26 செப்., 2009

இன்றைய சிந்தனைக்கு-79:

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியர்
திண்ணிய ராகப் பெறின்.

ஒரு செயலைச் செய்ய நினைப்பவர்கள், தாம் எண்ணிய எண்ணத்தில் உறுதி உடையவர்களானால், நினைத்ததை நினைத்தபடியே செய்து வெற்றி காண்பர்.

23 செப்., 2009

வீடியோ சொற்பொழிவுகள்-1: "குடும்பம்" - சுகி.சிவம்




நன்றி: திரு சுகி.சிவம், திரு எஸ்.வெங்கடேசன் மற்றும் YouTube.

இயற்கை உணவுக் குறிப்பு-11: "துளசி தீர்த்தம்"

துளசி தீர்த்தம் மனித மூளைக்கு திண்மை கொடுக்கக்கூடிய அபாரமான மருந்து. துளசி இலையை ஒரு டம்ளரில் போட்டு ஊறவைத்து, அந்தத் தண்ணீரைக் குடித்து வந்தால் மூளை பலம் பெறும்.

அனுபவக் குறிப்புகள்-6:

பல ஆண்டுகளாக வயிற்றுக்கோளாறு, மார்பின் இடது பக்கத்தில் வலியும், கழுத்து வலியும் இருந்தது. பல ஆயிரக்கணக்கில் மருந்து, மாத்திரைகளுக்கும், என்டோஸ்கோபி ஆய்வுக்கும் செலவு செய்தும் பயனில்லை. 26-வது நலவாழ்வு முகாமில் கலந்துகொண்டு, குடிநீர் சிகிச்சை, அஹிம்சை எனிமா, நின்று-அமர்ந்து-படுத்து செய்யும் ஆசனங்கள் கற்றேன். எடை எழுபது கிலோவிலிருந்து அறுபது கிலோவாகக் குறைந்தது.

அதிகாலையில் கருவேப்பிலை, கொத்தமல்லி, வல்லாரை, அருகம்புல் அவற்றுள் ஒன்றின் சாறு, காலை-மாலை தேங்காய் பழங்கள், மதியம் வழக்கமான சமைத்த உணவு அளவாகச் சாப்பிட்டேன்.

வயிற்றுக் கோளாறு, நெஞ்சு வலி, கழுத்துவலி எல்லாம் மறைந்துவிட்டன.

- திரு .அழகன் (வயது 43), 'இயற்கை மருத்துவம்' மாத இதழ் (ஆகஸ்ட் 2009).

நன்றி: திரு .அழகன் மற்றும் 'இயற்கை மருத்துவம்' மாத இதழ்.

இன்றைய சிந்தனைக்கு-78:

அருவினை என்ப உளவோ கருவியால்
காலம் அறிந்து செயின்.

செய்யும் செயலை முடிப்பதற்கு வேண்டிய கருவிகளுடன், ஏற்ற காலத்தையும் அறிந்து செய்தால், செய்ய முடியாதவை யாதும் உண்டோ?

22 செப்., 2009

மேகமே மேகமே-12:

அனுபவக் குறிப்புகள்-5:

மூன்று ஆண்டுகளாகக் காதில் வலி. உடல் நலத்திலும் சிரமங்கள் இருந்தன. ஸ்கேன் எடுத்ததில், மூளையில் 38 .செ.மீ. கட்டி இருப்பது தெரிந்தது. ஆறு மாதங்கள் மருந்து சாப்பிடுங்கள். குணமாகவில்லை என்றால் அறுவை சிகிச்சை செய்யலாம் என்பது மருத்துவர்கள் ஆலோசனை. இயற்கை மருத்துவத்தைப் பின்பற்றி கட்டியை குணப்படுத்த முடிவு செய்தேன். காலை, மாலை யோகாசனங்கள் செய்தேன். காலை பதினோரு மணிக்கு பழங்கள், இரவு ஏழு மணிக்குள் பசுங்கலவை, இடையில் பழச்சாறு என முடிவு செய்தேன். இரண்டு மாதம் கழித்து ஸ்கேன் பார்த்ததில், 16 .செ.மீ. அளவுக்கு கட்டி குறைந்து விட்டது. தொடர்ந்து ஆறு மாதத்தில் கட்டி முற்றிலும் கரைந்து விட்டது.

- பி.காளிதாஸ் (வயது 33)

நன்றி: திரு பி.காளிதாஸ் மற்றும் 'இயற்கை மருத்துவம்' மாத இதழ்.

இயற்கை உணவுக் குறிப்பு-10: "முடக்கத்தான்"

உடல் வலி, மூட்டுவலி, மூட்டுப் பிடிப்பு, இடுப்புப் பிடிப்பு, கைகால் மூட்டுக்களில் ஏற்படும் வலி, இடுப்பு வலி, கழுத்து வலி போன்றவற்றைப் போக்க எளிய, சிறந்த முறை முடக்கத்தானைப் பயன்படுத்துவதே.

இதனுடைய இலைகளையும், கைகளையும் துண்டுகளாக்கி, நீரில் போட்டு வேக வைத்து, அந்த நீருடன் மிளகுத்தூள், உப்பு சேர்த்து அருந்தலாம். இந்த முடக்கத்தான் சூப்பை அதிகாலை அரை டம்ளர் அளவு பருகினால் நாட்பட்ட பாரிச வாயு குணமாகும்.

இரசம் செய்யும்போது புளி, தக்காளி, காய்ந்த மிளகாய் வற்றல், கொத்தமல்லி இலை போன்றவற்றை முடக்கத்தான் சூப்புடன் கலந்து இரசம் தயாரித்து உணவுடன் கலந்து உண்ணலாம்.

அரிசி, கஞ்சி அல்லது மாற்ற தானியக் கஞ்சி தயாரிக்கும்போது, அதனுடன் முடக்கத்தான் இலைகள், தண்டுகளை வெட்டிப்போட்டு தாயாரித்துக் குடிக்கலாம்.

வீட்டில் வைக்கும் குழம்புகளிலும். முடக்கத்தான் இலைகள், தண்டு போன்றவற்றை வெட்டிப்போட்டு தயார் செய்து சாதத்துடன் கலந்து உண்ணலாம்.

நன்றி: அருள்நிதி எம்.பி.பாலா அவர்கள் "இயற்கை மருத்துவம்" மாத இதழில் (ஆகஸ்ட் 2009) எழுதிய "முடக்கத்தான் கீரை" என்ற கட்டுரையின் அடிப்படையில்.

இன்றைய சிந்தனைக்கு-77:

ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்.

எல்லா உயிரும் ஒன்றே என்று உணர்ந்து வாழ்பவனே வாழ்கிறவன். மற்றவரெல்லாம் செத்தவர்களாகக் கருதப்படுவர்.

20 செப்., 2009

மேகமே மேகமே-11:

அனுபவக் குறிப்புகள்-4: "மண் குளியல்"

கரையான் புற்றுமண்ணைக் குழைத்து உடல் முழுவதும் பூசி, குளியல் செய்தேன். வேர்க்குருவும், தடிப்புகளும் மறைந்து விட்டன.

- 'இயற்கை மருத்துவ' மாத இதழில் திரு வி.சுந்தர்.

நன்றி: திரு வி.சுந்தர் மற்றும் 'இயற்கை மருத்துவம்' மாத இதழ்.

இயற்கை உணவுக் குறிப்பு-9: "முட்டைக்கோஸ்"

முட்டைக்கோசில் உள்ள தழைச்சத்தும், நார்ச்சத்தும் உணவின் பருமனைக்கூட்டி பெருங்குடலையும், மலக்குடலையும் நன்கு வேலை செய்யச் செய்கின்றன. இதனால் மலம் இலகுவாகக் கழிவதுடன், மூலம், பவுந்திரம் போன்ற ஆசனவாய்க் கோளாறுகள் வராமல் தடுக்கப்படுகின்றன.

இதில் 'டார்ட்டாரிக்' அமிலம் இருப்பதால், தேவைக்கு அதிகமாக உண்ணப்படும் மாவுப் பொருட்கள் கொழுப்பாக மாறாமல் தடுக்கப்படுகின்றன.

வயிற்றுப்புண் உள்ளவர்கள் வேலைக்கு மூன்று அவுன்ஸ் வீதம் ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு முறை முட்டைக்கோசு சாறு அருந்தி காரம், புளி சேர்க்காமல் உணவுண்டு வந்தால் குணமாகும்.

- 'இயற்கை மருத்துவ' மாத இதழில் அருள்நிதி எம்.பி.பாலா அவர்கள் எழுதிய "முட்டைக்கோசு' கட்டுரையிலிருந்து ஒரு பகுதி.

நன்றி: அருள்நிதி எம்.பி.பாலா அவர்கள் மற்றும் 'இயற்கை மருத்துவம்' மாத இதழ்.

இன்றைய சிந்தனைக்கு-76:

ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு.

நெஞ்சில் பொறாமை இலாது வாழும் இயல்பை வாழ்க்கை நெறியாகக் கொண்டு வாழவேண்டும்.

17 செப்., 2009

எனக்குப் பிடித்த கவிதை-57: "கவிதை" - வலம்புரி ஜான்

கவிதை -

கனிக்குள்ளே
கண்ணுறங்கும் விதை!
விதைக்குள்ளே
விழித்திருக்கும் மரம்!
கூட்டுக்குள்
குறுகுறுக்கும் உயிர்ப்பறவை!
உயிர்ப்பறவை உள்ளுக்குள்
ஒளிந்திருக்கும் ஓசை!

வலம்புரி ஜான் அவர்களின் "நினைத்தால் வருவதல்ல கவிதையிலிருந்து" ஒரு பகுதி
"ஒரு நதி குளிக்கப் போகிறது"
வலம்புரி ஜான்
அபிராமி பப்ளிகேஷன்ஸ், சென்னை.

இன்றைய சிந்தனைக்கு-75:

எய்தற்கு அரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற்கு அறிய செயல்.

கிடைத்தற்கரிய காலம் வாய்க்கும்போது, வாய்ப்பைப் பயன்படுத்தி, செயற்கரிய செயல்களை அப்போதே செய்யவேண்டும்.

மேகமே மேகமே-10:


12 செப்., 2009

இன்றைய சிந்தனைக்கு-74:

ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு.

ஏழைகளுக்கு கொடுப்பதையும், அதனால் புகழப்பட்டு வாழ்வதையும் தவிர இந்தப் பிறவியினால் அடையக்கூடிய பயன் வேறு எதுவும் இல்லை. (நாமக்கல் கவிஞர் உரை)

மேகமே மேகமே-9:

Posted by Picasa

11 செப்., 2009

நெஞ்சில் நிலைத்த பாடல்கள்-9:



மகாகவியின் "தீராத விளையாட்டுப் பிள்ளை" என்ற பாடலை டி.கே.பட்டம்மாள் ராகமாலிகையில் பாடுகிறார். என்னால் மறக்க முடியாத பாடல்களில் ஒன்று.

நன்றி: 'carnatickulfi' & 'YouTube'.

வீடீயோ கவிதைகள்-6:



மகாகவியின் நினைவு நாளான இன்று காலை முதல் தொடர்ந்து மகாகவியின் பாடல்களை டிவியில் கண்டு, கேட்டு மகிழ்ந்தேன். யூடூபிலும் பல பாடல்களைக் கேட்டு இன்புற்றேன். கவிப்பேரரசின் "கவிராஜன் கதையைப்" படித்துச் சுவைத்தேன். தற்போது, மகாகவியின் "செந்தமிழ் நாடென்னும் போதினிலே" என்ற அவரது பாடலை பதிவு செய்து, அவருக்கு அஞ்சலி செலுத்தி மகிழ்கின்றேன்.

நன்றி: 'கார்த்திக்1947' & YouTube.

இன்றைய சிந்தனைக்கு-73:

ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன் கணவர்.

பெருஞ்செல்வம் கிடைத்தும், அதை ஏழைகளுக்குக் கொடுத்து, அவர்களுக்கும் தமக்கும் மகிழ்ச்சி உண்டாக்கும் இன்பத்தை அறியாமல் உயிரழக்கின்றனரே!

மேகமே மேகமே-8:

Posted by Picasa
குற்றாலம் ஐந்தருவிச் சாலையிலிருந்து எடுத்த படம்

9 செப்., 2009

பட்டுக்கோட்டை பாடல்-9: "நீரலை வெள்ளி மலர்"

மின்னும் இயற்கையெல்லாம் உன்னழகைக் காட்டுதடி
எண்ணமெனும் தேன்கூட்டில் இன்பக்கனல் மூட்டுதடி
வானநிலாப் பெண்ணை வட்டமிட்டு மேகமொன்று
மோன முகத்தினிலே முத்தமிட்டுப் போகுதடி!

துள்ளிவரும் நீரலையில் வெள்ளிமலர் பூத்ததடி!
வள்ளியுனை எதிர்பார்த்த மெல்லுடலும் வேர்த்ததடி!
இல்லத்தில் நீயிருந்தால் இருள்வர அஞ்சுதடி
மெல்லத்தமிழ் உனது சொல்லில்வந்து கொஞ்சுதடி!

நல்வழி-5:

நீரும் நிழலும் நிலம்பொதியும் நெற்கட்டும்
பேரும் புகழும் பெருவாழ்வும் - ஊரும்
வருந்திருவும் வாழ்நாளும் வஞ்சமிலார்க் கென்றும்
தரும் சிவந்த தாமரையாள் தான்.

மேகமே மேகமே-7:

Posted by Picasa

பாரதி கவிதைகள்-21: "ஞான பானு"

திருவளர் வாழ்க்கை, கீர்த்தி, தீரம், நல்லறிவு, வீரம்
மருவுபல் கலையின் சோதி வல்லமை என்பவெல்லாம்
வருவது ஞானத்தாலே வையக முழுவதும் எங்கள்
பெருமைதான் நிலவி நிற்கப் பிறந்தது ஞானபானு.

கவலைகள், சிறுமை, நோவு, கைதவம், வறுமைத் துன்பம்
அவலம் அனைத்தைக் காட்டில் அவலமாம் புலைமை அச்சம்
இவையெலாம் அறிவிலாமை என்பதோர் இருளிற் பேயாம்.
நலமுறு ஞானபானு நண்ணுக; தொலைக பேய்கள்

அனைத்தையும் தேவர்க்காக்கி அறத்தொழில் செய்யும் மேலோர்
மனத்திலே சக்தியாக வளர்வது நெருப்புத் தெய்வம்.
தினத்தொளி ஞானங் கண்டீர் இரண்டுமே சேர்ந்தால் வானோர்
இனத்திலே, கூடிவாழ்வார் மனிதர் என்றிசைக்கும் வேதம்

பண்ணிய முயற்சியெல்லாம் பயனுற வோங்கும், ஆங்கே
எண்ணிய வண்ணமெல்லாம் எளிதிலே வெற்றியெய்தும்
திண்ணிய கருத்தினோடும் சிரித்த முகத்தினோடும்
நண்ணிடும் ஞானபானு அதனை நாம் நன்கு போற்றின்.