ஜெயகாந்தன் நினைவுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜெயகாந்தன் நினைவுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

6 டிச., 2018

ஜெயகாந்தன் நினைவுகள்-1:

தமிழின் தலைச்சிறந்த எழுத்தாளர், நிறைய எழுத்தாளர்களின் ஆதர்சம், திரு.ஜெயகாந்தன் அவர்களை நினைவு படுத்தியது அவரது இந்த பழைய படம், அந்தக்கால சரஸ்வதி இதழின் அட்டையில் பிரசுரமானது.

பல்லாண்டுகளுக்கு முன் காரைக்குடியில் எங்களது மனிதமேம்பாட்டு அறிவியல் அமைப்பின் சார்பாக கம்பன் மணிமண்டபத்தில் ஒரு ஒன்பது நாள் புத்தகத் திருவிழா நடத்தினோம். அதன் தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு அவர் சிறப்பரையாற்றியது இன்றும் நினைவில் பசுமையாக உள்ளது. இதற்குப் பெரிதும் துணைபுரிந்த அவரது அப்போதைய பதிப்பாளரும், என்மேல் பேரன்பு பாராட்டிய திரு.'கவிதா' சொக்கலிங்கம் அவர்களை என்னால் மறக்கமுடியாது. (பின்னாளிலும் அவர் எனக்கு பலவகையிலும் உதவினார்).

காரைக்குடியில் திரு.ஜெயகாந்தன் தங்கியிருந்தபோது நண்பர் ஒருவருடன் சென்று பேசிக் கொண்டிருந்ததை மகிழ்ச்சியுடன் நினைவுகூர்கிறேன்.