என் தாய்மொழி தமிழுக்கென்றே இவ்வலைப்பூ. எனது எண்ணங்கள், எனக்குப் பிடித்த கருத்துக்கள், கவிதைகள், கதைகள் மற்றும் என்னை ஈர்த்த செய்திகள், நாட்டுநடப்புகள், நம் அனைவரின் வாழ்வோடு தொடர்புடைய மற்றனைத்தும் இதில் இடம் பெறும். (பின்புலப் புகைப்படத்தை எடுத்த ஜோன் சல்லிவனுக்கும், அதை வழங்கிய பப்ளிக்-டொமைன்-ஃபோட்டோஸ்.காமிற்கும் நன்றி)
Click Me
நினைவஞ்சலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நினைவஞ்சலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
27 மே, 2025
20 செப்., 2021
நினைவஞ்சலி : "பூவுலகின் நண்பர்கள்" நிறுவனர் நெடுஞ்செழியன்
"பூவுலகின் நண்பர்கள்" அமைப்பை தோற்றுவித்த அமரர் நெடுஞ்செழியன் அவர்களின் பிறந்த நாள் இன்று.
சுற்றுச்சூழல் கருத்தாக்கங்கள் அதிகம் பேசப்படாத காலகட்டத்தில் சூழல் குறித்த முக்கியத்துவங்களை தமிழகத்தில் விதைத்து சென்றதில் நெடுஞ்செழியன் அவர்களின் பங்கு மிகவும் முக்கியமானது, தனித்துவமானது.
இன்றைக்கு தமிழகத்தில் சூழல் சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ள பலருக்கும் "பூவுலகின் நண்பர்கள்" அமைப்புதான் தாய்வீடு; அமரர் நெடுஞ்செழியன் அவர்கள்தான் வழிகாட்டி. அவர்தான் எங்கள் முன்னோடி. அவர் விட்டுச்சென்ற பணிகளை தொய்வில்லாமல், காலத்திற்கேற்ற மாற்றங்களுடன், அனைவரின் ஒத்துழைப்புடன் முன்னெடுத்து செல்கிறோம் .
அவரை முன்னோடியாக கொண்டு அவர் புகழ்பாடுவதென்பது ஆண்டிற்கு ஒருமுறை கூடி அவர் புகழ் பாடுவதல்ல; அவர்விட்டு சென்ற பணிகளை ஆண்டு முழுமைக்கும் தொடர்வதே என்பதை நாங்கள் அறிவோம்.
அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்புடன் தமிழகத்தின் சூழலை காக்கும் பணியில் "பூவுலகின் நண்பர்கள்" தொடர்ந்து பயணிக்கும்.
நன்றி :
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)