தியடோர் பாஸ்கரன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தியடோர் பாஸ்கரன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

20 ஆக., 2021

நூல் நயம் : கையிலிருக்கும் பூமி - தியடோர் பாஸ்கரன்

#ஆண்டுவிழா
#இயற்கை #சூழலியல்
புத்தகம்: கையிலிருக்கும் பூமி
ஆசிரியர்: தியடோர் பாஸ்கரன்
உயிர்மை பதிப்பகம்
பக்கங்கள் : 560

சூழலியல் என்றாலே அது வெறும் பாடத்திட்டம்; சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கும் விஞ்ஞானிகளுக்கும் சம்மந்தமுடையது நமக்கென்ன என்ற பேதமை மாறவேண்டும். நம்மை சுற்றியுள்ள நுண்ணுயிர் முதல் காட்டுயிர் வரை நம்மிடமுள்ள முட்டாள்தனமான புரிதல்களை சீரமைக்கும் நூலிது...

"பாரம்பரியம் என்பது சங்கால புராணங்களை,கட்டிடங்களை பராமரிப்பது மட்டுமல்ல இயற்கையை பராமரிப்பதும்தான்."

ஒருமுறையேனும் இப்புத்தகத்தை வாசித்துவிடுங்கள்; இயற்கை பற்றிய அறிவை வளர்தால்மட்டுமே அதனை நேசிக்கவும் பாதுகாக்கவும் முடியும்❤️
( ஒரு மனிதனின் சூழலியல் சார்ந்த முழுமையான விவாதங்களும் கட்டுரைகளும் ஒரே புத்தகத்தில்)

நம் வட்டார சொற்கள் பல உள்ளன அவற்றை விட்டு ஆங்கில சொற்களை மொழிபெயர்த்து இன்று அதனை பலவற்றில் பயன்படுத்துகிறோம்.இதனை பற்றிய புரிதல்களையும் எடுத்துரைக்கும் நூலிது...

(நம் வட்டார சொற்களுக்கு பின்னால் பெரும்வரலாறு உள்ளது என்பதை மறந்துவிடுகிறோம்)

1) சமுதாய அக்கறை
2) இயற்கைசார்ந்த பல்வகை புரிதல்கள்
3) உலக அரசியலால் நம்நாட்டு காட்டுயிர் பாதிப்பு
4) அறிவியல் பூர்வமான பல பதிவுகள்.
5) நமது விலங்குகளின் பாரம்பரிய பெயர்கள்‌

போன்ற பல தகவல்களை இந்நூல் நமக்குள் விதைக்கிறது....

புத்தகத்திலிருந்து சில.....👇

*காடுகள் அழிக்கபடுவதால் மனிதனுக்கு என்ன தீங்கு நேர்ந்துவிட போகிறது?*

மேற்குத்தொடர்ச்சி மலைகளிலுள்ள மழைக்காடுகள் - நமக்கு ஒரு தண்ணீர் தொட்டி மாதிரி, மழை நீரை உறிஞ்சி, சேமித்து வைத்து, ஆறுகள் மூலம் உயிரூட்டி நம்மை வாழ்விக்கின்றன. விவசாயம், மின்சாரம், குடிநீர் என நம் தேவைகளை யெல்லாம் பூர்த்தி செய்து, நம் வாழ்வைச் செழுமையாக்குவது கானகங்களே.

 *காவிரி, தென்பெண்ணை, பாலாறு* என்று பாரதி பாடிய எல்லா ஆறுகளும் இந்த மழைக்காடுகளில்தான் ஊற்றுக்கள் மூலம் சிறு சிறு ஓடைகளாக உற்பத்தியாகின்றன. இது மட்டுமல்ல. பல்லுயிர் பேணல், கானில் வாழும் பழங்குடியினரின் வாழ்வு நலம், நிலத்தடி நீர்வளம், நீர்நிலைப் பாதுகாப்பு, மண்ணரிப்பு தடுப்பு, தட்ப வெப்ப பாதிப்பு, வெள்ளத்தடுப்பு, நைட்ரஜன் சுழற்சி இவற்றிற்கெல்லாம் அடிப்படை அம்சம் வனம் சூழ்ந்த நிலப்பரப்பு.

எறும்புக் கூட்டில் வசிக்கும் பறவை!
மணற்கொள்ளையால் நமக்கென்ன தீங்கு?

நன்றி :