பா.ராகவன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பா.ராகவன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

4 அக்., 2021

நூல் நயம் : நிலமெல்லாம் ரத்தம் - பா.ராகவன்

வாசிப்பு மாரத்தான் 2021 

 25 / 50
 
RM0017
புத்தகத்தின் பெயர்:  நிலமெல்லாம் ரத்தம்
ஆசிரியர்: பா.ராகவன்
பக்கங்கள்: 704

ஒரு வகையில் சகோதரர்கள் தான். ஒரே மண்ணைச் சார்ந்தவர்கள் தான். கால இடைவெளியில் மக்கள் தொகையில் ஏற்ற இறக்கம் ஏற்பட்டிருக்கலாம். ஆனால், யூதர்களுக்கும் இசுலாமியர்களுக்கும் பொதுவான நிலம் தான் அது. 

இங்கு யார் யாரை ஏமாற்றினார்கள் என்றால் அப்பட்டமாக யூதர்கள் தான் அரேபியர்களை ஏமாற்றி வன்முறைப்பாதையில் தள்ளியிருக்கிறார்கள். அதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். குள்ளநரித்தனம் மிக்க யூதர்களின் எந்த வித நரித்தனத்தையும் புரிந்துகொள்ளாமல் அமைதி காத்தது தான் பாலஸ்தீன அரேபியர்களின் முதல் தவறு. 

உலகப்போரில் ஹிட்லருக்கு ஆதரவு தெரிவித்தது  இரண்டாவது தவறு. 

ஏகப்பட்ட சட்டசிக்கல்கள் இஸ்ரேல் பாலஸ்தீன் பிரிவினையில். எவையும் கண்டுகொள்ளப்படவில்லை.

 உலகப்போரில் பிரிட்டனுக்கு ஆதரவு தெரிவித்ததற்கு கைமாறாக யூதர்கள் பெற்றுக் கொண்ட சலுகையே இஸ்ரேல்.

அயோத்தி ஜென்ம பூமி பிரச்சனை போல, ஜெருசலேம் சாலமன் ஆலயப்பிரச்சனை ஒரு தீர்க்க முடியாத பிரச்சனை.

படிக்கபடிக்க ஆச்சரியம். நம் பொதுப்புத்தியில் படிந்துள்ள அரேபியர்கள் குறித்தான பார்வையை இப்புத்தகம் மாற்றும்.

கட்டாயம் படியுங்கள்.

நன்றி..!!

நன்றி :

திரு சரவணக்குமார் ஞானப்பிரகாசம்,
வாசிப்பை நேசிப்போம், 
முகநூல்

9 செப்., 2021

நூல் மயம் : ஓம் ஷின்ரிக்கியோ - பா. ராகவன்

*Reading Marathon  2021-50*
*RM.. ID.. # 00105*
# *36--50* #
புத்தகத்தின் பெயர்:-      *ஓம் ஷின்ரிக்கியோ *
ஆசிரியர் :-  *பா. ராகவன் *
பக்கம்:- *85
மின்னூல்

 நண்பர்களே,
 மிகவும் வறியப்பட்ட குடும்பத்தில் பிறந்து, ஒன்றுக்குமே லாயக்கில்லாதர் என்று வீடுட்டாரால் கைவிடப்பட்ட நிலையில் இருந்து, வேறு பலர் யாருமே சிந்திக்காத ஒரு வித்தியாசமான முறையில் சிந்தித்து, பின் நாட்களில் "சிவபெருமானின்* நாமத்தை உச்சரித்து, *ஜப்பான், ஆஸ்திரேலியா, ரஷ்ய* போன்ற நாடுகளில் தனது பக்தர்களை உண்டாக்கி, ஜப்பான் நாட்டை தான் தான் ஆளவேண்டும் என்றும், எண்பதுகளில் உலக அரங்கில் எல்லோரையும் என்னைத் திரும்பிப் பாருங்கள் என்று திகைக்க வைத்த *ஷோகோ* என்ற *தக்காளிச்சாமியார் * பற்றிய அறிமுகம் தான் இந்தச் சிறிய புத்தகம். *ஆசிரியர் பா. ராகவன்  தனது பாணியில் நகைச்சுவை மேலோங்க, திறம்பட வாசிப்பாளர்களுக்கு தந்துள்ளமை மிகவும் பாராட்டத்தக்கது.

 ஆரம்ப காலத்தில் எல்லாவிதமான *மதம்* சார்ந்த புத்தகங்களையே விரும்பிப் படித்துவந்த **ஷோகோ**, அவற்றில் இந்து மதத்தையும், புத்த மதத்தையும் அவரது மனம் கொள்ளை கொள்ள, அதிலிருந்து *ஓம்* என்று உச்சரிக்கத் தொடங்கினார். அதன் தொடர்ச்சியாக அவர்  இந்துமத வழிபாட்டுத் தலங்களுடைய சில நாடுகளுக்கும் சென்று வந்தார். இறுதியாக வட இந்தியா சென்று, சில சித்தர்களைச் சந்தித்தபின் அங்கே *தியானம், யோகா, சில மந்திரங்கள்* போன்றவற்றை சில காலம் தங்கியிருந்து கற்றறிந்தார். அதன் முடிவாக *ஓம் ஷின்ரிக்கியோ * என்ற ஒரு *பக்தி மார்க்க* இயக்கத்தை உருவாக்கினார்.

 ஜப்பானியர்கள் 2 வது உலகமாகாயுத்தத்தின் பின்னர் தமது நாட்டைக் கட்டியெழுப்பவே, தினமும் ஓட்டமும் நடையுமாக இருந்து வருகின்றனர். அணுகுண்டைப் போட்ட அமெரிக்கா, அத்துடன் தனது புதிய அரசு சட்டங்கள், புதிய வாழ்க்கை, சில கலாச்சாரங்கள் என்று சிலவற்றையும் விதைபோட்டுச் சென்றது. அதேவேளை ஜப்பானியர்கள் மதத்தையோ, நம்பிக்கைகளையோ, கலாச்சார, பழக்கவழக்கங்களயோ மிகவும் மதிக்கக்கூடியவர்களாக இருந்த காரணத்தினால் *தக்காளிச் சாமியார் * தனது *ஓம் சிவ சிவா * பக்தி மார்க்க மூலம் மக்களை காந்தம் போல் ஈர்க்கத் தொடங்கினார்.

** ஷோகோ * தனது இந்தியப் பயணத்தை முடித்துக் கொண்டு ஜப்பான் திரும்பியதும், *டோக்கியோ* வில் ஒரு சிறிய அப்பார்ட்மெண்ட்டில் வாடகைக்கு வீட்டைப் பதிவு செய்து குடியேறினார். ஆரம்பத்தில் இளைய தலைமுறைகள் அவரது *பக்தி*மயக்கத்தில் மூழ்கினார்கள். அடுத்து வந்த காலகட்டத்தில் முதியவர்கள், பட்டதாரிகள், தொழில் அதிபர்கள், காவல் துறை அதிகாரிகள், அரசியல் வாதிகள், ஏன்... *விஞ்ஞானிகள், ரஷ்ய அமைச்சர்*கூட இவரின் *ஓம் ஷின்ரிக்கியோ * பக்தனாக உறுதி பூண்டார்கள்.

பிறகென்ன, வழமைபோல் ஏற்கனவே பல சாமியார்களின் வரலாறுகளை நாம் முன்னோக்கிப் பார்தோமேயானால், அதே போன்ற நிகழ்சிகள் தான் தொடர்ந்தன. *டாலர்கள் குவிந்தன, பல ஷின்ரிக்கியோ * கிளைகள்* தோன்றின. ஜப்பான், ரஷ்ய, அவுஸ்திரேலியா என பல நாடுகளில் இருந்தும் கோடிக்கணக்கான பணம் நன்கொடையாக வந்து குவிந்தன.

 இங்கே ஆசிரியர் *பா. ராகவன்  13 சிறிய தலைப்புகளில் *ஜப்பான் சாமியார் * பற்றி அசத்தும் படியாக தனது ஆக்கத்தை வடித்திருக்கிறார்.

# ஓம்! ஓம்! ஓம்!
# உலகம் சுற்றும் வாலிபன்
# முதல் கொலை, இரண்டாம் கொலை
# அழைக்கிறது அரசியல்
# மரண அடி
# தாமரைப் பிரசங்கம்
# மூணு கேஸ்
# உயிரே உயிரே உடனே போ
# ஷெரீன் இல்லை, செரீன்
# இரண்டு வெற்றிகள்
# மாட்டிக்கொண்ட மகான்
# எங்கே தக்காளி?
# ஹரி ஓம்

 நண்பர்களே, தலைப்புகளைப் பார்த்தாலே நம் எண்ண ஓட்டங்கள் ஓரளவுக்கு ஒளிந்திருப்பவை வெளிவர நிறைய சந்தர்ப்பங்கள் உண்டு என நினைக்கிறேன்.
எல்லாம் எழுதிவிட்டால் வாசிக்கும் உங்கள் ஊக்கம்  முறியடிக்கப் படலாம் என்றே தோன்றுகின்றது.

எனது அன்பான சிஸ்ஸியர்களே உறங்கியது போதும் இவ்வளவு சொத்துக்களையும் வைத்துக்கொண்டு என்ன செய்கிறீர்கள்? அடுத்து வரப்போகும் *3 வது உலகப்போரைக் காப்பாற்றுவது* நமது கடமையல்லவா, எனவே அதற்குத் தயாராகுங்கள் என்று அழைப்பு விடுத்தது மட்டுமல்ல, ஏராளமான ஆயுதங்களையும், நவீன துவக்குகளையும் வாங்கிக் குவித்தார் *ஷோகோ *. அது மட்டுமல்லாது, படு பயங்கரமான *இரசாயன ஆயுதங்களை * ஜப்பானிலேயே தயாரித்தார். அதனை பரீட்சித்துப் பார்த்தார். *ஓம் சிவாயநம * என்ற பெயரில், ஜப்பானில் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கமாக 1989 ல் தந்திரமாக தனது இயக்கத்தை சட்டபூர்வமா அங்கீகரிக்கச் செய்தார்.

அதே ஆண்டில் தனது உடம்பில் ஓடுவது இரத்தமில்லை, அது ஒரு *சிரெஞ்ச் ரத்தம்* என்றும் அது சிவபெருமானால் தருவிக்கப் பட்ட ஊற்று என்று ஒரு புலுடாவை அவிழ்த்து விட்டார். கடைசியில் நடந்ததை வசித்து அறியுங்கள் நண்பர்களே. அதுமட்டுமின்றி, தனது தாடி முடியை மிகச் சிறு துண்டுகளாக்கி (ஒரு இஞ்சி அளவு) அதனை ஒரு பேளையில் வைத்து, ஒன்றுக்கு *375 டாலருக்கு* விற்று, மேலும் பணத்தின் மீது மிதந்தார்.

1990 ல் நடைபெற்ற ஜப்பான் பாரளுமன்றத் தேர்தலில் *ஷோகோ * வால் தேர்ந்தெடுக்கப்பட்ட தனது வேட்பாளர்கள் (மன்னிக்கவும் பக்தர்கள்) 24 பேரும் டிப்போசிட் இழந்த கதை,1994 ல் ஏற்பட்ட இரசாயன பரிசோதனை, ரஷ்ய நாட்டில் இருந்து களவாடப்பட்ட அணுமின் உற்பத்திக்கான ஆவணங்கள் , இன்னும் பல அறியப்படாத தகவல்களை தெரிந்து கொள்ள வாசியுங்கள்.

இறுதியாக *ஷோகோ * வின் ஆட்டங்கள் எப்படி முடிவுக்கு வந்தது. அவரை எங்கே பொலீஸார் மடக்கிப் பிடித்தனர், அவரது தண்டனை எவ்வாறு விதிக்கப்பட்டது, அவரது சீடர்கள் என்ன ஆனார்கள், போன்ற விபரங்கள் யாவற்றையும் வாசித்து அறிந்து கொள்ளுங்கள். மாமிசம் உண்பவர்கள் இருக்கும் வரைக்கும் விலங்குகளும் பறவைகளும் வேட்டையாடுவதை நிறுத்த முடியாது. அதைபோல் **ஏமாறுபவர்கள் இருக்கும் வரைக்கும் ஏமாற்றுபவர்கள் முளைத்துக் கொண்டுதான் இருப்பார்கள்** என்ற விதியை மாற்ற முடியுமா என்று தெரியவில்லை.

நன்றிகள்
பொன் விஜி - சுவிஸ்

நன்றி :