29 செப்., 2012

நெல்லையப்பன் கவிதைகள்-86: அப்பா, அன்புள்ள அப்பா -1


அப்பா, அன்புள்ள அப்பா -1

பதினாறு வயதுப் பையன்
பை நிறைய காய்கறிகளை
வாரச் சந்தையில் வாங்கி
(அது ஒரு வசந்த காலம்)
பொய்விலை சொல்லி
கமிஷன் அடித்தான் வீட்டில்.

பிரிதொருநாள்
அப்பாவுடன் சந்தை சென்று
காய்கறிகள் வாங்கியவன்,
(அட, கமிஷன் போச்சே!)
அம்மாவிடம் அப்பா
விலைகளை யெல்லாம்
குறைத்துச் சொல்வது பார்த்து
குழம்பிப் போனான்

இன்று அவன் மனைவி,
“அட இதுக்குப் போயா
இந்தவிலை கொடுத்தீர்கள்?!”
என கேலி பேசும் போது,
அப்பாவின் தந்திரம்
அவனுக்குப் புரிகிறது.

28 செப்., 2012

நெல்லையப்பன் கவிதைகள்-85: மௌனம்

மௌனம்


மொழி
கண்களில் பிறக்கிறது;

கண்மொழி 
எல்லை தொடும் போது
உடல் மொழி உதவுகிறது;

உடல்மொழி போதாத போது
சொல்லும், பின் எழுத்தும்
சரியாய்ச் சொல்லும்;

உரைநடை தயங்கும் போது
கவிதை கை கொடுக்கும்;

கவிதை விழிக்கும் போது
இசை எளிமையாய்
இனிமையாய்ச் சொல்லும்;

இசை தாண்டி
தொடுமொழி செல்லும்;

அன்பு செய, நன்றி நவில
இத்தனை மொழிகள்
இருந்த போதிலும்

அனைத்தும் தாண்டி
முழுமொழி தேட
விடையாய்க் கிடைப்பது
மந்திர மௌனம்.

27 செப்., 2012

நெல்லையப்பன் கவிதைகள்-84: தும்பை விட்டு


தும்பை விட்டு

பள்ளி வாகனங்கள்
விதிகள் சீரமைக்க
பலிகொடுக்க வேண்டி இருக்கு
ஒரு சுருதியை.

மாநிலம் விட்டு
மாநிலம் வரும்
கூலி தொழிலாளர்
நல விதிகள் சீரமைக்க
பலிகொடுக்க வேண்டி இருக்கு
பத்து தொழிலாளர்களை.

மருத்துவமனைகளில்
எலி, பூனை, நாய்கள்
வலம் வருவது தடுக்க
கடிபட வேண்டி இருக்கு
ஒரு இறந்த குழந்தை முகம்

ஆசிரியர் மாணவர்
உறவுமுறை பற்றி
விமர்சனம், விவாதங்கள்
விழிப்புணர்வு ஏற்பட
எங்கோ ஒரு மாணவன்
அருந்த வேண்டி இருக்கு
ஆசிரியர் கையால் சிறுநீர்.

பட்டாசு தொழிலகத்தில்
பாதுகாப்பு விதி மீறல்
நாற்பது என கண்டு சொல்ல
நாற்பது பேர் உடல் சிதறி
மடிய வேண்டியிருக்கு.

பெரிதாய் விபரீதம்
நடந்த பின்தான்
அரசு விழிக்குமா?

எந்த விபத்தில்
யார் இறந்தாலும்
ரூபாய் இரண்டு லட்சம்
கியாரண்டி என்பதோடு
முடிந்து விடுமா அரசின் கடமை.?

25 செப்., 2012

வரலாற்றில் சில மைல் கற்கள்-8 : செப்டம்பர் 25


இன்று செப்டம்பர் இருபத்து ஐந்தாம் நாள்.  இந்த வருடத்தின் 268 வது நாள்.  இந்த ஆண்டில் இன்னும் 97 நாட்கள் எஞ்சியுள்ளன. 

 சில முக்கிய நிகழ்வுகள் 
------------------------------------------
§  275 -ஆம்  ஆண்டில் இந்த நாளில் ரோமாபுரி செனட் சபை பேரரசர் அரேலியனின் (Aurelian) படுகொலையைத் தொடர்ந்து, மார்க்கஸ் கிளாடியஸ் டெசிட்டசை (Marcus Claudius Tacitus) பேரரசராக அறிவித்தல்.  
§  1066-ல் இந்த நாளில் நடந்த ஸ்டாம்ஃபோர்ட் பிரிட்ஜ் யுத்தத்தோடு வைக்கிங்குகளின் இங்கிலாந்துப் படையெடுப்பு முடிவுக்கு வருதல். 
§  1396-ல் இந்த நாளில் நிக்கொபோலிஸ் யுத்தத்தில் (Battle of Niccopolis) ஆட்டோமான் பேரரசர் முதலாம் பாயசிட்  (Ottoman Emperor Bayezid I) கிறிஸ்துவப் படைகளை தோற்கடித்தல்.  
§  1690-ல் இந்த நாளில் அமெரிக்காவில் முதல் செய்தித்தாள் பிரசுரிக்கப்படுதல்.  (Publick Occurrences Both Foreign and Domestick 
§  1789-ல் இந்த நாளில் அமெரிக்க காங்கிரஸ் அரசியல் அமைப்புச் சட்டங்களுக்கு பன்னிரண்டு திருத்தங்களை ஏற்றுக்கொள்ளுதல்.  இந்தத் திருத்தங்கள்  "Bill of Rights"  என்ற பெயரைப் பெறுகின்றன. .
§  1846-ல்  இந்த நாளில் அமெரிக்கப் படைகள் ஜெனெரல் சக்காரி டைலரின் (General Zacchary Taylor) தலைமையில் மெக்சிகோவின்  மாண்டிரே (Monterrey) நகரைப் கைப்பற்றுதல். 
§  1890-ல் இந்த நாளின் அமெரிக்க காங்கிரஸ் செகுயா தேசிய பூங்காவை உருவாக்க ஒப்புதல். 
§  1906 – In the presence of the king and before a great crowd, Leonardo Torres Quevedo successfully demonstrates the invention of the Telekino in 
§  1906-ல் இந்த நாளில், அரசர் மற்றும் போது மக்கள் முன்னிலையில், லியனார்டோ டோரஸ் க்வேடோ ரிமோட் 
§  1911-ல் இந்த நாளில் நடந்த ஒரு வெடி விபத்தில் பிரெஞ்சுப் போர்க்கப்பலான லிபர்டி முற்றிலுமாக அழிதல். 
§  1926-ல் இந்த நாளில் அடிமைத்தனத்தையும், அடிமை வர்த்தகத்தையும் தடை செய்யும் சர்வதேச உடன்படிக்கை கையெழுத்தாதல். 
§  1956-ல் இந்த நாளில்  TAT-1  எனப்படும் உலகில் முதல் முறையாக  கடலுக்கடியில் தொலைபேசி கேபிள் அமைக்கப்படுதல்.  
§  1959-ல் இந்த நாளில் இலங்கைப் பிரதமர் சாலமன் பண்டாரநாயக்கே, தலுதுவ சோமராம எனும் புத்த பிக்குவால் தாக்கப்பட்டு, மறுநாள் உயிரிழத்தல். (பின்னாளில் இவரது மனைவி சிறிமாவோ  பண்டாரநாயக்கேவும், அதன் பின்னர் அவரது புதல்வி சந்திரிகா குமாரதுங்கவும் இலங்கை அதிபராயினர்) 
§  1962-ல் இந்த நாளில் அல்ஜீரிய மக்கள் குடியரசு முறைப்படி அறிவிக்கப்படுதல்.   பர்ஹத் அப்பாஸ்   இடைக்கால அரசின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுதல். 
§  1962-ல் இந்த நாளில் உள்நாட்டுப் புரட்சி.   புதிதாக முடிசூட்டப்பட்ட இமாம் அல் பதரை (Imam al-Badr ) நீக்கிவிட்டு, தன் தலைமையில் ஏமன் நாட்டை ஒரு குடியரசாக அப்துல்லா அஸ்  சல்லல் (Abdullah as-Sallal ) அறிவித்தல். 
§  1972-ல் இந்த நாளில் நடந்த ஒரு வாக்கெடுப்பில்  (Referendum) நார்வே  மக்கள்  ஐரோப்பியக் குடும்பத்தின்  (European Community) உறுப்பினராக மறுத்தல். 
§  1992-ல் இந்த நாளில் அமெரிக்காவின் நாசா நிறுவனம் ௫௧௧ லட்சம் டாலர் செலவில் செவ்வாய் கிரகத்திற்கு  "மார்ஸ் அப்சர்வர்" விண்கோளை ஏவுதல்.  பதினோரு மாதங்களுக்குப்பின் இந்த முயற்சி தோல்வி அடைதல். 
§  2003-ல் இந்த நாளில் ஜப்பானின் ஹொக்கைடோ தீவுக்கருகில் ரிக்டர் அளவுகோலில் எட்டு என்ற அளவிற்கு ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்படுதல். 
§  2008-ல் இந்த நாளில் ஏழாம் செஞ்சு (Shenzhou) என்ற விண்கோளை சீனா விண்ணில் செலுத்துதல். 

சில பிறப்புக்கள் 
----------------------------
§  1694-ல் இந்த நாளில் பிரிட்டிஷ் பிரதமர் ஹென்றி பெல்ஹாம் (Henry Pelham) பிறந்தார். 
§  1711-ல் இந்த நாளில் சீனப் பேரரசர் க்வின்லாங் (Qinlong) பிறந்தார்.
§  1744-ல் இந்த நாளில் பிரஷ்ய அதிபர் இரண்டாம்  ஃபிரடெரிக் வில்லியம் பிறந்தார். 
§  1862 -ல் இந்த நாளில் ஆஸ்திரேலியாவின் ஏழாவது பிரதமர் பில்லி ஹ்யூஸ் (Billy Hughes) பிறந்தார். 
§  1897-ல் இந்த நாளில் புகழ் பெற்ற அமெரிக்க எழுத்தாளரும், நோபல் பரிசு பெற்றவருமான வில்லியம் ஃபாக்னர் (William Faulkner) பிறந்தார். 
§  1920-ல் இந்த நாளில் இந்தியாவின் புகழ் பெற்ற விண்வெளி ஆராய்ச்சி நிபுணரான சதீஷ் தவான் (Satish Dhavan) பிறந்தார். 
§  1921-ல்  இந்த நாளில்  நியூசிலாந்துப் பிரதமர்  சர் ராபர்ட் மல்டூன் (Sir Robert Muldoon) பிறந்தார். 
§  1932 -ல் இந்த நாளில் ஸ்பானியப் பிரதமர் அடோல்ஃபோ சுவாரஸ் பிறந்தார். 

சில மறைவுகள் 
-----------------------------
§  1534-ல் இந்த நாளின் போப்பாண்டவர் ஏழாம் கிளமன்ட் மறைந்தார். 
§  1986-ல் இந்த நாளில் நோபல் பரிசு பெற்ற ருஷ்ய வேதியல் நிபுணர் நிக்கொலோய் நிக்கொலேயேவிச் செம்யநோவ் (Nikkolai Nikkolaeyevich Semyanov) மறைந்தார். 

சில விடுமுறை நாட்களும், கொண்டாட்டங்களும் 
-------------------------------------------------------------------------------------
§  மொசாம்பிக் நாட்டில் புரட்சி தினம் 



கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவிற்கு எனது உளமார்ந்த நன்றிகள். 

24 செப்., 2012

வரலாற்றில் சில மைல் கற்கள்-7 : செப்டம்பர் 24



வரலாற்றில் சில மைல் கற்கள்-7 :  

இன்று செப்டம்பர் 24ம் நாள்.  இந்த ஆண்டின் 267வது  நாள்.  இந்த ஆண்டில் இன்னும் 98 நாட்கள் எஞ்சியுள்ளன.  

வரலாற்றில் இந்த நாளில் நிகழ்ந்த சில முக்கிய நிகழ்ச்சிகள்:
-----------------------------------------------------------
622ம் ஆண்டில் இந்த நாளில் நபிகள் நாயகம் மெக்காவிலிருந்து மேதினாவிற்கான  தனது புனித யாத்திரையை நிறைவு செய்தார்.

சத்திரபதி சிவாஜி மகாராஜாவின் இரண்டாவது முடிசூட்டு விழா.

1841ல் இந்த நாளில் ப்ருனைய்  சுல்தான்  சரவாக் தீவை இங்கிலாந்திற்கு விட்டுக்கொடுத்த நாள். 

1932ல் இந்த நாளில் காந்திஜியும், டாக்டர் அம்பேத்காரும் மாநில சட்டமன்றங்களில் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு  பற்றிய பூனா உடன்படிக்கையை ஏற்றுக்கொள்ளுதல். 

1946ல் இந்த நாளில் ஹாங்காங்கில் கேதே பசிபிக் ஏர்வேஸ் நிறுவனம் உருவாக்கப்பட்டது. 

1948ல் இந்த நாளில் இன்றைய பிரபல மோட்டார் நிறுவனமான ஹோண்டா மோட்டார் நிறுவனம் உருவாக்கப்படுதல். 

1950௦ல்  இந்த நாளில் கனடாவிலும், நியூ இங்கிலாந்திலும் ஏற்பட்ட  பெரும் காட்டுத்தீ  பல பகுதிகளில் சூரியனையே தெரியாமல் மறைத்தது.  இதன் விளைவாக ஐரோப்பாவில் நிலா நீல வண்ணத்தில் தோன்றுதல். 

1957ல் இந்த நாளில் ஐரோப்பாவின் மிகப் பெரிய ஆட்டகளம்  பார்சிலோனாவில் திறக்கப்படுகிறது. 

1960ல் இந்த நாளில் உலகின் முதல் அணு ஆற்றலால் இயக்கப்படும் விமானம் தாங்கிக் கப்பல், யு எஸ் எஸ் என்டர்ப்ரைஸ் செயல்படத் துவங்குகிறது. 

1968ல் இந்த நாளில் ஸ்வாசிலாந்து  ஐக்கிய நாடுகள் சபையில் சேர்த்துக் கொள்ளப்படுதல்.

1973ல் இந்த நாளில் கினி பிஸ்ஸாவ் நாடு போர்ச்சுகல் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு, சுதந்திர நாடாதல். 

1979ல் இந்த நாளில் காம்பு செர்வ் (Compu-Serv)  அனைவருக்குமான, இமெயில் சேவையுடன் கூடிய  இன்டர்நெட் சேவையைத் துவக்குதல். 

1996ல்  இந்த நாளில் ஐக்கிய நாடுகள் சபையில் 71 நாடுகள் முழுமையாக அணு குண்டு பரிசோதனை தடை செய்யும் உடன்படிக்கையில் கையெழுத்திடல். 

2005ல் இந்த நாளில் ரீட்டா புயல் அமெரிக்காவின் டெக்சாஸ் மற்றும் லூசியானா மாநிலங்களில் பெரும் சேதத்தை விளைவித்தல். 

2009ல் இந்த நாளில்  அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் நகரில் 30 உலகத் தலைவர்கள்  கலந்துகொள்ளும் G20  உச்சி மாநாடு  துவங்கியது. 

சில முக்கிய பிறப்புக்கள் 
------------------------------------------------------------------------------

15ம் ஆண்டில் ரோமாப்புரிப் பேரரசர் வைடேல்லியஸ் (Vitellius) பிறந்தார். 

1501ல் இந்த நாளில் உலகப் புகழ் பெற்ற கணித மேதை ஜெரோலமோ கார்டானோ இத்தாலியில் பிறந்தார். 

1513ல் இந்த நாளில் ஸ்வீடன் நாட்டு மகாராணி கேத்தரின் பிறந்தார். 

1534ல் இந்த நாளில் சீக்கியர்களின் நாலாவ1714 – Alaungpaya, King of Burma (d. 1760)
1714ல் இந்த நாளில் பர்மிய அரசர் அலாங்பயா (Alaungpaya)  பிறந்தார். 

1717ல் இந்த நாளில் பிரிட்டிஷ் நாவலாசிரியரும், அரசியல்வாதியுமான ஹொரேஸ் வால்போல் பிறந்தார். 

1755ல் இந்த நாளில் அமெரிக்க ஐக்கிய நாட்டின் உச்ச மன்ற தலைமை நீதிபதியாயிருந்த ஜான் மார்ஷல் பிறந்தார். 

1896ல் இந்த நாளில் அமெரிக்காவின் பிரபல நாவலாசிரியரான எஃப். ஸ்காட்பிஃட் ஜெரால்ட்  பிறந்தார். 

1898ல் இந்த நாளில் நோபல் பரிசு பெற்ற ஹோவர்டு வால்டர் ஃப்ளோரி  பிறந்தார். 

1900௦௦ல் ஈரானிய மதத்தலைவர் ஆயத்துல்லா கொமெய்னி பிறந்தார்.

1905ல் இந்த நாளில் நோபல் பரிசு பெற்ற செவரோ ஒச்சவோ (Severo Ochoa) பிறந்தார்.

1911ல் இந்த நாளில் சோவியத் பிரதமர் கான்ஸ்டன்டைன் செர்னன்கோ பிறந்தார். 

1914ல் இந்த நாளில் ஆஸ்திரேலியாவின் பதினெட்டாவது கவர்னர் ஜெனரலான சர் ஜான் கேர் பிறந்தார்.

 சில முக்கிய மறைவுகள் 
---------------------------------------
366ல் இந்த நாளில்  போப்பாண்டவர் லிபெரயு மறைந்தார். 

1143 –ல் இந்த நாளில் போப்பாண்டவர் இரண்டாம் இன்னொசென்ட் மறைந்தார்.

1732ல் இந்த நாளில் ஜப்பானியப் பேரரசர் ரைஜென் மறைந்தார். 

 சில முக்கிய விடுமுறை நாட்களும், கொண்டாட்டங்களும் 

கம்போடியாவின் அரசியல் அமைப்பு சட்டம் உருவான நாள். 

தென்னாஃப்ரிக்காவில்  ஹெரிடேஜ் தினமாகக் கொண்டாடப்படுகிறது. 

கினி பிசவ் நாட்டின் சுதந்திர தினம். 

டிரினிடாடிலும், டோபாகோவிலும் குடியரசு தினம். 

கட்டற்ற கலைக் களஞ்சியமான விக்கிப்பீடியாவிற்கு மனமார்ந்த நன்றிகள். 

21 செப்., 2012

வரலாற்றில் சில மைல் கற்கள்-6: செப்டம்பர் இருபத்தோராம் நாள்


வரலாற்றில் சில மைல் கற்கள்-6: செப்டம்பர் இருபத்தோராம் நாள்  

இன்று செப்டம்பர் இருபத்தோராம் நாள். இந்த வருடத்தின் 264வது நாள். இந்த ஆண்டில் இன்னும் 101 நாட்கள் பாக்கி உள்ளன.

சில முக்கிய நிகழ்வுகள்

1338ம் ஆண்டில் நூறாண்டு கால யுத்தத்தில் ஆர்னமுய்டெனில் நடந்த சண்டையில் முதன்முறையாக பீரங்கிகள் பயன்படுத்தப்பட்டன.
  
1776ம் ஆண்டில் நியூ யார்க் நகரை பிரிட்டிஷ் கைப்பற்றிய பின், நியூ யார்க்கில் ஒரு பகுதி எரிந்துபோனது. நியூயார்க்கின் பெரும் தீ விபத்து பற்றி மேலும் அறிய:
http://en.wikipedia.org/wiki/Great_Fire_of_New_York_(1776)


1792ல் இந்த நாளில் பிரான்சில் மன்னராட்சி முடிந்து, குடியரசாட்சி உருவானது.

1934ல் இந்த நாளில் ஜப்பானின் ஹோன்சு பகுதியைத் தாக்கிய புயலால் 3036 பேர் மடிந்தனர்.

1937ல் இந்த நாளில் ஜே ஆர் ஆர் டோல்கீன் எழுதிய உலகப் புகழ் பெற்ற நாவல், த ஹாபிட் பிரசுரிக்கப்பட்டது. இந்த நாவல் பற்றியும் டோல்கீன் பற்றியும் மேலும் அறிய:
http://en.wikipedia.org/wiki/J._R._R._Tolkien

http://en.wikipedia.org/wiki/The_Hobbit

1938ல் இந்த நாளில் நியூ யார்க்கின் லாங் ஐலண்ட் பகுதியில் அடித்த பெரும் புயலால் 500 முதல் 700 பேர் வரை இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

1939ல் இந்த நாளில் ரோமானியப் பிரதமர் ஆர்மாண்ட் காலினெஸ்கு படுகொலை செய்யப்பட்டார். அவரைப் பற்றி மேலும் அறிய:
http://en.wikipedia.org/wiki/Armand_C%C4%83linescu


1942ல் இந்த நாளில் உக்ரைன் பகுதியில் துனைவ்ட்சி நகரில் நாஜிகள் 2588 யூதர்களைப் படுகொலை செய்தனர்.

1964ல் இந்த நாளில் மால்டா பிரிட்டனிடமிருந்து விடுதலை பெற்ற நாள். மேலும் அறிய:
http://en.wikipedia.org/wiki/Malta

1965ல் இந்த நாளில் காம்பியா, மாலத்தீவுகள் மற்றும் சிங்கப்பூர் ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினர்களாகச் சேர்க்கப்படுதல்.

1971ல் இந்த நாளில் பஹ்ரைன், பூடான், குவட்டார் ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினர்களாகச் சேர்க்கப்படுதல்.

1976ல் இந்த நாளில் செசேல்ஸ் ஐக்கிய நாடுகள் சபையில் சேர்க்கப்படுதல்.

1981ல் இந்த நாளில் பெலைஸ் பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெறுதல்.

1981ல் இந்த நாளில் சான்ட்ரா டே ஓகோனர் அமெரிக்க உச்ச மன்ற நீதிபதியாக நியமிக்கப்படுதல். அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி என்ற பெருமையைப் பெறுகிறார். அவரைப் பற்றி மேலும் அறிய:
http://en.wikipedia.org/wiki/Sandra_Day_O%27Connor

1984ல் இந்த நாளில் ப்ரூனெய் ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினர்களாகச் சேர்க்கப்படுதல்.

1991ல் இந்த நாளில் சோவியத் யூனியனிடமிருந்து ஆர்மீனியா விடுதலை அடைதல்.

1993ல் இந்த நாளில் ருஷிய அதிபர் போரிஸ் எல்ட்சின் பாராளுமன்றத்தைக் கலைத்து, பெரிய அரசியல் அமைப்பு பிரச்சினையை உருவாக்கல். போரிஸ் எல்ட்சின் பற்றி மேலும் அறிய:
http://en.wikipedia.org/wiki/Boris_Yeltsin

1999ல் இந்த நாளில் ஏற்பட்ட சி-சி நில நடுக்கத்தால் தைவானின் மத்திய பகுதியில் 2400 பேர் மரணம்.

2001ம் ஆண்டில் இந்த நாளில் செப்டம்பர் 11 பயங்கரவாத தாக்குதலில் இறந்தவர்களுக்கான அஞ்சலி நிகழ்ச்சி 35 நெட்வொர்க் மற்றும் கேபிள் டிவிகளில் ஒளிபரப்பப்பட்டு, 200 மில்லியன் டாலர் நிதி திரட்டப்பட்டது.

பிறப்பு

1328ல் இந்த நாளில் சீனப் பேரரசர் ஹோங்வு பிறந்தார்.

1415ல் இந்த நாளில் புனித ரோமப் பேரரசர் மூன்றாம் பிரடெரிக் பிறந்தார்.

1428ல் இந்த நாளில் சீனப் பேரரசர் ஜிங்டாய் பிறந்தார்.

1853ல் இந்த நாளில் டச்சு இயற்பியல் மேதையும், நோபல் பரிசு பெற்றவருமான ஹைக் காமர்லிங் பிறந்தார்.

1866ல் இந்த நாளில் உலகப் புகழ் பெற்ற ஆங்கில எழுத்தாளர் எச்.ஜி.வெல்ஸ் பிறந்தார். அவரைப் பற்றி மேலும் அறிய:
http://en.wikipedia.org/wiki/H._G._Wells

அவரது புகழ் பெற்ற சில நூல்களை முழுமையாகப் படிக்க:

கிப்ஸ்
http://www.gutenberg.net.au/ebooks07/0700961h.html

வார் ஆஃப் த வொர்ல்ட்ஸ்
http://www.gutenberg.net.au/ebooks/fr100076.txt

டைம் மிஷின்
http://www.gutenberg.net.au/ebooks/fr100074.txt

தி  இன்விசிபிள்  மேன்
http://www.gutenberg.net.au/ebooks/fr100061.txt

1866ல் இந்த நாளில் பிரஞ்சு நுண்ணுயிரியல் மேதை, சார்லஸ் நிகோல், மருத்துவத்திற்கான நோபல் பரிசைப் பெறுதல்.

1902ல் இந்த நாளில் உலகப் புகழ்பெற்ற பதிப்பாளர் சர் ஆலன் லேன் பிறந்தார்.

1947ல் புகழ் பெற்ற அமெரிக்க எழுத்தாளர் ஸ்டீபன் கிங் பிறந்த நாள்.

1963ல் இந்த நாளில் மேற்கிந்தியத் தீவுகளின் புகழ் பெற்ற கிரிக்கெட் ஆட்டக்காரர் கர்ட்லி ஆம்ப்ரோஸ் பிறந்தார்.

1979ல் இந்த நாளில் உலகப் புகழ் பெற்ற மேற்கிந்தியத் தீவுகளின் கிரிக்கெட் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெயில் பிறந்தார்.

1980ல் இந்த நாளில் இந்தி நடிகை கரீனா கபூர் பிறந்தார்.

இறப்பு 

687ம் ஆண்டில் இந்த நாளில் போப்பாண்டவர் கோனன் மறைந்தார்.

1327ல் இந்த நாளில் இங்கிலாந்தின் அரசர் இரண்டாம் எட்வர்டு மறைந்தார்.

1558ல் இந்த நாளில் புனித ரோமப் பேரரசர் ஐந்தாம் சார்லஸ் மறைந்தார்.

1832ல் இந்த நாளில் ஸ்காட்லாந்தின் புகழ் பெற்ற எழுத்தாளர் சர் வால்டர் ஸ்காட் மறைந்தார்.  அவர் பற்றி மேலும் அறிய:
http://en.wikipedia.org/wiki/Sir_Walter_Scott

அவரது புகழ் பெற்ற நாவல்கள் சிலவற்றை முழுமையாக வாசிக்க:

ஐவன்ஹோ
http://www.gutenberg.org/files/82/82-h/82-h.htm

ராப் ராய்
http://www.gutenberg.org/files/7025/7025-h/7025-h.htm

த டாலிஸ்மன்
http://www.gutenberg.org/files/1377/1377-h/1377-h.htm


1860ல் இந்த நாளில் ஜெர்மானிய தத்துவ மேதை ஆர்தர் ஷோப்பன்ஹவர் மறைந்தார். அவரைப் பற்றி மேலும் அறிய:
http://en.wikipedia.org/wiki/Arthur_Schopenhauer


1974ல் இந்த நாளில் புகழ் பெற்ற அமெரிக்க நாவலாசிரியை ஜேக்குலைன் சூசன் மறைந்தார்.

1992ல் இந்த நாளில் பிரபல இந்தி சினிமா தயார்ப்பாளரும், ராஜ்ஸ்ரீ புரடக் ஷன்ஸ் நிறுவனத்தை உருவாக்கியவருமான தாராசந்த் பார்ஜத்யா மறைந்தார்.

2011ல் இந்த நாளில் ஜப்பானிய எழுத்தாளரும், கவிஞருமான ஜூன் ஹென்மி மறைந்தார்.

சில கொண்டாட்டங்கள்

இந்த நாள் கானாவில் நிறுவனர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

இந்த நாள் ஆர்மீனியாவிலும், பெலைஸிலும், மால்டாவிலும் சுதந்திர தினமாகக் கொண்டாடப்படுகிறது.

பொலிவியாவில் இந்த நாள் மாணவர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

இன்று உலக சமாதான தினம்.
http://en.wikipedia.org/wiki/World_Peace_Day

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவிற்கும், ப்ராஜெக்ட் கூட்டன்பர்க்கிற்கும் நன்றி.

20 செப்., 2012

வரலாற்றில் சில மைல் கற்கள்-5: செப்டம்பர் இருபதாம் நாள்


வரலாற்றில் சில மைல் கற்கள்-5: செப்டம்பர் இருபதாம் நாள்

 

இன்று செப்டம்பர் இருபதாம் நாள்; இந்த வருடத்தின் 263வது நாள்.  இந்த ஆண்டில் இன்னும் 102 நாட்கள் பாக்கி உள்ளன.

    கிறிஸ்து பிறப்பதற்கு முன்னர் 480ம் ஆண்டில் கிரேக்கர்கள் சலாமிஸ் போரில் பாரசீகர்களை  தோற்கடித்தனர். மேலும் அறிய:

    1519ம் ஆண்டில் இந்த நாளில் பெர்டினாண்டு மெகல்லன் 270 பேருடன் உலகைச் சுற்றிவரப் பயணம் தொடங்குதல்.

    1596ல் இந்த நாளில் டியகோ டி மோண்டிமேயர் புதிய ஸ்பெயினில் மாண்டிரே நகரை நிறுவுதல்.

    1697ம் ஆண்டு இந்த நாளில் ஒன்பது ஆண்டுகளாக நடைபெற்ற போரை முடிவுக்குக் கொண்டுவர பிரான்ஸ், இங்கிலாந்து, ஸ்பெயின், ரோமாபுரிப் பேரரசு மற்றும் டச்சுக் குடியரசு ரிஜிஸ்விக் ஒப்பந்தத்தில் கையெழுத்திடல்.  ரிஜிஸ்விக் ஒப்பந்தம் பற்றி மேலும் அறிய:

    1848ல் இந்த நாளில் அறிவியல் முன்னேற்றதிற்கான அமெரிக்க சங்கம் தோற்றுவிக்கப்படுதல்.

    1854ம் ஆண்டில் இந்த நாளில் கிரிமியப் போரில் ஆல்மாவில் நடந்த யுத்தத்தில் பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சுப் படைகள் ரஷ்யாவைத் தோற்கடித்தல்.

    1857ல் இந்த நாளில் இந்தியப் புரட்சி (சிப்பாய்க் கலகம்) ஒடுக்கப்பட்டு, கிழக்கு இந்தியக் கம்பெனியினர் மீண்டும் டில்லியைக் கைப்பற்றுதல். சிப்பாய்க் கலகமாக ஆரம்பித்து, இந்திய முதல் சுதந்திரப் போராட்டமாக உருவெடுத்த இந்தப் புரட்சி பற்றி மேலும் அறிய:


    1881ம் ஆண்டில் இந்த நாளில் அமெரிக்க அதிபர் ஜேம்ஸ் கார்ஃபீல்ட் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து செஸ்டர் ஏ ஆர்தர் அமெரிக்காவில் 21வது அதிபராக பொறுப்பேற்றார். ஜேம்ஸ் கார்ஃபீல்ட் பற்றி மேலும் அறிய:

    2001ம் ஆண்டில் இந்த நாளில் அமெரிக்க அதியர் ஜார்ஜ் டபுள்யூ புஷ் அமெரிக்க கூட்டு சபைக் கூட்டத்தில் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தை அறிவித்தல். இது பற்றி மேலும் அறிய:

    2008ம் ஆண்டில் இந்த நாளில் பாகிஸ்தானில், இஸ்லாமாபாதில் வெடிகுண்டு நிரப்பிய் ஒரு டிரக் மாரியாட் ஹோட்டல் முன் வெடிக்க வைக்கப்பட்டது.  இதில் 54 பேர் கொல்லப்பட்டனர். 266 பேர் காயமடைந்தனர்.

    1384ம் ஆண்டில் இந்த நாளில் நேப்பிள்ஸ் மன்னர் முதலாம் லூயி காலமானார்.

    இந்த நாள் தாய்லாந்தில் தேசீய இளைஞர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.


17 செப்., 2012

மனதில் பதிந்தவை-15: ஆனந்த விகடன் செப்டம்பர் 19, 2012 இதழ்

ஆனந்த விகடன் செப்டம்பர் 19, 2012 இதழ்

ஆனந்தவிகடனும், புதிய தலைமுறையும் தமிழில் நான் தவறாது வாங்கிப் படிக்கும் வார இதழ்கள். படித்து மகிழ்ந்தவற்றை எனது வலைப்பூவில் பதிந்து, மற்றவர்களும் படித்து மகிழச் செய்ய வேண்டும் என்பது ஆசை. ஆனால் அது பெரும்பாலும் முடியாமலேயே போய்விடுகிறது. அதற்கு எவ்வளவோ காரணங்கள். இன்று என்னவோ, ஒரு வேகம். பதிந்தே தீரவேண்டும் என்ற உறுதி. இதோ ஆரம்பித்துவிட்டேன்.

முதலில் ஆண்டனி ராஜின், “உலை கொதிக்கும் கூடங்குளம்”. சிறப்பான கட்டுரை. எனது தனிப்பட்ட கருத்து அணு உலைகளுக்கு எதிரானது. அணு உலை எங்கு அமைப்பதாயினும், என்னைப் பொறுத்தவரை அது கவலை அளிக்கும் ஒரு செயல், தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றுதான். அதன் ஆபத்துக்கள் அவ்வளவு கொடூரமானவை. தலைமுறை தலைமுறையாக, நூற்றுக் கணக்கான ஆண்டுகள் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை. பல நூறு சதுர கிலோமீட்டர்கள் மனிதர்கள் அணுக முடியாத இடமாக மாறும் அபாயம் நிச்சயமாக இருக்கிறது. பெரிய நில நடுக்கங்கள் நேராது என்றோ, பெரிய சுனாமிகள் ஏற்படாது என்றோ யாரும் உறுதி கூறமுடியாது. மேலும் நம் நாட்டைப் பொறுத்தவரை பயங்கரவாத ஆபத்தும் அதிகமாக இருக்கிறது. இதைப் பற்றிய தகவல்களை ஏராளமாகத் தொகுத்து வைத்திருக்கிறேன். அவை அனைத்தையும் ஒரே இடத்தில் பதிந்து, படிக்கச் செய்தால் யாருமே அணு உலைகளுக்கு ஆதரவு வழங்கமாட்டார்கள். பிரச்சினை என்னவென்றால், ஒவ்வொன்றும் அங்கும் இங்குமாக சிதறிக் கிடக்கின்றன. மறுபடியும் அவற்றை ஒன்று திரட்ட வேண்டும்.

மனித வாழ்க்கையில் எவ்வளவோ ஆபத்துக்கள் இருக்கின்றன. ஆபத்து என்று பார்த்தால் எந்த சாதனையுமே செய்யமுடியாது என்ற வாதம் அணு உலைகளுக்குப் பொருந்தாது. ஆயிரம் ஆண்டுகள் அவற்றின் பாதிப்புக்கள் தொடரக்கூடும். அதை நாம் மறந்துவிடக் கூடாது. அவ்வளவு ஆபத்து இருக்கையில், மின் சக்தியை உற்பத்தி செய்ய வேறு வழியே இல்லை என்பது போல் காட்டுவது ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இல்லை. ஒரு அணு உலைக்காகச் செலவழிக்கும் பணத்தில் நிச்சயமாக மாற்று முறைகளில் மின்சாரம் தயாரிக்க முடியும்.

என்னைப் போன்றப்வர்கள் பலவகைகளில் கோழைகள். எங்கள் கருத்துக்களை மனதுக்குள் வைத்துப் புழுங்கவோ, நெருங்கியவர்களிடம் மட்டுமே பகிர்ந்துகொள்ளவோ அல்லது வலைப்பூவில் பட்டும் படாமலும் பதிவுசெய்யவோதான் முடியும். ஆனால் கூடங்குள கிராம மக்கள், எளிய மீனவ மக்கள், குழந்தைகள், பெண்டிர்கள் என்று குடும்பத்தோடு மிகத் துணிச்சலோடும், உறுதியோடும், தெளிவோடும், ஆவேசத்தோடும் அறப்போராட்டத்தில் இறங்கி, எல்லாவித் அடக்குமுறைகளையும், ஆபத்துக்களையும் தைரியமாக எதிர்கொள்வதைப் பார்க்க பிரமிப்பாக இருக்கிறது. அவர்களது விழிப்புணர்வு போற்றத்தக்கது.

“இது எங்க மண்ணு. இது எங்க கடல். உங்களுக்கு அணு உலை வேணும்னா உன் இடத்துல தூக்கிட்டுப்போயி வச்சுக்க...” என்று முதலில் பாராவிலேயே அந்த மக்களின் அனல் கக்கும் வார்த்தைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தடியடி, கண்ணீர்ப்புகைக் குண்டுவீச்சு, துப்பாக்கி சூடு என்ற போலீஸ் நெருக்கடிகள் கூடக்கூட இன்னும் உறுதியாகிறார்கள் கூடங்குளம் மக்கள்.

மேலும் சுப.உதயகுமாரனின் கீழ்க்கண்ட வரிகள் இன்றைய உண்மைய அப்படியே பிரதிபலிக்கின்றன:

“நாம் நம் இயற்கை வளங்களை இவர்களிடமிருந்து மீட்டெடுக்க வேண்டியிருக்கிறது. நம் மண், நிலம், நீர், கடல் என்று இயற்கைச் செல்வங்கள் அனைத்தும் நமக்கே சொந்தம் என்று உரக்கச் சொல்ல வேண்டியிருக்கிறது.”

அடுத்து, சொல்வனம் பகுதியில் ஹேமா செல்வராஜ் அவர்களது கவிதை, “கறுப்பும் வெள்ளையும்” சிறப்பாக இருந்தது.

பாரதி தம்பியின் “மிஸ்டுகால்”பகுதியில் பெண்களுக்கும் செல்போங்களுக்குமான உறவு பற்றி மிகச் சிறப்பாக இருந்தது. அது:

“ஒரு பெண்ணுக்கும் செல்போனுக்குமான உறவு, மிக அந்தரங்கமானது. கட்டுப்பாடுகள் நிறைந்த பெண்ணின் ரகசிய உலகத்தை செல்போன் மிக இலகுவாக திறந்து வைக்கிறது. ‘இவர் கூடப் பேசாதே, அவர் கூடப் பேசாதே, மெதுவாகப் பேசு, அக்கம் பக்கம் பார்த்துப் பேசு’ எனப் பெண்ணைப் பேசாமல் இருக்கவைக்கத்தான் எத்தனை எத்தனை கட்டுப்பாடுகள்? அனைத்தையும் ஒரு விரல் சொடுக்கில் உடைத்துவிட்டது செல்போன். அந்தச் சின்னஞ் சிறிய கருவி, பெண்களின் உலகத்தில் நிகழ்த்தியிருக்கும் பாய்ச்சல் அசாத்தியமானது.”

அடுத்து, கே.ராஜா திருவேங்கடத்தின், “இது புது ரூட்டு!”. ரூட்ஸ் என்ற நிறுவனம் ஒரு நல்ல ஐடியாவைச் செயல்படுத்தியிருக்கிறது. அதிலிருந்து:

“...வந்துவிட்டது ‘ரூட்ஸ்’. சென்னையில் எந்த வழித்தடத்தையும் ஒரே போனில் தெரிந்துகொள்ளலாம்.

...

8695959595 நம்பருக்கு யார் போன் செஞ்சாலும் அவங்களுக்குத் தேவையான பஸ் ரூட், லோக்கல் டிரெய்ன் ரூட், டைம்னு எல்லா விஷயங்களும் சொல்வோம். அதோட நீங்க வெளியூர் கிளம்பினால், அந்த ஊருக்கு ரயில் வசதி இருக்குதா? அதில் இடம் இருக்குதானு அத்தனை தகவல்களும் கொடுப்போம்” என்றார் (அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்களில் ஒருவரான அஸ்வின் குமார்.)

பாராட்டப்பட வேண்டிய சேவை! ரூட்ஸ் நிறுவனத்திற்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.

அடுத்து விகடன் வரவேற்பறையில் வி.ஆர்.பி.மனோகர் இயக்கி, எஸ்.ஜே.கிரியேஷன்ஸ் வெளியிட்டுள்ள அவஸ்தை என்ற குறும்படம் பற்றி. கிராமங்களில் கழிப்பிட வசதியின்மை தொடர்பான பெண்களின் அவஸ்தையச் சொல்லும் படம். கிராமம் என்றல்ல நகரங்களிலும் ஆணாகிய நானே சில முறை அவஸ்தைப் பட்டிருக்கிறேன். ஆண்கள் என்னவோ எப்படியோ சமாளித்துவிடுகிறோம். ஆனால் பெண்களின் நிலை உண்மையிலேயே படு அவஸ்தைதான். இந்தப் பிரச்சினையை படமாக்கிய அனைவரும் பாராட்டப்பட வேண்டியவர்கள். பாராட்டுக்கள்.

அடுத்து, எனக்கு மிகவும் பிடித்த, நான் விடாது தொடர்ந்து படித்துவரும் ராஜு முருகனின், “வட்டியும் முதலும்’. அப்பா! என்ன அற்புதமாக எழுதுகிறார். நான் இந்தத் தொடரை தொகுத்து வைத்திருக்கிறேன். அதிலிருந்து:

“எக்ஸிபிஷன் போனீங்களா குட்டி?”

“ஆமாம்பா!”

“எப்போ போனீங்க?”

“நாளைக்குப் போனோமே!”

இப்படிச் சொல்லிவிட்டு விளையாட ஓடிவிட்டாள் என் அண்ணன் மகள் பொன்மலர். எனக்கு அவள் சொல்லிவிட்டுப்போன கடைசி வார்த்தைகள் புகைப்படப் புன்னகையைப் போல நிலைத்துவிட்டது. காலத்தை இப்படி அசால்ட்டாகத் தூக்கிப்போட்டு மிதிக்க ஒரு குழந்தையால்தான் முடியும்.....

....

...ஒவ்வொருவருக்குள்ளும் ஒளிந்துகிடக்கும் ஒரு குழந்தைதான் மனித இனத்தின் பேரழகு இல்லையா? வந்து சேர்ந்துவிட்ட உணர்ச்சிகளை எல்லாம் எரித்து விட்டு, குழந்தையாகிவிடத்தானே தவிக்கிறோம் எல்லோரும்?...

...

...அ நேக உணர்ச்சிகளை, நியாய அ நியாயங்களைக் கடந்து வந்துவிட்ட பிறகு, அழுகையும் சிரிப்பும் காற்றும் இசைய்ம் மட்டும் நிறைந்திருக்கிற பரிசுத்தத்துக்குள் போய் ஒருகணம் ஒளிந்து கொள்கிற கைக்குழந்தை நம் ஒவ்வொருக்குள்ளும் தூங்கிக் கொண்டு இருக்கிறது...

....

இப்போது வீட்டுக்குள் நுழையும்போது பொன்மலர் விளையாடிக் கொண்டு இருக்கிறாள்.

“ஏய்! காலைல ஸ்கூல்தானே? போய் சீக்கிரம் படு!”

“இல்லையே... ஸ்கூல் இல்லையே... நேத்திக்கு லீவாச்சே!” என்றபடி ஓடுகிறாள். நாளையும் நேற்றையையும் சர்வ சாதாரணமாக இடம் மாற்றிப் போட்டு பொம்மைகளைப் போல விளையாடும் அவளைப் பார்க்கப் பொறாமையாக இருக்கிறது. என்னதான் செய்ய முடியும்... ஒருக்காலும் நேற்றைக்குள் நுழையவே முடியாத நம்மால்!

அடுத்து, மருத்துவர் கு.சிவராமனின், “ஆறாம் திணை”. இந்தத் தொடரை முதலில் சரியாகக் கவனிக்கவில்லை. கவனித்தபிறகுதான் தெரிந்தது எவ்வளவு அற்புதமான, அனைவரும் படிக்க வேண்டிய ஒரு தொடர் என்று. உடல் நலத்தையும், உணவையும் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டிய பல நல்ல விஷயங்களை படிக்கலாம். அதிலிருந்து:

...ஒரு தாவரத்தின் ஒட்டுமொத்த உழைப்பின் சாரம் கனிகளில்தான் பெரும்பாலும் தேக்கி வைக்கப்படும். தனது அடுத்த தலைமுறையை ஆரோக்கியமாக் விருத்திசெய்ய தாவரம், தான் உருவாக்கும் விதைக்கு அளிக்கும் ஊட்டத்தத்தான் பழங்களின் வாயிலாக நாமும் பகிர்ந்து கொள்கிறோம்.

...

நீங்கள் எந்த மண்ணில் வாழ்கிறீர்களோ, அந்த மண்ணில் விளையும் காய், கனிகளே உங்கள் உடலுக்கு மிகச் சிறந்த பலங்களைத் தருபவை என்பது..

...

எய்ட்ஸ் நோயாளிகளுக்கே ஊட்டம் கொடுக்க நோயை எதிர்த்து அவர்கள் போராடச் சிறந்த பழமாக எதைத் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள் தெரியுமா? நெல்லிக்காய்.

...

...புற்றைத் தடுக்கும் ஆற்றலும் ரத்தத்தில் கெட்ட கொழுப்பைக் குறைக்கும் ஆற்றலும் மாதுளைக்கு உண்டு....

இதுபோன்ற பல பயனுள்ள தகவல்கள், சுவையான நடையில் இக்கட்டுரையில். படித்து மகிழலாம், பயன் பெறலாம்.

அடுத்து, பாரதி தம்பியின் மற்றொரு கட்டுரையான, “ஜல சத்தியாக்கிரகம்!”. கழுத்தளவு நீரில் நின்று 17 நாட்கள் போராடிய ஓங்கராஸ்வரர் அணைப் பகுதியிலிருந்த அப்பாவி கிராம மக்களின் போராட்டத்தையும், அவர்களின் துயரத்தையும் மனதில் தைக்கும் வண்ணம் சிறப்பாக எழுதியிருக்கிறார். நம் நாட்டில் அரசாங்கங்கள் ஏன் இப்படி எப்போதுமே மக்களுக்கு எதிராகவே செயல்படுகின்றன என்ற என் வேதனையை இங்கே பதிவுசெய்யாமல் என்னால் இருக்கமுடியவில்லை.

அடுத்து, சமஸின், “பாடம் படிப்போம்!” அதிலிருந்து:

...

...சிவகாசிக்கு வெளியே இருப்பவர்களுகுத் தீ விபத்துகள் பெரிய விஷயமாகத் தெரியலாம். ஆனால், மாதம் நாலைந்து விபத்துகள் அங்கு நடக்கின்றன; அவற்றில் பல யாருக்கும் தெரியாமல் மூடி மறைக்கப்படுகின்றன. உண்மையில், சிவகாசி விபத்துகளின் மூலகாரணம் தீ அல்ல; அலட்சியம். அரசிடம் அலட்சியம் ஊழலால் உருவாகிறது; மக்களிடம் அலட்சியம் விழிப்பு உணர்வு இன்மையால் உருவாகிறது.

சிவகாசியில் இயங்கும் பட்டாசுத் தொழிற்சாலைகளில் பாதிக்கும் மேற்பட்டவை அனுமதி பெறாதவை. பட்டாசுத் தயாரிப்புத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் 2.5 லட்சம் பேரில் கிட்டத்தட்ட 50 ஆயிரம் பேர் குழந்தத் தொழிலாளிகள். எல்லா விதிமீறல்களும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறைக்குத் தெரியும். லஞ்சம் அதன் கண்களைக் கட்டி இருக்கிறது...

சிறுவயதிலிருந்தே நான் விகடன் படித்து வருகிறேன். தற்போது எனக்கு வயது 63. விகடன் என்னை என்றும் ஏமாற்றியதில்லை. புத்தகத்தை மூடிவைக்கும் போது எப்போதும் ஒரு மன நிறைவு இருக்கும். கூடவே அதில் படித்த கனமான விஷயங்கள் நெஞ்சில் அழுத்தும், சிந்திக்க வைக்கும்.

நன்றிகளும்,. பாராட்டுகளும் விகடனுக்கு.