என் தாய்மொழி தமிழுக்கென்றே இவ்வலைப்பூ. எனது எண்ணங்கள், எனக்குப் பிடித்த கருத்துக்கள், கவிதைகள், கதைகள் மற்றும் என்னை ஈர்த்த செய்திகள், நாட்டுநடப்புகள், நம் அனைவரின் வாழ்வோடு தொடர்புடைய மற்றனைத்தும் இதில் இடம் பெறும். (பின்புலப் புகைப்படத்தை எடுத்த ஜோன் சல்லிவனுக்கும், அதை வழங்கிய பப்ளிக்-டொமைன்-ஃபோட்டோஸ்.காமிற்கும் நன்றி)
Click Me
பிரார்த்தனைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிரார்த்தனைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
30 டிச., 2019
16 செப்., 2018
19 ஜூலை, 2018
பிரார்த்தனைகள்-: படித்ததில் பிடித்தது
இறைவா!
வருமானம் குறைவானாலும் வயிறாற உணவை கொடு!
வாழ்நாள் குறைவானாலும் நோயில்லா உடலைக் கொடு!
வசதி குறைவானாலும் அன்பான உறவைக் கொடு!
உறவுகள் குறைவானாலும் உயிர் தரும் நட்பைக் கொடு!
படிப்பு குறைவானாலும் நடிப்பில்லா தொழிலைக் கொடு
பணம் குறைவானாலும் பக்தி செலுத்தும் மனதைக் கொடு!
பிறர் வலியை தன்வலியாய் உணரும் உணர்வைக் கொடு!
மலை போல் பணம் இருந்தாலும்
தர்மம் செய்யும் சிந்தை கொடு!
வாழ்வில் பல துணைகள் இருந்தாலும் உயிர்துணையாய் இறைவா நீயே வந்துவிடு.
படித்ததில் பிடித்தது
2 அக்., 2009
முதியோர் தின பிரார்த்தனை
பிறவிப்பயனை அடைதல் வேண்டும்.
முழுமை பெற வேண்டும்.
மகத்தான சாதனைகள் புரிந்திடல் வேண்டும்.
உரிய நேரம் வந்தவுடன் முழு மனதோடு, இன்முகத்தோடு, மலர்ந்த முகத்தோடு, சிரித்த முகத்தோடு நின் திருவடிகளை வந்தடைதல் வேண்டும்.
இயலாமை, முதுமை, பிணி என்று படுக்கையில் விழுமுன், அடுத்தவர்களுக்கு சுமையாகுமுன் இந்த உடலை உதறிவிட்டு, நின் திருவடிகளை நல்லபடியாக வந்தடைதல் வேண்டும்.
தேவையில்லாமல் இந்த உடலின் மீதோ, உயிரின் மீதோ, உற்றார் மீதோ, உறவினர் மீதோ, பொருட்கள் மீதோ அல்லது வேறெதென் மேலோ கடும்பற்றுக் கொண்டு துன்பப் படக்கூடாது, துயரப்படக் கூடாது.
முக்கியமாக அடுத்தவர்களைத் துன்பப் படுத்தக்கூடாது, துயரப் படுத்தக்கூடாது.
கருணை காட்டு தாயே! நல்லருள் புரிவாய் அம்மா!
சரணம், சரணம், சரணம்!

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)