ஆற்றல் அடல்விடையேறும் ஆலவாயான் திருநீற்றைப்
போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம்பந்தன்
தேற்றித் தென்னனுடல் உற்ற தீப்பிணியாயின தீரச்
சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர்தாமே.
திருஞானசம்பந்தர் அருளிய திருநீற்றுப்பதிகம் நிறைவுற்றது.
என் தாய்மொழி தமிழுக்கென்றே இவ்வலைப்பூ. எனது எண்ணங்கள், எனக்குப் பிடித்த கருத்துக்கள், கவிதைகள், கதைகள் மற்றும் என்னை ஈர்த்த செய்திகள், நாட்டுநடப்புகள், நம் அனைவரின் வாழ்வோடு தொடர்புடைய மற்றனைத்தும் இதில் இடம் பெறும். (பின்புலப் புகைப்படத்தை எடுத்த ஜோன் சல்லிவனுக்கும், அதை வழங்கிய பப்ளிக்-டொமைன்-ஃபோட்டோஸ்.காமிற்கும் நன்றி)
Click Me
திருநீற்றுப்பதிகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திருநீற்றுப்பதிகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
7 பிப்., 2010
6 பிப்., 2010
திருநீற்றுப்பதிகம்-10:
குண்டிகைக் கையர்களோடு சாக்கியர் கூட்டமும் கூடக்
கண் திகைப்பிப்பது நீறு கருத இனியது நீறு
எண்டிசைப்பட்ட பொருளார் ஏத்துந்தகையது நீறு
அண்டத்தவர் பணிந்தேத்தும் வாலவாயான் திருநீறே.
கண் திகைப்பிப்பது நீறு கருத இனியது நீறு
எண்டிசைப்பட்ட பொருளார் ஏத்துந்தகையது நீறு
அண்டத்தவர் பணிந்தேத்தும் வாலவாயான் திருநீறே.
3 பிப்., 2010
திருநீற்றுப்பதிகம்-9:
மாலோடு அயன் அறியாத வண்ணமும் உள்ளது நீறு
மேலுறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடி நீறு
ஏல உடம்பிடர் தீர்க்கும் இன்பந்தருவது நீறு
ஆலமது உண்டமிடற்றம் ஆலவாயான் திருநீறே.
மேலுறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடி நீறு
ஏல உடம்பிடர் தீர்க்கும் இன்பந்தருவது நீறு
ஆலமது உண்டமிடற்றம் ஆலவாயான் திருநீறே.
2 பிப்., 2010
திருநீற்றுப்பதிகம்-8:
இராவணன் மேலது நீறு எண்ணத் தருவது நீறு
பராவண மாவது நீறு பாவமறுப்பது நீறு
தராவண மாவது நீறு தத்துவமாவது நீறு
அராவணங்கும் திருமேனி ஆலவாயான் திருநீறே.
பராவண மாவது நீறு பாவமறுப்பது நீறு
தராவண மாவது நீறு தத்துவமாவது நீறு
அராவணங்கும் திருமேனி ஆலவாயான் திருநீறே.
31 ஜன., 2010
திருநீற்றுப்பதிகம்-7:
எயிலது அட்டது நீறு இருமைக்கும் உள்ளது நீறு
பயிலப்படுவது நீறு பாக்கியமாவது நீறு
துயிலைத் தடுப்பது நீறு சுத்தமதாவது நீறு
அயிலைப் பொலிதரு சூலத்து திருவாலவாயான் திருநீறே.
பயிலப்படுவது நீறு பாக்கியமாவது நீறு
துயிலைத் தடுப்பது நீறு சுத்தமதாவது நீறு
அயிலைப் பொலிதரு சூலத்து திருவாலவாயான் திருநீறே.
30 ஜன., 2010
திருநீற்றுப்பதிகம்-6:
அருத்தம் தாவது நீறு அவல மறுப்பது நீறு
வருத்தம் தணிப்பது நீறு வானமளிப்பது நீறு
பொருத்தம் தாவது நீறு புண்ணியர் பூசும் வெண்ணீறு
திருத்தகு மாளிகை சூழ்ந்த திருவாலவாயான் திருநீறே.
வருத்தம் தணிப்பது நீறு வானமளிப்பது நீறு
பொருத்தம் தாவது நீறு புண்ணியர் பூசும் வெண்ணீறு
திருத்தகு மாளிகை சூழ்ந்த திருவாலவாயான் திருநீறே.
27 ஜன., 2010
திருநீற்றுப்பதிகம்-5:
பூச இனியது நீறு புண்ணியமாவது நீறு
பேச இனியது நீறு பெருந்தவத்தோர்களுக் கெல்லாம்
ஆசை கெடுப்பது நீறு அந்தம தாது நீறு
தேசம் புகழ்வது நீறு திருவாலவாயன் திருநீறே.
பேச இனியது நீறு பெருந்தவத்தோர்களுக் கெல்லாம்
ஆசை கெடுப்பது நீறு அந்தம தாது நீறு
தேசம் புகழ்வது நீறு திருவாலவாயன் திருநீறே.
26 ஜன., 2010
திருநீற்றுப்பதிகம்-4:
காண இனியது நீறு கவினைத் தருவது நீறு
பேணி அணிபவர்க்கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு
மாணந்தகைவது நீறு மதியைத் தருவது நீறு
சேனந் தருவது நீறு திருவாலவாயான் திருநீறே.
பேணி அணிபவர்க்கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு
மாணந்தகைவது நீறு மதியைத் தருவது நீறு
சேனந் தருவது நீறு திருவாலவாயான் திருநீறே.
20 ஜன., 2010
திருநீற்றுப்பதிகம்-3:
முத்தி தருவது நீறு முனிவரணிவது நீறு
சத்தியமாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு
பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு
சித்தி தருவது நீறு திருவாலவாயான் திருநீறே.
சத்தியமாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு
பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு
சித்தி தருவது நீறு திருவாலவாயான் திருநீறே.
19 ஜன., 2010
திருநீற்றுப்பதிகம்-2:
வேதத்திலுள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு
போதந்தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு
ஓதத்தருவது நீறு உண்மையில் உள்ளது நீறு
சீதப்புனல் வயல்சூழ்ந்த திருவாலவாயன் திருநீறே.
போதந்தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு
ஓதத்தருவது நீறு உண்மையில் உள்ளது நீறு
சீதப்புனல் வயல்சூழ்ந்த திருவாலவாயன் திருநீறே.
18 ஜன., 2010
திருநீற்றுப்பதிகம்-1:
திருஞானசம்பந்தர் அருளிய திருநீற்றுப்பதிகம்
மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரமாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திரமாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருவாலவாயன் திருநீறே.
மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரமாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திரமாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருவாலவாயன் திருநீறே.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)