தி.ஜானகிராமன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தி.ஜானகிராமன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

14 செப்., 2021

நூல் நயம் : கொட்டு மேளம் - தி.ஜானகிராமன்

கொட்டு மேளம்
தி.ஜானகிராமன் 

காலச்சுவடு

₹225

தி.ஜானகிராமன் அவர்களின் ஒன்பது நாவல்களையும் வாசித்துவிட்டு, நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிறுகதைப்பக்கம்  திரும்பியுள்ளேன்.முதல் புத்தகமாக "கொட்டுமேளம்" சிறுகதைத் தொகுதியை வாங்கினேன்.

இத்தொகுப்பில் பன்னிரண்டு சிறுகதைகள் உள்ளன.

௧.கொட்டுமேளம்
௨.சண்பகப் பூ
௩.ரசிகரும் ரசிகையும்
௪.கழுகு
௫.பசி ஆறிற்று
௬.வேண்டாம் பூசனி
௭.இக்கரைப் பச்சை
௮.நானும் எம்டனும்
௯.அத்துவின் முடிவு
௧௦.பொட்டை
௧௧.தவம்
௧௨.சிலிர்ப்பு.

எல்லாக் கதைகளுமே சிறப்பானவைதான். தி.ஜா வின் எழுத்துச் சிற்பங்கள் அனைத்துக்கதைகளுமே. சில சிற்பங்கள் நமக்கு வியப்பைத் தருவது போல சிலக் கதைகள் கவனத்தை அதிகமாக ஈர்க்கின்றன.

#சண்பகப்பூ கதையில் சிறுவயதில் கணவனை இழக்கும் பெண்ணைப்பற்றிய நிகழ்வை காண்பதோடு,அவளின் அழகில் அவன் போய்விட்டதாக தாத்தா கூறுவதாக அமையும் நடை.சண்பகப் பூ பார்க்க அழகு நுகர்ந்தால் ஆபத்து.

#வேண்டாம்_பூசனி கதையில் இன்றைய காலக்கட்டத்தில் நிகழும் பிரச்சனையைப் பார்க்க முடிகிறது.பெண்ணிற்கு அதிகமாகச் செய்த தாயை கடைசி காலத்தில் பார்த்துக் கொள்ளாமல் தவிக்க விடும்  மகன்கள். பெண்ணும் இறுதிக்காலத்தில் தாயின் பாத்திரம் பண்டத்திற்காகத் தாயை தன்னோடு வைத்துக்கொள்கிறாள். கடைசியில் இதெல்லாம் வெறுத்து அந்தத் தாயார் சிவபதம் அடைகிறார்.

#பொட்டை;கண்பார்வையற்றவர்களை நாம் எவ்வாறு அனுக வேண்டும் என்பதற்கு இக்கதை ஒரு உதாரணம்.
சன்னாசி தாத்தா  கண் தெரியவில்லை என்றாலும் எல்லா வேலைகளும் செய்கிறார், முள்  வெட்டுவார், பண்ணையார் வீட்டில் வேலை செய்கிறார்.திருவிழாற்குச் சென்று வருகிகிறார்.எண்பத்திரண்டு வயதிலும் ஒற்றைக்கம்போடு வாழ்கிறவரை "பொட்டை" என்று எளக்காரமாக அழைக்கும் 22 வயதான முத்துக்கிட்டான் கடைசியில் சன்னாசியிடம் அகப்படுவதே கதையின் இறுதி.

#தவம்; இக்கதை பலராலும் வாசிக்கப்பட்ட பிரபலமான கதை.இக்கதைக்காக வாசகர் ஒருவர் தி.ஜா அவர்களுக்கு நிலத்தையே எழுதிக்கொடுத்திருக்கிறார்.
சொர்ணாம்பாவின் அழகை விவரிக்கும் நடை தி.ஜா விற்கே உரித்தானது.
 கோவிந்த வன்னி பத்துவருடம் தவம் இருக்கிறான் " சொர்ணாம்பாவுக்காக" இறுதியில் அவன் அடையும் ஏமாற்றம், சொர்ணாம்பா கேட்கும்; "எதெதற்கு தவம் இருக்கனும்னு ஒரு வெவஸ்த இல்லையா?" இந்த வசனமே கதையின் உச்சம்.

#சிலிர்ப்பு குடும்ப வறுமைச்  சூழல் காரணமாக வீட்டுவேலைக்காக கல்கத்தா செல்லும் ஒன்பது வயதுப் பெண்ணின் இரயில் பயணத்தில் அறிமுகமாகும் மனிதர்களும்,அவர்கள் இவள்மேல் காட்டும் பரிவைப் பற்றிய கதை.

அனைத்துக் கதைகளையும் வாசித்து முடிக்கும்போது ஒரு சிலிர்ப்பை உண்டாக்கச் செய்கிறது தி.ஜா வின் எழுத்துக்கள்.

நன்றி :

26 டிச., 2020

சிறுகதை நேரம் : பரதேசி வந்தான் - தி.ஜானகிராமன்


பரதேசி வந்தான்| தி.ஜானகிராமன்

தமிழ் சிறுகதைகள்

Paradesi Vandhan| T.Janakiraman Sirukadhaigal | 

Tamil audio books| 

88,414 views

•Jun 8, 2020

Thagaval Thalam

98.2K subscribers

 

Grateful thanks to Thagaval Thalam and YouTube and all the others who made this video possible