27 ஏப்., 2021

குட்டிக்கதை

எச்சரிக்கை ...பயந்த சுபாவம் உள்ளவர்கள் தயவுசெய்து இதை படிக்க வேண்டாம்....

மேற்குத்தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் உள்ள ஒரு கிராமம்...

தென்னந்தோப்புகளும் பாக்கு தோட்டங்களும், ரப்பர் தோட்டங்களும் நிறைந்தபகுதி அது!

நிலத்தை ஒட்டிய பகுதியில் வீடுகட்டி ஒரு சிறிய குடும்பம்
வாழ்ந்துகொண்டு இருந்தது!
நடுத்தர வயதை ஒட்டிய ஒரு கணவன் மனைவி,
அவர்களுக்கு பத்து வயதில் ஒரு பெண் குழந்தை!
ஒரு நாள் அந்த வீட்டை சேர்ந்த பெண் தன் வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு, மாடுகளுக்கு புல் அறுப்பதற்காக 
தென்னந்தோப்புக்கு செல்கிறாள்!

அவள் புல் அறுத்துக்கொண்டு இருக்கும்போது ஒரு குழந்தையின் அழுகுரல் கொஞ்சம் கொஞ்சமாக கேட்கிறது!
அவள் பதட்டத்துடன் எங்கிருந்து வருகிறது என்று தேட கொஞ்ச நேரத்தில் அந்த குழந்தையின் அழுகுரல் நின்று விடுகிறது!

திரும்பவும் மீண்டும் ஒரு முறை அதே அழுகுரல் கேட்கிறது!
பயத்துடன் அந்த அழுகுரல் வரும் திசையை நோக்கி நடக்கிறாள்!

ஒரு தென்னை மரத்தில் இருந்து அந்த அழுகுரல் வருவதை கவனிக்கிறாள்!
தென்னை மரத்தில் ஏதாவது குழந்தை இருக்கிறதா என்று மேலே பார்த்தபடி தேடுகிறாள்!
எந்த குழந்தையும் அவள் கண்ணுக்கு தெரியவில்லை!

ஒரு நாளைக்கு நாலைந்து முறையாவது அந்த அழுகுரல்
கேட்டுக்கொண்டே இருக்கும்!
பயந்து போய் தன்னுடைய கணவனுக்கு சொல்கிறாள்! அவன் முதலில் ஏதாவது உன்னுடைய பிரம்மையாக இருக்கும் என்று பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் இருக்கிறான்!

அன்று இரவு எல்லோரும் சாப்பிட்டு படுக்கும்போது,
இரவு பத்து மணிக்கு மேல் மீண்டும் ஒரு முறை அந்த குழந்தையின் அழுகுரல் கேட்கிறது!

அவன் இப்போது தான் மனைவி சொன்னதை நம்புகிறான்!

கையில் பெரிய டார்ச் லைட்டை எடுத்துக்கொண்டு அந்த தென்னந்தோப்புக்குள் நுழைகிறான்!

அவனுடைய மனைவி வேண்டாம் என்று மறுக்கிறாள்!
ஆனாலும் அவன் தைரியமானவன் என்பதாலும் அதே கிராமத்தில் சிறுவயதில் இருந்து வாழ்ந்து பழக்கப்பட்டவன் என்பதாலும் தைரியமாக தோப்புக்குள் செல்கிறான்!

அவளும் கணவனுக்கு ஏதாவது ஆகிடுமோ என்று பயந்து
பின்னாலேயே போகிறாள்!

அவளுக்கு கேட்ட அதே அழு குரல் அதே தென்னை 
மரத்திலிருந்து கேட்கிறது!

அவன் கீழிருந்தபடி உயரமான அந்த தென்னை மரத்தில் டார்ச் அடித்து பார்க்கிறான்! அந்த மரத்தில் இருந்து ஏதோ ஒரு பறவை மட்டுமே பறந்து செல்கிறது!

அருகில் வரும் வரை கேட்டுக் கொண்டிருந்த அந்த அழுகை குரல் இப்போது கேட்கவில்லை!

போலாம் வாங்க என்று மனைவி அழைத்ததால் இருவரும் வீடு திரும்புகிறார்கள்!
அடுத்த நாள் அவளுடைய அண்ணனுக்கு இந்த தகவலை
சொல்கிறாள்!

மீண்டும் அழுகுரல் வந்தால் எனக்கு போன் செய்யுங்கள்
நான் ஆட்களோடு வந்து பார்க்கிறேன் என்று சொல்கிறான்!

அவள் அந்த அழுகுரலுக்கு பயந்து அந்த தோப்பின் பக்கமே போகாமல் இருக்கிறாள்!

அடுத்த நாள் இரவு எல்லோரும் சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் போது எட்டு மணிக்கெல்லாம் அந்த அழுகை குரல் கேட்கிறது!

அவளும் அண்ணனுக்கு போன் செய்கிறாள்! அவளுடைய அண்ணன் நாலைந்து ஆட்களை அழைத்துக்கொண்டு வருகிறான்!

அங்கே இருக்கும் சில மரக் கட்டைகளில் துணியை
இறுக்கமாக சுற்றிக்கொண்டு அவற்றின் மீது 
மண்ணெண்ணெய் ஊற்றி பற்றவைத்துக் கொண்டு அந்த தென்னந்தோப்பிற்கு கிளம்புகிறார்கள்!

வீட்டில் இருக்கும்போது குறைவாக கேட்கின்ற அந்த
அழுகை சத்தம் அருகேசெல்லச் செல்ல அதிகமாக கேட்கிறது!

பின் கொஞ்ச நேரத்திற்கெல்லாம் முழுவதும் நின்றுவிடுகிறது!
அந்த குறிப்பிட்ட மரத்தின் அருகில் சென்று தீப்பந்தத்தை காட்டிமேலே சுற்றி சுற்றி பார்க்கிறார்கள்!

எதுவுமே தெரியவில்லை! அழுகுரலும் நின்றுவிட்டது!
தீயை பார்த்தால் எந்தப் பேயாக இருந்தாலும் பயந்துவிடும் என்றுகூட்டத்தில் இருந்த நாலு பேரில் ஒருவன் உறுதியாக கூறுகிறான்!

அவன் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே மீண்டும் அழுகுரல் சத்தமாக கேட்க ஆரம்பிக்கிறது!

எல்லோருமே பயந்துவிடுகிறார்கள்! அந்த இடத்தை விட்டு
உடனே ஓடிவந்து விடுகிறார்கள்!
அடுத்த நாள் ஒரு பெரிய சாமியாரை அழைத்துவந்து
அந்த தென்னை மரத்தை சுற்றி மஞ்சள் கயிறால் கட்டு கட்டி,
ஒரு தென்னங்கன்றுக்கு பாலாபிஷேகம் செய்து நிறைய சடங்குகள் எல்லாம் செய்து, பூஜைகள் எல்லாம்
செய்துவிட்டு, இனிமேல் நிச்சயம்அந்த அழுகுரல் கேட்காது என்று சொல்லி விட்டுப் போகிறார்!

அவர்களும் நிம்மதியாக தூங்குகிறார்கள்!
ஆனால் அடுத்த நாள் விடியற்காலையிலேயே அந்த 
அழுகுரல் கேட்க ஆரம்பிக்கிறது!

இந்த முறை தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கிறது!
இடைவெளி இல்லாமல் திரும்ப திரும்ப கேட்கிறது!
தோப்பின் பக்கம் யாரோ ஆள் நடமாட்டம் இருப்பது போல் அவர்களுக்கு தெரிய, பயமாக இருந்தாலும் யாரென்று பார்ப்பதற்காக, கொஞ்சம் தைரியத்தை 
வரவழைத்துக் கொண்டு போகிறார்கள்,

அருகில் போகப்போக மரத்தின் மேல் ஏதோ ஒரு உருவம்
இருப்பது போல் தெரிகிறது!
தென்னை ஓலைகளும் மட்டையும் அசைகின்ற சத்தம் கேட்கிறது!

திடீரென்று மரத்திலிருந்து ஒரு உருவம் சரசரவென இறங்கி கீழே வருகிறது!

இவர்கள் நடுங்கிப்போய் பார்க்க ....

மரத்திலிருந்து இறங்கிய மரமேறி, ஒண்ணும் இல்லம்மா
நாலு நாள் முன்னாடி தேங்காய் பறிக்க ஏறும்போது போனை
மேலயே விட்டுட்டு வந்துட்டிருக்கேன், எங்கடா காணோம் காணோம்னு நாலு நாளா தேடிட்டு இருந்தேன்,

ஒவ்வொரு தோப்பா போயி ஊரெல்லாம் போன் பண்ணி 
போன் பண்ணி தேடிட்டு இருந்தேன்!

கடைசியில உங்க தோப்புலயே இருந்திருக்கு!
என்று அவன் சந்தோஷப்பட அதற்குள் மீண்டும் அந்த
அழுகுரல் ரிங்டோன் ஒலிக்க அதை அட்டென்டு செய்து
போனு கிடைச்சிடுச்சிம்மா, கடைசியில நம்ம துர்கா அக்கா 
தோட்டத்துல தான் இருந்திருக்கு,

போனை பார்த்த பின்னாடி தான் எனக்கு உயிரே வந்திருக்கு,
என்று அவன் பேசியபடி நடந்து செல்ல ..

அட 😂 😀 😂
நல்லா ...............

நூல் நயம் : பூமணியின், "அஞ்ஞாடி"


நன்றி :

RM 255
28/25

அஞ்ஞாடி
- பூமணி

அம்மாவை அஞ்ஞை என்று அழைக்கும் கரிசகாட்டு கலிங்கல் பள்ளர் குடியில் ஆரம்பிக்கும் கதை. இப்போது புரிகிறதா... அஞ்ஞாடி என்றால் என்ன அர்த்தம் என்று?! நமக்கு படிக்கும் போதே 1000 முறை அஞ்ஞாடி என்று பெருமூச்சு விட வைத்து விடும் 1950 பக்க பொக்கிஷம். கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக இந்த ஒரே புத்தகத்தில் மூழ்கி மூழ்கி எடுத்த முத்துக்களை மாலையாக கோர்த்தால் உலகத்தில் உள்ள அத்தனை சாமிகளுக்கும் போட்டு விடலாம்.
இதுவரை நான் படித்த நாவல் களிலேயே ஆகச் சிறந்த உண்மையான வரலாற்று நாவல் என்று தயக்கமே இல்லாமல் "அஞ்ஞாடி"யை மிகப் பெருமையாக சொல்வேன். கிட்டத்தட்ட 200 வருடங்களுக்கும் அதிகமான வரலாற்றை தங்கு தடையின்றி எப்படித்தான் மனிதர் இப்படி எழுதினாரோ தெரியவில்லை. வாழ்க்கையில் ஒரு தடவையேனும் பூமணி அவர்களை சந்தித்து காலில் விழுந்து கும்பிட வேண்டும் போலிருக்கிறது. என்னால் நாவலில் பேசப்பட்ட விஷயங்களை சத்தியமாக தொகுத்தோ விவரித்தோ எழுத முடியவே முடியாது. எப்படி எழுதினாலும் குருடன் யானையை அல்ல... மொத்த உலகத்தையும் தடவிப் பார்த்து விவரித்தது போல் இருக்கும்.

இது என்.சிவராமன் எழுதிய நாவலின் பின்னுரையின் ஒரு சிறு பகுதி -
கடந்தகாலத்தில் நிகழ்ந்ததாகக் கூறிக்கொண்டு வாராவாரம் கிளுகிளுப்புக் காக எழுதப்பட்டு வருஷக் கணக்கில் வந்ததெல்லாம் வெறும் சரித்திரக் கதைகள் தான். ‘அஞ்ஞாடி...’ தான் உண்மையில் தமிழின் முதல் வரலாற்று நாவல்.
இது முதலில் ஒரு நல்ல நாவல். பிறகு ஒரு தகவல் களஞ்சியம். சவுரி முடிமுடியின் மூலம் தெரியுமா? மூல நோய்க்கு எத்தனை விதமான நாட்டு வைத்திய முறைகள் இருக்கின்றன? அகத்திக் கீரையை ஒரு வாரம் வைத்துக்கொள்வது எப்படி? பெண்ணை வசப்படுத்தும் உபாயம் என்ன? மீசையின் ஆறு வகைகள் என்ன? வீட்டுக்கூரை, படப்பு வேய்வது எப்படி? தேடுங்கள். கிடைக்கும். இழந்துவிட்ட இந்த வாழ்வை இனிக் கற்பனையில்தான் உருவாக்கிக்கொள்ள முடியும் என்ப தால் இதை ஒரு அருங்காட்சியகம் என்றுகூட வைத்துக்கொள்ளலாம். பஞ்சம், ஜாதிச் சண்டை, ஒரு இனமே இடம்பெயர்வது, பல்வேறு ஜாதிகளின் பொறா மைக்கும் எதிர்ப்புக்குமிடையே நாடார்களின் பொருளாதார முன்னேற்றம், தங்கள் சமூக மேம்பாட்டுக்கான அவர்களது முயற்சி, வெள்ளைக்காரர்களுக்கு எதிராக அங்கங்கே நடந்த சண்டைகள், ஆடுமாடுகளை, கோவில் நகைகளைத் திருடுவது, எந்திரமயமாதலின் விளைவுகள் எனப் பல தலைப்புகளிலான சமூக ஆவணம். ஒரு தரமான ஆய்வேடு. பல பரிமாணங்களுடனானபெயரில்லாத பாத்திரமொன்று பனைமரங்களைப் பற்றிச் சொல்கிறது. ‘அதென்ன இண்ணைக்கு நட்டி நாளைக்கு மொளச்சு வளருத பயிரா. ஒரு தலமொற வளத்து மறுதலமொறைக்குக் குடுத்துட்டுப்போற சீதனம்.’ இந்த நாவலும் அப்படித்தான். இன்பமும் துக்கமும் நிறைவும் ஏக்கமுமான நினைவுகள், பல தலைமுறை வாழ்க்கை-ஒரு நாவலுக்கான நியாயமே அது வாழ்க்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதுதான்-இவற்றை செறிந்த மொழியில் அடுத்த தலை முறைகளுக்கு அளிக்கும் கலாச்சார மூலதனம். தமிழில் நல்ல நாவல்கள் இருக் கின்றன. ஆனால் great  நாவல் இல்லை. இன்னும் எழுதப்படாத அந்த great  நாவலுக்கு மிக அருகில் வந்திருக்கிறது பூமணியின் ‘அஞ்ஞாடி...’. 

வீட்டில் பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டு அவ்வப்பொழுது திருப்பி திருப்பி படித்து அனுபவித்துக் கொள்ள வேண்டும் என்கிற அளப்பரிய ஆசையை கொடுத்துவிட்டது "அஞ்ஞாடி"

நூல் நயம் :

ஆன்மீகம் : சூரிய காயத்ரி மந்திரம்

சிரிப்புத்தான் வருகுதையா

இன்றைய ஓவியம்


நன்றி :

கல்லிலே கலைவண்ணம்


நன்றி :

இன்றைய குறள்

நலக்குறிப்புகள் : இஞ்சி


*நூறு டாக்டர்கள் இருக்காங்க  
கால் கிலோ இஞ்சில*

*🌵இஞ்சியை கறிக்கு டீக்கு
*🌵மட்டுமே யூஸ் பண்றோம்.

*🌵பாருங்க இஞ்சி இருந்தால்

*உங்களுக்கு எவ்வளவு

*வெட்டி

*செலவு மிச்சம் என்று!

*நோய்களை  நீக்குவதில்
*🌵இஞ்சி  சமையலறை மருத்துவர்!

*1. 🌵இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.

*2. 🌵இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.

*3. 🌵இஞ்சியை சுட்டு சிறிது உப்பில் தோய்த்து சாப்பிட பித்த, கப நோய்கள் தீரும்.

*4. 🌵இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.

*5. 🌵இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீர ணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.

*6. 🌵இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும்.

*7. 🌵காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்.

*8. 🌵பத்துகிராம் இஞ்சி, பூண்டு இரண்டையும் அரைத்து, ஒருகப் வெந்நீரில் கலந்து காலை, மாலை இரண்டு நாட்கள் சாப்பிட மார்பு வலி தீரும்.

*9. 🌵இஞ்சி சாறோடு, தேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு வெந்நீர் குடித்துவர தொந்தி கரைந்து விடும்.

*10. 🌵இஞ்சி சாறில், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட நல்ல பசி ஏற்படும்.

*11. 🌵இஞ்சி, மிளகு, இரண்டையும் அரைத்து சாப்பிட ஜீரணம் ஏற்படும்.

*12. 🌵இஞ்சியை வதக்கி, தேன் விட்டு கிளறி, நீர் விட்டு, கொதிக்க வைத்து நீரை காலை, மாலை குடித்துவர வயிற்றுப் போக்கு தீரும்.

*13. 🌵இஞ்சியை அரைத்து நீரில் கலந்து தெளிந்தபின், நீரை எடுத்து, துளசி இலை சாறை சேர்த்து ஒரு கரண்டி வீதம் ஒரு வாரம் சாப்பிட வாய்வுத் தொல்லை நீங்கும்.

*14. 🌵இஞ்சி சாறில், தேன் கலந்து தினசரி காலை ஒரு கரண்டி சாப்பிட்டு வர நோய் தடுப்பு திறன் கூடும். உற்சாகம் ஏற்படும். இளமை பெருகும்.

*15. 🌵இஞ்சி சாறுடன், வெங்காய சாறு கலந்து ஒரு வாரம், காலையில் ஒரு கரண்டி வீதம் குடித்துவர நீரிழிவு குறையும்.

*16. 🌵இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, வெங்காய சாறு மூன்றையும் கலந்து ஒருவேளை அரை அவுன்ஸ் வீதம் சாப்பிட்டுவர ஆரம்ப கால ஆஸ்துமா, இரைப்பு, இருமல் குணமாகும்.


காலை நற்சிந்தனைகள்

இயற்கையை நேசிப்போம்!


நன்றி :

இனிய காலை வணக்கம்!

25 ஏப்., 2021

தகவல் பலகை

தகவல் பலகை

குட்டிக்கதை

😁😁😁😜👍😜😁😁😁

அக்பரிடம் ஒருவர் சவால் விட்டார். 

என் வேலைக்காரன் நல்லா சாப்பிடுவான் அவனை ஒரு மாதம் வைத்திருந்து நிறைய நல்ல உணவுகளைக் கொடுங்கள். 

அவன் வேலையோ உடற்பயிற்சியோ செய்யக்கூடாது. 

ஆனால் ஒரு கிலோகூட எடை கூடக் கூடாது.

அக்பர் யோசிச்சார். 

பீர்பாலை பார்த்தார். 

பீர்பால் அரசர் சார்பாக அந்த சவாலை ஏற்றார். 

மூன்று வேளைகளும் மகத்தான விருந்து படைக்கப்பட்டது.

மாதக்கடைசியில் எடையும் அப்படியே இருந்தது. 

அக்பருக்கு ஆச்சரியம். பீர்பால் சொன்னார்.

*அவனுடைய இரவுப்படுக்கையை சிங்கக்கூண்டுக்கு அருகே அமைத்தேன்.* 

*கூண்டின் கதவு சரியாக இல்லை என்று சொன்னேன்.*

*அச்சம் காரணமாய் சத்து உடலில் ஒட்டவில்லை.*

👉 *பயம் ஒரு பெரிய நோய்.*

*நிறைய பேர்களுக்கு வியாதி வர காரணம், தங்களுக்கு வந்துவிடுமோ என்ற பயம்தான்.*

👉 *அச்சமின்மையே ஆரோக்கியம்!*

*பின்குறிப்பு:-*
இந்த கதையை எனக்கு நெருங்கிய நண்பர் ஒருவர் சொன்னார். 

சொன்ன நண்பரை மேலும் கிழும் பார்த்தேன். 

அவர் கல்யாணத்துக்கு முன் எப்படி இருந்தாரோ அப்படியேதான் இப்போதும் இருந்தார்.

🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

👉 *சரிதான். சிங்கத்துடன் வாழ்க்கை நடத்துறாரு போல!!!!!*

😜😁😜😁😜😁😜😁😜😁

*படித்ததில் சிரித்து ரசித்தது.*

😁😁😁👍😜👍😁😁😁

தகவல் பலகை : திருச்சியில் ஆக்ஸிஜன் கிடைக்கும் இடங்கள்

திருச்சியில்
ஆக்சிஜன் கிடைக்கும்
இடங்கள்

Oxygen Cylinders . . 1) Alain Medical Systems, 
Kattur, 
Gunapathy A, 
9176170415, 
9442569246
2) Resprotech, 
Annamalai Nagar, 
Sathish M, 
8220001282, 
8870003301
3) Shanmuga Agencies, 
KK Nagar, 
Mohan, 
9842457389, 
9842877389, 
04312457389
4) Shri Sairam Gases, 
Melakalkandarkottai, 
Murasolimaran S, 
9750971016, 
9597026888

தகவல் பலகை

இன்று ஹானிமன் விழா

சிரிக்கவும் சிந்திக்கவும்

இன்றைய குறள்

நலக்குறிப்புகள்

காலை நற்சிந்தனைகள்

இயற்கையை நேசிப்போம்!

இனிய காலை வணக்கம்!

24 ஏப்., 2021

கவிதை நேரம்

' நூலைப்படி ' பாடலை எழுத எவ்வளவு
  நேரம் எடுத்துக்கொண்டீர்கள் ? 
 பாடலைப் படித்துவியந்த பலர் 
 பாவேந்தரிடம் கேட்டபோது , 
 அவர் சொன்ன பதில் :
   " நீங்கள் படிக்க எடுத்துக் கொண்ட
     நேரம் எவ்வளவோ , நான்
     எழுத எடுத்துக்கொண்ட 
     நேரமும் அவ்வளவே! "
~~~~~~~~~~~~~~~~~~~~~~
============================
            - பாவேந்தர் பாரதிதாசன் 

      நூலைப் படி - சங்கத்தமிழ்
      நூலைப்படி - முறைப்படி
      நூலைப்படி

காலை யில்படி கடும்ப கல் படி
மாலை இரவு பொருள்ப டும்படி 
                                 ( நூலைப் படி )
கற்பவை கற்கும்படி
     வள்ளுவர் சொன்னபடி
கற்கத்தான் வேண்டும் அப்படிக்
    கல்லாதவர் வாழ்வ தெப்படி ? 
                                 ( நூலைப்படி )
அறம்படி பொருள் படி
    அப்படியே இன்பம் படி
இறந்ததமிழ் நான்மறை
     பிறந்த தென்று சொல்லும்படி 
                                 ( நூலைப்படி )
அகப்பொருள்படி அதன்படி
    புறப்பொருள்படி நல்லபடி
புகப்புகப் படிப்படியாய்ப் 
    புலமைவரும் என்சொற்படி 
                                ( நூலைப்படி )
சாதிஎன்னும் தாழ்ந்தபடி
    நமக்கெல்லாம் தள்ளுபடி!
சேதிஅப்படி  தெரிந்துபடி
    தீமை வந்திடுமே மறுபடி
                                ( நூலைப்படி )
பொய்யிலே முக்காற்படி
     புரட்டிலே காற்படி
வையகம் ஏமாறும்படி
     வைத்துள்ள நூல்களை ஒப்புவதெப்படி?
                                ( நூலைப்படி )
தொடங்கையில் வருந்தும்படி
      இருப்பினும் ஊன்றிப்படி
அடங்கா இன்பம் மறுபடி
      ஆகும் என்ற ஆன்றோர்சொற்படி 
                               ( நூலைப்படி )

( குயில் இதழ் :  30.12.1958 )
 இசை: ' யதுகுலகாம்போதி '

                - சூலூர் பாவேந்தர் பேரவை

குட்டிக்கதை

பைத்தியக்கார கோடீஸ்வரன் ஒருவன் முதலைப் பண்ணைக்கு பார்வையாளராக போயிருந்தான். 
திடீரென ஒரு முட்டாள்தனமான அறிவிப்பை வெளியிட்டான். அதாவது இந்த முதலைகள் நிறைந்த குளத்தை உயிருடன் நீந்தி கடப்பவருக்கு ரூபாய் பத்து லட்சம் தருவதாக கூறினான்.

அப்படி நீந்தும் போது முதலைகள் தாக்கி இறந்து போனால் அவரது மனைவிக்கோ அல்லது உறவினருக்கோ ஐந்து லட்சம் ரூபாய் தந்து விடுவதாகவும் கூறினான். 
எல்லோரும் திகைத்து போய் வெகுநேரம் அந்த குளத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

திடீரென்று ஒரு தைரியசாலி குளத்தில் குதித்து நீந்த தொடங்கினான். 

முதலைகள் அவனை விரட்ட தொடங்கின.

அவன் உயிரை கையில் பிடித்து கொண்டு வேகமாக நீந்தி அக்கரையை அடைந்து விட்டான். 

அந்த பணக்காரனும் பேசியபடியே பத்து லட்சம் ரூபாயை உடனே தந்து விட்டான். 

வாயெல்லாம் பல்லாக தானிருந்த இடத்துக்கு திரும்பி வந்த அந்த தைரியசாலி தன் மனைவியிடம் மெதுவாக கேட்டான்,
"இப்படி வேடிக்கை பார்த்துகிட்டு இருக்கும் போது திடீர்னு தள்ளி விட்டுட்டியே. நான் செத்திருந்தா?"

மனைவி அமைதியாக சொன்னாள்,
"அப்போதும் எனக்கு ஐந்து லட்சம் ரூபாய் கிடைத்திருக்கும்".

#நீதி: ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்கு பின்னாலும் கண்டிப்பாக ஒரு பெண் இருப்பாள். 🤣🤣🤣😋😂😁😀😄😎

கட்டுரை நேரம் : வைரஸ் ராஜ்ஜியம் - சுஜாதா


வைரஸ் ராஜ்ஜியம் - சுஜாதா
சுஜாதா 1995-ல் எழுதிய கட்டுரை

அறிவியலின் எட்டாவது கவலை - 'வைரஸ் கிருமிகள் அனைவரையும் அழித்து விடுமா?'

வைரஸ் என்னும் நுண்கிருமி பாக்டீரியாவை விட சிறியது. அதற்கு உயிர் இருக்கிறதா என்றால் உயிர் என்றால் என்ன என்பதைப் பொறுத்தது.

பாக்டீரியா போல வைரஸுக்குத் தன்னைத்தானே இரட்டிப்பு ஆக்கிக்கொள்ளும் தன்மை கிடையாது. 

ஆனால், அதற்கு ஆர்என்ஏ (RNA), டிஎன் ஏ (DNA) உண்டு. சுற்றிலும் கொஞ்சம் ப்ரோட்டீன் வைத்திருக்கிறது. 

இந்தப் ப்ரோட்டீனைப் பார்த்து மனித ஸெல்கள் ஏமாந்து போகின்றன.

 'என்னடா நம்மிடம் உள்ளது போலவே இருக்கிறதே....நம் ஆள்தான் என்று வைரஸ் கிருமியை உள்ளே அழைத்துக் கொள்கிறது. 

உள்ளே நுழைந்ததும் இந்தச் சதிகார வைரஸுக்கு உயிர் வந்துவிடுகிறது.

 மனித ஸெல்லின் ஊட்டச் சக்திகளை பயன்படுத்தி, தன் இஷ்டத்துக்கு வளர்ந்து, ஸெல்களை மெல்ல, மெல்ல அழித்துத் தன் ராஜ்யத்தை நிறுவிக்கொள்கிறது.

வைரஸால் வரும் வியாதிகளுக்கு நேரடியாக நிவாரண மருந்து எதுவும் கிடையாது. தடுப்பு ஊசி (வாக்ஸின்), தடுப்பு மருந்துதான் சாத்தியம். 

பாக்டீரியாவால் வரும் வியாதிகளுக்கு ஆன்டிபயாட்டிக்ஸ் கொடுத்து அந்தக் கிருமியை மேலும் வளர விடாமல் தடுக்கலாம். 

காரணம் - பாக்டீரியா என்பது தனியான அடையாளம் கொண்டது. ஆனால், வைரஸ் அப்படி அல்ல.

 ஸெல்லுக்கு உள்ளே நுழைந்து அட்டகாசம் செய்யும் அரக்கன். அதைக் கொல்ல நம் ஸெல்லையே கொல்ல வேண்டும். 

இதனால் நம்முடைய வைரஸ் தடுப்புச்சக்திகளை அதிகரிப்பதைத் தவிர வேறு எதுவும் வழி இல்லை.

இப்படித்தான் போலியோ, ஃப்ளூ போன்றவை வைரஸால் வருபவை. அதற்குத் தடுப்பு மருந்து கண்டுபிடித்துவிட்டார்கள்.

எய்ட்ஸ் (AIDS) வைரஸால் வரும் மிகப் பயங்கர வியாதி. அதைத் தடுப்பதற்கு மருந்து கண்டுபிடிக்க கோடிக்கணக்கில் செலவழிக்கிறார்கள்

(இந்தக் கட்டுரையை சுஜாதா 1995-ல் எழுதினார். பின்னர், 2001/ 2002 இல் எய்ட்ஸ் நோய்க்கு ஸிடோவுடின் - Zidovudine-  என்ற மருந்தை இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பர்ரோஸ் வெல்கம் (Burroughs Wellcome) என்ற பன்னாட்டு மருந்து நிறுவனம் RETROVIR என்ற பெயரில் சந்தையில் அறிமுகப்படுத்தியது.

 இதை, இங்கு, இந்தியாவில் promote செய்தவர்களில் ஒருவன் என்ற முறையில் இந்த மருந்தைப் பற்றி எனக்கு நன்கு தெரியும்.

அறிமுகமான போது கும்பல், கும்பலாக மருத்துவர்களைச் சந்தித்து இந்த மருந்தின் மகத்துவம் பற்றி விளக்கியிருக்கிறோம். இப்போது, இதனுடைய மேம்படுத்தப்பட்ட மருந்து வகைகள் சந்தையில் வந்துவிட்டன).

வைரஸால் வரும் வியாதி மிக வேகமாகப் பரவக்கூடியது. காரணம் - வைரஸ் தன்னைத்தானே மாற்றிக்கொள்ளும் (Mutation) வேகம் சாதாரண ஸெல்லைவிட மிக அதிகம்.

 ஒரு ஸெல் இரட்டிப்பாகும் போது (தன்னைப் போலவே) படியெடுப்பதில் நூறு கோடி முறைக்கு ஒரு தடவைதான் பிழை ஏற்படும். 

வைரஸ் கிருமியின் இரட்டிப்பில் அப்படியில்லை. மிக அதிகமாகப் பிழைகள். இரண்டாயிரத்துக்கு ஒரு முறை பிழைபட்டு புதிய வைரஸ் வந்துவிடும்.

 இதனால், மனித இனம் புதுப்புது வைரஸ்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. 

உதாரணமாக, இன் ஃப்ளூவன்ஸா வுக்கான வைரஸ் வருடாவருடம் வேஷம் மாறுகிறது. 

புதுப்புது தடுப்பூசி தொடர்ந்து தேவையாக இருக்கிறது.

எய்ட்ஸ் எப்படி வந்தது என்பது பற்றி பல கருத்துக்கள் உள்ளன.

ஆப்ரிக்காவில் உள்ள ஒரு குரங்கில் இருந்து வந்திருக்கலாம் என்று சொல்கிறார்கள். அது மனிதனுக்கு வந்தது எப்படியென்றால், ஏதாவது எய்ட்ஸ் குரங்கைக் கொன்று தோல் உரிக்கும் போது கத்திபட்டு ரத்தம் கலந்திருந்தால் போதும், வைரஸ் மனிதனின் உள்ளே புகுந்திருக்கலாம் என்கிறார்கள். 

சென்ற நூற்றாண்டில் அதிகப் பயணம் இல்லாததால் இந்த வியாதி உலகம் முழுக்கப் பரவுவதற்குச் சாத்தியக் கூறுகள் கம்மியாக இருந்தன.

சமீபத்தில் (1995-ல்) இபோலா (Ebola) எனும் வைரஸ் Zaire எனும் நாட்டின் முழு மக்கள் தொகையையும் பாதித்தது. எய்ட்ஸ் அதைவிட பயங்கரம். அது பரவுவதற்கு மனித இனத்தின் ஸெக்ஸ், போதைப் பொருட்கள் சம்பந்தமான கலப்பால் இது உலகம் பூரா பொதுவானது. 

இந்தியாவில் காஷ்மீரிலிருந்து கன்யாகுமரி வரை எய்ட்ஸ் பரவியதற்கு முக்கிய காரணம், நம் நேஷனல் பெர்மிட் லாரிகளும் வழியில் பாயா, குஸ்காவுடன் கிடைக்கும் சந்தோஷங்களும் என்கிறார்கள்.

எய்ட்ஸ் வைரஸுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் உலகம் முழுவதையும் மனிதன் ஆக்கிரமிப்பதற்கு முன் எய்ட்ஸ் கிருமி ஆக்ரமித்து மனித இனமே அழிந்து விடக்கூடிய அபாயம் இருக்கிறது என்று சொல்கிறார்கள்

(இவ்வாறு ஆகாமல் பல நாட்டு அரசுகள் முனைப்பாக எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் விடாமல் பரப்பியதால் எய்ட்ஸ் ஓரளவுக்கு கட்டுக்குள் வந்துவிட்டது).

நோபல் பரிசு பெற்ற ஜோஷுவா லெடர்பெர்க் (Joshua Lederberg) சொன்னது: "உலகை ஆக்கிரமிப்பதில் நமக்கு ஒரே ஒரு போட்டி வைரஸ்தான்."மனித இனம் பிழைப்பது முன் நிச்சயித்ததல்ல.

(தற்போதைய கொரானா அச்சுறுத்தலை நினைக்கும் போது சுஜாதாவின் இந்த வார்த்தை மண்டையில் அடிக்கிறது).

அடுத்த முறை ஓட்டல்களில் தனியாக இருக்கும்போது வீட்டுக்கு போன் போட்டு பெண்டாட்டி, பிள்ளைகளுடன் பேசிவிட்டு, ஒரு மெகா சீரியலையும் பத்து நிமிஷம் பார்த்து விடுங்கள் - அத்தனை ஆசையும் அடங்கிப்போகும்.

ஆன்மீகம்

ஆன்மீக சிந்தனை

கருணை உள்ளமே... 🙏🙏🙏

கல்லிலே கலைவண்ணம்

சிரிப்புத்தான் வருகுதையா

நலக்குறிப்புகள்

இன்றைய குறள்

காலை நற்சிந்தனைகள்

இயற்கையை நேசிப்போம்!

இனிய காலை வணக்கம்!

உலக புத்தக தினம்

23 ஏப்., 2021

சிரித்து வாழவேண்டும்!

அபூர்வமான படம்

    தில்லி சாந்தினி சௌக்                     1870-1880

கல்லிலே கலைவண்ணம்


நன்றி :

சிரிப்புத்தான் வருகுதையா!

இன்றைய குறள்

காலை நற்சிந்தனைகள்

ஆன்மீக சிந்தனை

இயற்கையை நேசிப்போம்!


நன்றி :

இனிய காலை வணக்கம்!

22 ஏப்., 2021

கவிதை நேரம்

*******தமிழ் வாழ்க.*******

"இருந்தமிழே உன்னால்                  இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்" .

-தமிழ்விடு தூது.

 "கன்னற் பொருள்தரும் தமிழே நீ ஓர்
பூக்காடு ; நானோர் தும்பி".

 - பாவேந்தர்.

 "உண்ணும் உணவும் பருகும் நீரும்
தமிழே ! தமிழே சாவா மருந்து !
தேனின் இனிமை! செழுமலரின் மணம்" .

-பாவேந்தர்.

18-4-2021.

திண்ணை நூலகம்

குட்டிக்கதை

⚡ ஒரு அரசர் அவர் பேரும், புகழும், படையும், பலமும் கொண்டு விளங்கினார்

ஆனாலும் ஏதோ ஒன்று அவரை நிறை மனமாக இருக்கு முடியாமல் செய்தது

அதற்கு அவருடைய அமைச்சர் புத்தரை கண்டால் நிறைவு கிடைக்கலாம் என்று  ஒரு யோசனை சொன்னார்

அரசரும் அதை ஏற்றுகொண்டார்

ஒரு முறை பக்கத்துக்கு கிராமத்தில் புத்தர் இருப்பதாக செய்தி கிட்டியது

உடனே அரசர் தான் மட்டும் செல்லவதாக கூறி கிராமத்துக்கு சென்றார்

போகும் வழியில் ஒரு ஆற்றை கடக்க நேரிட்டது

அது மிகவும் அகலமாகவும், ஆர்பரிப்போடும் கூடிய அலைகளோடு காட்டாற்று வெள்ளம் கரை புரண்டு ஓடியது

அதை கண்டு அஞ்சிய அரசர் படகோடியிடம் தன்னை அக்கரையில் கொண்டு விடுமாறு கேட்டார் 

அதற்கு படகோட்டி....

யாரைப் பார்க்க போவதாக கேட்டார் 

அரசர் புத்தரை பார்க்க வேண்டும் என்றார்

இதை கேட்ட படகோட்டி 

நான் மட்டும் இல்லை 

யாருமே உதவிக்கு வரமாட்டார்கள் என்று கூறினார்

ஏன் என்று அரசர் கேட்டதற்கு 

படகோட்டி இதுவரை அக்கரைக்கு புத்தரை பார்க்க போனவர்கள் 

யாருமே திரும்பி வரவில்லை. என்று கூறினார்

உடனே அரசர் மிகுந்த ஆர்வம் கொண்டு நீந்தி கரையை கடக்க முயற்சித்தார்

பாதி ஆற்றை கடக்கும் தருவாயில் 

நீந்த முடியாமால் மிகவும் தத்தளிதுக் கொண்டிருந்தார் 

அவர் அங்கேயே புத்தரை நினைத்தார்

தூரத்தில் ஆற்று வெள்ளத்தில் ஒரு பிணம் தன்னை நோக்கி வருவதை கண்டார்

அருகில் வந்த உடன் தான் தெரிந்தது வந்த பிணத்துக்கும் தன் முகம் இருப்பதை கண்டு மிகவும் பயந்து போனார்

அப்போது அந்த பிணத்துடன் 

அரசரின் பேரும், புகழும், செல்வமும், படையும், பலமும், அதிகாரமும், அரசாட்சி திறமும்,  வல்லமையும், சேர்ந்து போவதை பார்த்தார்

அவைகள் யாவும் அழுகிய நிலையில் தன மேல் மோதி மிகவும் நாற்றத்துடன் சென்றது

அதை கண்ட அரசர் அங்கிருந்து கரைக்கு வந்தார்

வந்தும் தன் ஆணவம், மற்றும் அகம்பாவம்

தான் ஒரு அரசன் என்ற நிலை மாறி 

தான் ஒரு ஞானியாக திகழ்ந்தார்

புத்தரை காண சென்ற அரசர்  

புத்தரை காணும் முன்பே ஞானம் பெற்றார் 

எதுவெல்லாம் என்னுடையது என்று எண்ணி 

இத்தனை நாள் அரசர் ராஜபோக வாழ்க்கை வாழ்ந்தாரோ

அதுவெல்லாம் என்றோ ஒரு நாள் அழுகி நாற்றமெடுத்து நம்மை விட்டு போகும்

அதுவாக போகும் முன் 

நாமே கலையே வேண்டும் என்ற ஞானம் பெற்று 

தன்முனைப்பு நீங்கி ஞானியாக மனநிறைவுடன் வாழ்ந்தார் 

ஆக 

ஒருவன் ஞானம் அடைய வேண்டும் என்றால் 

ஞானியைக் கண்டு தான் ஞானம் பெற வேண்டும் என்ற கட்டாயம் இல்லை

தன்னையும், தன் உடமைகளையும் 

மாயை என்று புரிந்து கொண்டு 

இழக்க தயாராகும் போதே 

அவன் ஞான நிலைக்கு தயாராகிவிட்டான் என்பதே உண்மை 

மாயையும், பற்றும், ஞானமும் அனைத்தும் நம்மிடத்தே தான் இருக்கிறது

"விட வேண்டியதை விட்டுவிட்டால்  

பெற வேண்டியது அங்கேயே இருப்பது தெரிய வரும்"  
~ வேதாத்திரி மகரிஷி ~

"சுயமாய் சிந்தித்தே தெளிவோம்"

வாழ்க வளமுடன் ⚡

இன்றைய ஓவியம் : ரவி வர்மா ஓவியம்


நன்றி :