தேவாரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தேவாரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

11 அக்., 2021

பக்திப் பாமாலை : தேவாரம் - சிவன்


உருக வைக்கும் தேவார பாடல்

THEVARAM SONG/SHIVANSONG

தேவாரம் பாடல்

THEVARAM SONG IN TAMIL

சிவன் பாடல்

1,126,326 views

Feb 2, 2020

Anniyan Tv

11.6K subscribers

#shivasong #ThevaramSong  #தேவாரம்பாடல் #ThevaramSongsinTamil

#Thevarampadalkal

#ThillaivaazhSong

#Thillaivaalthevaramsong

#TamilThevaramsong

 

தில்லைவாழ் தேவார இசை பாடல்

நம்மை கரைய வைக்கும் தேவார இசை பாடல், தமிழர்கள் அனைவரும் தங்கள் குழந்தைகளுக்கு இப்பாடலை சொல்லி கொடுங்கள் ,8 நிமிட பாடலில் 63 நாயன்மார்களின் பெயர்களையும் ,அவர்களின் குணங்களையும் எளிமையாக சொல்லும் இந்த பாடல் மனதை கரைக்கிறது ,பாடலை கடைசி வரை கேளுங்கள் ,63 நாயன்மார்கள் பெயர்களும் அழகு பெற இடம்பெறுகிறது

 

Grateful thanks to

சிவன்

Anniyan Tv

and YouTube and all the others who made this video possible. 

18 நவ., 2020

பக்திப் பாமாலை : 'பொன்னார் மேனியனே' - சுந்தரர் தேவாரம் - T.M.சௌந்தரராஜன்


T.M.சௌந்தரராஜன் பாடிய சுந்தரர் தேவாரம்

 'பொன்னார் மேனியனே'

 

PONNAR MENIYANE-SUNDARAR THEVARAM-SINGER: T.M.SOUNDARARAJAN

55,594 views•Feb 21, 2017

SRINIVASAN BALAKUMAR

29.8K subscribers

-Video Upload powered by https://www.TunesToTube.com

 

Grateful thanks to SRINIVASAN BALAKUMAR and YouTube and all the others who made this video possible 

28 அக்., 2020

பக்திப் பாமாலை : பித்தா பிறை சூடி | தேவாரம் - தில்லை நடராஜர்


பித்தா பிறை சூடி | தேவாரம் |

Pitha pirai soodi | Thevaram | with lyrics | தில்லை நடராஜர்

370 views•Jul 6, 2020

தில்லை நடராஜர்

2.61K subscribers

திருச்சிற்றம்பலம்..

 

அனைவருக்கும் வணக்கம்.

 

Welcome to my channel.

 

நடராஜர் பற்றிய அனைத்து பாடல்கள்,ஸஷஸ்ரநாமங்கள் மற்றும் பல தகவல்களை இந்தச் சேனலில் காணலாம்.

 

மறக்காமல் "SUBSCRIBE" பன்னவும்.

 

Grateful thanks to தில்லை நடராஜர் and YouTube and all the others who made this video possible 

7 அக்., 2020

பக்திப் பாமாலை : தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடி.. திருஞானசம்மந்தர் தேவாரம் : திருத்தணி என்.சுவாமிநாதன்


தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடி..

திருஞானசம்மந்தர் தேவாரம்

பாடியவர் : திருத்தணி என்.சுவாமிநாதன் அவர்கள்

ஸ்ருதிலயா

THODUDAIYA SEVIYAN - THEVARAM

603,351 views•Feb 20, 2016

THEVARA THIRUMURAIGAL

8.71K subscribers

Thodudaiya Seviyan - Thevara Padhigam authored by Thirugnanasambandar and Sung by Tiruthani N Swaminathan and produced by Sruthilaya. The Padhigam is on the Saivaite place known as Sirkazhi.

Artist : TIRUTTANI N.SWAMINATHAN

ALBUM : NALAMIGU PADHIGANGAL 40

Licensed to YouTube by

[Simca] SRUTHILAYA AUDIO (on behalf of Sruthilaya); Audiam (Publishing), BMI - Broadcast Music Inc., [Simca Pub] South India digital Music Management

 

Grateful thanks to THEVARA THIRUMURAIGAL, TIRUTTANI N.SWAMINATHAN, SRUTHILAYA AUDIO and YouTube and all the others who made this video possible 

20 நவ., 2017

தேவாரம்,-13: திருநாவுக்கரசு சுவாமிகள் பாடல் 5.1.2 (ஐந்தாம் திருமுறை முதற் பகுதி)

அரும்பற் றப்பட ஆய்மலர் கொண்டுநீர்
சுரும்பற் றப்படத் தூவித் தொழுமினோ
கரும்பற் றச்சிலைக் காமனைக் காய்ந்தவன்
பெரும்பற் றப்புலி யூரெம் பிரானையே.

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த
தேவாரப் பதிகம் - பாடல் 5.1.2

(ஐந்தாம் திருமுறை முதற் பகுதி)

24 செப்., 2017

தேவாரம்-12 துன்ப மின்றித் துயரின்றி யென்றுநீர் இன்பம் வேண்டில்...

துன்ப மின்றித் துயரின்றி யென்றுநீர்
இன்பம் வேண்டில் இராப்பகல் ஏத்துமின்
என்பொன் ஈசன் இறைவனென் றுள்குவார்க்
கன்ப னாயிடும் ஆனைக்கா அண்ணலே.   

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த
தேவாரப் பதிகம் - பாடல் 5.31.3

(ஐந்தாம் திருமுறை முதற் பகுதி)

2 ஆக., 2009

தேவாரம்-11:

திருவும் மெய்ப்பொருளும் செல்வமும் எனக்கு உன்
சீருடைக் கழல்கள் என்று எண்ணி
ஒருவரை மதியாது உறாமைகள் செய்தும்
ஓடியும் உறைப்பனாய்த் திரிவேன்;
முருகமர் சோலை சூழ் திருமுல்லை
வாயிலாய்! வாயினால் உன்னைப்
பரவிடும் அடியேன் படுதுயர் களையாய்;
பாசுபதா! பரஞ்சுடரே!

- சுந்தரமூர்த்தி நாயனார்

31 ஜூலை, 2009

தேவாரம்-10:

பெருகலாம் தவம் பேதைமை தீரலாம்
திருகலாகிய சிந்தை திருத்தலாம்
பருகலாம் பரமாயதோர் ஆனந்தம்
மருகலான் அடி வாழ்த்தி வணங்கவே.

- திருநாவுக்கரசர்

28 ஜூலை, 2009

தேவாரம்-9:

குருகாம் வயிரமாம் கூறும் நாளாம்
கொள்ளும் கிழமையாம் கோளேதானாம்
பருகா அமுதமாம் பாலில் நெய்யாம்
பழத்தின் இரதமாம் பாட்டிற் பண்ணாம்
ஒருகால் உமையாளோர் பாகனுமாம்,
உள்நின்ற நாவிற்கு உரையாடியாம்
கருவாய் உலகுக்கு முன்னே தோன்றும் கண்ணாம்
கருகாவூர் எந்தைதானே.

- திருநாவுக்கரசர்

26 ஜூலை, 2009

தேவாரம்-8:

தொழுது தூமலர் தூவித் துதித்து நின்று
அழுது காமுற்று அரற்றுகின்றாரையும்
பொழுது போக்கிப் புறக்கணிப் பாரையும்
எழுதும் கீழ்க்கணக்கு இன்னம்பர் ஈசனே.
- திருஞானசம்பந்தர்

25 ஜூலை, 2009

தேவாரம்-7:

மண்ணில் நல்ல வண்ணம் வாழலும் வைகலும்
எண்ணின் நல்ல கதிக்கியாதுமோர் குறைவிலைக்
கண்ணின் நல்லஃதுரும் கழுமல வளநகர்ப்
பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே.

-திருஞானசம்பந்தர்

24 ஏப்., 2009

தேவாரம்-6: "தோடுடைய செவியன்..."

தோடுடைய செவியென் விடையேறியோர் தூவெண் மதிசூடிக்
காடுடைய சுடலைப் பொடிபூசி எனுள்ளங் கவர்கள்வன்
ஏடுடைய மலரான்முனை நாட் பணிந்தேத்த அருள்செய்த
பீடுடைய பிரமாபுர மேவிய பெம்மான் இவனென்றே.

2 மார்., 2009

தேவாரம்-5:

நீருளான் தீ உளான் அந்தரத்துள்ளான்
நினைப்பவர் மனத்துளான் நித்தமாஎத்தும்
ஊருளான் எனதுரை தனதுரையாக
ஒற்றை வெள்ளேருகந் தேறியஒருவன்
பாருளார் பாடலோ டாடலறாத
பண்முரன் றஞ்சிறை வண்டினம்பாடும்
ஏருளார் பைம்பொழில் இலம்பையங் கோட்டூர்

இருக்கையாப் பேணிஎன் எழில்கொல்வதியல்பே.

யாருள் பிரபஞ்சம் தொகுத்தும், வகுத்தும் ஒன்றித்திருக்கிறதோ, அவர் உயிர்களுக்கு இறைவன். குறுக்கும் நெடுக்குமாக அவர் வியாபித்திருக்கிறார். அவர் அழிவற்றவர். எல்லார் உள்ளத்திலும் அவர் வீற்றிருக்கிறார்.
- சம்பந்தர் தேவாரம்.
நன்றி: தர்ம சக்கரம், ஆனி மாத இதழ், சர்வஜித் வருடம், சக்கரம் 56, ஆறாம் 6.
(திருப்பராய்த்துறை ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவன வெளியீடு)

17 பிப்., 2009

தேவாரம்-4: "பொன்னவன்..."

பொன்னவன் பொன்னவன்
பொன்னைத்தந்து என்னைப் போகவிடா
மின்னவன் மின்னவன்
வேதத்தின் உட்போருளாகிய
அன்னவன் அன்னவன்
ஆமாத்தூர் ஐயனை ஆர்வத்தால்
என்னவன் என்னவன்
என் மனத்து இன்புற்று இருப்பானே!
- சுந்தரர் தேவாரம்

26 நவ., 2008

தேவாரத் திருப்பதிகம்-3

மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தன் இணையடி நிழலே.
- திருநாவுக்கரசர்

தேவாரத் திருப்பதிகம்-1:

நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்
நரகத்தில் இடர்ப்படாம் நடலை இல்லோம்
ஏமாப்பும் பிணியறியோம் பணிவோம் அல்லோம்
இன்பமே எந்நாளும் துன்பமில்லை.
- திருநாவுக்கரசர்

24 செப்., 2008

தேவாரம்-1: "காதலாகிக் கசிந்து..."

காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை நன்னெறிக் குய்ப்பது
வேத நான்கினும் மெய்ப்பொரு ளாவது
நாதன் நாமம் நமச்சி வாயவே.