எங்கள் இந்தியா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எங்கள் இந்தியா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

27 நவ., 2021

எங்கள் இந்தியா

💓🍀 உலகை ஆச்சரியப்படுத்திய இந்தியா.

ஒரு நாட்டின் போர் கருவிகளே அந்த நாட்டின் பாதுகாப்பின் அடையாள சின்னங்கள். அந்த வகையில் இன்றைய தேதியில் அதிநவீன பல ஆயுதங்களை கொண்ட நாடு அமெரிக்கா என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை....

ஆனால்....
ஆனானப்பட்ட அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி இந்திய ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று உலக அளவில் முன்னிலை பெற்று இருக்கிறது.

அதுதான் இந்திய HAL நிறுவன தயாரிப்பு LCH எனும் இலகு ரக தாக்குதல் ஹெலிகாப்டர். வெறுமே சொல்லக்கூடாது...... அதகளம் பண்ணியிருக்கிறார்கள்.

அமெரிக்காவின் அதிநவீன ஹெலிகாப்டர் என்றால் அது அப்பாச்சி ரக தாக்குதல் ஹெலிகாப்டர்கள் தான். தரத்தில்... செயல்திறனில்.... இந்த போயிங் நிறுவன தயாரிப்பு அப்பாச்சி ஹெலிகாப்டர்களுக்கு இந்த உலகில் எதுவும் இல்லை என்று பெயர் பெற்றவை. நாமும் நம் இந்திய ராணுவ படையணியில் இந்த ரக ஹெலிகாப்டர்களை வாங்கி பயன்படுத்தி வருகிறோம்.

இந்த அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்களை நம் இந்திய டாட்டா நிறுவனம், அமெரிக்க போயிங் நிறுவனத்தின் கூட்டு தயாரிப்பில் தான் 72 % உடற்பாகங்கள் தயாரிக்கப்பட்டு உலக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது என்பது நம்மில் பலருக்குமே தெரியாத சமாச்சாரமாகவே இருக்கிறது.

ஆனால்....
பெங்களூரு HAL நிறுவனம் தயாரிக்கும் LCH ஹெலிகாப்டர்கள் முழுக்க முழுக்க நம் இந்திய தயாரிப்பு.

இதன் பறக்கும் உயரம் 6600 மீட்டர்.இது கிட்டத்தட்ட கடல் மட்டத்திலிருந்து ஆறரை கிலோமிட்டர் உயரம் வரை பறக்கும் திறன் கொண்டது. 

அமெரிக்க போயிங் நிறுவனத்தின் அப்பாச்சி ஹெலிகாப்டரின் பறக்கும் உயரம் 6100 மீட்டர்கள் மாத்திரமே.
இதனை அவர்கள் AAH எனும் பிரிவுக்குள் கொண்டு வந்து இருக்கிறார்கள். அப்படி என்றால் அட்வான்ஸ்டு அட்டாக் ஹெலிகாப்டர் என்பதின் சுருக்கம் தான் AAH ஆகும்.
இந்த தர மேம்படுத்தப்பட்ட ஹெலிகாப்டர்கள் கூட அதி உயர பனிச் சிகரங்களில் இயங்குவதில் திணறுகிறது என்கிறார்கள்.

ஆனால் HAL நிறுவன தயாரிப்பு LCH பிரிவின் கீழ் வகைப்படுத்தி இருக்கிறார்கள். சரியாக சொன்னால் லைட் காம்பேக்ட் ஹெலிகாப்டர் எனப்படும் இந்த இலகு ரக தாக்குதல் ஹெலிகாப்டர்கள் செயல் திறன் அபாரமாக இருக்கிறது.... தவிர அதி உயர பனிச் சிகரங்களில் ...... 21,300 அடியுரத்தில் கூட அநாயாசமாக செயல்படுகிறது என்கிறார்கள்.
அது அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்களை காட்டிலும் ஆயிரத்து இருநூறு அடி உயரம் அதிகம்.

உலக அளவில் இது தான் அதிஉச்ச செயல் திறன் கொண்ட இலகு ரக தாக்குதல் ஹெலிகாப்டர்கள் என்று பெயர் பெற்று இருக்கிறது.

ஏற்கனவே தற்போது துபாயில் நடைபெற்ற வரும் விமான கண்காட்சியில் நம் தேசத்தின் இலகு ரக ஒற்றை இஞ்சின் கொண்ட தாக்குதல் போர் விமானம் சக்கைபோடு போடுகிறது. மூன்றாவது முறையாக பாகிஸ்தானிய ஒற்றை இஞ்சின் தாக்குதல் போர் விமானம் JF-17  கண்காட்சியில் கூட கலந்து கொள்ளாமல் பயந்து ஓடுவதாக உலக செய்தி ஊடகங்கள் பகடி செய்து கொண்டு இருக்கிறார்கள்.

நம் தேஜாஸ் விமானங்களை பார்க்க சமோசா மாதிரி இருக்கிறது என்று பழிப்பு காட்டி வந்த பாகிஸ்தான் சந்தடி இல்லாமல் பின்வாசல் வழியாக ஓடிவிட்டது என்று கேலி பேச ஆரம்பித்து விட்டனர் பலரும்.

இந்த சூழ்நிலையில் தான் தற்போது இந்திய இலகுரக தாக்குதல் ஹெலிகாப்டர் களம் இறங்குகிறது.
உலகின் பலரது புருவத்தை உயர செய்து இருக்கிறது என்றால் அது மிகையில்லை.

💓நாளை புதன்கிழமை 17/11/21 முதல் இந்திய சுதந்திர தின 75 ஆம் ஆண்டு விழா உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஜான்சியில் மூன்று நாட்களுக்கு நடக்க இருக்கிறது.
இதில் நிறைவு நாளன்று அதாவது 19 ஆம் தேதி அன்று இந்த இலகு ரக தாக்குதல் ஹெலிகாப்டர்களை முறைப்படி இந்திய விமானப் படையிடம் கையளிக்க இருக்கிறார்கள். நம் பாரத பிரதமர் இந்த விழாவில் கலந்து கொள்ள இருக்கிறார்.

அன்றைய தினம் ஜான்சியின் ராணி லக்ஷ்மி பாயின் பிறந்த நாள் விழா கொண்டாடங்களுக்கும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முதல் இந்திய விடுதலை போர் என்பது இவரால் முன்னெடுக்கப்பட்டதாக சரித்திரம் நமக்கு சொல்கிறது...... அதனை சிறப்பிக்கவும் இந்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இந்த விழா தற்போது ராணுவ மட்டத்தில் முன்னெடுப்பதற்கு மற்றொரு காரணமும் இருக்கிறது. 
அவர் மேஜர் ஷைத்தான் சிங். 1962 ஆம் ஆண்டு சீனாவுடனான எல்லை மோதலில் போது எல்லையை காத்து நின்ற மாவீரன். அவரது அந்த ரத்த சரித்திரம் பொன்னேட்டில் பொறிக்கப்பட வேண்டிய சமாச்சாரம்.
இவர் குறித்து நாம் கடந்த காலத்தில் நம் பதிவுகளில் விரிவடைய பார்த்து இருக்கிறோம்.... வேண்டுவோர் கீழேயுள்ள சுட்டியில் ஒரு பார்வை பார்த்துவிடுங்கள். இவரது அறுபதாவது ஆண்டு நினைவு தினம்  நவம்பர் 18 அன்று வருகிறது.

 
https://www.facebook.com/100008307349149/posts/3046058302347718/?app=fbl

அதுபோலவே ஜான்சி ராணி லக்ஷ்மி பாய் குறித்து விஷயங்களை நாம் முன்பே நம் பதிவில் பார்த்து இருக்கிறோம்...

https://www.facebook.com/100008307349149/posts/2889545301332353/?app=fbl

இவர் போல்வார்களின் வீரம் நிறைந்த மண் நம்முடையது.... நம் பாரம்பரிய கலாச்சாரத்தின் பெருமையும் இதுவே......

அதன் பொருட்டே......
இந்த மண்ணுக்கு என்று தனிப்பட்ட பெருமை இல்லை...... இந்த மண்ணில் தோன்றிய மக்களால் தான் இந்த மண்ணுக்கு பெருமை என்கிறார்கள்.....

அந்த வாசகங்களில் காணப்படும் நிதர்சனம்.... ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல தான் மேலே உள்ளவர்களின் வாழ்க்கை நமக்கு சொல்லும் பாடம். 

நம் தேசத்தில்...... வீரத்திற்கு ஆண் பெண் பேதமில்லை. அது அன்றும் சரி.... இன்றும் சரி.....

❣️வாழ்க பாரதம்
ஓங்கட்டும் அதன் புகழ்.
ஜெய் ஹிந்த் 💕

நன்றி :


5 மே, 2019

எங்கள் இந்தியா-26: சிந்து நதியின் மீசை நிலவினிலே...



சிந்து நதியின் மீசை நிலவினிலே... 
பாரதி பாடல் 
கை  கொடுத்த தெய்வம் 


595,600 views
Tamil Movies
Published on Oct 12, 2011

நன்றி: "Tamil Movies"  மற்றும் யூடியூப். 

13 மார்., 2019

எங்கள் இந்தியா-25: ஒருவரையொருவர் காலணியால் தாக்கிக் கொண்ட அரசியல்வாதிகள்



ஷூ-வால் தாக்கிக்கொண்ட பாஜக எம்.எல்.- எம்.பி

BJP MP attacks BJP MLA with shoe in Uttar Pradesh
8,211 views
Sathiyam News
Published on Mar 6, 2019


நன்றி: சத்தியம் நியூஸ்  மற்றும் யூடியூப். 

16 பிப்., 2019

எங்கள் இந்தியா-23: எங்கள் தேசம் இந்தியா


எங்கள் தேசம் இந்தியா
170,806 views

“Jeyan Varghese”
Published on Sep 13, 2010

எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்! நாடி நரம்புகள் புடைக்க வைக்கும் பாடல்! வசந்த் தொலைக்காட்சி வழங்கியதெனினும், காட்சி சில தவிர்த்து பாடலை கேளுங்கள்... எத்தனை 1971-கள் வந்தாலும் அதனை முறியடிக்க காத்திருக்கின்றன இளந்தலைமுறை! இது கட்சிக்கான விளம்பரமாக பதிவு செய்யவில்லை. தனி நபருக்கான விளம்பரமுமில்லை. உணர்வின் வெளிப்பாடாகவே பதிவு செய்திருக்கிறேன். வாழ்க இந்தியா! வெல்லட்டும் வருந்தலைமுறை!!

நன்றி: “Jeyan Varghese”, பாடலை உருவாக்க உதவியவர்கள் மற்றும் யூடியூப். 

30 டிச., 2018

எங்கள் இந்தியா-20: பஞ்சாப் படுகொலை

ஜாலியன் வாலாபாக்கில் ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்த ஜெனரல் டையரை நமக்குத் தெரியும்...

இந்திய வரலாற்றின் மறக்க முடியாத அந்தக் ஜாலியன் வாலாபாக் கோரச் சம்பவம், 15 நிமிடங்களுக்குள் நடந்தேறியது.

1000 பேருக்கும் மேலான மக்கள் ஜெனரல் டயர் என்பவனால், கொன்று குவிக்கப்பட்டனர்.

2,000 பேருக்கும் அதிகமானோர் குற்றுயிரும் குலை உயிருமாகத் துடித்துக்கொண்டு இருந்தனர்.

ஒவ்வொரு துப்பாக்கி வீரனும் 33 ரவுண்ட் சுட்டு இருந்தான். மொத்தம் 1,650 ரவுண்ட் சுடப்பட்டது. செத்து விழுந்த உடல்கள் ரத்த வெள்ளத்தில் மிதந்தன. தப்பிப் பிழைத்தவர்கள், நடக்க முடியாமல் வீதியில் விழுந்து கிடந்தனர்.

"என்னை மதிக்காத இந்தியர்களுக்கு நான் அளித்த தண்டனை இது. ஒரு ராணுவ அதிகாரியாக இந்தச் செயலுக்காக நான் சந்தோஷம் அடைகிறேன். என்னிடம் இன்னும் அதிக ஆயுதங்கள் இருந்திருந்தால், அதிக நேரம் சுட்டிருப்பேன்’ என்று வெளிப்படையாகத் தெரிவித்தான் ஜெனரல் டயர்.

இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் 'மார்னிங் போஸ்ட்’ என்ற பத்திரிகை ஜெனரல் டயரை 'வெற்றி நாயகன்’ என்று பாராட்டி எழுதியது..

ஜாலியன் வாலாபாக் படுகொலை, இந்தியாவை உலுக்கியது. அந்தப் பாதகச் செயலுக்கு காரணமாக விளங்கிய பஞ்சாப் கவர்னர் மிக்கேல் ஓ டயர் மற்றும் ஜெனரல் டயர் ஆகியோரைப் பழிவாங்குவேன் என்று, உத்தம்சிங் என்ற பஞ்சாப்  இளைஞன் சபதம் செய்தான்...

சொன்னபடியே சரியாக 21 ஆண்டுகள் காத்திருந்து இங்கிலாந்தில் எச்சில் தட்டு கழுவி, கூலி வேலை செய்து கிடைத்த பணத்தில் துப்பாக்கி வாங்கி 1940-ம் ஆண்டு மார்ச் 13-ம் தேதி கவர்னர் ஓ டயரைச் சுட்டுத் தள்ளினார் உத்தம் சிங்.

உத்தம் சிங்கின் செயல் இந்திய மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

ஆனால் இதை “பைத்தியகாரத்தனமான செயல்” என்று கூறி காந்தி அறிக்கை வெளியிட்டார்.

நேரு மற்றும் பலர் பஞ்சாப் காங்கிரஸ் அரசை, உத்தம் சிங்கின் செயலைக் கண்டித்தும் ஜெனரல் டயரின் மனைவிக்கு ஆறுதல் தெரிவித்தும் தீர்மானம் இயற்ற வைத்தனர்.

இதனை கடுமையாக எதிர்த்து, உத்தம் சிங்கின் செயலைப் பாராட்டி கடிதம் எழுதினார் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்.

அந்தக் கொலை வழக்கில், உத்தம் சிங்குக்கு தூக்குத் தண்டனை விதித்தது இங்கிலாந்து நீதிமன்றம்.

"தூக்கில் போட்டவுடன் இங்கிலாந்து மண்ணிலேயே என்னைப் புதைத்து விடுங்கள்.
இத்தனை ஆண்டுகள் இந்திய மண்ணை இங்கிலாந்து ஆண்டது போல், இங்கிலாந்தின் ஆறடி மண்ணை ஓர் இந்தியன் நிரந்தரமாக அபகரித்துக் கொண்டான் என்பது ஒரு மாறாத அவமானமாக உங்களுக்கு அமையட்டும்"
என்று முழங்கினர் உத்தம் சிங்.

ஜூலை 31, 1940 அன்று அவர் வந்தே மாதர கோஷத்துடன் தூக்குக் கயிறை முத்தமிட்டார்.

“தியாகச்சிங்கம்” என அழைக்கப்பட்ட அவரது உடல் சீக்கிய மதச்சடங்குகளுக்கு தடை விதிக்கப்பட்டு சிறைச்சாலையில் புதைக்கப்பட்டது.

பஞ்சாப் மாநிலம் சுல்தான்பூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் எஸ்.சாது சிங்,

“உத்தம் சிங்கின் எலும்புக் கூடுகளையாவது இந்தியாவிற்கு எடுத்து வர வேண்டும்” என்று மைய அரசிடம் கேட்டுக் கொண்டார். அன்றைய பிரதமர் இந்திரா காந்தி இதற்கான முயற்சிகளை மேற்கொண்டார்.

முப்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னர், 1975 ஆம் ஆண்டு இங்கிலாந்து அரசு உத்தம் சிங் புதைக்கப்பட்ட இடத்தை மீண்டும் தோண்டி, மிச்சம் மீதி எலும்புக் கூடுகளை பொறுக்கிக் கட்டி இந்தியாவிற்கு அனுப்பியது.

உத்தம்சிங்கின் எலும்புக்கூடுகள் ராஜ மரியாதையோடு இந்தியாவில் வரவேற்கப்பட்டு, உத்தம்சிங்கின் சொந்த ஊரில் எரியூட்டப்பட்டு, சாம்பல் கங்கை ஆற்றில் கரைக்கப்பட்டது.

தேசத்தை நேசிக்கும் அனைவரும் அவரது தியாகத்தைப் போற்றுவோம். எத்தனை பேர் அறிந்திருப்பீர்கள் உத்தம்சிங் பற்றி? இந்த பதிவைப் படித்தறிந்து இக்கால தலைமுறையினரையும் உத்தம் சிங் பற்றி தெரிந்து கொள்ள செய்யுங்கள்.

உங்கள் குழந்தைகளுக்கு வீர வரலாற்றை உணர்வாக சொல்லிக் கொடுங்கள்.

21 நவ., 2018

எங்கள் இந்தியா-14:

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 80 லட்சம் கருக்கலைப்பு செய்யப்படுகிறது.

80 சதவிகிதம் பெண்களுக்கு கருக்கலைப்பு பற்றிய சட்டம் பற்றித் தெரியாது.

பாதுகாப்பற்ற முறையில் செய்யப்படும் கருக்கலைப்பு காரணமாக இந்தியாவில் தினம் 10 பெண்கள் இறக்கின்றனர்.

நன்றி: ஜெ.நிவேதா