எனக்குப் பிடித்த கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எனக்குப் பிடித்த கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

27 மார்., 2020

எனக்குப் பிடித்த கவிதை: ஏண்டியம்மா குத்தவச்ச? : கவிப்பேரசு வைரமுத்து


ஏண்டியம்மா குத்தவச்ச? : கவிப்பேரசு வைரமுத்து 


353,807 views
Dec 15, 2017
Thagaval Thalam
32.7K subscribers
ஒரு பெண் வயதுக்கு வந்து விட்டால் சந்தோஷப்படும் உலகில் வயதுக்கு வந்துவிட்டாளே என இளைய தாரத்தின் மகளோடு வாழும் மூத்த தாரத்தின் புலம்புலை கவிதையாக்கி தந்திருக்கிறார் கவிப்பேரரசு.


22 மே, 2019

எனக்குப் பிடித்த கவிதை-86: சந்திப்பு : கவிஞர் தேவதேவன்




சந்திப்பு

என்னதான் ஆனாலும்
நீ ஒரு சுயம்பு
நான் ஒரு சுயம்பு
உன்போக்கில் நீ
என் போக்கில் நான்
எப்போதும் நகர்ந்துகொண்டிருக்கும்
இருபுள்ளிகள்

நம் சந்திப்பு அதாவது
புரிந்துகொள்ளல் அன்பு முதலானவை
எங்கு எப்போது எவ்விதம் கிட்டும் ?

சம எடையுள்ள இரண்டுக்கும்
சம அந்தஸ்து அளிக்கும் நீதியுணர்வில்
எப்போதும் நகர்ந்துகொண்டிருக்கும்
இரண்டு புள்ளிகளுக்கு மத்தியில்
தன் செம்மத்திக்காய்
எப்போதும் நகர்ந்துகொண்டிருக்கும் புள்ளி.

கவிஞர் தேவதேவன் 

10 மே, 2019

எனக்குப் பிடித்த கவிதை-85:விறகு | கவிப்பேரரசு வைரமுத்து கவிதை



விறகு | கவிப்பேரரசு வைரமுத்து கவிதை

20,246 views
“Thagaval Thalam”
Published on Mar 17, 2019

கவிப்பேரரசு வைரமுத்துவின் முத்தான படைப்பு.. விறகு வெட்டும் ஒரு ஏழைப் பெண்ணின் வார்த்தைகளில்.

நன்றி: கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள், “Thagaval Thalam”  மற்றும் யூடியூப். 



30 டிச., 2018

எனக்குப் பிடித்த கவிதை-84: ஆத்மாநாமின், "வாழ்க்கைக் கிணற்றில்"

வாழ்க்கைக் கிணற்றில் – ஆத்மாநாம் (இருமொழிக் கவிதை)


வாழ்க்கைக் கிணற்றின்
மோக நீரில்
மோதுகின்ற
பக்கெட்டு நான்
பாசக்கயிற்றால்
சுருக்கிட்டு
இழுக்கின்ற
தூதன் யார்

(ஆத்மாநாம்)

oOo

I am a bucket
plopping into
the waters of desire
in the well of life
Who is that messenger
roping me up
Tying the knot
in the noose of death.

(மொழியாக்கம் – நகுல்வசன்)

நன்றி: பதாகை.காம்

15 செப்., 2018

எனக்குப் பிடித்த கவிதை-83:

வேலிக்கு வெளியே
தலையை நீட்டிய என்
கிளைகளை வெட்டிய
தோட்டக்காரனே...!

வேலிக்கு அடியில்
நழுவும் என் வேர்களை
என்ன செய்வாய்...?"

-- கவிஞர் மு. மேத்தா

12 செப்., 2018

எனக்குப் பிடித்த கவிதை-82: கிளையின் நடனம்

"காற்றில் பறந்து
பறவை மறைந்த பிறகும்
கிளை தொடங்கிய
நடனம் முடியவில்லை !"

- நா. முத்துக்குமார்

6 ஜூலை, 2018

எனக்குப் பிடித்த கவிதை-81: காவியம் - பிரமிள் கவிதை

காவியம்
பிரமிள் கவிதை

சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின்
தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச் செல்கிறது

26 ஜூன், 2018

எனக்குப் பிடித்த கவிதை-80: ஞானக்கூத்தனின் ஸ்ரீலஸ்ரீ

ஸ்ரீலஸ்ரீ – ஞானக்கூத்தன்
யாரோ முனிவன் தவமிருந்தான்
வரங்கள் பெற்றான் அதன் முடிவில்
நீர்மேல் நடக்க தீபட்டால்
எரியாதிருக்க என்றிரண்டு

ஆற்றின் மேலே அவன் நடந்தான்
கொடுக்குத் தீயைச் சந்தனம் போல்
உடம்பில் பூசிச் சோதித்தான்
மக்கள் அறிந்தார் கும்பிட்டார்

மறுநாள் காலை நீராட
முனிவன் போனான் ஆற்றுக்கு
நீருக்குள்ளே கால்வைக்க
முடியாதவனாய்த் திடுக்கிட்டான்

கண்ணால் கண்டால் பேராறு
காலைப் போட்டால் நடைபாதை
சிரித்துக் கொண்டு கண்ணெதிரே
ஆறு போச்சு தந்திரமாய்

காலைக் குளியல் போயிற்றா
கிரியை எல்லாம் போயிற்று
வேர்த்துப் போனான். அத்துளிகள்
உடம்பைப் பொத்து வரக்கண்டான்

யாரோ பிணத்தைக் கண்டெடுத்தார்
செத்துப் போக ஒரு நாளில்
தீயிலிட்டார். அது சற்றும்
வேகாதிருக்கக் கைவிட்டார்

நீரின் மேலே நடப்பதற்கும்
தீயாலழியா திருப்பதற்கும்
வரங்கள் பெற்ற மாமுனிவன்
மக்கிப் போக நாளாச்சு

1971

அவருடைய கவிதைகளை வாசிக்க: http://www.gnanakoothan.com/about-2/

17 ஜூன், 2018

எனக்குப் பிடித்த கவிதை-79: நிம்மதி சூழ்க! - கவிஞர் வைரமுத்து


நிம்மதி சூழ்க!

ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க
சிந்தை கலங்கிட வந்தவர் வாழ்க
நீரில் மிதந்திடும் கண்களும் காய்க
நிம்மதி நிம்மதி இவ்விடம் சூழ்க!
   
ஜனனமும் பூமியில் புதியது இல்லை
மரணத்தைப் போல் ஒரு பழையதும் இல்லை
இரண்டுமில்லாவிடில் இயற்கையும் இல்லை
இயற்கையின் ஆணைதான் ஞானத்தின் எல்லை


பாசம் உலாவிய கண்களும் எங்கே?
பாய்ந்து துழாவிய கைகளும் எங்கே?
தேசம் அளாவிய கால்களும் எங்கே?
தீ உண்டதென்றது சாம்பலும் இங்கே?


கண்ணில் தெரிந்தது காற்றுடன் போக
மண்ணில் பிறந்தது மண்ணுடன் சேர்க
எலும்பு சதை கொண்ட உருவங்கள் போக
எச்சங்களால் அந்த இன்னுயிர் வாழ்க

பிறப்பு இல்லாமலே நாளொன்றும் இல்லை
இறப்பு இல்லாமலும் நாளொன்றும் இல்லை
நேசத்தினால் வரும் நினைவுகள் தொல்லை
மறதியைப் போல் ஒரு மாமருந்தில்லை

கடல் தொடும் ஆறுகள் கலங்குவதில்லை
தரை தொடும் தாரைகள் அழுவதும் இல்லை
நதி மழை போன்றதே விதியென்று கண்டும்
மதி கொண்ட மானுடர் மயங்குவதென்ன!

மரணத்தினால் சில கோபங்கள் தீரும்
மரணத்தினால் சில சாபங்கள் தீரும்
வேதம் சொல்லாததை மரணங்கள் கூறும்
விதை ஒன்று வீழ்ந்திட செடி வந்து சேரும்

பூமிக்கு நாம் ஒரு யாத்திரை வந்தோம்
யாத்திரை தீரும் முன் நித்திரை கொண்டோம்
நித்திரை போவது நியதி என்றாலும்
யாத்திரை என்பது தொடர் கதையாகும்

தென்றலின் பூங்கரம் தீண்டிடும் போதும்
சூரிய கீற்றோளி தோன்றிடும் போதும்
மழலையின் தேன்மொழி செவியுறும் போதும்
மாண்டவர் எம்முடன் வாழ்ந்திட கூடும்


மாண்டவர் சுவாசங்கள் காற்றுடன் சேர்க்க!
தூயவர் கண்ணொளி சூரியர் சேர்க!
பூதங்கள் ஐந்திலும் பொன்னுடல் சேர்க!
போனவர் புண்ணியம் எம்முடன் சேர்க!