேச்சுகள் சிந்தனைகளுக்கு ஏற்ப அது அதன் போக்கில் அதனுடைய செயல்களைச் செய்கிறது. முடிவுகளையும் மாற்றுகிறது. 

நீ பழிவாங்க நினைத்தாய் வெற்றி பெற்றாய். துரியோதனனும் துச்சாதனனும் மட்டுமல்ல. அவர்களை சார்ந்திருந்த கௌரவர்கள் அனைவரும் மடிந்து விட்டனர். இப்போது ஏன் வருத்தத்துடன் இருக்கிறாய். நீ மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றார். அதற்கு திரௌபதி என் காயங்களை ஆற்ற வந்தீர்களா அல்லது அதன்மீது உப்பு தூவ வந்தீர்களா? என்றாள். 

அதற்கு கிருஷ்ணர், திரௌபதி உண்மை நிலையை உனக்கு உணர்த்தவே வந்துள்ளேன். உனது தொலை நோக்கு பார்வையற்ற செயல்களின் விளைவு என்பதை உணர்த்த வந்தேன் என்றார். இந்தப் போருக்கு நான்தான் முழுப் பொறுப்பா என்று கேட்டாள். இல்லை திரௌபதி. நீ மட்டுமே காரணம் என்று கருதாதே. ஆனால் நீயும் ஒரு காரணம் என்றார். உன் செயல்களில் நீ கொஞ்சம் தொலை நோக்கு பார்வையைக் கொண்டிருந்தால் நீ இவ்வளவு துன்பங்களை அனுபவித்திருக்க மாட்டாய் என்றார்.

நான் என்ன செய்திருக்க முடியும் கிருஷ்ணா என்று கேட்டாள். நீ நிறைய செய்திருக்க முடியும். உனது சுயம்வரம் நடந்த போது கர்ணனை அவமானப்படுத்தாமல் போட்டியில் கலந்து கொள்ள அவருக்கு வாய்ப்பளித்திருந்தால் ஒருவேளை முடிவு வேறு ஏதாவதாக இருந்திருக்க கூடும். அதற்குப் பிறகு குந்தி உன்னை ஐந்து கணவர்களுக்கு மனைவியாக்கும்படி கட்டளையிட்டதை அப்போது நீ ஏற்றுக் கொள்ளாமல் இருந்தாலும் முடிவு வேறு விதமாக இருந்திருக்கும். 

அதற்கு பிறகு உன் அரண்மனையில் பார்வையற்றவரின் மகன்கள் குருடர்கள் என்று துரியோதனனை அவமானப்படுத்தினாய். அவ்வாறு நீ சொல்லாதிருந்திருந்தால் நீ மானபங்கப்பட்டிருக்க மாட்டாய். அப்போதும் ஒருவேளை சூழ்நிலைகள் வேறு விதமாக இருந்திருக்கும். நம் வார்த்தைகள் கூட பல நேரங்களில் பல விளைவுகளுக்கு காரணமாகி விடும் திரௌபதி. 

பேசுவதற்கு முன் உன் ஒவ்வொரு வார்த்தையையும் யோசித்து சிந்தித்து யாருடைய மனமும் காயம் அடைந்து விடுகிறதா என்று பார்த்து பேசுதல் வேண்டும். இல்லையெனில் அதன் தீய விளைவுகள் உன்னை மட்டுமல்ல உனது சுற்றுப் புறத்தையும் மகிழ்ச்சியற்றதாக ஆக்கிவிடும் என்றார். திரெளபதியின் மனம் தனது தவறை சிந்தித்தது. சிறிது ஆறுதல் அடைந்து அமைதியானாள்.

மனிதனின் பற்களில் விஷமில்லை. ஆனால் பேசும் வார்த்தைகளில் விஷம் கக்கும் ஒரே விலங்கு இவ்வுலகில் மனிதன் மட்டுமே. எனவே வார்த்தைகளை அறத்துடன் பயன்படுத்த வேண்டும். யாருடைய மனதையும் புண்படுத்தாதபடி சிந்தித்து பேச வேண்டும். நல்லதை நினைத்து, நல்லதை பேசி, நல்லதை செய்தால் விதி நல்லதை நடந்திக் கொடுக்கும். 

சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் 🙏🏻
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

3 டிச., 2025

குட்டிக்கதை: தத்தாத்ரேயரும் நான்கு நாய்களும்


*தத்தாத்ரேயரும் நான்கு நாய்களும்* 

நாய்கள் மீதான இந்து மதத்தின் கண்ணோட்டத்தைப் பொறுத்தவரை, ஒரு உண்மை தெளிவாகிறது - அவை கொண்டாடப்படும் அளவிற்கு மதிக்கப்படுகின்றன. அவற்றின் விசுவாசம், சேவை, தோழமை மற்றும் மனிதர்களுடனான சிறப்பு உறவு ஆகியவற்றால் இந்து மதத்தில் நாய்கள் மீதான மரியாதை விரிவாகிறது.

இந்துமதம் தவிர உலகின் வேறு மதங்களிலும் நாய்கள் மதிக்கப்படுகின்றன. பார்சி மதம் நாயை மிகவும் கொண்டாடுகிறது.

கிரேக்கர்களின் பழைய கதைகளிலும் இரு நாய்களைப் பற்றிய கதைகள் வருகின்றன. மரண தேவதையின் சன்னி தானத்துக்குத் துவாரபாலகர்களாக நாய்கள் பணிபுரிகின்றனவாம். வேதகாலக் கதையும் பித்ரு லோகத்துக்கு துவார பாலகர்கள் நாய்கள்தான் என்று கூறுகிறது. அவை வைவஸ்த சியாமம், ஸபலம் என்று பெயர் கொண்டவை. பாரசீகர்களின் தர்ம சாஸ்திரங்களில், பித்ரு லோகத்தையும் தேவ லோகத்தையும் இணைக்கும் சின்வத் என்னும் பாலம் ஒன்று இருப்பதாகவும், இறந்த பின் மனித ஆன்மாவை ஒரு நாயே இந்தப் பாலத்தின் வழியாக அழைத்துச் செல்லும் மார்க்க பந்து (வழித்துணை) என்று எழுதி வைத்திருக்கிறார்கள்.

கிரேக்கர்களின் புராணக் கதை ஒன்றில், மூன்று தலைகள் கொண்ட கர்பேராஸ் என்னும் நாய்தான் காலதேவனுக்கு மெய்க் காவலன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வானுலகில் வாழும் நாய்க்கு திவ்யகதஸ் என்று பெயர் சூட்டியிருக்கிறது வேதம். கேனிஸ் என்னும் விண்மீன்களின் கூட்டத்தைத்தான் வேதம் சுநா ஸிர என்று குறிப்பிடுவதாக மாக்ஸ் முல்லர் தீர்மானிக்கிறார். ஸம்வத்ஸம் (ஓர் ஆண்டு) முடிந்ததும், பருவகால தேவதைகளை நாய்கள் எழுப்புவதாக ரிக்வேதம் முதல் மண்டலத்தில் ஒரு செய்தி உள்ளது. பழகிய நல்ல இனத்து நாயைப் பற்றி வால்மீகி ராமாயணத்தில் குறிப்பு வருகிறது. பரதன் மாமன் வீட்டுக்குப் போகும்போது பயிற்சி பெற்ற வேட்டை நாய்களையும் அழைத்துச் சென்றானாம். மனிதன் மீது அன்பு கொண்ட பிராணி நாயைப்போல் வேறில்லை. அதனால்தான் அது மொழி பேதமோ, தேசம், இனம், நிலை பேதமோ இன்றி, அனைத்தையும் கடந்து எவருடனும் ஒட்டுறவாக வாழ முடிகிறது.

நேபாளம், பூட்டான் மற்றும் இந்திய மாநிலங்களான சிக்கிம் மற்றும் மேற்கு வங்காளத்தில் கொண்டாடப்படும் தீபாவளியை ஒட்டிய திகார் பண்டிகை, மரணத்தின் கடவுளான யமராஜாவுடன் தொடர்புடைய உயிரினங்களின் வழிபாட்டிற்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறது.

தீபாவளியின் இரண்டாவது நாள், குகார் திகார் என்று அழைக்கப்படுகிறது, இது பெரும்பாலும் யம ராஜாவுடன் அவரது வசிப்பிடத்தின் பாதுகாவலர்களாக சித்தரிக்கப்படும் நாய்களை கௌரவிக்கிறது. மரண நதியைக் கடக்க இறந்தவர்களின் ஆவிகளை வழிநடத்த உதவும் தூதர்கள் என்றும் நம்பப்படுகிறது, (கருட புராணத்தில் வைதரணி நதியை கடக்க பசு மாடுகள் உதவுவதாக வருகிறது). குகார் திகாரில் நாய்களுக்கு டிகா மற்றும் தூள் சாயத்தால் அலங்கரித்து, மலர் மாலைகள் மற்றும் நல்ல உணவுகளை வழங்குவதன் மூலம் நன்றி தெரிவிக்கின்றனர்.

சிவ மூர்த்தங்களில் ஒன்றான பைரவரின் வாகனம் நாய் ஆகும், நாயானது பைரவரின் குணாதிசயங்களையும், காலத்தைக் குறிக்கும் அதன் சக்தியையும் பிரதிபலிக்கும் நாய்கள் எதிரிகளை விரட்டும். நண்பர்களிடம் குழையும். பைரவர் எதிரிகளை விரட்டுவார். தன்னை வணங்கும் அன்பர்களுக்கு. பாதுகாப்பு கொடுத்து அன்பு காட்டுவார். நாயின் குணம், காலத்தின் சக்தியையும், பைரவரின் வேகத்தையும் குறிக்கிறது. இந்த நாய், ‘‘வேதஞானி’’ அல்லது ‘‘சாரமேயன்’’ என்றும் அழைக்கப்படுகிறது, இது போர்க்குரல் கொடுக்கும் நாய் என்று பொருள். இதனால், பைரவரை வழிபடும் போது நாய்களையும் வணங்கும் வழக்கம் உள்ளது. நவகிரகங்களில் ராகு கிரக தோஷத்திற்கான பரிகாரமாக பைரவரை வணங்குவது வழக்கம்.

இந்துக் கடவுளான தத்தாத்ரேயரின் சித்தரிப்புகளில், நாய்களின் குறியீட்டு முக்கியத்துவம் ஆழமாக ஓடுகிறது.

தத்தாத்ரேயர் நான்கு நாய்கள் மற்றும் ஒரு பசுவுடன் சித்தரிக்கப்படுகிறார். தத்தாத்ரேயரின் நான்கு நாய்கள் நான்கு வேதங்களின் உருவகங்கள். அவை ‘‘சொர்க்கத்தின் வேட்டை நாய்கள், இறுதி உண்மையின் காவல் நாய்கள்’’ என இறைவனைப் பின்பற்றுகின்றன. அவை எங்கு பிறந்தாலும், ‘‘வேட்டையாடுதல்’’ மற்றும் தூய ஆன்மாக்களைக் கண்டுபிடிப்பதில் இறைவனுக்கு உதவுகின்றன.

அசல்பதிவேற்றியவருக்கு நன்றி.🌹

16 நவ., 2025

குட்டிக்கதை

Following the mandate of the National Data Sharing and Accessibility Policy (NDSAP) of the Government of India that applies to all shareable non-sensitive data available either in digital or analog forms but generated using public funds by various agencies of the Government of India, all users are provided a worldwide, royalty-free, non-exclusive license to use, adapt, publish (either in original, or in adapted and/or derivative forms), translate, display, add value, and create derivative works (including products and services), for all lawful commercial and non-commercial purposes



அது இராமநாதபுரத்திற்கு அருகில் உள்ள ஒரு சிறிய கிராமத்து அரசு பள்ளி.

ஐந்தாம் வகுப்பு படிக்கும் கவின், வகுப்பறையின் ஜன்னல் வழியாக வானத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

நாளைக்கு "குழந்தைகள் தினம்".

பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடக்கவிருக்கிறது. எல்லோரும் விதவிதமான அறிவியல் படைப்புகளைச் செய்யத் தயாராகிக் கொண்டிருந்தார்கள். ஆனால், கவினிடம் அதற்கான பொருட்கள் வாங்க பணமில்லை.

அவனது அப்பா ஒரு சாதாரண விவசாயி.

"கவின்... ஏன் சோகமா இருக்க?" என்று கேட்டபடி வந்தார் மாலதி டீச்சர்.

"டீச்சர்... நாளைக்கு எல்லாரும் ரோபோட், எலக்ட்ரிக் கார்னு பெருசா செய்றாங்க. என்கிட்ட அதுக்கெல்லாம் காசு இல்ல. நான் என்ன பண்ணுவேன்னு தெரியல," என்றான் கவின் கண்கலங்கியபடி.

மாலதி டீச்சர் சிரித்துக்கொண்டே அவன் தலையை வருடினார்.

"கவின், அறிவியல்ங்கிறது விலை உயர்ந்த பொருட்கள்ல இல்ல... நம்ம சிந்தனையில தான் இருக்கு. நம்ம ஊர்லேயே பிறந்து, சாதாரண பேப்பர் போட்டு வித்த ஒரு பையன் தான், பின்னாடி இந்தியாவையே விண்வெளிக்கு கூட்டிட்டுப் போனாரு. அவருக்குப் பிடிச்சது ஆடம்பரம் இல்ல... முயற்சி தான்! நீ உனக்கு கிடைக்குறத வெச்சு முயற்சி பண்ணு," என்று நம்பிக்கையூட்டினார்.

கவின் யோசித்தான். அவனுக்கு ஒரு ஐடியா கிடைத்தது.

மறுநாள் குழந்தைகள் தினம். பள்ளி விழாக்கோலம் பூண்டிருந்தது.

சிறப்பு விருந்தினராக யார் வரப்போகிறார்கள் என்று யாருக்கும் தெரியாது.

திடீரென்று பள்ளி வாசலில் ஒரு வெள்ளை அம்பாசிடர் கார் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கியவர்...

அந்தச் சுருள் முடியும், குழந்தையைப் போன்ற சிரிப்பும் கொண்ட டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்!

மொத்தப் பள்ளியும் அதிர்ச்சியிலும் மகிழ்ச்சியிலும் உறைந்தது.

கலாம் ஐயா ஒவ்வொரு மாணவனின் படைப்பையும் பார்த்துக்கொண்டே வந்தார்.

பெரிய பெரிய எலக்ட்ரானிக் பொம்மைகளைப் பார்த்துப் புன்னகைத்தவர், கடைசியாக ஒரு மூலையில் நின்றிருந்த கவினிடம் வந்தார்.

கவின் கையில் ஒரு சிறிய "காகித ராக்கெட்" இருந்தது. ஆனால் அதன் நுனியில் ஒரு சிறிய விதை பந்து (Seed Ball) ஒட்டப்பட்டிருந்தது.

கலாம் ஐயா குனிந்து, "இது என்னப்பா புதுசா இருக்கு?" என்று கேட்டார்.

கவின் நடுங்கும் குரலில், "ஐயா... இது 'பசுமை ராக்கெட்'. 

இதை வானத்தை நோக்கி விட்டா, காத்துல பறந்து போய் தூரமா விழுந்துரும். மழை பேஞ்சா, இதுல இருக்கிற விதை முளைச்சு மரமாகும். எனக்கு ராக்கெட் விடவும் ஆசை, மரம் வளர்க்கவும் ஆசை... அதான் ரெண்டையும் சேர்த்துட்டேன்," என்றான்.

அங்கிருந்த மாணவர்கள் சிலர் "வெறும் பேப்பர் ராக்கெட் தானே" என கிசுகிசுத்தனர்.

ஆனால், கலாம் ஐயா அப்படியே சில நொடிகள் அமைதியானார்.

பிறகு கவினின் தோளைத் தட்டி, "மகனே! ராக்கெட் விட்டு எதிரி நாட்டை அழிக்கிறதை விட, இப்படி ஒரு ராக்கெட் விட்டு பூமியை வாழ வைக்கிறது தான் உண்மையான அறிவியல். நீ என்னோட கனவை நிஜமாக்கிட்ட!" என்றார்.

பிறகு கூட்டத்தைப் பார்த்துச் சொன்னார், "இவ்வளவு பெரிய சிந்தனையை இவனுக்கு விதைச்சது யாரு?"

கவின் தயங்காமல் மாலதி டீச்சரை கை காட்டினான்.

கலாம் ஐயா மாலதி டீச்சரை அருகில் அழைத்து, "ஒரு நல்ல ஆசிரியர் மெழுகுவர்த்தி மாதிரி... தன்னை உருக்கிக்கிட்டு மாணவர்களுக்கு வெளிச்சம் தருவாங்க. இன்னைக்கு இந்த பையன் கண்ணுல நான் அந்த வெளிச்சத்தைப் பார்க்கிறேன்," என்று சொல்லி, தன் சட்டைப் பையில் இருந்த பேனாவை எடுத்து கவினுக்குப் பரிசாகக் கொடுத்தார்.

"கனவு காணுங்கள்... ஆனால் அந்த கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பது அல்ல... உன்னைத் தூங்க விடாமல் செய்வது!" என்று கலாம் ஐயா சொல்ல, கவின் அந்தப் பேனாவை நெஞ்சோடு அணைத்துக் கொண்டான்.

மாலதி டீச்சரின் கண்களில் ஆனந்தக் கண்ணீர்.

பெரிய சாதனைகள் செய்ய வசதி முக்கியமல்ல; நல்ல சிந்தனையும், சரியான வழிகாட்டுதலும் இருந்தாலே போதும்.

அனைவருக்கும் இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்! 🌹🎓

#HappyChildrensDay #ChildrensDay #குழந்தைகள்தினம் #November14 #நவம்பர்14

5 நவ., 2025

குட்டிக்கதை

உண்மைக்கதை 
படித்து பகிர்ந்து 

முன்னாள் நீதிபதி சா.நாகமுத்து அவர்களின் மனக்குமுறல்!
"எனது நீதிமன்றத்தில் எத்தனையோ வழக்குகள் வந்திருக்கின்றன... 
அதில் ஒரு வழக்கு என்னை மிகவும் உணர்ச்சிவசப்பட வைத்தது!"
என் எதிரே பரிதாபமே உருவெடுத்து வந்தது போல ஒரு நடுத்தர வயது பெண் நின்று கொண்டிருந்தார். 
வழக்கு தொடுத்தவரும், அவரே!
ஐயா, "எங்களுக்கு ஒரே மகள்; என் வீட்டுக்காரருக்கு கைகால் வராது; நான் நாலைந்து வீட்டில் வீட்டு வேலைசெய்து அதில் வரும் சம்பாத்யத்தில் தான் கணவரையும் மகளையும் காப்பாற்றி வந்தேன்; வருகிறேன்!
மகளைக் கஷ்டம் தெரியாமல் வளர்த்தேன்; பலரது கால்களில் விழுந்து நல்ல பள்ளியில் படிக்க வைத்தேன்; 
வேலை செய்யும் வீட்டில் நல்ல உணவு கொடுத்தால், அதை சாப்பிடாமல் மகளுக்கு கொண்டுவந்து கொடுத்து அவள் சாப்பிட்டு சந்தோஷப்படுவதை பார்த்து மகிழ்வேன்! 
அதே போல யார் யாரிடமோ கெஞ்சி வேலையும் வாங்கிக் கொடுத்தேன். 

அவள் இப்போது சம்பாதிக்க ஆரம்பித்து விட்டாள்; இனி எங்கள் கஷ்டம் எல்லாம் போய்விடும்; அவள் எங்களை பார்த்துக் கொள்வாள் எனறு நினைத்தபோது... 
திடீரென ஒருநாள் அவள் காணாமல் போய்விட்டாள்; அவளை அவளது விருப்பமின்றி யாரோ மயக்கும் வார்த்தை கூறி கடத்திப் போயிருப்பதாக சந்தேகப்படுகிறேன்!

ஆகவே எப்படியாவது என் மகளை கண்டுபிடித்து சேர்த்துவைக்க வேண்டும்" என்ற கேட்டிருந்தார்.
நீதிமன்றத்தின் உத்தரவுப்படி...
அவரது மகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

மிக அலட்சியமாக நின்றிருந்த அந்த இளம்பெண், "யாரும் என்னைக் கடத்தவில்லை; நான் மேஜரான பெண்; எனக்குப் பிடித்தவருடன் வாழ்வதற்காக நானே தான் விரும்பிச் சென்றேன்!" என்றாள்.

நல்ல ஆங்கிலத்தில் பேசிய அந்த பெண்ணிடம் சம்பாதிக்கும் தோரணையும் இருந்தது.
சரிம்மா, அதற்காக உன்னை கஷ்டப்பட்டு படிக்க வைத்து ஆளாக்கி விட்ட பெற்றோரிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் அம்போ...ன்னு விட்டுட்டு போய்ட்டியே... இது என்ன நியாயம் என்று கேட்டேன்!
அந்த இளம் பெண்ணிடம் இருந்து பதில் ஏதுமில்லை;
இதற்கு மேல் சட்டத்திலும் இடமில்லை!
ஆனால் என் மனம் கேட்கவில்லை!
இது சினிமாவில் வரும் நீதிமன்றம் அல்ல; 

நிஜமான நீதிமன்றம்!
எனவே உறவுகளுக்கும் உணர்வுகளுக்கும் இங்கே முக்கியத்துவம் உண்டு;

எல்லாமே எந்திரத்தனமாக நடந்துவிடாது!
ஏதாவது ஒரு திருப்பம் நடக்கும் என்று நினைத்து....
‛சரிம்மா.. உன்னை ஒன்றும் சொல்லல... 
உன் கூட உன் அம்மா கொஞ்ச நேரம் பேசவேண்டும் என்கிறார்;
கொஞ்ச நேரம் பேசிவிட்டு வாருங்கள்' என்றேன்.

இருவரும் பேசும்போது அந்த தாயின் பாசம் மகளின் அடிமனதை நிச்சயம் தொடும்; பழசை நினைத்துப் பார்ப்பாள்; கொஞ்சமாவது பாசத்தோடு ஏதாவது செய்ய முற்படுவாள் என்பது என் எண்ணம்!

ஆனால் அவர்கள் பேசி முடித்து வந்தபோது நான் நினைத்தது போல எதுவுமே நடக்கவில்லை!
"ஐயா உங்களுக்கு எல்லாம் நிறைய சிரமம் கொடுத்துட்டேன்; என் மகள், அவளது விருப்பப்படி விரும்பினவங்க கூடவே இருக்கட்டும்; அவ சந்தோஷமா இருந்தா சரி! என்று இரண்டே வார்த்தையில் சொல்லிவிட்டு...
ஒரே ஒரு வேண்டுகோள் தான்யா!
இவ மேலே இவங்க அப்பனுக்கு கொள்ளை உசிரு, மகளைப் பார்ப்பற்காக வந்திருக்காரு, அந்த மனுஷன்கிட்டயும் ஒரு வார்த்தை சொல்லிட்டு போகச் சொல்லுங்கய்யா' என்றார்.
‛எங்கேம்மா உன் வீட்டுக்காரர்' என்று கேட்டேன்.
அந்தம்மா கை காட்டிய இடத்தில் ஒருவர் சுவரோடு சுவராக சாத்திவைக்கப்பட்ட நிலையில் இருந்தார்.
அவருக்கு கைகால் வராது என்பதால் துாக்கிக் கொண்டுவந்து சுவற்றில் சாத்தி வைத்துள்ளனர். 

கோர்ட்டில் நடப்பதை எல்லாம் பார்த்து... அவரது கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் கொட்டிக்கொண்டு இருந்தது.
அந்த ‛அன்பு' மகளை நோக்கி என்ன செய்யப்போகிறாய் என்பது போல பார்த்தேன்!

அந்த பெண்ணோ இதை எல்லாம் துளியும் கண்டுகொள்ளாமல்,‛ நான் கிளம்பலாமா?' என்று கேட்டுவிட்டு வெளியே காருடன் காத்திருந்த காதலன் அல்லது கணவனுடன் சிட்டாக பறந்து சென்றுவிட்டார்.

‛சரிங்கய்யா, நாங்க புறப்படுறோம்' என்ற அந்த பெண்ணின் தாயாரிடம் ‛ஊருக்கு எப்படி போவீங்க' என்று கேட்டபோது... ‛

சொந்த ஊருக்கு போக எப்படியும் நாற்பது ரூபாய் தேவைப்படும்; பஸ்ஸ்டாண்ட் போய் பிச்சை எடுப்பேங்கய்யா; கூடுதலா கிடைச்சா இரண்டு பேரும் சாப்பிடுவோம்யா; அப்புறம் ஊருக்கு போய்ட்டா...
வீட்டு வேலை செய்யற இடத்துல உதவி கிடைச்சுடும்; பிழைச்சுக்கவோம், ஐயா' என்றார்.

நீதிமன்றத்தில் இருந்த அத்தனை பேருக்கும் துாக்கிவாரிப்போட்டது!
‛இந்தாம்மா, நீ பிச்சை எடுக்க வேண்டாம் ... நான் உதவுகிறேன்... சாப்பிட்டு போ...
 நீதிபதி பேச்சை முடித்தார்.

 படித்ததும் மனம் வலித்தது.
///

27 அக்., 2025

குட்டிக்கதை

என்னை மிகவும் பாதித்த பதிவு !

படிக்கும்போதே  உயிர் பிரிவதைப் போன்றவோர் உணர்வு.

அப்பா, நேத்து கேட்டேனே, 
எக்ஸாம் பீஸ் எடுத்துக்கவா...?

கேட்டுக் கொண்டே அப்பா நேற்று போட்டிருந்த சட்டைப் பாக்கெட்டில் கை விடுகிறான்.

டேய், அப்பா வந்து எடுத்து தருவாங்க, பாக்கெட்டில் கை விடறது என்ன பழக்கம்...? 
டஅம்மாவின் அதட்டலுக்கு...

என் அப்பா பாக்கெட்டில் நான் கை விடறேன், உனக்கு ஏம்மா வயிறு எரியுது...?

அம்மாவிற்கு பதில் சொல்லிக் கொண்டே, எடுத்ததை தன் பாக்கெட்டில் நுழைத்தவாறு, தேங்க்ஸ்பா, பாய்... சொன்னவாறு ஓடிப் போனான், மூன்றாமாண்டு பொறியியலில் இயந்திரவியல் படிக்கும் ராஜா.

எல்லாம் நீங்க கொடுக்கற செல்லம். எதுக்கும் ஒரு அளவு இருக்குதுங்க, பொறிந்தாள் அப்பளம் பொறித்தபடி.

சிரித்தபடியே தலைதுவட்டிக் கொண்டு வெளியே வந்த குமாரசாமி, 

நேத்து ஒரு ஃப்ரெண்ட் கேண்டீன்ல செலவு பண்ணியிருப்பான், இவன் ஒருநாள் செலவு பண்ண ஆசைபடுவான், இதுக்கெல்லாம் உங்கிட்ட கணக்கு சொல்லமுடியுமா?

அதுவுமில்லாம நீ பயப்படற மாதிரிலாம் தப்பா நீ வளர்க்கலய மகா...! காலையிலய கோபப்படாதடா, டாக்டர் சொன்னாரில்லையா... என்றபடி மனைவியின் கன்னத்தில் செல்லமாய் தட்டியபடி... ரூமிற்குள் நுழைந்து புறப்பட தயாரானார் அலுவலகத்திற்கு.

யாரு டாக்டரு, உங்க ஃப்ரெண்ட் தானே...

நீங்க சொல்லிக் கொடுக்கறத, அப்படியே வந்து ஒப்பிப்பாரு, எனக்குத்தெரியாதா?
ஒங்க ரெண்டு பேர பத்தியும்...

சொல்லிக் கொண்டே காபியுடன் வெளிவந்த மகாவை...

என்னம்மா, காலையிலயே என்னை போட்டுட்ட மிக்ஸியில... சொல்லியபடி உள்ளே நுழைந்தார் பக்கத்து வீட்டு டாக்டரும் குமாரசாமியின் பால்ய நண்பருமான ரத்னவேல்.

மகா, நாக்கை கடித்துக்கொண்டு அசடு வழிந்தபடி, இந்தாங்கண்ணா, உங்களுக்குத்தான் காபி, என்றாள்.

நம்பாதடா, நம்பாதடா, இவ்ளோ நேரம் அவ்ளோ திட்டு திட்டினாள் உன்னை, சிரித்தபடி வெளியே வந்த குமாரசாமியிடம், 

என் தங்கை என்னை திட்டினா, திட்டட்டும், என்னைத் தானே திட்டறா, உனக்கென்ன என்றார் ரத்னவேல் சிரித்துக்கொண்டே.

ஒன்னு அசடு வழியுது...
ஒன்னு வெட்கமே இல்லாம பேசுது...

ஆளை விடுங்க சாமி, என்றபடி தன்னிடம் தந்த காபியை வாங்கி குடிக்கத் தொடங்கினார். 

திடீரென அரண்டு எழுந்தார் குமாரசாமி.

#கனவு.

திரும்பி செல்போனை எடுத்து நேரம் பார்த்தார்.

5:20.

பத்து நிமிடம் கழித்து எழுந்து கொள்ளலாம் என நினைத்தபடி, ஈரமான கண்களை துடைத்தபடி திரும்பி படுக்கிறார். 

தன் மருமகள் மகனிடம் பேசுகிறாள்...

என்னங்க, நான் சொல்றது கேட்பீங்களா, கேட்க மாட்டீங்களா...? 

என்ன ஷீலா, நீ சொல்லி நான் எதை கேட்கல...?
காலையிலயே கோபப்படற‌. 

பின்ன என்னங்க, நானும் மூனு மாசமா சொல்றேன், செய்யறீங்களா...?

எதை சொல்ற...?

ஹூம்... அது மட்டும் மறந்துடுமே...

உங்கப்பாவை எங்கயாவது தூரமான ஊருல முதியோர் இல்லத்தில சேருங்கனு சொல்லிக்கிட்டு இருக்கேனே... அதைத்தான்.

இந்த மாசம் ஏற்பாடு பண்றேன் ஷீலா, கொஞ்சம் பொறுத்துக்கோடா.... என்கிறான்.

குமாரசாமியின் கண்களின் பக்கவாட்டில் நீர் வழிந்து, காதுகளை தொடுகிறது. 

துடைத்துக் கொண்டே நினைத்துக் கொள்கிறார்.

ஏங்க, எனக்கு ஒங்கள நெனச்சாதாங்க கவலையா இருக்கு...?

இவுங்ககிட்ட உங்களால தாக்கு பிடிக்க முடியுமானு தெரியலையே...?

உங்கள அனாதையா விட்டுட்டு போறேனே... 

ஏங்க, சீக்கிரம் வந்துடுங்க... நான் உங்களுக்கா காத்துகிட்டு இருப்பேன், சரியா...!

எல்லாரையும் உள்ளங்கையில வைச்சித் தாங்கனீங்க, ஆனால் ...

மேற்கோண்டு பேச முடியாமல் தேம்பும் மனைவியின் கண்ணைத் துடைத்தபடி, 

உனக்கு ஒன்னும் இல்லையாம்டா...
இப்போதான் ரத்னம் சொல்லிட்டுப் போறான்...

நீ இன்னும் ஒரு வாரத்துல எழுந்து அவனுக்கு காபி போட்டு கொடுப்பியாம், சொன்னான்.

அழுகையை அடக்கிய படி ஆறுதல் சொல்ல, 

எல்லாத்தையும் நானும் கேட்டுட்டேங்க...!

எனக்கு நான் போவதை பத்திலாம் கவலையே இல்லங்க... உங்கள நெனச்சாதான். 

தன் மடியில் மனைவி தன்னை விட்டுப் போனதை நினைத்துப் பார்த்தபடி படுத்திருக்கிறார்.

ஏங்க, மணி 7:20 ஆகுது, உங்கப்பாவை எழுப்புங்க, நியூஸ் போயிடுச்சினா, உலகமே இரண்ட மாதிரி ஆயிடுவாரு உங்கப்பா.

என்னவோ இவர கேட்டுதான் உலகமே இயங்கற மாதிரி...

சொல்லிக்கொண்டே மனைவி தந்த காபியை வாங்கிக் கொண்டு போய்... அப்பா, காஃபி... என்றவாறே அவர் அருகிலிருந்த டீப்பாயின் மீது வைத்து விட்டு உள்ளே போய்விட்டான்.

அய்ந்து நிமிடம் கழித்து வெளியே வந்தவன், காபி எடுக்காததை கண்டு, 

அப்பா, அப்பா...
இரண்டு தடவை கூப்பிட...

பதில் வரவில்லை.

ஒரே குரலுக்கு பதில் தரும் அப்பாவிற்கு என்ன ஆயிற்று...?

உடம்பு சரியில்லையோ...?

மெல்ல குனிந்து அப்பாவின் கையை தொட்டு உலுக்குகிறான் அப்பா, அப்பா...!?!?!

சற்றே அதிர்ச்சியோடு தற்போது கன்னத்தை இருபுறமும் பிடித்து...
தலையை ஆட்டுகிறான், அப்பா, அப்பா...!

இவன் கத்தும் சத்தம் கேட்டு ரத்னவேல் உள்ளே வருகிறார், 
என்ன ராஜா...?

தெரியல அங்கிள், நாலஞ்சு தடவை கூப்பிட்டும் எந்திரிக்கவே மாட்டேங்கிறாரு...?

ரத்னவேல் மெல்ல உட்கார்ந்து...

கையைத் தூக்கி பல்ஸ் பார்க்கிறார்.

கையை கீழே வைத்தபடி...

தன் நண்பனை மெல்ல குனிந்து முகத்தைப் பார்க்கிறார்.

மேலும் குனிந்து குமார், குமார் என குரல் கொடுத்தபடி...

இரண்டு கன்னத்திலும் முத்தமிட்டு விட்டு எழுகிறார்.

என்ன அங்கிள்...?

திரும்பி கண்ணாடியை கழட்டுகிறார். 

#கண்ணீர்_அதற்குள்_கழுத்தை_தொடுகிறது.

அவன் தோளை தட்டியபடி, அவன் மகாகிட்ட போயிட்டாம்பா... 
சொல்லிக் கொண்டே வெளியேறுகிறார்.

மாலை 4 மணி.

இறுதி ஊர்வலத்திற்கான ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டிருந்த ரத்னவேலுவை நோக்கி, 

பால்ய நண்பர்கள்  ஆறேழு பேர் வருகின்றனர்.

டேய், நீ ஒரு டாக்டரு, இவ்ளோ நாளா அவனை செக் பண்ணாமயாட இருந்த...? எரிச்சலோடு சேகர் கேட்கிறார்.

நிமிர்ந்து ஒரு பார்வை. அவ்வளவுதான்.

ஒட்டிப்பிறந்த ரெட்டையனுங்க மாதிரியே சுத்தித் திரிஞ்சிங்களேடா...
அவனுக்கு ஹார்ட்ல பிராப்ளம் இருக்கிறது உனக்குத் தெரியாமலா இருந்தது...? பாலாவின் கேள்வி.

அவன்கிட்ட கூட காசை எதிர்பார்த்தியோ...? சம்பத்.

எதற்கும் பதிலில்லை.

சிவா அவரைப் பிடித்து திருப்புகிறார்.
என்னடா, நாங்க கேட்டுகிட்டே இருக்கோம், அவனை அனுப்பற வேலையிலயே இருக்க...? 

அவர் கண்கள் முழுக்க கண்ணீர்...!

சிவாவின் தோளை பாலா தொட்டார்.
சிவா அமைதியாயிருடா. 

அவன், அவங்கம்மா செத்ததுக்கே கலங்காதவன். 
எப்படி அழறான், பாரு.
அவனை பேச வை.
எனக்கு பயமாயிருக்கு... பாலா தவிப்போடு சொல்ல,

பேசுடா, என்ன நடந்ததுன்னு சொல்லுடா... உலுக்குகிறார் சிவா.

அவன் செத்து மூனு வருஷமாச்சு.

நாமதான் லேட்டா கண்டுக்குறோம்... என்கிறார் ரத்னவேல்.

எல்லோரும் அதிர்ச்சியாகி பார்க்க...

ஆமாம்டா... அவன் செத்து மூனு வருஷமாச்சு.

மூன்று
ஆண்டுகளுக்கு முன்னால்... 
மகா போனபோதே அவனும் போயிட்டான்.
நாமதான் கவனிக்கல...!

அதுக்கப்புறம், "சாப்பிட்டியா?"
என்று கேட்க கூட யாரும் இல்லாத 
நேரத்திலேயே அவன் செத்துட்டான்; ஆனால் நாமதான்  கவனிக்கல...!?!

"பொண்டாட்டி போனதுமே போய்த் தொலைய வேண்டியதுதானே" 
என்று தம் காதுபடவே -  மருமகள் பேசியபோதே அவன் போயிட்டான்; அப்போதும் நாமதான் கவனிக்கல...!

'தாய்க்குப் பின் தாரம்... 
தாரத்துக்குப் பின் வீட்டின் ஓரம்...!'
என்று அனைவராலும் புறக்கணிக்கப்பட்டு 
வாழும்நிலை வந்தபோதே 
அவன் போயிட்டான்; நாமதான் யாருமே கவனிக்கல...!

"காசு இங்கே மரத்திலேயா காய்க்குது"  என்று மகன் அமில வார்த்தையை 
வீசியபோதே அவன் போயிட்டான்;
நாமதான் கவனிக்கல...!

நேத்து விடிகாலம் வாக்கிங் போகறதுக்காக, 
அவனை எழுப்ப கதவை தட்டப் போனேன்...
அப்போ...

"என்னங்க... ரொம்ப தூரத்திலே இருக்குற முதியோர் இல்லத்திலே விட்டுவிட்டுத் தலைமுழுகிட்டு வந்திடுங்க...!" என்று மருமகளின் சுடுசொற்கள் 

என் காதில் விழுந்தது போல் அவனும் கேட்டிருப்பானு நெனைக்கிறேன்.

அதான் போயிட்டான், தூரமா...!
என்று கதறிய ரத்னவேலை...

பாலா தழுவிக்கொண்டே தட்டிக் கொடுத்தார்.

நேத்து பழைய ரிமோட்ட கையில வச்சிகிட்டு உட்கார்ந்திருந்தான், சேனலை மாத்துடா, என்னடா இந்தி பாட்டு கேட்கிற...? என்றபோது... 

அதோ இருக்கு பாரு ரிமோட்டு, மாத்திக்கோ என்றான்.
நீ வச்சிருக்கயே அது என்னடா? என்றபோது...

இது போயிட்டிச்சி, ஆனா மகா யூஸ் பண்ணது என்றான்.

#பார்க்கும்_எல்லாவற்றிலும்_அவன்_மகாவோடு_வாழ்ந்தான்.

ஒருவேளை மகன் நம்மை முதியோர் இல்லத்தில் விட்டுவிட்டால்....? என்று நினைக்கும்போதே செத்துட்டிருப்பான்...!

அவனுக்கு ஒரு பிராப்ளமும் இல்லடா...! என்று கதறும் ரத்னத்தை ஆற்றுப்படுத்த வழியின்றி....

எல்லோரும் அழுகின்றனர்...!🙏

தோழர்களே...!

நீங்கள் செல்லும் வழியிலும்
இப்படி யாராவது
இறந்து கொண்டிருப்பார்கள்... 

ஓரிரு மணித் துளிகளாவது 
நின்று பேசிவிட்டுச் செல்லுங்கள்...! 

இல்லையேல்...

உங்கள் அருகிலேயே - 
உங்கள் வீட்டிலேயே இறந்து கொண்டிருப்பார்கள்... 
புரிந்து கொள்ள முயலுங்கள்...!

வாழ்க்கை என்பது... 
வாழ்வது மட்டுமல்ல...! 
வாழ வைப்பதும்தான்...!

சுடுசொற்களால், புறக்கணிப்பால்... 
பலர் 
உயிருடனேயே இறந்து விடுகின்றனர். 
புதைக்கத்தான்... 
சில ஆண்டுகள் ஆகின்றன...!🙏

இந்தக் கதையை படிக்கும் எல்லோருக்கும் ஒரு வேண்டுகோள்...!

நிச்சயம் இது உங்களுக்கான கதை அல்ல.
நம்புகிறேன்...!

உங்களுக்கானதாக மாறிவிடக் கூடாது என்று  வேண்டுகிறேன்.🙏🙏🙏

வாட்ஸ்அப்பில் பெற்றது 

3 அக்., 2025

குட்டிக்கதை

தினம் ஒரு குட்டிக்கதை:--

யாரையும் தரம்குறைத்து எடைபோடாதீர்கள்!!

ஒரு வயதான முதிய பெண்மணி அவருடைய செக்கை பேங்க் கேஷியரிடம் கொடுத்து,”எனக்கு ஐநூறு ரூபாய் பணம் எடுக்க வேண்டும்” என்றார்.

உடனே அந்த பேங்க் கேஷியர் பெண் அந்த முதிய பெண்மணியிடம்,”ஐயாயிரம் ரூபாய்க்கு கீழே தொகை எடுக்க வேண்டும் என்றால், நீங்கள் உங்கள் ATM கார்டை பயன்படுத்தி எடுங்கள்” என்றாள்

உடனே அந்த முதியவள்,”ஏன்?” என்று கேட்டார்.

உடனே அந்த பெண் கேஷியர் சற்று எரிச்சலுடன் அந்த முதியவளிடம்,”இது தான் பேங்க் சட்டம். வேற எந்த விஷயமும் இல்லைனா இடத்தை காலி பண்ணுங்க, உங்களுக்கு பின்னால் நிறைய பேர் வெயிட் பண்றாங்க” என்று கூறினாள் சற்றே கடுமையுடன்

அந்த முதிய பெண்மணி இப்பொழுது அமைதியாக நின்றார்.

அவர் தனது செக்கை மீண்டும் அந்த கேஷியர் பெண்ணிடம் கொடுத்து,”தயவு செய்து என் அக்கவுண்ட்டில் உள்ள பணம் முழுவதும் எனக்கு திரும்ப கொடுத்துவிடுங்கள்” என்றார்.

அந்த கேஷியர் பெண் அந்த முதியவர் அக்கவுண்டில் உள்ள பண நிலுவையை பார்த்த பொழுது அதிர்ச்சியானாள்.

அவள் தனது தலையை ஆட்டிக் கொண்டு அந்த முதியவளிடம், “என்னை மன்னித்து கொள்ளுங்கள் பாட்டி, உங்கள் கணக்கில் மூன்றரை கோடி ரூபாய் உள்ளது, எங்கள் வங்கியில் இப்பொழுது அவ்வளவு பணம் இல்லை. எனவே தாங்கள் தயவுசெயுது நாளை ஒரு நேரம் ஒதுக்கி வர இயலுமா? என்று மிக பணிவோடு பவ்யமாக கேட்டாள்

உடனே அந்த முதிய பெண்மணி”இப்பொழுது நான் எவ்வளவு பணம் எனது அக்கவுண்டில் எடுக்க இயலும்?” என்று கேட்டார்.

உடனே அந்த பெண்,”மூன்று லட்சம் வரை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்” என்றாள்

உடனே அந்த முதியவள் அந்த பெண்ணிடம் மூன்று லட்சம் ரூபாய் தனக்கு வேண்டும் என்று கூறினார்.

அந்த பெண்ணும் மூன்று லட்சம் ரூபாய் வேகமாக மிக பணிவுடன் கொடுத்தாள்.

அந்த முதியவள் இப்பொழுது ஐநூறு ரூபாயை அவளது கைப்பையில் வைத்துவிட்டு மீதம் இருந்த 2,99,500 ரூபாயை மீண்டும் அவளது அக்கவுண்டில் டெபாசிட் செய்ய சொன்னார்.

அந்த கேஷியர் பெண் இப்பொழுது வாயடைத்து நின்றாள்…..

சட்டங்கள் தளர்க்கப்படாதவையாக இருந்தாலும், நாம் மனிதர்கள் சில சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து போகலாம்.

ஒருவருடைய தோற்றத்தையோ, உடையையோ வைத்து அவரை எடை போட கூடாது.

மாறாக அனைவரையும் மரியாதையாக நடத்த வேண்டும்.

ஒரு அட்டைப் படத்தை வைத்து அந்த புத்தகத்தை கணிக்க கூடாது.

அது ஏனோ பாமரர்களை இன்றுவரை எந்த வங்கியும் மதித்ததாக தெரியவில்லை...!

நன்றி: திரு எம்.பாலசுப்ரமணியன், சிதம்பரம் பிள்ளை ராஜ்ஜியம் வாட்ஸ்அப் குழு 

9 செப்., 2025

குட்டிக்கதை


Drawing of an enso, one of the symbols of zen. This is a quick sketch on the computer, and was not grounded in real calligraphic source material.
Author:  Kendrick Shaw
available under the Creative Commons CC0 1.0 Universal Public Domain Dedication.
Via WIKIMEDIA COMMONS 

ஜென் கதை: தேநீர் நிறைந்த கிண்ணம்

ஒரு நாள், புகழ்பெற்ற பேராசிரியர் ஒருவர் ஒரு ஜென் ஆசானைச் சந்திக்க வந்தார்.
“ஆசிரியரே, நான் பல நூல்கள் படித்துள்ளேன், பல தத்துவங்களை ஆராய்ந்துள்ளேன். ஜென் பற்றி எனக்கு கற்றுத்தர வேண்டும்” என்று கேட்டார்.

ஆசான் சிரித்தார். அவர் பேராசிரியருக்காக தேநீர் ஊற்றத் தொடங்கினார். கிண்ணம் நிரம்பியும் தொடர்ந்து ஊற்றிக் கொண்டேயிருந்தார்.

தேநீர் மேசையில் சிந்தது. அதைப் பார்த்து பேராசிரியர் அசந்துபோய், “ஆசிரியரே, கிண்ணம் ஏற்கனவே நிரம்பிவிட்டது. இன்னும் எப்படி தேநீர் ஊற்ற முடியும்?” என்றார்.

அப்போது ஆசான் அமைதியாகச் சொன்னார்:
“அப்படியே உன் மனமும் நிரம்பியுள்ளது. நீ ஏற்கனவே உன் அறிவும் கருத்துகளும் நிறைத்து வைத்திருக்கிறாய். புதியதை அறிய விரும்பினால் முதலில் அதை காலி செய்ய வேண்டும்.”

👉 கற்றுக்கொடுக்கிற செய்தி:
புதியதை உணரவும் கற்றுக்கொள்ளவும், மனதை காலி செய்யும் பணிவும் திறந்த மனமும் அவசியம்.

நன்றி: ChatGPT மற்றும் Kendrick Shaw & WIKIMEDIA COMMONS 

πππππππππππππππππππππππ

(என்ஸோ (Ensō) என்பது ஜென் பௌத்தத்தில், ஜப்பானிய மொழியில் "வட்டம்" என்று பொருள்படும், இது தனித்துவமான தூரிகை வீச்சுகளால் வரையப்பட்ட ஒரு கைவினைப்படம். இது அறிவொளி, ஒற்றுமை, சுதந்திரம் மற்றும் வெறுமையைக் குறிக்கிறது. சில சமயங்களில் இது ஒரு திறப்புடன் வரையப்படுகிறது, இது வாழ்க்கையின் அபூரணத்தையும், சுதந்திரமான ஓட்டத்தையும் குறிக்கிறது.:
நன்றி: கூகுள் ஜெமினி ஏஐ)


2 செப்., 2025

குட்டிக்கதை

                                                              Courtesy: WIKIMEDIA COMMONS 


”ஏன் டாக்டர், ஒருத்தருக்கு பைத்தியம் குணமாயிடுச்சான்னு எப்படிக் கண்டு பிடிப்பீங்க?” என்று கேட்டேன்.
.
“சின்னச் சின்ன டெஸ்ட் இருக்கு அதுக்கு” என்றார்.
.
“ஃபார் எக்ஸாம்ப்பிள்?”
.
“ஒரு பக்கெட் நிறைய தண்ணி வச்சிட்டு பக்கத்துல ஒரு ஸ்பூன், ஒரு மக் ரெண்டும் வச்சிடுவோம். போய் அந்த பக்கெட் தண்ணியை காலி பண்ணுன்னு சொல்வோம்”
.
“ஓ.. புரியுது. குணமாகாத ஆளா இருந்தா ஸ்பூன்ல தண்ணியை எடுத்து எடுத்து வெளில ஊத்தி காலி பண்ணிகிட்டு இருப்பான், சரியா?”
.
“எக்ஸாட்லி. உங்க கிட்ட சொன்னா நீங்க என்ன பண்ணுவீங்க?”
.
“நான் மக்குல எடுத்து மள மளன்னு காலி பண்ணுவேன்”
.
“இது மாதிரி கேஸ்களை நாங்க செமின்னு சொல்வோம்”
.
“என்ன டாக்டர் இப்படிச் சொல்லிட்டீங்க! அப்ப குணமானவன் என்ன பண்ணுவான்?”
.
“பக்கெட்டை எடுத்துக் கவுத்துட்டுப் போய்கிட்டே இருப்பான்”
.
(உலகத்துல...நிறையப்பேரு_
செமி_தானாம்.)
🤡😉😜🤣🤠

29 ஆக., 2025

குட்டிக்கதை

       அஞ்சலி 🙏🙏🙏


ஒரு பெரிய மனிதன். இந்த உலகத்தில் மிகவும் வசதியாக வாழ்ந்தான். ஒரு நாள் அவன் உலக வாழ்க்கையை முடித்துக் கொண்டு சொர்க்கத்துக்குப் போனான். அங்கே போன பிறகுதான் தெரிந்தது, சொர்க்கத்தின் வாசல் கதவு மூடி இருந்தது. மூடிய கதவின் முன்னால் போய் நின்றான். ‘‘இங்கே யாருமே இல்லையா?’’ என்று உரக்கக் கத்தினான். பதில் இல்லை.

‘‘நான் ஒரு பெரிய மனிதன் வந்திருக்கிறேன். கதவைத் திறந்து விடு’’.

சற்று நேரத்தில் சித்ரகுப்தன் அங்கே வந்தான். உடனே இந்தப் பெரிய மனிதன், தனது சட்டைப்பையிலிருந்து பத்து ரூபாய் நோட்டை எடுத்து அவன் கையில் திணித்தான். ‘‘இந்தா... இதை வெச்சுக்கோ, சீக்கிரம் கதவைத் திற... நான் உள்ளே போகணும்’’.

சித்ரகுப்தன் சிரித்தான்.
‘‘இதெல்லாம் உங்கள் பூலோக நடைமுறைகள், லஞ்சம் கொடுக்கறது, கதவைத் திறக்கச் சொல்றது... அதெல்லாம் இங்கே ஒண்ணும் எடுபடாது’’.

‘‘அப்படின்னா நான் எப்படி உள்ளே வர்றது?’’

‘‘சொர்க்கத்துலே நுழையறதுக்கான அனுமதிச் சீட்டு கொண்டு வந்திருக்கியா?’’

‘‘அனுமதிச் சீட்டா? அது எங்கே கிடைக்கும், சொல். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. வாங்கிக்கலாம்.’’

‘‘அதைக் காசு கொடுத்து வாங்க முடியாது’’.

‘‘வேறே எப்படி வாங்கறது?’’

‘‘அடுத்தவர்களுக்கு ஏதாவது உதவி செஞ்சாத்தான் அது கிடைக்கும்.’’

‘‘என்ன சொல்றே நீ?’’

‘‘பூலோகத்துலே நீ செய்யுற புண்ணிய காரியங்கள் தான் சொர்க்கத்துலே நுழையறதுக்கான அனுமதிச் சீட்டு’’.

‘‘இப்ப நான் உள்ளே வர என்ன வழி?’’

‘‘பூலோகத்துலே நீ யாருக்காவது... ஏதாவது உதவி செஞ்சிருக்கியா?’’

பெரிய மனிதன் ரொம்ப நேரம் யோசித்தான். பிறகு சொன்னான்: ‘‘ஒரு முறை ஒரு கிழவிக்கு 10 காசு தானம் கொடுத்திருக்கேன். அப்புறம் இன்னொரு நாள் ஓர் அநாதைப் பையனுக்கு ஐந்து காசு கொடுத்திருக்கேன்.’’

‘‘கொஞ்சம் பொறு’’ என்று சொல்லிவிட்டு சித்ரகுப்தன் உள்ளே போனான். கொஞ்ச நேரம் கழித்து வெளியே வந்தான். ‘‘உள்ளே போய் சொர்க்கத்தின் தலைவர்கிட்டே உனது கதையைச் சொன்னேன். அவர் உடனே உத்தரவு போட்டுட்டார்’’.

‘‘என்ன உத்தரவு?’’

‘‘அந்தப் பதினஞ்சு காசை உன்கிட்டே திருப்பிக் கொடுத்துடச் சொன்னார்’’.

‘‘அப்புறம்?’’

‘‘உன்னை நரகத்துக்கே அனுப்பி வச்சுடச் சொன்னார்’’. பெரிய மனிதன் மயங்கி விழுந்தான்.

ஆன்மிக உலகில் பயணம் செய்கிறவர்கள் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான பாடம் இது . காசு கொடுத்து சொர்க்கத்தை வாங்க முடியாது. ஆனால், கருணையைக் கொடுத்து அதைச் சுலபமாக வாங்க முடியும்.🙏🙏🙏

#நன்றி : தென்கச்சி கோ.சுவாமிநாதன்🙏🙏🙏


12 ஆக., 2025

குட்டிக்கதை


வாழ்க்கை ரகசியத்தை உணர்த்த ஒரு எருமைக் கதை ! 

ஒருநாள் எருமைக்கு அசாத்திய கோபம் வந்தது.
கோபத்தை தீர்த்துக் கொள்ள அது நேரடியாய்ப் போய் நின்ற இடம் கைலாயம்.கழுத்தில் பாம்பு படமெடுத்து நிற்க தியானத்தில் அமர்ந்திருந்த சிவன் மெல்லக் கண் திறந்தார்.

வந்திருப்பது எருமை என்று மட்டுமல்ல ஏன் வந்திருக்கிறது என்ற காரணமும் அவருக்குத் தெரியும். ஆயினும் சுற்றியிருக்கும் பூத கணங்களும் தெரிந்து கொள்ளட்டுமே என்ற எண்ணத்தில், வந்தாயா எருமையே! வா, வா எப்படி இருக்கிறாய்? என்றார்.

எருமைக்கு கோபம் தீர்ந்தபாடில்லை.

முக்காலமும் உணர்ந்த ஐயனே! நீர் அறியாததா? எனது நலம்?! ஆயினும் நீங்கள் கேட்டதன் பின் பதிலுரைக்காமல் இருத்தல் தகுமோ!
அதனால் சொல்லித்தான் தீர வேண்டும்.எம்பெருமானே!
எங்களை ஏன் இப்படிப் படைத்தீர்கள். பூலோகத்தில் மானுடர்கள் எங்களைச் சுத்தமாக மதிப்பதே இல்லை.
நாளும் அவர்களது பொல்லாச் சொற்களில் மாட்டிக் கொண்டு அவஸ்தைப் பட்டுக் கொண்டிருக்கிறோம் நாங்கள்.

சேற்றில் புரளும் எருமைகளே! மந்த புத்தி எருமைகளே! எருமை மாட்டில் மழை பெய்தார் போல, எருமை போல அசையா ஜென்மமே, சூடு, சொரணை இல்லாத எருமைகளே!
என்று எப்படியெல்லாம் மானுடர்கள் எங்களைத் திட்டித் தீர்க்கிறார்கள் தெரியுமா?
நினைத்தால் கோபத்திலும், ஆத்திரத்திலும் மனம் புழுங்கிச் சாகிறது.
நாங்கள் அப்படியென்ன பாவம் செய்தோம்? இப்படி ஒரு பெயர் வாங்க?!

எம்பெருமான் தமக்குள் புன்னகைத்துக் கொண்டவராக எருமையை நோக்கி இப்படிச் சொன்னார்...

என்னைக் கூட சுடுகாட்டில் ஆடுபவன், பிணம் எரித்த சாம்பல் பூசித் திரிபவன், கபால ஓட்டில் பிச்சையெடுப்பவன் என்று மானுடர்களில் பலர் சொல்வதுண்டு என்றார்.

எருமை அவரது பகடியைக் கவனித்தது போலத் தெரியவில்லை.
ஐயனே... உங்கள் அருமை அறியாதவர்கள் கிடக்கிறார்கள் அவர்களை விடுங்கள்...
எங்களுக்கு ஆறாத மற்றொரு ரணம் உண்டு. பசுக்களுக்கும், எங்களுக்கும் என்ன பெரிய வித்யாசம்?

அவை தரும் பாலும் வெண்மையாகத்தான் இருக்கிறது. நாங்கள் தரும் பாலும் வெண்மையாகத் தான் இருக்கிறது.
ஆனால், இந்த மட மானுடர்கள் அவைகளை மட்டும் புனிதம் என்ற பெயரில் போற்றிப் புகழ்கிறார்கள்.
கோமியத்தைப் பிடித்து வீட்டு மூலை, முடுக்கெல்லாம் தெளித்து பரிமள வாசம் என்று மெச்சிக் கொள்கிறார்கள்.
ஆனால், எங்களை என்னடாவென்றால் வீட்டுக்குள் நுழையவே விடுவதில்லை.
எப்போது பார்த்தாலும் மந்த புத்தி எருமை என்று கரித்துக் கொட்டுகிறார்கள்.
இதிலிருந்து நாங்கள் விடுபட வேண்டும். நாங்களும் பசுக்களுக்கு இணையாக மதிக்கப்பட வேண்டும்.

பரம்பொருளான உங்களால் முடியாதது உண்டா?! எங்களை தயவு செய்து பசுக்களுக்கு இணையாக மாற இக்கணமே வரமளியுங்கள்.
- என்று சிவனிடம் கோரிக்கை வைத்தது எருமை.

இதழ்களில் நெளியும் புன்னகையுடன், சாந்த ஸ்வரூபியாக எருமை சொன்னதைச் செவி மடுத்த ஈசன்...
அதைக் காத்தருளும் அபய முத்திரையுடன் எருமையை ஆசிர்வதித்து.எருமையே பிரம்மன் படைப்பில் அனைத்து உயிர்களும் சமமானவையே.
ஒன்றில் உயர்வும் பிறிதொன்றில் தாழ்வும் எப்போதும் இல்லை.
உன் கோரிக்கை நியாயமானது தான்.
ஆதலின் அதை நிறைவேற்ற நான் முயற்சிக்கிறேன்.
அதற்கு முன்பு நீ எனக்கொரு உறுதிமொழி அளிக்க வேண்டும். அளித்தால் நான் உன்னை பசுக்களுக்கு இணையாக மானுடர் மதிக்கும் படியாகச் செய்வேன் என்றார்.

எருமைக்கு ஒரே சந்தோசமாகி விட்டது.உத்தரவிடுங்கள் எம்பெருமானே... என்றது.
ஈசன் சொன்னார்...

பூலோகத்தில் பசுக்களுக்கு இணையாக மதிக்கப்பட வேண்டும் என்ற உனது விருப்பத்தை நான் நிறைவேற்ற வேண்டுமெனில்,
நீ இன்று முதல் சேற்றில் புரளும் உன் இன்பத்தைக் கைவிட வேண்டும்.
சொந்த ஆசையிலோ அல்லது சூழ்நிலை காரணமாகவோ கூட நீ இனி எப்போதும் சேற்றில் அமிழ்ந்து புரளக்கூடாது. இந்த உத்தரவாதம் மட்டும் அளித்தாயானால் நாளை முதல் பூலோகத்தில் எருமைகளும், பசுக்களும் ஒரே விதத்தில் மதிக்கப்பட வேண்டும் என்று நான் வரமளிக்கிறேன்' என்றார்.

எம்பெருமானின் கருணையில் முகம் பூரித்தாலும் எருமைக்கு அவர் கேட்ட உத்தரவாதம் நடு மண்டையில் கல்லைத் தூக்கிப் போட்டாற் போலிருந்தது.
அது ஒரு நொடி திகைத்து நின்றது. பின் எம்பெருமானை நோக்கி;சர்வேஸ்வரா, நீங்கள் கேட்கும் உறுதிமொழியை என்னால் தர இயலாது. மானுடர்களின் மதிப்பு, மரியாதைக்காக என்னால் எனது சிற்றின்பத்தைப் பலி கொடுக்க முடியாது.
சேற்றில் புரள்வது எருமைகளான எங்கள் இனத்திற்கு கோடானு கோடி இன்பங்களில் ஒன்று. அதைத் தாரை வார்த்து விட்டு பசுக்களுக்கு இணையாக மதிக்கப்பட்டு நாங்கள் பெறப்போவது ஏதுமில்லை.

என் கோபத்தின் மீதே எனக்கிப்போது கோபம் வருகிறது. உங்கள் ஆசி போதும். எனக்கு வரம் ஏதும் வேண்டாம்' என்று சொல்லி புறமுதுகிட்டு ஓடிப் போனது. நடந்தது அத்தனையையும் கவனித்துக் கொண்டிருந்த நந்தி தேவரும், பூத கணங்களும் எம்பெருமானின் அருகில் அணைந்து; மகாதேவரே! எருமையின் கோரிக்கையில் தவறென்ன? என்றார்கள்.

ஜடைமுடியில் உச்சிப் பிறைநிலா பளீரென ஒளி விட... மந்தகாசப் புன்னகையுடன் அவர்களை நோக்கிய மகா நீலகண்டர்...
கோரிக்கையில் தவறில்லை நந்தி...

அந்தக் கோரிக்கையை அடைவதற்கான முயற்சியில் தான் தடை. எருமை முடிவெடுத்து விட்டது சேற்றில் புரள்வது தான் தனக்கு இன்பம் என.
அப்படி இருக்கையில் மானுடர்கள் அதை குளிப்பாட்டி பூஜித்து நடு வீட்டில் கொண்டு வைக்க நினைத்தாலும் அதன் நினைவெல்லாம் சேற்றைத் தேடிக் கண்டடைவதாகத் தான் இருக்கும்.

நினைவில் எப்போதும் சேற்றைத் தேடும் எருமையை மானுடர் எப்படி பூஜிப்பர்?

 எருமை சேற்றைக் கைவிட முடியாததோடு தமக்கு நிஜமான இன்பம் மானுடர்களின் மரியாதையில் இல்லை என்பதையும் கண்டு கொண்டது.
இது தன்னையறிந்த நிலை. இந்த நிலையை மனிதர்கள் அடைவார்களாயின் அவர்களுக்குள் போட்டி பொறாமை என்பதே இல்லாமல் நீங்கி விடும்.
வாழ்வின் ரகசியம் இது தான்.

ஒவ்வொரு மனிதனும் தன்னைத் தானறிந்து செயல்பட்டால் அதற்குண்டான வெற்றிக்கும், தோல்விக்கும் தானன்றி வேறெவரும் காரணமில்லை என்பதையும் உணர்வார்கள்.

அதோடு வாழ்வில் எதையாவது சாதிக்க வேண்டுமெனில் எதையாவது தியாகம் செய்தே தீர வேண்டும் என்பது எழுதப்படாத விதி.

அந்த தியாகத்தைச் செய்து வாழ்வின் அடுத்த படிக்கு முன்னேற எருமைக்கு மனமில்லை.

அதனால் அது தனது வழக்கமான நிலையிலேயே நீடிக்கிறது என்றும் ஈசன் பகர்ந்தார்.

இனிமேல் அதற்கு தன்னைப் பற்றிய சுயமதிப்பீட்டில் மனக்குறை இருக்காது என்று மென்னகையுடன் நிஷ்டையில் ஆழ்ந்து போனார் மூவுலகையும் பரிபாலிக்கும் எம்பெருமான் ஈசன்..

#பகிர்வு

8 ஆக., 2025

குட்டிக்கதை

உடைத்து வைத்திருந்த உருண்டை வெல்லத்திலிருந்து ஒரு ஸ்பூன் எடுத்து டீயில் போடும்போது, அதிலிருந்து ஒரு சிறு உருண்டை கைதவறி கீழே விழ...தரையில் விழுந்ததை எடுக்க வேண்டாம் என்று அப்படியே விட்டுவிட்டு, டீ யை குடித்து விட்டு, எதேச்சையாய் கவனிக்கிறேன், அந்த வெல்ல உருண்டையின் மேல் அவ்வளவு எறும்புகள்...!!

இனிப்புக்கு எறும்புகள் வருவது இயற்கை தான் என்று எடுத்துக் கொண்டாலும்... அந்த உருண்டை விழுந்த இடத்தைச் சுற்றிலும், சுமார் 30 மீட்டர் சுற்றளவுக்கு காலி இடம். அதுவும் சுத்தமாக துடைக்கப்பட்டு இருந்த இடம். இது விழுந்த அடுத்த சில விநாடிகளில் எப்படி அந்த எறும்புகள் எல்லாம், வெல்லம் இருக்கும் திசையை கண்டறிந்து அதைநோக்கி வந்தது., என்பது ஆச்சர்யமான ஒன்று..!
யார் அவைகளுக்கு சமிக்ஞை கொடுத்தது..?!!!

இங்கு தான் இயற்கையின் இயக்க ஒழுங்கின் அற்புதத்தை காணமுடிகிறது.
 *எறும்பு மட்டுமே உணவை தேடவில்லை...           
உணவும் எறும்பை தேடியிருக்கிறது..!* 

தோற்றத்தில் இவற்றுள் ஒன்று ஜீவனாகவும், மற்றொன்று பொருளாக இருந்தாலும், இவையிரண்டுக்குமான மையப்புள்ளி ஒரேத்தன்மையாக இருக்க வேண்டும். அந்த *புள்ளியிலிருந்து எழுந்த அலையே ஒன்றையொன்று ஈர்த்திருக்கின்றன.* 

 *நீ எதைத் தேடுகிறாயோ, அதுவும் உன்னைத் தேடிக்கொண்டு தான் இருக்கிறது.*  என்று ஞானியர்கள் கூறுவது எவ்வளவு பேருண்மை..!!! இதை படிக்கின்ற ஒவ்வொரு நபருக்கும் நிச்சயமாக இந்த இடத்தில் நமக்கு நியாயமான ஒரு சந்தேகம் ஏற்படும்... 

எறும்பு தேடியது விரைவாக கிடைத்து விடுகிறது, நாமும் தேடுகிறோம், ஆனால், நமக்கு அப்படி கிடைப்பதில்லையே...அல்லது காலதாமதமாகிறதே...?!
ஒரே ஒரு வித்தியாசம் தான்...

---------------------------------------
 *எறும்பு - தனது தேவைக்கு மட்டுமே தேடுகிறது...* 
 *நாம் - தேவைக்கும் மேல் தேடிக்கொண்டிருக்கிறோம்.* 
---------------------------------------

நமக்குத் தேவையானது ஆல்ரெடி நம்மிடம் இருக்கிறது, அல்லது தேவைப்படும் நேரத்தில் அது கிடைத்து வருகிறது. நமது முயற்சிகள் மேற்கொண்டு தேடுவதிலேயே இருப்பதால், தேவைக்கு நம்மிடம் உள்ள இருப்பு, நம் கவனத்திற்கு வருவதில்லை...!