28 ஜூன், 2022

நலக்குறிப்புகள்

கவிதை நேரம்


நன்றி :

முனைவர் அ சு இளங்கோவன் 
மற்றும் 
முகநூல் 

நூல் மயம்

சுற்றுச்சூழல் : மரம் நடுவோம்!

இன்றைய குறள்

சிரிப்புத்தான் வருகுதையா!

இன்றைய சிந்தனைக்கு

சாதத்துடன் பக்தி இணையும்போது அது பிரசாதமாகிவிடும்.!

பட்டினியுடன் பக்தி சேரும்போது அது விரதமாகிவிடும்.!

தண்ணீருடன் பக்தி சேரும்போது அது புனித நீராகிவிடும்.!

பயணத்துடன் பக்தி சேரும்போது அது யாத்திரையாகிவிடும்.!

இசையுடன் பக்தி சேரும்போது அது கீர்த்தனையாகிவிடும்.!

பக்தியில் வீடு திளைக்கும்போது, அது கோயிலாகிவிடும்.!

செயல்களுடன் பக்தி சேரும்போது, அது சேவையாகிவிடும்.!

வேலையுடன் பக்தி சேரும்போது, அது கர்மவினையாகிவிடும்.!

பிரம்மச்சரியத்தோடு பக்தி சேரும் போது அது துறவறம் ஆகின்றது.!

இல்லறத்தோட பக்தி சேரும் போது தான் அது ஆன்மீகம் ஆகின்றது.!

ஒருவனை பக்தி ஆக்கிரமிக்கும்போது அவன் மனிதனாகிவிடுகிறான்.!

மனிதனுள் பக்தி முழுமையடையும் போது ஞானியாகிவிடுகிறான்..!!

மதம் எதுவானாலும் 
மனிதன் நல்லவனாக இருக்கவேண்டும்.

நன்றி :

22 ஜூன், 2022

குட்டிக்கதை

🔘 *ஒரு மனிதர் சாலை ஓரத்தில் ஓடிக் கொண்டிருந்தபோது தெரியாமல் இன்னொரு நபர் மீது இடித்துவிட்டார்.*
▪ *ஐயோ… தெரியாமல் இடித்து விட்டேன் மன்னித்து விடுங்கள் என்று இவர் சொல்ல, பரவாயில்லை என்று அவர் சொல்ல இருவருமே கண்ணியத்துடனும் புன்னகையுடனும் விடைபெற்றார்கள். அவர்களிடையே மனஸ்தாபத்துக்கான காரணமில்லாமல் போயிற்று.*
🔳 *அன்று அவர் வீட்டுக்கு வந்தார்.*
▪ *இரவு உணவு முடித்து திரும்புகையில் அவருடைய மகன் அவருக்குப் பின்னால் நின்றிருந்தான், கைகளைப் பின்னால் கட்டியபடி. தந்தை திரும்புகையில் அவனைத் தெரியாமல் இடித்து விட்டார்.*
🔘 *‘வழியில் நிற்காதே.. ஓரமாய்ப் போ..’*
🔳 *அவருடைய வார்த்தையில் அனலடித்தது.*
▪ *சிறுவன் முகம் வாடிப்போய் விலகினான். அவனுடைய கண்களில் சோகத்தின் நதி முளைத்தது. அது இமை ஓரங்களை இடித்து தரையிறங்கத் துவங்கியது.*
▪ *இரவு தூங்குகையில் அவர் மனதுக்குள் ஒரு சிந்தனை ஓடியது.*
🔳 *வழியில் யாரோ ஒருவரிடம் நாகரீகமாகவும், அன்பாகவும் நடந்து கொள்ளத் தெரிந்த எனக்கு சொந்த மகனிடம் அப்படி நடந்து கொள்ளத் தெரியவில்லையே என்று மனதுக்குள் எண்ணினார்.*
🔳 *நேராக எழுந்து மகனின் படுக்கையறைக்குச் சென்றான்.*
▪ *உள்ளே மகன் தூங்காமல் விசும்பிக் கொண்டிருந்தான்.*
🔳 *அவனுடைய கண்கள் சிவந்திருந்தன. அவனருகில் மண்டியிட்ட தந்தை ‘என்னை மன்னித்துவிடு நான் உன்னிடம் அப்படிப் பேசியிருக்கக் கூடாது..’ என்றார்.*
.
▪ *சிறுவன் திரும்பினான்.*
.
🔳 *சிறுவனின் கண்களிலிருந்த கவலை சட்டென்று மறைந்தது. எழுந்து உட்கார்ந்தான்.*
.
▪ *வேகமாக கட்டிலிலிருந்து கீழே குதித்து கட்டிலினடியில் வைத்திருந்த பூங்கொத்தை தந்தையின் கையில் வைத்தான்.*
.
🔘 *‘இதென்ன ?’ தந்தை வியந்தார்.*
.
🔳 *இன்றைக்கு வெளியே நடந்து கொண்டிருந்தபோது இந்தப் பூக்களைப் பார்த்தேன்.*
.
🔘 *பல நிறங்களில் இருந்த பூக்களைப் பொறுக்கி உங்களுக்காக ஒரு மலர்க்கொத்து செய்தேன். அதிலும் குறிப்பாக உங்களுக்கு நீல நிறம் பிடிக்கும் என்பதற்காக அதை நிறைய சேகரித்தேன்.*
.
🔳 *அதை உங்களிடம் ரகசியமாகச் சொல்வதற்காகத் தான் உங்கள் பின்னால் வந்து நின்றேன்…*
.
▪ *சிறுவன் சொல்ல தந்தை மனம் உடைந்தார்.*
.
🔘 *சிறுவனையும் மலர்களையும் ஒருசேர அணைத்த அவருடைய கண்களில் கண்ணீர் வழிந்தது.*
.
🔘 *ஒரு மழலையின் அன்பைப் புரிந்து கொள்ள முடியாத நிலையில் தான் இருந்ததற்காக அவர் வருந்தினார்.*
.
▪ *குடும்பம் என்பது கடவுள் நமக்காக பூமியில் ஏற்பாடு செய்திருக்கும் சொர்க்கம்.*
.
▪ *அதை சொர்க்கமாக்குவதும் நரகமாக்குவதும் நம்முடைய செயல்களில் தான் இருக்கிறது.*
.
🔘 *பணத்துக்கான ஓட்டங்களில் நாம் இழந்து கொண்டிருப்பது ஆனந்தத்தின் நிமிடங்களை என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.*
.
🔳 *ஒரு வேளை நாம் நாளை இறந்து போக நேரிட்டால் அலுவலகம் இன்னொரு திறமை சாலியை சில நாட்களில் கண்டு பிடிக்கும். குடும்பம் அப்படியல்ல.*
.
▪ *ஏற்படும் இழப்பு ஆழமாய்த் தைத்த முள் போல நினைவுகளால் நிமிண்டும் போதெல்லாம் வலித்துக் கொண்டே இருக்கும்.*
.
🔳 *வாழ்க்கையில் எல்லாம் இருந்தாலும் அன்பினால் நிரப்பப்படாவிட்டால் அது வெறுமையாகவே இருக்கும். பணமே மகிழ்ச்சியைத் தரும் என்பது தலைமுறைக்குத் தரப்பட்டிருக்கும் தவறான பாடம். மகிழ்ச்சியை சதுர அடிகளில் வாங்க முடியாது.
.
📌 *குடும்பங்களில் அதிக நேரம் செலவிடுங்கள்.* அன்பே ப்ரதானம் என்பதை மறவாதீர்கள்.... ❤️
.
💢 *அன்பை அதிகமாய் சம்பாதியுங்கள்.*✍🏼🌹

21 ஜூன், 2022

சிரித்து வாழவேண்டும்!

மனித நேய தினம்

குட்டிக்கதை

புண்ணிய கணக்கு இதுதான்....

 தென்காசி ரயில் நிலையத்தை விட்டு  சுமைகளுடன்   வெளியே  வந்தேன் ஆழ்வார்குறிச்சிக்கு  ஆட்டோ பேசினேன் 

ஆட்டோக்காரனிடம்
' எவ்வளவு..? என்று  கேட்டேன் ...

''600-ரூபாய்'' என்றான்...

''400-ரூபாய்க்கு வருமா ???என்றேன்,..

சற்று யோசித்த அவன் 
'சரி  450-ரூபாய் கொடுங்க...  வண்டி ஏறுங்க சார்'' என்றான்.

 ஆட்டோ பறந்தது... 

''ஏம்பா   இந்த வழியா சவாரி போனா நீங்க  டிபன் எங்கே  சாப்பிடுவிங்க...? என்றேன்... 

ரோட்டுக்கடை தான்  சார் என்றார் 

''அப்ப  நீங்க  சாப்பிடும் கடை எதுவோ அங்கே வண்டியை நிறுத்ங்க . இருவரும்
டிபன் சாப்பிட்டு விட்டு போவோம்'' என்றேன்...

இரண்டு கிலோமீட்டர் தாண்டி ஒரு புளியமரத்தின் ஓரமாய் இருந்த தள்ளு வண்டிகிட்ட  ஆட்டோ நின்றது..

ஒரு நடுத்தரவயது அம்மா..
அவர்கள் கணவர் துணையற்றவர் என சொல்லியது தோற்றம்..
 
''வாங்க சார்'' என்றார்

""இங்கதான் சார்.......வயித்துக்கு ஒன்னும் பண்ணாது'' என்றார் ....ஆட்டோ டிரைவர்

இட்லி... வடை... பொங்கல்... பூரி... என கட்டினோம்..

''எவ்ளோம்மா?'' என்றேன்.

''60-ரூபாய் சார்'' என்றார்  

100-ரூபாய் கொடுத்தேன்...

மீதியை.., சில்லரையாக பொருக்கியது அந்த அம்மா...

''இன்னக்கி  வியாபாரம்  டல் சார்'' அதன் சில்லரை கஷ்டம் என்றார்...

''சரிம்மா 40-ரூபாய் உங்க கிட்டேயே இருக்கட்டும்.. நாளைக்கு இந்த பக்கமா வருவேன்...அப்போ வாங்கிக்கிறேன்''
என்று கூறி புறப்பட்டோம்...

''சார் நீங்க இன்னைக்கே  ஊருக்கு போறீங்க.... நாளைக்கு வருவேன்னு சொல்லிட்டு,40-ரூபாய அந்த அம்மாகிட்ட விட்டுட்டு வர்ரீங்க?'' என்றார்  ஆட்டோக்காரர்

''அண்ணா  இப்ப நாம சாப்பிட்டத ஒரு ஹோட்டல்ல புகுந்து சாப்பிட்டிருந்தா  நிச்சயம் 250-ரூபாய் ஆகி இருக்கும். அப்புறம் டிப்ஸ், வரி என 300-ரூபாய்கொடுத்திருப்போம்...  இல்லையா....?

':எப்பப்ப வாய்ப்பு கிடைக்குதோ அப்பப்ப இந்த மாதிரி ஆளுங்களுக்கு நாம உதவணும் அண்ணா'' என்றேன்.

சங்கம் அமைப்பது.. வசூல்செய்வது... அதன்மூலம் பொதுசேவை செய்வது.. 
புண்ணிய தலங்கள் செல்வது, 
நன்கொடை கொடுப்பது.. உண்டியல் போடுவது என *இப்படித்தான் புண்ணியம் தேட வேண்டும் என்பதில்லை நடைமுறை வாழ்கையிலே இப்படியும் தேடலாம்"என்றேன்..*

ஆட்டோ வீடு வந்து சேந்ததது..

''இந்தாங்க அண்ணா நீங்க  கேட்ட 450-ரூபாய் என எடுத்துக் கொடுத்தேன்..

*'400-ரூபாய் போதும்'' சார் என்றார்....!*

''என்னாச்சு அண்ணா? என்றேன்...

*''அந்த 50 ரூபாய் உங்க கிட்ட இருந்தா நீங்க இந்த மாதிரி யாருக்காவது உதவி செய்வீங்க சார், அதன் மூலம் எனக்கும் புண்ணியம் கிடைக்குமே சார்''* என்றார் ...!

ஒருகணம் மூச்சு நின்றது

*நான் போடும்  புண்ணிய கணக்கை விஞ்சி நின்றது, இந்த ஆட்டோகாரரின் புண்ணிய கணக்கு...!*

17 ஜூன், 2022

கவிதை நேரம்

நன்றி :
கவிஞர் நெல்லையப்பன் 

இன்றைய குறள்

சுற்றுச்சூழல்

அபூர்வமான படங்கள்

நலக்குறிப்புகள்

16 ஜூன், 2022

சிரித்து வாழவேண்டும்!


இன்று ஜூன் 16. மன்னிக்கவும்,  தாமதமான பதிவு !

இன்றைய குறள்

சிரிக்கவும் சிந்திக்கவும்

குழந்தை வளர்ப்பு

நலக்குறிப்புகள்

இன்று சில தகவல்கள்

1981

1981ம் ஆண்டு ராஜஸ்தான், ஜெய்பூரில் அந்த பெரிய வெள்ளம் வந்தது. தரிசாக இருக்கும் விவசாய நிலங்களில் வெள்ளம் வந்தால் அவற்றின் மேற்புற மண் அடித்து செல்லபட்டு மண்வளம் குன்றிவிடும். அதுதான் இங்கும் நடந்தது. விவசாயம் பொய்த்தது. விவசாயிகள் இடம்பெயர்ந்தார்கள். நிலம் தரிசாக கிடக்க அங்கிருந்து கிளம்பிய புழுதி வெள்ளம் நகரையே அவ்வப்போது ஸ்தம்பிக்க வைக்கும்

2013

அந்த ஊரை சேர்ந்த ஓட்டல் அதிபர் மன்வேந்திர சிங் ஷெகாவத் என்பவர் நிறைய பணம் சேர்த்துக்கொண்டு அந்த ஊருக்கு வந்தார். தரிசாக கிடந்த 500 எக்கர் நிலங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கினார். அதன்பின் அந்த நிலத்தை மையமாக வைத்து ஒட்டுமொத்த கிராமங்களுக்கும் பசுமையை உண்டாக்க முனைந்தார்.

ஜெய்பூரில் மழைக்காலத்தில் பெய்யும் மழையை சேமித்து வைத்தாலே மேல்புறத்து மண் அடித்து செல்ல்படுவது நின்றுவிடும் என திட்டமிட்டு முதலில் தன் நிலத்தில் ஒரு பெரிய குளத்தை வெட்டினார். மழைநீரை அங்கே கொண்டுவந்து சேர்க்க நீர்பிடிப்பு பகுதிகளில் சிறு கால்வாய்கள் வெட்டபட்டன. நிலமெங்கும் பாத்திகள் வெட்டபட்டன. பாத்திகளில் விழும் நீர் ஓட வழியின்றி ஆங்காங்கே தேங்கி நிற்கும். அதை சுற்றி புல்லும், செடிகளும் வளர ஆரம்பிக்கும்.

அதன்பின் ஜப்பானிய மியாவாகி முறையை பயன்படுத்தி 500 ஏக்கரில் 2 லட்சம் மரங்கள் நடப்பட்டன. மியாவாக்கி என்பது மிக வித்தியாசமான முறை. வழக்கமாக ஒரு ஏக்கர் நிலத்தில் ஆயிரம் மரங்களை தான் நடமுடியும். ஆனால் மியவாக்கி முறையில் அருகருகே மிக நெருக்கமாக 20,000 மரங்களை நடுவார்கள். வெவேறு வகை மரங்களை இப்படி மிக நெருக்கமாக நடுவதால் அவற்றுக்கிடையே கடுமையான போட்டி ஏற்பட்டு ஒன்றை ஒன்று முந்திக்கொண்டு வளரும். வழக்கமான முறையில் ஆன்டுக்கு ஒரு மீட்டர் மட்டுமே வளரும் மரங்கள் இம்முறையில் ஆண்டுக்கு 10 மீட்டர் உயரத்தில் வளரும்.,

இதன்பின் மேலும் நாலு குளங்கள் வெட்டபட்டன. இவற்றில் ஆண்டுக்கு 40 கோடி லிடட்ர் நீரை தேக்கிவைக்கமுடியும். குளங்களும், மரங்களும் வந்ததும் மீன்கள், ஆமைகள், பறவைகள் எல்லாம் அங்கே வர ஆரம்பித்தன. சுற்றுவட்டார கிராமங்களின் கிணறுகள் அனைத்திலும் மந்திரம் போட்டால் போல் நிலத்தடி நீர்மட்டம் பெருகி விவசாயம் செழிக்க ஆரம்பித்தது.

இந்த நிலத்துக்கு துன் (Dhun) என பெயர் வைத்து அங்கே 85 ஏக்கரில் மாட்டுபண்ணை, நாற்று உற்பத்தி எல்லாம் செய்து வருகிறார் மன்வேந்திர சிங். மாடுகளை மேயவிடுவதால் இயற்கையான சாணியும், உரமும் நிலத்துக்கு கிடைத்து மண்வளம் மேம்படுகிறது

இம்மாதிரி குளங்களை வெட்டி நீரை தேக்கினால் ஒரு நாடு எப்படி மேம்படும் என்பதை நன்றாக அறிந்தவர்கள் சோழர்கள். அவர்கள் வெட்டிய குளங்களும், ஏரிகளும் தான் 

இன்றும் தமிழகம் செழிக்க காரணம். இம்முறையை இந்தியாவின் வரண்டபகுதிகள் அனைத்திலும் கையாண்டு கிடைக்கும் நீர்வளத்தை நன்றாக பயன்படுத்தினால் ஒட்டுமொத்த விவசாயம் செழிக்கும், பல்லுயிர்பெருக்கமும் மேம்படும். 

#பூமியும்_வானமும்

~ நியாண்டர் செல்வன்

நன்றி :


15 ஜூன், 2022

சிரிப்புத்தான் வருகுதையா

குட்டிக்கதை

படத்தில் உள்ள இந்த நாயின் பெயர் ஹச்சிகோ. 1923ம் ஆண்டு, இசாபுரா என்ற ஜப்பானியர் தினமும் வேலைக்குச் செல்லும் ரயில் பெட்டியில் இந்த நாயை குட்டியாக இருக்கும் போது கண்டெடுத்தார். அவர் அதனை எடுத்து வீட்டில் வளர்த்து வந்தார். 

இந்த ஜப்பானியர் தினமும் ரயிலில் வேலைக்குச் செல்லும் போது இந்த நாயையும் ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்வார். 10 மணித்தியாலம் கழித்து அவர் திரும்பும் வரை இந்த நாயும் நாளாந்தம் ஸ்டேஷனில் காத்திருக்கும்!

ஒரு நாள் திடீரென வேலை செய்யும் இடத்தில் இவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்து போனார். நாய் தனது எஜமான் திரும்பி வருவார், வருவார் என ஸ்டேஷனில் காத்திருந்தது. ஒருநாள் இரண்டு நாள் அல்ல! 10 ஆண்டுகளாக காத்திருந்தது, ஆனால் அவர் கடைசி வரை வரவே இல்லை! 

வருவோர், போவோர் இந்த நாயை அனுதாபத்தோடும் பரிதாபத்தோடும் பார்த்து வந்தனர். பின்னர் அது அவ்விடத்திலே இறந்து போனது. 

ஜப்பானில் உள்ள குறித்த ரயில் நிலையத்தில் இந்த நாயின் சிலை வடிவமைக்கப்பட்டு, ஞாபகார்த்த சின்னமாக வைக்கப்பட்டுள்ளது.

விசுவாசம் என்பது மலைகளை விட கனமானது. கயிறுகளை விட நீளமானது. நன்றி என்ற சொல்லை மனிதன் நாயிடமிருந்துதான் கற்றுக்கொள்ள வேண்டும்.

#படித்தது

நன்றி :

நலக்குறிப்புகள்

கவிதை நேரம்