என் தாய்மொழி தமிழுக்கென்றே இவ்வலைப்பூ. எனது எண்ணங்கள், எனக்குப் பிடித்த கருத்துக்கள், கவிதைகள், கதைகள் மற்றும் என்னை ஈர்த்த செய்திகள், நாட்டுநடப்புகள், நம் அனைவரின் வாழ்வோடு தொடர்புடைய மற்றனைத்தும் இதில் இடம் பெறும். (பின்புலப் புகைப்படத்தை எடுத்த ஜோன் சல்லிவனுக்கும், அதை வழங்கிய பப்ளிக்-டொமைன்-ஃபோட்டோஸ்.காமிற்கும் நன்றி)
Click Me
ஆன்மீக சிந்தனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆன்மீக சிந்தனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
29 மே, 2026
11 மே, 2026
23 ஏப்., 2026
11 ஏப்., 2026
7 ஏப்., 2026
1 ஏப்., 2026
10 மார்., 2026
ஆன்மீக சிந்தனை
🌹தொலைந்து போன நாட்களை எண்ணி வருந்தினால் இருக்கின்ற மீதி நாட்களும் தொலைந்து போகும்.
வாழ்க்கையில் சாதனை படைக்க வேண்டும் என்றால் பல துன்பங்களையும்,
அவமானங்களையும் சந்தித்தே ஆக வேண்டும்.
வாழ்க்கை பயணத்தில் மிகவும் முக்கியமான விஷயம் நாம் எங்கு நிற்கிறோம் என்பதல்ல.எந்த திசையில் சென்று கொண்டிருக்கிறோம் என்பதே.
உங்களை விட்டு விலகி செல்பவை எதுவாக இருந்தாலும் சந்தோஷமாக வழி அனுப்பி வையுங்கள்.நீங்கள் இழந்ததை விட சிறப்பாக ஒன்றை தர காலம் காத்துக் கொண்டிருக்கிறது
என்பதை உணருங்கள்:
"ஸ்ரீமத் ஆண்டவன் ஸ்வாமிகள்"
எம்பெருமான் 💕 திருக்கருணை இருந்தவாறே 🙏
நற்றுணையாவது அண்ணாமலையாரே 🙏
எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் அகிலம் காக்கும் அண்ணாமலையாரே போற்றி போற்றி . உன் ஆழ்ந்த கருணையை பெற என்ன தவம் செய்தேனோ🌹
சிவாய நம🙇 சிவமே ஜெயம் சிவமே தவம். சிவமே என் வரமே . எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும்.
நன்றி:
திருவாசகம்,
சிவ சிவானி,
முகநூல்
9 மார்., 2026
4 மார்., 2026
ஆன்மீக சிந்தனை
*வாழ்க்கை மலர்கள்: மார்ச் 4*
*மனதின் பத்துப் படிகள்*
Author: Skyonlineyoga
Creative Commons CC-Zero
Available under the Creative Commons CC0 1.0 Universal Public
Via WIKIMEDIA COMMONS
உடலை இயக்குவது உயிரின் வேலை. அதனைப் பாதுகாத்து, அணுஅடுக்குச் சீர்குலையாமல் தடை வரும் போது, அதை உணரும் போது மனமாக விரியும் போது, உணர்ந்த தடையை நீக்க முயல்வது உயிரின் இரண்டாவது வேலையாகும். தடையால் உணர்ச்சி ஏற்படவே அதனைப் போக்க பொருள் அல்லது சூழ்நிலை அல்லது நட்பு வேண்டும். அப்போது தேவை உருவாகிறது. உணர்ச்சியாக மாறி நிற்பதும் தேவையாக எழுந்து நிற்பதும் உயிர்தான்.
தேவை ஏற்படவே அதைச் சமன் செய்ய – முயற்சி தோன்றுகிறது. முயற்சியின் காரணமாகச் செயல் மலர்கிறது. செயலானது இயற்கை ஒழுங்கமைப்பின்படி விளைவு தருகிறது. விளைவை உயிரானது அனுபோகம் ஆகப் பெறுகிறது. அனுபோகத்திலிருந்து இன்ன செயல் செய்தால் இன்ன விளைவு வரும். அதனால் இன்ன அனுபவத்தைப் பெறலாம் என்ற அனுபவத்தை உயிர் பெறுகிறது.
உயிர் மேற்கொள்ளும் ஆராய்ச்சி, அதன்பின் இன்னவிதமான சூழ்நிலையில் இன்னவிதமான உணர்ச்சி தோன்றியதனால் இன்ன விதமாகச் செயல்பட வேண்டும் என்று ஒரு தெளிவினைப் பெறுகிறது. இறுதியாக எல்லாவற்றையும் தொகுத்து ஒரு முடிவினையும் உயிர் செய்து வைத்துக் கொள்கிறது. எனவே, உயிரே உணர்ச்சி, தேவை, முயற்சி, செயல், விளைவு, அனுபோகம், அனுபவம், ஆராய்ச்சி, தெளிவு, முடிவு என்ற பத்துக் கட்டமாக உயர்ந்து படர்ந்து நிற்கிறது.
எனவே, உயிரினது படர்கை நிலை ஆற்றல் தான் மனம். ஆங்கிலத்தில் Psychic extension of the life energy is mind எனலாம். உடல் வரையில் இன்ப துன்ப அனுபோகங்களில் குறுகி நில்லாமல் ஆன்மா பற்றியும், இறைவனைப் பற்றியும் ஆராய உயரும் நிலையில் இந்த மனத்தையே அறிவு என்கிறோம்.
*- அருட்தந்தை வேதாத்திரி மகரிசி*
✖️ K.Pudur MVKM Trust, Madurai - https://x.com/VethathiriGnana
🤝 https://www.facebook.com/profile.php?id=61571368175907
📷 https://www.instagram.com/vethathiriyagnanakkudil/
🔔 ▶️ https://youtube.com/@SKYVethathiriyaGnanakkudil
🔊 https://whatsapp.com/channel/0029VaB0XY7HAdNYxrqigu01
📮 Telegram: https://t.me/+_Bgm46FYaMU3ZDBl
28 பிப்., 2026
27 பிப்., 2026
9 பிப்., 2026
30 ஜன., 2026
9 ஜன., 2026
28 டிச., 2025
23 டிச., 2025
21 டிச., 2025
14 டிச., 2025
11 டிச., 2025
10 டிச., 2025
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)