28 பிப்., 2021

கருத்து மேடை

இந்த வண்ணத்துப் பூச்சியின் 
சிறகுகள் உதிர்ந்ததால் மீண்டும் 
மண்ணில் ஊர்கிறது புழுவாக....
நாடி நரம்புகள் தளர்ந்தாலும்
தன்னம்பிக்கை தளராமல்
மனதால் இன்னமும் பறக்கிறது!
யாசிக்காமல் வாழ்வதற்காக
வீதியில் யோசிக்காமல் காய்கிறது!

இவர்களைப் போன்றவர்களிடம் உங்கள்
அன்பையும் நேரத்தையும் பணத்தையும்
செலவு செய்யுங்கள். இவர்களிடம் பொருட்களை வாங்கும் போது இவர்களின் அன்பும் வாழ்த்துக்களும் உங்களுக்குக் கிடைக்கும். மிகவும் நன்றிகள் 🙏🙏🙏

-கல்யாணி சிவம்

நன்றி :

இன்றைய திருமந்திரம்

திருமந்திரம் - பாடல் #1046: நான்காம் தந்திரம் - 5. சக்தி பேதம் (சக்தியின் வடிவமான மந்திரமும் திரிபுரை சக்கரமும்)

திரிபுரை சுந்தரி அந்தரி சிந்துப்
பரிபுரை நாரணி யாம்பல வன்னத்
திருள்புரை யீசி மனோன்மனி யென்ன
வருபல வாய்நிற்கு மாமாது தானே.

விளக்கம்:

பாடல் #1045 இல் உள்ளபடி உருவமாகவும் உருவம் இல்லாததாகவும் இருக்கின்ற திரிபுரை சக்தி சுந்தரி, அந்தரி, சிந்து, நாரணி, மனோன்மனி ஆகிய ஐந்து பெயர்களைக் கொண்ட தேவியர்களாக இருந்து சக்தியளிக்கும் மாபெரும் சக்தியாக இருக்கின்றாள்.

ஐந்து தேவியர்கள்:

சுந்தரி - பேரழகு உடைய வெள்ளை நிறத்தைக் கொண்டவள் (சரஸ்வதி)
அந்தரி - வானம் போன்ற செம்மையான கருமை நிறத்தைக் கொண்டவள் (பார்வதி)
சிந்துப் பரிபுரை - செந்தூரம் போன்ற சிவப்பு நிறத்தைக் கொண்டவள் (மகேஸ்வரி)
நாரணி - நாராயணனுக்கு தேவியாகிய நீல நிறத்தைக் கொண்டவள் (லட்சுமி)
இருள்புரை ஈசி மனோன்மனி - அண்டத்து இருளைப் போன்ற கருமை நிறத்தைக் கொண்டவள் (மனோன்மனி)

குறிப்பு: பிரம்மாவின் படைப்புத் தொழிலுக்கு சக்தியாக சரஸ்வதியும், திருமாலின் காக்கும் தொழிலுக்கு சக்தியாக லட்சுமியும், உருத்திரனின் அழிக்கும் தொழிலுக்கு சக்தியாக பார்வதியும், மகேஸ்வரனின் மறைத்தல் தொழிலுக்கு சக்தியாக மகேஸ்வரியும், சதாசிவனின் அருளல் தொழிலுக்கு சக்தியாக மனோன்மனியும் இருக்கிறார்கள்.

நன்றி :

இன்றைய குறள்


நன்றி "

சிரிப்புத்தான் வருகுதையா!

நலக்குறிப்புகள்

காலை நற்சிந்தனைகள்

இயற்கையை நேசிப்போம்!


நன்றி :


இனிய காலை வணக்கம்!

27 பிப்., 2021

இன்றைய குறள்


நன்றி :

தொற்றுநோய்களும் ஹோமியோபதியும்

அபூர்வமான படம்!

தகவல் பலகை

சிரித்து வாழவேண்டும்!

ஆன்மீகம் : மாசி மகம்

24 பிப்., 2021

கல்லிலே கலைவண்ணம்!

கவிதை நேரம்


கனியிடை ஏறிய சுளையும் - முற்றல்
கழையிடை ஏறிய சாறும்,
பனிமலர் ஏறிய தேனும் - காய்ச்சும்
பாகிடை ஏறிய சுவையும்,
நனிபசு பொழியும் பாலும் - தென்னை
நல்கிய குளிரிள நீரும்,
இனியன என்பேன் எனினும் - தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர்!

பொழிலிடை வண்டின் ஒலியும் - ஓடைப்
புனலிடை வாய்க்கும் கலியும்,
குழலிடை வாய்க்கும் இசையும் - வீணை
கொட்டிடும் அமுதப் பண்ணும்,
குழவிகள் மழலைப் பேச்சும் - பெண்கள்
கொஞ்சிடும் இதழின் வாய்ப்பும்,
விழைகுவ னேனும், தமிழும் - நானும்
மெய்யாய் உடலுயிர் கண்டீர்!

பயிலுறும் அண்ணன் தம்பி - அக்கம்
பக்கத் துறவின் முறையார்,
தயைமிக உடையாள் அன்னை - என்னைச்
சந்ததம் மறவாத் தந்தை,
குயில்போற் பேசிடும் மனையாள் - அன்பைக்
கொட்டி வளர்க்கும் பிள்ளை,
அயலவ ராகும் வண்ணம் - தமிழ்என்
அறிவினில் உறைதல் கண்டீர்!

நீலச் சுடர்மணி வானம் - ஆங்கே
நிறையக் குளிர்வெண் ணிலவாம்,
காலைப் பரிதியின் உதயம் - ஆங்கே
கடல்மேல் எல்லாம் ஒளியாம்,
மாலைச் சுடரினில் மூழ்கும் - நல்ல
மலைகளின் இன்பக் காட்சி,
மேலென எழுதும் கவிஞர் - தமிழின்
விந்தையை எழுதத் தரமோ?

செந்நெல் மாற்றிய சோறும் - பசுநெய்
தேக்கிய கறியின் வகையும்,
தன்னிகர் தானியம் முதிரை - கட்டித்
தயிரொடு மிளகின் சாறும்,
நன்மது ரஞ்செய் கிழங்கு - கானில்
நாவி லினித்திடும் அப்பம்,
உன்னை வளர்ப்பன தமிழா! - உயிரை
உணர்வை வளர்ப்பது தமிழே!

நன்றி :

44வது சென்னை புத்தகத் திருவிழா!

பிப்ரவரி மாதம் 24ம் தேதி சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் தொடங்க இருக்கும் புத்தகத் திருவிழாவில் தேசாந்திரி பதிப்பகம் கடை எண் 494 மற்றும் 495. 

அனைவரும் வருக!

நன்றி :



இன்றைய திருமந்திரம்

திருமந்திரம் - பாடல் #1045: நான்காம் தந்திரம் - 5. சக்தி பேதம் (சக்தியின் வடிவமான மந்திரமும் திரிபுரை சக்கரமும்)

மாமாயை மாயை வயிந்தவம் வைகரி
ஓமாயை யுள்ளொளி யோராறு கோடியில்
தாமான மந்திரஞ் சத்திதன் மூர்த்திகள்
ஆமா யலவாந் திரிபுரை யாங்கே.

விளக்கம்:

மாமாயை, மாயை, வயிந்தவம், வைகரி, ஓமாயை, உள்ளொளி ஆகிய ஆறுவிதமான மாயையின் உச்ச நிலையில் உருவாகும் மந்திரங்கள் அனைத்தும் திரிபுரை சக்தியின் வடிவமாக இருக்கின்றது. இந்த வடிவங்களும் வடிவங்கள் இல்லாமலும் திருபுரை இருக்கின்றது.

குறிப்பு: பாடல் #401 இல் உள்ளபடி அசையும் சக்தியின் மையத்திலிருந்து தோன்றிய திரிபுரை எந்தெந்த வடிவங்களாகவும் வடிவம் இல்லாமல் இருக்கின்றது என்பதை இந்தப் பாடலில் அறியலாம்.

திரிபுரையின் ஆறு மந்திர வடிவங்கள்:

மாமாயை - வினைகள் இல்லாத சுத்த மாயை
மாயை - வினைகளோடு இருக்கும் மாயை
வயிந்தவம் - மாயையால் குழம்பி இருக்கும் ஞானசக்தி
வைகரி - முறைப்படி சத்தமாக கேட்கும் ஒலிவடிவம்
ஓமாயை - மாயையால் மறைக்கப்பட்ட பிரணவம்
உள்ளொளி - மாயையால் உருவான வெளிச்சமும் சத்தமும்

நன்றி :

இன்றைய குறள்


நன்றி :

சிரித்து வாழவேண்டும்!

நலக்குறிப்புகள்

காலை நற்சிந்தனைகள்

இயற்கையை நேசிப்போம்!


நன்றி :

இனிய காலை வணக்கம்!

23 பிப்., 2021

இன்றைய திருமந்திரம்

திருமந்திரம் - பாடல் #1044: நான்காம் தந்திரம் - 4. நவகுண்டம் (மந்திர சித்தி பெற்றவர் தமது தொழிலுக்கு ஏற்ப ஹோமம் செய்யும் ஒன்பது வகை குண்டங்கள்)

சாதன நாலு தழல்மூன்று வில்வயம்
வேதனை வட்டம் விளையாறு பூநிலை
போதனை போதஞ்சு பொற்கயல் வாரண
நாதனை நாடு நவகோடி தானே.

விளக்கம்:

பாடல் #1043 இல் உள்ளபடி உலக நன்மைக்கு கருவியாக இருக்கும் யோகின் உடலுக்குள் 1. நான்கு கோணம் கொண்ட குண்டம் (சதுர வடிவம்), 2. யாக குண்டத்தில் எரியும் அக்னி போன்ற முக்கோண குண்டம் (முக்கோண வடிவம்), 3. வளைத்த வில்லைப் போன்ற பிறை வட்ட வடிவம் கொண்ட பிறை குண்டம் (பிறை வடிவம்), 4. ஆரம்பமும் முடிவும் இல்லாத வேதங்களைப் போன்ற வட்ட குண்டம் (வட்ட வடிவம்), 5. சக்தி விளையும் மயங்களான ஆறு சக்கரங்கள் கொண்ட குண்டம் (அறுகோண வடிவம்), 6. உலகத்தின் எட்டுத் திசைகள் கொண்ட குண்டம் (அட்டகோண வடிவம்), 7. இலை வடிவம் போன்ற குண்டம் (இலை வடிவம்), 8. ஐந்துவிதமான பொறிகள் கொண்ட குண்டம் (பஞ்சகோண வடிவம்), 9. பொன் போன்ற தாமரை மலர் வடிவம் கொண்ட குண்டம் (பதும வடிவம்) ஆகிய ஒன்பது வகையான குண்டங்கள் இருக்கின்றது. இந்த நவ குண்டங்களின் மூலமாக யோகியானவர் ஆதி மூலமாகிய இறைவனை ஒன்பது கோடி யுகங்களானாலும் நாடிக்கொண்டே இருப்பார்.

மனமார்ந்த நன்றிகள் :

ஆலோசனைகள் :

1.பத்து நிமிடங்கள் முன்னதாக..

காலை 6 மணிக்கு எழுபவரா நீங்கள்?
5.50க்கு எழுந்து பழகுங்கள்.

கூடுதலாகக் கிடைக்கிற பத்து நிமிடத்தில், அமைதியான காலை நேரத்தில் உங்களின் அன்றைய வேலைக்கான ஆற்றலின் கதவுகள் அகலத் திறப்பதை உணர்வீர்கள்.

2.பத்து நிமிடங்கள் மௌனமாக

நீங்கள் தியானப் பயிற்சி மேற்கொள்ளாதவராக இருந்தால், விரைவில் சரியான இடத்தில் தியானம் பழகுங்கள். அதுவரை ஒரு நாளின் மத்தியில், பத்து நிமிடங்களாவது மௌனத்தில் இருங்கள்..

3.முப்பது நிமிடங்கள்...

ஒரு நாளின் முப்பது நிமிடங்களை உங்கள் ஆரோக்கியத்திற்காகப் பயன்படுத்துங்கள். உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, யோகா என்று உங்கள் வழக்கம் எதுவாக இருந்தாலும் சரி. ஆரோக்கியத்துக்காக முப்பது நிமிடங்கள் புத்துணர்ச்சிக்கான சிம்மாசனம் என்பதை உணருங்கள்.

4.உணவில் ஒழுங்கு..

வேலைச் சுமையைக் காரணம்காட்டி உணவு நேரத்தை அடிக்கடி தள்ளிப் போடுவது, உங்கள் உடலியக்கத்துக்குள் பிரச்சினையை ஏற்படுத்தும். உணவுப் பழக்கத்திலும் இதமான முறைகளைக் கையாளுங்கள், வயதுக்கேற்ப சாப்பிடுங்கள். முறைப்படி சாப்பிடுவதற்க்கு பழகுங்கள்.

5.மறுநாளின் டைரியை முதல் நாளே எழுதுங்கள்..

Day Task. உங்களின் வாழ்க்கை பரபரப்பின்றி அவசரமின்றி இருக்க இந்த பழக்கம் உதவும். நினைத்த அனைத்தும் நடப்பதை விரைவில் உணர்வீர்கள்.

6.அடைசல்கள் அகற்றுங்கள்..

அடைசல்கள், குப்பைகள், குவிந்துகிடக்கும் கோப்புகள் ஆகியவற்றில் பிரபஞ்ச சக்தி தேங்கிவிடுகிறது. அத்தகைய இடங்களில் செயலாற்றல் தூங்கிவிடுகிறது. போகி பண்டிகைவரை காத்திருக்காது அவ்வப்போது அடைசல்களை நீக்குங்கள்.

7.மனிதர்களை நெருங்குங்கள்..

இந்த உலகில் காரணத்துடனோ காரணம் இன்றியோ மனிதர்களை வெறுக்கும்போது, அந்த வெறுப்பு நமக்குள்ளே வேண்டாத சுரப்பிகளைத் தூண்டி பதட்டம் சுரக்க வைக்கிறது. மனிதர்களை நிறைகுறைகளுடன் ஏற்றுக்கொண்டு அவர்களை நேசிக்கத் தொடங்குங்கள். எல்லோரையும் நேசிப்பது அவர்களுக்கு நல்லதோ இல்லையோ, உங்களுக்கு ரொம்ப நல்லது.

8,அடுத்து என்ன? இதுவே மந்திரம்..

வெற்றியோ தோல்வியோ, சாதனையோ சவாலோ, எது நேர்ந்தாலும் அடுத்தது என்ன என்று கேளுங்கள். அப்போதுதான் அடுத்த கட்டம் நோக்கி நகர முடியும். குழந்தை கண்ணாடியை உடைத்துவிட்டதா? அடுத்தது என்ன? அள்ளிப்போட வேண்டியதுதான். (WHAT NEXT?) இது வெற்றியின் மந்திரங்களில் முக்கியமானது.

9.நம்பிக்கைத் தீர்மானம் நிறைவேற்றுங்கள்..

ஒவ்வொருநாள் விடியலிலும் உங்கள் மீது நீங்களே நம்பிக்கைத் தீர்மானம் நிறைவேற்றுங்கள். “இதே உற்சாகத்துடன் வேலையில் இறங்கலாம். இன்றைய வேலைகளை சரியாக முடிக்கலாம்” என்று உங்கள் மீது நீங்களே நம்பிக்கை வைத்து நாளைத் தொடங்குங்கள்.

11.பணத்துக்கு வேலை கொடுங்கள்..

உங்கள் வருமானம் எவ்வளவாக இருந்தாலும் அந்தப் பணத்துக்கு வேலை கொடுங்கள். பணம், தன்னைத்தானே பலமடங்கு பெருக்கிக்கொள்கிற பேராற்றல் உடையது. ஈட்டிய பணத்தை புத்திசாலித்தனமாக முதலீடு செய்யுங்கள். அது தானாகவே பெருகும்.

12.கடிகாரத்தை மட்டுமல்ல நேரத்தையும் கையில் கட்டுங்கள்..

உங்கள் நேரம் உங்கள் பொறுப்பிலும் கண்காணிப்பிலும் இருக்கட்டும். அரட்டை அவதூறு அனாவசியமான பேச்சு என்று அடுத்தவர்கள் உங்கள் நேரத்தைக் கொள்ளையடிக்க இடம் கொடுக்காமல் விழிப்புடன் இருங்கள்.

13.நகைச்சுவை உணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள்..

இறுக்கமாய் இருப்பதால் நாம் எதையும் சாதிக்கப் போவதில்லை – மன இறுக்கத்தையும் மன அழுத்தத்தையும் வளர்த்துக் கொள்வதைத் தவிர!! வெற்றியாளர்களும் வரலாற்று புருஷர்களும் நகைச்சுவை உணர்வு நிறைந்தவர்களாகவே இருந்திருக்கிறார்கள். நகைச்சுவை உணர்வு, வாழ்வின் பூட்டப்பட்ட பல கதவுகளைத் திறந்துவிடும்..

14.மனிதத்தன்மையே கடவுள்தன்மையின் ஆரம்பம்..

மற்றவர்களின் சிரமங்களைப் புரிந்துகொள்வதும், மனித நேயத்துடன் உதவுவதும், மற்றவர்களை மன்னிப்பதும், மனிதர்களின் பகுதிநேர வேலை. கடவுளுக்கோ, முழுநேர வேலை. முதலில் உங்களையும், பிறகு மற்றவர்களையும் முழுமனதோடு மன்னித்து, மலர்ச்சியாய் மகிழ்ச்சியாய் 
வாழ்க்கை என்கிற கொண்டாட்டத்தில் தீவிரமாகப் பங்கெடுங்கள்..

புதிய சிந்தனை அல்ல இது.
புத்துணர்சியூட்டும் சிந்தனை...

இன்றைய குறள்


நன்றி :

ஆன்மீகம்

சிரித்து வாழவேண்டும்!

நலக்குறிப்புகள்

காலை நற்சிந்தனைகள்

இயற்கையை நேசிப்போம்!

இனிய காலை வணக்கம்!

22 பிப்., 2021

இன்றைய திருமந்திரம்

திருமந்திரம் - பாடல் #1043: நான்காம் தந்திரம் - 4. நவகுண்டம் (மந்திர சித்தி பெற்றவர் தமது தொழிலுக்கு ஏற்ப ஹோமம் செய்யும் ஒன்பது வகை குண்டங்கள்)

உகங்கண்ட ஒன்பது குண்டமும் ஒக்க
அகங்கண்ட யோகியுள் நாடி எழுப்பும்
பகங்கண்டு கொண்டவிப் பாய்கரு வொப்பச்
சகங்கண்டு கொண்டது சாதன மாமே.

விளக்கம்:

பாடல் #1042 இல் உள்ளபடி கோடி யுகங்களாக நிலைத்திருக்கும் உடலைப் பெற்ற சாதகர் யோகியாகிறார். அந்த யோகி நவகுண்டமாகிய தமது உடலுக்குள் இருக்கும் ஒன்பது வகையான குண்டங்களிலும் தாமாகவே அக்னி எழுப்பிக்கொண்டே இருக்கின்றார். கரு உற்பத்திக்கு உயிர்சக்தி கருவியாகப் பயன்படுவதைப் போல இறையருளை தமக்குள் கண்டுகொண்ட யோகியின் நவகுண்ட உடலை உலகம் தனது நன்மைக்கு கருவியாகப் பயன்படுத்திக் கொள்கிறது.

கருத்து: கோடி யுகங்கள் இருக்கும் யோகியின் மேன்மையான உடலை உலகம் தனது நன்மைக்கு பயன்படுத்திக் கொள்கிறது.

மனமார்ந்த நன்றிகள் :