31 மார்., 2020

அண்ணாமலையின் கைவண்ணம்!

பாராட்டுக்கள்!

3 மணிநேரத்தில் கொரோனாவை கண்டுபிடிக்கும் கருவி.. `ரியல் ஷீரோ'வான இந்தியப் பெண் மினல் போஸ்லே

தன் மகள் பிறப்பதற்கு சில மணி நேரங்கள் வரை ஆய்வுப்பணியில் ஈடுபட்டு கொரோனா கண்டறியும் சாதனத்தை வடிவமைத்துள்ளார் மினல் போஸ்லே.

‘கொரோனா வைரஸ்’ எதிரான போராட்டத்திற்கு சரியான நேரத்தில் கைகொடுத்து உதவியுள்ளார் இந்திய பெண் மினல் போஸ்லே. யார் இந்த மினல் போஸ்லே அப்படி என்ன செய்துவிட்டார் என்கிறீர்களா....

கொரோனா பாதிப்பைக் கண்டுபிடிக்கும் கருவிகள் இதுவரை ஜெர்மனி நாட்டில் இருந்தே இறக்குமதி செய்யப்பட்டு வந்தது. அந்தக் கருவியைக் கண்டுபிடிக்கும் பணியில் புனே நகரில் இயங்கிவரும் ’மைலேப் டிஸ்கவரி சொல்யூசன்ஸ்’ என்ற ஆராய்ச்சி மற்றும் செயல்பாட்டுக்கான நிறுவனம் ஈடுபட்டது. இந்நிறுவனத்தின் ரிசர்ச் அண்ட் டெவலப்மெண்ட் துறையின் தலைவர் தான் இந்த மினல் போஸ்லே. இவர் தன் குழந்தையை கருவில் சுமந்துக்கொண்டு கொரோனா வைரஸ் கண்டறியும் பரிசோதனை கருவிகளை மேற்கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

கொரோனா
கொரோனா
பிப்ரவரி மாதம் இவரிடம் இந்த பணி ஒப்படைக்கப்பட்டுள்ளது. அப்போது அவர் 8 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இவர் ஒரு வைரலாஜிஸ்ட் என்பதால் இவரிடம் இந்த பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. வைரஸ்கள் பற்றியும் அதன் செயல்பாடுகளை கண்காணிப்பது அதனால் ஏற்படும் விளைவுகளை ஆய்வு செய்வது போன்றவை வைரலாஜிஸ்ட்களின் முக்கியப்பணியாகும். பிப்ரவரி மாதத்தில் இருந்து இவரது தலைமையிலான குழு கொரோனாவுக்கான பரிசோதனை கருவிகளை கண்டறியும் பணிகளை மேற்கொண்டுள்ளது.

மினல் தகாவே போஸ்லே இதற்கான ஆய்வுப் பணியை முன்னின்று மேற்கொண்டார். அவரது தலைமையிலான குழுவினர், ஆறு வார காலத்தில் கொரோனா பரிசோதனைக் கருவியை செய்து முடித்துள்ளனர்.

பிரசவத்துக்கு முதல்நாள் வரை இவர் ஆய்வு பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். இன்னும் சொல்லப்போனால் தன் மகள் பிறப்பதற்கு சில மணி நேரங்கள் வரை ஆய்வுபணியில் ஈடுபட்டு கொரோனா கண்டறியும் சாதனத்தை வடிவமைத்து மார்ச் -18 தேதி மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளார். கருவி கண்டுபிடிக்கப்பட்டு அரசு நிறுவனங்களின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட மறு நாளிலேயே அழகான பெண் குழந்தையும் இவர் பெற்றெடுத்துள்ளார்.

கொரோனா பரிசோதனை கருவி
கொரோனா பரிசோதனை கருவி
இவர் கண்டறிந்த இந்தக் கருவிக்கு மத்திய மருந்து பொருள்களுக்கான தரக்கட்டுப்பாட்டு அமைப்பு, நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் வைராலஜி, உணவு மற்றும் மருந்துப் பொருள்களுக்கான அமைப்பு உள்ளிட்ட அமைப்புகள் ஒப்புதல் வழங்கின. அதனால் இந்தக் கருவி முழுவீச்சில் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவிலே தயாரிக்கப்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்பு கருவி என்ற பெருமையும், இதனை தயாரிக்கவும் விற்கவும் ஒப்புதல் பெற்ற முதல் இந்திய நிறுவனம் என்ற பெருமையும் மைலேப் டிஸ்கவரி நிறுவனம் பெற்றுள்ளது. கொரோனா சோதனை கருவியை இதுவரை இந்தியா ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்தது வந்தது. தோராயமாக ஒரு கருவியின் விலை 4,500 ரூபாய் எனக் கூறப்படுகிறது. இவரது முயற்சியால் இப்போது இந்த கருவி இந்தியாவிலே ரூ.1900-க்கு கிடைக்கிறது.

`தனிமையில் இருப்பது எளிதல்ல… ஆனால்!’ - கொரோனாவில் இருந்து மீண்ட ட்ரூடோ மனைவி வேண்டுகோள்
Also Read
`தனிமையில் இருப்பது எளிதல்ல… ஆனால்!’ - கொரோனாவில் இருந்து மீண்ட ட்ரூடோ மனைவி வேண்டுகோள்

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதில் பல்வேறு சிக்கல்கள் இருந்த நிலையில் இவரது கண்டுபிடிப்பின் மூலம் பரிசோதனை கருவிகள் தடையின்றி கிடைக்கும் என மருத்துவர்கள் நம்புகின்றனர். நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்தபோதும் இந்த பரிசோதனைக் கருவியைக் கண்டுபிடித்திருப்பதால் அவருக்குப் பாராட்டுகள் குவிகின்றன. இவரது முயற்சிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகிறது. தொழிலதிபர் ஆனந்த் மஹேந்திரா, இயக்குநர் சோனி ரஸ்தான் உள்ளிட்ட பல பிரபலங்கள் இவர் தான் ரியல் ஷீரோ எனப் பதிவிட்டுள்ளனர்.

கொரோனா  
கொரோனா
இது குறித்து மினல் தகாவே போஸ்லே கூறுகையில், ”எனது உடல் நலனைவிடவும் நாட்டின் நலனே முக்கியம் என்பதால் கொரோனா வைரஸ் பரவல் குறித்து அறிந்ததும் ஆய்வுப் பணியில் ஈடுபட்டோம். சுமார் 6 வாரத்தில் நானும் எனது குழுவினரும் சேர்ந்து கொரோனோ நோய் கண்டுபிடிக்கும் பரிசோதனைக் கருவியை உருவாக்கினோம்.

நாங்கள் தயாரித்துள்ள கருவிகளின் விலை குறைவு என்பதை விடவும் வேகமாகப் பரிசோதனைகளை மேற்கொண்டு முடிவை அறிவித்துவிட முடியும். வெளிநாட்டுக் கருவி மூலம் முடிவுகளை அறிவிக்க 6 அல்லது 7 மணி நேரம் எடுக்கும். ஆனால் உள்நாட்டுத் தயாரிப்பான எங்கள் கருவியின் மூலம் இரண்டரை மணி நேரத்திலேயே முடிவுகளை அறிவித்து விட முடியும்.

இந்தக் கருவியின் மூலம் துல்லியமான முடிவுகளைப் பெற முடியும். எடுத்துச் செல்வது, கையாளுவது ஆகியவையும் சுலபமாக இருக்கும். மத்திய அரசு அளித்த ஒத்துழைப்பின் காரணமாகவே எங்களால் இந்தக் கருவியைக் கண்டுபிடிக்க முடிந்துள்ளது.

மினாள் தகாவே போஸ்லே
மினாள் தகாவே போஸ்லே
எங்களால் தினமும் 15,000 முதல் 25,000 கருவிகளைச் செய்து கொடுக்க முடியும். ஒரு வாரத்துக்கு ஒரு லட்சம் முதல் இரண்டு லட்சம் கருவிகளை உற்பத்தி செய்யும் வகையில் வேகமாகப் பணியாற்றுகிறோம். அதனால் இனியும் கொரோனா தொற்று குறித்த பரிசோதனைக்காக வெளியிடங்களுக்கு ரத்த மாதிரியை அனுப்பி வைத்துவிட்டுக் காத்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை. இது ஒரு அவசரநிலை. எனவே இதனை நான் ஒரு சவாலாக எடுத்துக்கொண்டேன். நான் என் தேசத்துக்கான சேவையாக இதனை செய்தேன்” என்கிறார

Thanks to Vikatan

https://www.vikatan.com/news/healthy/indian-woman-who-delivered-indias-first-coronavirus-testing-kit?artfrm=v3

இயற்கையின் மாயாஜாலம்!

அபூர்வமான படம்!

உணவே மருந்து!

மனமார்ந்த நன்றிகள்!

இன்று ஒரு தகவல்

அறிவிப்பு

பாராட்டுக்கள்!

சிரிப்புத்தான் வருகுதையா!

சிரிக்கவும் சிந்திக்கவும்

இன்றைய சிந்தனைக்கு

ஆன்மீக சிந்தனை

நலக்குறிப்புகள்

வாவ்! படங்கள்

மகிழ்ச்சி!

கொரோனா குடிநீர் இலவசம்!

30 மார்., 2020

நாவல் நேரம்:கிழவனும் கடலும் - எர்ன்ஸ்ட் ஹெமிங்வே


கிழவனும் கடலும் - எர்ன்ஸ்ட் ஹெமிங்வே

Oldman and sea by Ernest Hemingway
483 views
Sep 28, 2019
Literature Box
இலக்கியப் பெட்டி
6.93K subscribers

நன்றி:   இலக்கியப் பெட்டி மற்றும் யூட்யூப் 


பாராட்டுக்கள்!

உணவே மருந்து

அண்ணாமலையின் கைவண்ணம்!

மேலும் தகவல்

கவலைச் செய்திகள்

இன்று ஒரு தகவல்

ஹோமியோபதி மருந்து

வேதனைச் செய்திகள்

உணவே மருந்து!

வாவ்! படங்கள்

அபூர்வமான படம்!

இயற்கையின் மாயாஜாலம்!

இன்றைய சிந்தனைக்கு

29 மார்., 2020

கரோணாவை முன்னிட்டு தனிமையில் இருந்தபோது சிந்தித்தது,
“நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்களல்ல”
1.கழிவறையும்,குளியலறையும் வீட்டிற்குள் வைக்காமல் கொல்லைபுறத்தில் வைத்தார்கள்.ஏன்-பெயர் வைக்காத கண்ணுக்கு தெரியாத கிருமிகள்.
2. சலூனுக்கும்,சாவுக்கும் சென்று வந்தால் எதையும் தொடாமல் குளித்தபின் வீட்டிற்குள் வந்தார்கள்.ஏன்-கிருமிகள்.
3. செருப்பை வீட்டின் வெளியே விட்டார்கள்.ஏன்-கிருமிகள்.
4. பள்ளிக்கும்,வெளியேயும் சென்று வந்தால் கைகால் கழுவி வீட்டிற்குள் வரசொன்னார்கள்.ஏன-கிருமிகள்.
5. பிறந்தாலோ,இறந்தாலோ தீட்டு என்று 10, 16 நாட்கள் தனிமைபடுத்தினர்.ஏன்-கிருமிகள்
6. சாவு வீட்டில் சமைக்க கூடாது என்றார்கள்.ஏன்-கிருமிகள்.
7. குடும்பத்திற்கு சமைக்கும் பெண்கள் குளித்துவிட்டு சமைத்தார்கள்.ஏன்-கிருமிகள்.
8. வாசல் பெருக்கி சாணம்,மஞ்சள் தெளித்து கோலமிட்டார்கள்.ஏன்-கிருமிகள்.
9.மண்,செம்பு,வென்கல பாத்திரங்களை உபயோகித்தார்கள்.ஏன்-கிருமிகள்.
10. வீட்டில் சமைத்த உணவு அதிலும் சைவமே பெரும்பாலும் உண்டார்கள்.ஏன்-கிருமிகள்.
தனிமனித ஆரோக்கியம்,சமூகத்தில் சுத்தம்,அண்டை அயலாரோடு அகலாது அனுகாது உறவாடுதல் போன்ற நம் மூதாதையர் வாழ்வியல் நெறியை கிண்டலடித்து,திட்டமிட்டு சிதைத்த மேலைநாட்டு நாகரிகம் அதற்கான விலையை இன்று கொடுத்து கொண்டிருக்கிறது.(___________________________)இனியாவது இளந்தலைமுறையினர்
“மூத்தோர் சொல் வார்த்தையும், முழு நெல்லிக்காயும் முதலில் கசக்கும் பின்பு இனிக்கும்”
என்றுணர்ந்து வளமான வாழ்வு வாழ்தல் நன்று.💐.🙏

மலரும் நினைவுகள்

நலக்குறிப்புகள்

அபூர்வமான படம்!

அண்ணாமலையின் கைவண்ணம்!

வாவ்! படங்கள்

புதிய ஆத்திச்சூடி

பயனுள்ள குறிப்புகள்

உணவே மருந்து!

இன்று ஒரு தகவல்