29 பிப்., 2020

அதிர்ச்சித் தகவல் : இது உண்மையா?

வாவ்! படங்கள்

அபூர்வமான படம்

வாழ்த்துக்கள்!

இன்றைய சிந்தனைக்கு

28 பிப்., 2020

வாவ்! படங்கள்

அபூர்வமான படம்

இன்று ஒரு தகவல் : தங்கம்

சிரித்து வாழவேண்டும்!

ஆன்மீக சிந்தனை

"உயிர் வழிபாடு" 
.

"முன்பு தோன்றிய மகான்கள் மனிதர்களிடையே குழப்பங்கள் என்றுமே வரக்கூடாது  பிணக்குகள் இருக்கக் கூடாது மனிதன் மனிதனை உணர்ந்து கொள்ள வேண்டும், இயற்கைச் சட்டத்தை உணர்ந்து கொள்ள வேண்டும்  என்று

(1) இறைவழிபாடு

(2) அறநெறி
.

என்ற இரண்டு செயல் திட்டங்களை உருவாக்கி மக்களுக்குப் போதித்தார்கள். அறநெறி இறைவழிபாடு இரண்டும் வேண்டும் என்று எந்த நாட்டில் எந்தக் காலத்தில் ஒருவர் போதித்தாரோ, அங்கு அன்று உள்ள மக்கள் அதைப் போற்றி அவரது பெயரிலேயே வாழ்க்கை முறையை வழங்கி வந்தார்கள். அதுதான் மதம் எனப்படுகிறது.

மதத்திற்கு என்று தனியாகப் பெயர் இல்லை. மதச் சட்டத்தை உருவாக்கிய பெரியோர்கள் பெயரால் தான் இந்த உலகத்தில் உள்ள மதங்களெல்லாம் வழங்கப்படுகின்றன.
.

இங்கு முக்கியமான ஒரு கருத்தைக் கவனிக்க வேண்டும். எத்தனையோ மதங்கள் உலகத்தில் தோன்றியுள்ளன. மேலே விளக்கிய இரண்டு அடிப்படைக் கொள்கைகளைத் தான் எல்லா மதங்களும் போதித்திருக்கின்றன என்பதை முதலில் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
.

இறைநிலை ஒவ்வொரு உயிரிலும் உள்ளும் புறமும் நிறைந்து இயக்கிக் கொண்டிருக்கிறது என்று தெரிந்து கொள்வது "உயிர் வழிபாடு". பிறருக்குத் துன்பம் செய்யாது வாழ வேண்டும் ஏற்கனவே துன்பப்படுபவர்களுக்கு இயன்ற வரையில் உதவி செய்ய வேண்டும். இவை இரண்டும் தான் உலகுக்குத் தேவை.
.

(1) துன்பம் தரும் செயல்களைச் செய்யாது நான் வாழ வேண்டும்,

(2) துன்பப்படும் உயிர்களுக்கு முடிந்த உதவியைச் செய்ய வேண்டும்.
.

இவ்விரண்டு கருத்துக்களை உலக மக்களனைவரும் எடுத்துக் கொண்டார்கள் என்று கற்பனையாக வைத்துக் கொள்ளுங்கள். யாருக்கும் துன்பமில்லாது தானும் சிறப்பாக வாழ்ந்து, முடிந்த வரையில் பிறருடைய துன்பத்தைப் போக்குவது என்று வந்து விட்டோமேயானால், அது தான் வேதம் புராணம் அரசியல் எல்லாவற்றின் உட்கருத்துமாகும்."
.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
.

For contacts :

https://vethathiri.edu.in/centers/loc/india/

https://vethathiri.edu.in/centers/

https://vethathiri.edu.in/contact/

27 பிப்., 2020

வாவ்! படங்கள்

சிரிப்புத்தான் வருகுதையா!

அபூர்வமான படம்!

ஆன்மீக சிந்தனை

26 பிப்., 2020

உங்கள் கவனத்திற்கு

ராணிப்பேட்டையில் வரும் 29ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி தகவல்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வரும் 29ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இது குறித்து ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது. வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் இணைந்து படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் வேலை பெறும் நோக்கில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 29.02. 2020 சனிக்கிழமை அன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை ஆற்காடு எஸ்.எஸ்.எஸ் கல்லூரி வளாகத்தில் நடத்தப்பட உள்ளது. இம்முகாமில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். இம்முகாமில் தனியார் நிறுவனங்களான TVS groups, Hyundai steels, Saint- Gobain, Apollo Hospitals & Pharmacy, Overseas manpower corporation limited (தமிழ்நாடு அரசு நிறுவனம்) MM Forgings, Nippon Steels போன்ற 100க்கும் மேற்பட்ட தனியார் துறை முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கான தகுதியான நபர்களைத் தேர்வு செய்து பணி நியமனம் செய்ய உள்ளனர். இந்த வேலை வாய்ப்பு முகாமில் 8ம்வகுப்பு தேர்ச்சி முதல் SSLC, HSC, ITI, Diploma, Nursing, Any Degree BE, MBA உள்ளிட்ட கல்வித் தகுதிகளை உடைய வேலைநாடுநர்கள், கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான வேலையினை தங்கள் அளவிலேயே தேர்வு செய்து பயன்பெறலாம். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து புதுப்பித்துள்ள பொது மற்றும் ஓராண்டிற்கு மேல் உயிர்பதிவேட்டில் உள்ள மாற்றுத்திறனாளி பதிவுதாரர்களுக்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை விண்ணப்பங்கள் இம்முகாமில் வழங்கிட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. விருப்பமுள்ள பதிவுதாரர்கள் தங்கள் வேலைவாய்ப்பு அடையாள அட்டை மற்றும் அசல் கல்வி சான்றிதழ்களை சமர்பித்து விண்ணப்பத்தினை பெற்று பயன்பெறலாம். விருப்பமும் தகுதியும் உள்ள வேலைநாடுநர்கள் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் தற்குறிப்பு(Resume) மற்றும் அனைத்து கல்வி சான்றுகளுடன் முகாமில் கலந்து கொண்டு வேலை வாய்ப்பினை பெறலாம். இவ்வாறு ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார்.

உணவும் மருந்தும்

*வாழ்க்கை மலர்கள்: பிப்ரவரி 26*

*உணவும், மருந்தும்*

“நீ சீரணிக்கும் அளவிற்குள்ளாக உணவு உட்கொண்டால் உணவை நீ சீரணிக்கிறாய். அதிகமாக உட்கொண்டால் உணவு உன்னைச் சீரணிக்கும்.”

எனவே, சுத்தமானதும், எளிமையானதும், சத்து நிறைந்ததுமான உணவு வகை அன்றாடம் நமது உடலுக்குத் தேவை. காரம், புளிப்பு, உப்பு, சர்க்கரை இவற்றை மிதமாகக் கொள்ளவேண்டும்.

உணவில் அளவும் தரமும், முறையும் தவறினால், நோய்கள் உண்டாகும். அவ்வப்போது தக்கபடி மருந்து எடுத்துக் கொண்டால் சரியாகி விடும். என்று இலேசாக நினைப்பதும் சரியன்று.

மருந்து என்றால் என்ன? மனிதன் ஆற்றும் தவறான செயல்களால் நோய் உண்டாகிறது. அந்நோய்களைச் சமன் செய்ய, ஏற்ற ஆற்றல் உடலிலேயே இயற்கை அமைத்திருக்கிறது. ஒரு சமயம் உடலில் நோய் தீர்க்கும் ஆற்றல் வலுவற்றதாக இருந்தால், அந்த ஆற்றலை ஊக்கி விட ஏற்ற பொருட்களே மருந்து ஆகும். உயிர் ஆற்றலுக்கு உந்து சக்தி என்பது வழக்கு.

அவ்வாறான உந்து ஆற்றலுக்குத் துணையாய் உந்தும் ஆற்றலைத் தான் மருந்து என்று கூறுகிறோம். மருவி வந்த மகளை மருமகள் என்பது போல, மருவி உந்து ஆற்றலை மருந்து என்று வழங்குகிறோம். மருந்தின் உபயோகம் வேறு வழியின்றி ஒரு குறுகிய காலத்தில் சிறு அளவில் மட்டும் தான் பொருத்தமானது. ஏனெனில் சில மருந்து வகை, ஒரு நோயைக் குணப்படுத்தி, வேறொரு நோயை உண்டுபண்ணக் கூடியதே. இதைத் தவிர்க்க இயற்கையான அறிவின் வழி முன் உண்ட உணவு முற்றிலும் செரிமானமான பின்னரே அடுத்த உணவு கொள்ளலாகும்

*வேதாத்திரி மகரிஷி*

Grateful thanks to   K.Pudur MVKM Trust, Madurai - www.facebook.com/vethathiri.gnanam

சிறுகதை நேரம்: கோட்டைக் கிணறு - வேல ராமமூர்த்தி


கதை கேட்க வாங்க | கோட்டைக் கிணறு - 

வேல ராமமூர்த்தியிடமிருந்து 

பவா செல்லத்துரை


41,396 views
Feb 24, 2018
Shruti TV
530K subscribers

நன்றி: திரு வேல ராமமூர்த்தி, பவா செல்லதுரை அண்ட் யூட்யூப்.

இன்று ஒரு தகவல்: நம்மாழ்வாரின் வானகம்


நம்மாழ்வாரின் வானகம்

71,830 views
Dec 30, 2017
Vanagam
6.63K subscribers

வானகத்தின் நோக்கம் மற்றும் செயற்பாடுகள்

இலக்குகள் :
1. நஞ்சில்லா உணவு
2. மருந்தில்லா மருத்துவம்
3. சுவரில்லா கல்வி

Learn more about Vanagam at : https://vanagam.org/about/about-vanagam/

வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களின் நினைவிப் போற்றுகின்றேன். 

நன்றி: வானகம் மற்றும் யூட்யூப். 

பக்தி பாமாலை: பித்தா பிறைசூடி : தேவாரம்


பித்தா பிறைசூடி : தேவாரம் 

109,821 views
Jan 29, 2020
Sounds of Isha
371K subscribers
Download:
https://isha.sadhguru.org/Thevaram
Grateful thanks to SOUNDS OF ISHA and YouTube.
Pranams to Sadhguru.

சுற்றுச்சூழல்,: எப்படி சுற்றுச்சூழலை பாதுகாப்பது..எப்படி சுற்றுச்சூழலை பாதுகாப்பது..

மே 29, 2019
afiya tv
41K subscribers

நன்றி: afiya tv மற்றும் யூட்யூப். 

உங்கள் கவனத்திற்கு

வாவ்! படங்கள்

அபூர்வமான படம்

ஆன்மீக சிந்தனை

எனக்குப் பிடித்த கவிதை

*பதில்*
*ஆத்மாநாம் கவிதை*

குற்றுகர முற்றுகர சந்திகளை
சீர்சீர் ஆய்ப் பிரித்து
தளை தளையாய் அடித்து
ஒரு ஒற்றை வைத்து
சுற்றிச் சுற்றி வந்து
எங்கும் மை நிரப்பி
எழுத்துக்களை உருவாக்கி
பொருளைச் சேர்த்து
வார்த்தைகள் ஆய்ச் செய்து 
ஒவ்வொரு வாக்கியத்திற்கும்
கமா மற்றும் முற்றுப்புள்ளி வைத்து
ஏதாவது சொல்லியாக வேண்டும்
நமக்கேன் வம்பு.

25 பிப்., 2020

ஆன்மீக சிந்தனை

*அன்பர்களின் கேள்விகளும் – அருட்தந்தையின் பதில்களும்*

❓ *கேள்வி: சுவாமிஜி, மனித அறிவில் தோன்றும் குறைபாடுகள் யாது?*

✅ *பதில்:* மனிதன் நான்கு விதக் குறைபாடுகளால் துன்பமடைகிறான்; அமைதியிழந்து அல்லலுறுகிறான். அவையாவன;

1. கடவுளைத் தேடிக்கொண்டேயிருந்தும் காணமுடியாத குறை

2. வறுமை என்னும் பற்றாக்குறை.

3. விளைவறியாமலோ, விளைவையறிந்தும் அலட்சியம் செய்தோ, அவமதித்தோ, செயலாற்றி அதன் பயனாகத் துன்பம் அனுபவிக்கும் குறை.

4. மனிதனின் சிறப்பு அறியாமல் பிறர் மீது அச்சமும், பகையும் கொண்டு துன்புறுத்தியும், துன்புற்றும் அல்லலுறும் குறை.

இந்த நான்கு குறைபாடுகள் ஒன்றோடொன்று இணைந்து விட்டன. வாழ்க்கையில் பலவிதமான சிக்கல்களாகி அவற்றை எளிதில் தீர்த்து விடுதலை பெறமுடியாமல்..... வழிகாணாமல்...... மனிதன் தவிக்கிறான். வாழ்வின் நலமிழந்து தான் வருந்தியும், பிறரை வருத்தியும் வாழ்கிறான்.

வாழ்க வளமுடன்!!

*அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி*

Grateful thanks to K.Pudur MVKM Trust, Madurai - www.facebook.com/vethathiri.gnanam

குட்டிக்கதை : எஸ்ராவின், "உடைவாளின் பாடல்"

From s.raa's website
குறுங்கதை 15 : உடைவாளின் பாடல்

யுத்தம் முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போர்வீரனுக்குத் தனது உடைவாள் ஏதோ முணுமுணுப்பது போன்ற சப்தம் கேட்டது.
சொல்வதற்கு உடைவாளிற்கு என்ன இருக்கப்போகிறது என அவன் கண்டுகொள்ளவில்லை.
ஆற்றைக் கடப்பதற்காக அவன் படகிற்குக் காத்திருந்த போது அவனது உடைவாள் பாடத்துவங்கியது. மெல்லிய குரலில் வென்ற நிலத்தை,கொன்ற மனிதர்களைப் பற்றிய பெருமைகளைப் பாட ஆரம்பித்தது .
உடைவாள் கூடப் பெருமை பேசுகிறதே என வியந்தபடியே அந்தப்பாடலை ரசித்தான் போர்வீரன். ஆற்றினைக் கடந்து மறுகரைக்குப் போன போது உடைவாள் சப்தமாக எதிரியின் குருதி சிந்தப்பட்ட போது தான் அடைந்த மகிழ்ச்சியைப் பாடியது. போர்வீரன் அது தனது வீரத்தின் அடையாளம் எனச் சொன்னான்.

கிழக்கு நோக்கி அவன் பயணிக்கும் போது உடைவாள் இன்னும் உரத்த குரலில்“ போரில் இறந்தவர்களின் உடல்கள் ஒன்று போலிருக்கின்றன. சிந்திய குருதி ஒன்று போலிருக்கிறது. போர் என்பது தந்திரம்“ எனப் பாட ஆரம்பித்தது. “இவ்வளவு உரத்து ஏன் பாடுகிறாய்“ எனப் போர்வீரன் உடைவாளைக் கோவித்துக் கொண்டான்.

போர்வீரன் தனது சொந்த ஊரை நெருங்க நெருங்க உடைவாள் “போரில் கால்கள் துண்டிக்கப்பட்ட குதிரையின் வலியை, உடலெங்கும் அம்புகள் பாய்ந்த யானையின் வேதனையைப் பாட ஆரம்பித்தது“. படைவீரன் எரிச்சலுடன் “போதும் உன் பாடல் வாயை மூடு“ என்றான். உடைவாள் அதைப் பொருட்படுத்தவில்லை.
சொந்த கிராமத்தின் நுழைவாயிலுக்குப் போர்வீரன் வந்த போது உடைவாள் பெருங்குரலெடுத்துப் பாடியது

“போர்க் களத்தில் நீயொரு மிருகம். போர்க் களத்தில் நீயொரு கொலையாளி. யார் பொருட்டு யுத்தம் நடக்கிறது. யுத்தத்தால் யார் பலனடைகிறார்கள்“.
போர்வீரனுக்குத் தனது உடைவாளைக் கழட்டி எறிந்துவிடலாமா என்பது போலக் கோபம் பீறிட்டது. ஆனால் உடைவாள் தானே தனது வீரத்தின் அடையாளம் என்றவனாக அவன் சொன்னான்.

“உன் பாடலை சகிக்க முடியவில்லை. வெற்றியைப் பாடு அல்லது வாயை மூடு“.
தொலைவில் போர்வீரனின் வீடு தென்பட ஆரம்பித்தது. வாசலில் ஆட்டுக்குட்டியைத் துரத்தி விளையாடிக் கொண்டிருந்தாள் செல்லமகள். வேப்பமரத்தில் கட்டிய ஊஞ்சல் காற்றில் தனியே ஆடிக் கொண்டிருந்தது. உடைவாள் மிகவும் சப்தமாகப் பாட ஆரம்பித்தது.

“எல்லா யுத்தத்திலும் உண்மை தான் முதலில் கொல்லப்படுகிறது போரின் துயரை உன்னை விட வீட்டுப்பெண்களும் குழந்தைகளும் அதிகம் அறிவார்கள். உன் கரங்களில் வீசும் குருதியின் மணத்தைக் குழந்தைகள் கண்டுபிடித்து விடுவார்கள். உன் காயங்களில் உறைந்துள்ள அதிகார வேட்கையை மனைவி அறிவார். போர்வீரனாக வீட்டிற்குள் நுழையாதே.“

போர்வீரன் உடைவாளிடம் பாடலை உணர்ந்தவனாக மன்றாடும் குரலில் சொன்னான்
“போதும் பாடாதே. உடைவாள் மௌனமாக இருக்கும் வரை தான் போர்வீரனின் தலை நிமிர்ந்திருக்கும். நீ பாடத்துவங்கினால் மனசாட்சி விழித்துக் கொள்கிறது, குற்றவுணர்வில் சிரம் தாழ்கிறது. போரில் நான் ஒரு ஆயுதம். போரை நான் உருவாக்கவில்லை. போர் எளிய மனிதர்களின் தீர்வில்லை. என் காயங்களைப் போல நீயும் மௌனமாகயிரு.“

அதன்பிறகு போர்வீரனும் பேசவில்லை. உடைவாளும் பாடவில்லை.

நன்றி: திரு & திருமதி எஸ்ரா, முகநூல்

உங்கள் கவனத்திற்கு

வாவ்! படங்கள்

அபூர்வமான படம்

இன்றைய சிந்தனைக்கு

அன்றாட வாழ்வில் அபாயங்கள் : ரெடிமேட் இட்லி-தோசை மாவு

*உயிரை பறிக்கும் தமிழர்களின் இட்லி! உதிரமும் உறைந்து போகும் அதிர்ச்சி?????*

========@=====@======

தமிழர்களின் பாரம்பரிய உணவுகளில் ஒன்றான இட்லி இன்று உயிர்கொல்லி விஷமாக மாறியுள்ளது.கடந்த 10 ஆண்டுகளில் இட்லி, தோசை மாவை விலைக்கு விற்கும் பழக்கம் விரிவடைந்துக் கொண்டே போகிறது. இட்லி, தோசை மாவு விற்கப்படுவதால் ஒரு புறம் பெண்களின் வேலைச்சுமை குறைகிறது.மறுபுறம் வீட்டில் இருந்தபடியே பணம் ஈட்டும் தொழிலாக மாவு விற்பனை நடைபெறுகிறது. இது சிறிய மளிகைக்கடைகளில் கூட இட்லி, தோசை மாவு பாக்கெட்டுகளில் கிடைக்கிறது.

இந்த மாவு ஒரு உயிர்கொல்லி – ஸ்லோ பாய்ஸன் என்பது பலருக்கும் தெரிவதில்லை.இதன் பின் விளைவுகளை சற்று அலசிப் பார்த்தால் நம் உதிரமும் உறைந்து போகும் அளவிற்கு அதிபயங்கரமான விளைவுகள் தெரிய வருகின்றது.
6 நாட்கள் வரை புளிப்பு வாசனை வராமல் இருக்க, நம் உடலில் ஏற்படும் காயத்திற்கும், புண்ணிற்கும், கேரம் போர்ட் விளையாட பயன்படுத்தும் Boric Acid, ஆரோட் மாவு போன்றவற்றைக் கலந்து விற்பனைக்கு அனுப்பி வைக்கின்றனர்.

அதாவது ஒரு நாளைக்கு 3 – 6 மணி நேரம் அரைக்க வேண்டிய கிரைண்டர்கள், 12- 18 மணி நேரம் தொடர்ந்து ஓட்டுவதால் அந்த கல் கொஞ்சம் கொஞ்சமாக தேய்மானம் ஏற்பட்டு மாவுடன் கலந்து விடுகின்றது. மேலும் இவர்கள் சேர்க்கும் சோட, உப்பு, அஜின மோட்டொ இதனால் சிறு நீரகத்தில் கல் நோயை ஏற்படுத்துகின்றது.
என்னதான் நல்ல அரிசி, உளுந்து போட்டாலும் நல்ல தண்ணீரை ஊற்றி தான் மாவு அரைக்க வேண்டும். ஆனால் பெரும்பாலும் உவர்தன்மையைக் கொண்ட கிணத்தடி தண்ணீர் மற்றும் உப்பு தண்ணிரே பயன்படுத்தப்படுகின்றது.நம் முன்னோர்கள் இட்லிக்கு மாவு அரைக்கும்போது ஒரு கை வெந்தயத்தை போட்டு அரைப்பார்கள். வெந்தயம் ஒரு இயற்கையான நோய் நிவாரணி (ஆண்டி பயாடிக்).இது…

உடம்பு உஷ்னம்

வாய் நாற்றம்

குடல் புண்(அல்சர்) போன்ற நோய்களைத் தடுக்கும் ஆற்றல் உள்ளது.கடை மாவில் யாரும் வெந்தயத்தை சேர்ப்பதில்லை.

மேலும், பால், தயிறு, முட்டை, காய்கறி, மாட்டிறைச்சிகளில் கானப்படும் ஈகோலி (E-COLI) எனப்படும் ஒருவகை பாக்டீரியாவானது,( – 24 )மைனஸ் 24 டிகிரிக்கு கீழே இருந்தால் தான் கொஞ்சமாவது கட்டுபடும் அவ்வகை பாக்ட்டீரியாக்கள் மாவுகளில் உருவாகி சிலருக்கு சாப்பிட்டவுடன் ஃபுட் பாயிஸன் என்றும், சிலருக்கு ஸ்லோ பாய்ஸனாக உடலில் கலந்து உயிரையேக் கொல்லும் அபாயமும் உள்ளது.

எனவே தாம் சென்னை மாநகராட்சி கடைகள்,மற்றும் மாவுஅரைக்கும் இடங்களில் பரவலாக சோதனை (ரெய்டு) நடத்தி தரம் குன்றிய மாவுகளைக் கைப்பற்றி, அபராதமும் விதித்து வருகின்றது.எனவே,நமக்கு நன்கு தெரிந்த கலப்படம் செய்யாத நேர்மையானவர்கள் அரைத்து விற்பனை செய்யும் இட்லி,தோசை மாவுகளை மட்டும் வாங்குவதோடு,முன்,பின் தெரியாதவர்கள் தயாரித்து கடைகளில் விற்கும் மாவுகளை முற்றிலுமாகத் தவிர்ப்பது சிறந்தது

*Don't buy batter packets from shop.  They are dangerous.  Kindly read the above carefully*

24 பிப்., 2020

வாவ்! படங்கள்

அபூர்வமான படம்!

ஷிர்தி சாய் பாபா (நடுவில்) 

வினோத திருமண அழைப்பு!

உங்கள் கவனத்திற்கு

இன்றைய சிந்தனைக்கு

இன்று ஒரு தகவல் : தூங்கும் முறை பற்றி சித்தர்கள்

தூங்கும் முறை பற்றி சித்தர்கள் 

கிழக்கு திசையில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது. 
தெற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் ஆயுள் வளரும். 
மேற்கு திசையில் தலை வைத்துப்படுத்தால் கனவு,அதிர்ச்சி உண்டாகும். 
வடக்கு திசையில் ஒரு போதும் தலை வைத்து தூங்கக் கூடாது.

இதனை விஞ்ஞான ரீதியாகவும் ஒப்புக்கொண்டுள்ளனர். வடக்கு திசையில் இருந்து வரும் காந்தசக்தி தலையில் மோதும் போது அங்குள்ள பிராண சக்தியை இழக்கும். இதனால் மூளை பாதிக்கப் படுவதுடன், இதயக்கோளாறுகள், நரம்புத்தளர்ச்சி உண்டாகும்.
மேலும் மல்லாந்து கால்களையும், கைகளையும் அகட்டி வைத்துக் கொண்டு தூங்கக் கூடாது. இதனால் இவர்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன் உடலுக்குக் கிடைக்காமல் குறட்டை உண்டாகும்.குப்புறப் படுக்கக் கூடாது, தூங்கவும் கூடாது.
இடக்கை கீழாகவும், வலக்கை மேலாகவும் இருக்கும்படி கால்களை நீட்டி இடது பக்கமாக ஒருக்களித்து படுத்து தூங்கவேண்டும். இதனால் வலது மூக்கில் சுவாசம் சூரியகலையில் ஓடும்.இதில் எட்டு அங்குலம் மட்டுமே சுவாசம் வெளியே செல்வதால் நீண்ட ஆயுள் வளரும். மேலும் இதனால் உடலுக்குத் தேவையான வெப்பக்காற்று அதிகரித்து பித்தநீரை அதிகரிக்கச் செய்து உண்ட உணவுகள் எளிதில் சீரணமாகும். இதயத்திற்கு சீரான பிராணவாயு கிடைத்து இதயம் பலப்படும்.
வலது பக்கம் ஒருக்களித்து படுப்பதால் இடது பக்க மூக்கின் வழியாக சந்திரகலை சுவாசம் ஓடும். இதனால் பனிரெண்டு அங்குல சுவாசம் வெளியே செல்லும். இதனால் உடலில் குளிர்ச்சி உண்டாகும். இரவில் உண்ட உணவு சீரணமாகாமல் புளித்துப் போய் விஷமாக நேரிடும்.
மனிதனின் அடிப்படைத் தேவைகளில் முக்கியமான ஒன்றுதான் உறக்கம் எனும் தூக்கமாகும். இது உடலின் ஆரோக்கியத்தைக் காப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
மனிதனின் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு தூக்கத்தில்தான் கழிகின்றது. உடலிலுள்ள கோடிக்கணக்கான செல்களை தினமும் புதுப்பிக்கவும், உடலின் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறவும், உடல் வளர்ச்சி பெறவும், தூக்கம் இன்றியமையாததாக உள்ளது.
இரவில் தூங்கும் போதுதான் உடலின் வளர்ச்சி அதிகரிக்கின்றது என்று இன்றைய அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.
தூங்குவதைப் பற்றியும் அதில் உள்ள அறிவியல் உண்மைகளையும் சித்தர் பெருமக்கள் தங்கள் நூல்களில் வடித்துள்ளனர்.
தூங்குவதற்கு ஏற்ற காலம் இரவு மட்டும் தான் என்பது இயற்கையின் விதிகளில் ஒன்று. பூமியின் தட்ப வெட்ப நிலைகள் மாறி இரவில் குளிர்ச்சி பொருந்திய சூழ்நிலைதான் தூங்குவதற்கு ஏற்ற காலமாகும். ஆனால் இன்றைய நாகரீக உலகில் இணையதள நிறுவனங்களில் வேலை பார்க்கும் பலரும் இரவில் கண் விழித்து பகலில் தூங்குகின்றனர். இதனால் என்ன தீமைகள் விளையும் என்பது பற்றி சித்தர் பாடல்ஒன்று.  

சித்த மயக்கஞ் செறியும் புலத்தயக்க மெத்தனுக்
கமைந்த மென்பவை களித்தமுற வண்டுஞ் சிலரை
நாயாய்ப் பன்னோய் கவ்வுமிராக் கண்டுஞ் சிலரை
நம்பிக் காண்

இதன் விளக்கம் :-
இரவில் நித்திரை செய்யாதவர்களிடத்தில் புத்தி மயக்கம், தெளிவின்மை, ஐம்புலன்களில் [உடலில்]சோர்வு, பயம், படபடப்பு, அக்னி மந்தம், செரியாமை, மலச்சிக்கல், போன்ற நோய்கள் எளிதில் பற்றும்.
வேட்டைக்குச் செல்லும் வேடருடைய நாய்கள் இரையைக் கவ்வுதல் போல் இரவில் நித்திரையில்லாதவரை பற்பல நோய்கள் கவ்விக் கொள்ளும். சித்தர்கள் அருளிய பாரம்பரிய சித்த மருத்துவம் மூலம் பூரணமாக முழுமையாக குணப்படுத்த முடியும். http://www.siddharmedicine.in/ @ 9943909495, 04258-226495

23 பிப்., 2020

இன்று ஒரு தகவல்

விவசாயிகளுக்கான கிசான் கிரெடிட் கார்டு... இனி இலவசமே!
http://dhunt.in/8ESFj?s=a&ss=wsp
Source : "ஒன்இந்தியா எக்ஸ்க்லூஸிவ்" via Dailyhunt

செயலியை பெற
http://dhunt.in/DWND

அன்றாட வாழ்வில் அபாயங்கள்

ஒரு கப் டீயில் 13 வகையான தடை செய்யப்பட்டுள்ள  பொருட்கள்!விளக்குகிறார் மருத்துவர் சிவராமன்...! 

#DrSivaraman #HealthAlert #Milk #Tea #Cofee #VikatanCuts
https://www.facebook.com/189960617729403/posts/3185875658137869/

இன்றைய சிந்தனைக்கு : அன்பு உலகை ஆளும்!

#அன்பு_உலகைஆளும்

கணவனுக்கு வீட்டில் காபி ஊற்றிக் கொடுத்தாள் மனைவி... உள்ளே ஓர் எறும்பு கிடந்தது. அதைக்கண்ட கணவன் காபியை விடக் கொதிக்க ஆரம்பித்து விட்டான். காபியை வீசினான்... விளைவு?
சண்டை ...
சந்தோசமானவீடு மூன்று நாள் துக்கவீடாக மாறிவிட்டது.

*༺🌷༻*
இதே சம்பவம் இன்னொரு வீட்டிலும் நடந்தது. அந்த வீட்டில் உள்ள கணவன் காபியில் செத்து மிதக்கும் எறும்பை எடுத்தான். அவன் மனைவியை அழைத்து மெதுவாகச் சொன்னான். "உன் காபிக்கு என்னை விடவும் தீவிர ரசிகன் இந்த எறும்புதான்.
உன் காபிக்காக உயிரையே கொடுத்து விட்டது பார். இது போல்
ரசிகர்களை வீணாய் இழந்து விடாதே."

மனைவி சிரித்தாள். தன்
தவறை உணர்ந்தாள்.
அதன்பிறகு அவர்கள் வீட்டு சர்க்கரையை கவனமாகப்
பாதுகாத்தாள். அதனால் காபியில் எறும்பு சாகவில்லை. அவர்கள்
வீட்டின் மகிழ்ச்சியும் சாகவில்லை .....

*༺🌷༻*
வாழ்க்கையை சந்தோஷமாக அமைத்துக் கொள்வதும்
சங்கடத்தில் முடிப்பதும் நாம் பிரச்சனைகளை எவ்வாறு
கையாள்கிறோம் என்பது மட்டுமே தீர்மானிக்கிறது.

*༺🌷༻*
நமக்கு மட்டும் தான் கோபம் வரும் எனவும்... நாம் தவறே
செய்யமாட்டோம் எனவும் நாம் நினைக்கக் கூடாது...
தவறுகளை நகைச்சுவையாகவோ அன்பாகவோ
சொல்லிப்பாருங்கள்.. அந்தத் தவறு மறுபடி நடக்காது...

*༺🌷༻*
ஆனால் காட்டுக் கத்தல் கத்தியோ அதிகாரமாகவோ தவறுகளை சுட்டிக்
காட்டினீர்கள் என்றால் அதை விட அதிகமான தவறுகள் நடக்கும்
என்பதை மறவாதீர்கள்!!

*༺🌷༻*
சாவியைப் பார்த்து சுத்தியல் கேட்டது.
"உன்னைவிட நான்
வலிமையானவனாக இருக்கிறேன்.
ஆனாலும் ஒரு பூட்டைத் திறக்க நான்
மிகவும் சிரமப்படுகிறேன். ஆனால்
நீ சீக்கிரம் திறந்து விடுகிறாயே
- அதெப்படி?"

அதற்கு சாவி, "நீ என்னை
விட பலசாலிதான். அதை நானும் ஒப்புக் கொள்கிறேன். *பூட்டைத் திறக்க நீ அதன் தலையில் அடிக்கிறாய்,*
ஆனால் *நான் பூட்டின் இதயத்தைத் தொடுகிறேன்"* என்றதாம்.

*அன்பு🌹உலகை🌹ஆளும்*

வாவ்! படங்கள்

கருத்தைக் கவர்ந்தவை!

தமிழ் இலக்கியத்தின் தசரத் மாஞ்சி – எஸ்.ராமகிருஷ்ணன். 

தசரத் மாஞ்சி பிகார் மாநிலத்தில் தனி ஒரு மனிதனாக ஒரு சிறு உளியையும், சுத்தியலையும் கொண்டு 22 ஆண்டுகள் ஒரு மலையை குடைந்து பல கிராமங்களுக்கு பாதையை உருவாக்கித் தந்தவர். அவரால் தான் இன்று பல கிராம மக்கள் சுலபமாக பயணிக்க முடிகிறது. பல உயிர்கள் காப்பாற்றப்படுகிறது. ஆனால் அவரை எத்தனை பேருக்கு தெரியும். போற்றப்பட வேண்டிய அந்த மனிதருக்கு இறக்கும் தருவாயிலேயே மிக மிக சிறிய வெளிச்சம் கிடைத்தது.

இதே போல் உலகம் முழுக்க பல துறைகளில் பல சாதனைகளை செய்தவர்கள் யாருக்கும் தெரியாமலேயே மண்ணோடு மண்ணாக மறைந்திருக்கிறார்கள். தமிழகத்தில், அதுவும் தமிழ் இலக்கியத்தில அப்படி நிறையப்பேர் இருந்திருக்கறார்கள். தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சி பெறாத காலகட்டத்தில் ஒருவரை அறிய நமக்கு தடைகள் இருந்திருக்கலாம். ஆனால் இன்றைய காலகட்டத்தில் அப்படி ஒருவர் மறைக்கப்பட்டால், பரவலாக தெரியாமல் இருந்தால் அல்லது மேம்போக்காக மட்டுமே தெரிந்திருந்தால் அல்லது சுத்தமாக தெரியாமலேயே இருந்தால் அது திட்டமிட்டு ஒருவரை காணாமல் போக செய்யும் செயலாகவே கருதமுடியும்.

எஸ்.ராமகிருஷ்ணன் தமிழ் இலக்கியத்திற்கு செய்திருப்பதை இனி எவராலும் அப்படி ஒன்றை செய்ய முடியுமா என்றால், நிச்சயமாக முடியாது என்று சொல்லாம். யாரும் சண்டைக்கு வரமாட்டார்கள் என்று நம்புகிறேன். அப்படி வந்தாலும் அவர்களுக்கு நம்மால் நிரூபிக்கமுடியும்.

அப்படி என்ன செய்துவிட்டார் எஸ்.ரா.?

எஸ்.ரா. வின் இரண்டு தொகுப்புகள் முக்கியமானது. நூறு சிறந்த சிறுகதைகள் மற்றும் உலக சினிமா பற்றிய தொகுப்பு.

நீங்கள் பெரிய துணிக்கடைக்கோ அல்லது பல மாடிக்கட்டிடத்திற்கோ சென்றீர்கள் என்றால் வாசலில் ஒருவர் நின்று உங்களுக்கு ஒரு வழிகாட்டியை வழங்குவார். அதில் எந்தெந்தா தளத்தில் என்னென்ன உள்ளது என இருக்கும். அப்படி இலக்கிய உலகத்திற்கும் உலக சினிமா உலகத்திற்குள்ளும் நுழைய விரும்புபவர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக இந்த இரு நூல்களும் அமையும். சினிமாவை பற்றியும், இலக்கியத்தை பற்றியும் இந்த நூலகள் தான் எழுதியுள்ளாரா என்றால் இல்லை, இது வெறும் துவக்கம் தான்.

சினிமா பற்றிய நூல்கள்:

1. காட்சிகளுக்கு அப்பால்

2. குற்றத்தின் கண்கள்

3. நான்காவது சினிமா

4. பறவை கோணம்

5. சாப்ளினுடன் பேசுங்கள்

6. அயல் சினிமா

7. சாமுராய்கள் காத்திருக்கிறார்கள்

இலக்கிய அறிமுக நூல்கள்:

1. உலகை வாசிபபோம்

2. கதாவிலாசம்

3. நிலவழி

4. நாவலெனும் சிம்பொனி

5. நம் காலத்து நாவல்கள்

6. வீடில்லாப் புத்தகங்கள்

7. வாசக பர்வம்

8. வாக்கியங்களின் சாலை.

9. காப்கா எழுதாத கடிதம்

ஜன்னலை திறந்து ஓவியங்களை காண்பித்தவர் எஸ்.ரா. ஓவியங்கள் மேல்தட்டு மக்களின் கலை என எப்போதும் ஒரு கருத்து நிலவிவருகிறது. பிகாஸோ முதல் வான்கா வரை முக்கியமான பல ஓவியர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார். என்னதான் இனையத்தில் கொட்டிக் கிடந்தாலும் நமக்கு யாராவது ஒருவர் சொன்னால் ஒழிய தெரிந்து கொள்வது இயலாது. எல்லாராலும் ஏகலைவனாக முடியாதே.

ஓவியங்களை பற்றிய நூல்கள்:

1. கோடுகள் இல்லாத வரைப்படம்.

2. சித்திரங்கள் விசித்திரங்கள்

3. பிகாசோவின் கோடுகள்

எஸ்.ரா வும் ரஷ்ய இலக்கியமும்:

எஸ்.ரா. தன்னுடைய எல்லா உரைகளிலும் தவறாமல் குறிப்பிடுவது தான் ரஷ்ய இலக்கியத்தை படித்து
வளர்ந்தவன். ரஷ்ய இலக்கியமே தன்னை வளர்த்ததாக கூறுவார். ரஷ்ய இலக்கியதின் மேல் அவர் அளவுக்கடந்த பற்று வைத்திருக்கிறார். டால்டாய், செக்கோவ், தஸ்தாவிஸ்கி, துர்கனேவ் என பலரை பற்றி எழுதியும் பேசியும் உள்ளார்.

ரஷ்ய இலக்கியத்திற்கு ஒரு காலத்தில் தமிழகத்தில் பெரும் வரவேற்பு இருந்தது. அது அப்படியே மெல்ல மங்கத்தொடங்கியது. அதன் பிறகு பங்கேற்கும் மேடை தோறும் ரஷ்ய இலக்கியத்தை பற்றி பேசி அதற்கு மீண்டும் உயிரூட்டினார். ரஷ்ய நாவலாசிரியர்கள் மற்றும் இலக்கியத்தை பற்றிய அவரின் பல உரைகள் யூடியுப்பில் உள்ளன. மேலும் அவரின் உலக இலக்கிய பேருரைகள் குறுதகடுகளாக கிடைக்கிறது.

ரஷ்ய இலக்கிய நூல்கள்:

1. எனதருமை டால்ஸ்டாய்

2. செகாவ் வாழ்கிறார்

மேலும் பல படைப்புகளை பற்றிய அறிமுக நூல்களை எழுதியுள்ளார். இவையில்லாமல் பயணம், வரலாறு, சமயம் என பலவற்றை பற்றி எழுதியுள்ளார். வழிக்காட்ட அவர் தயாராகவுள்ளார். ஆனால் நாம் தான் அந்த திசை பக்கம் திரும்ப விரும்பவில்லை.

குறிப்பு: இந்த பதிவில் எஸ்.ரா.வின் சிறுகதை மற்றும் நாவல்கள் பற்றி எதுவும் பேசவில்லை. அதை தனியாக தான் பேச வேண்டும் என்று இருக்கிறேன்.

நன்றி
அரிசங்கர்.

அபூர்வமான படம்!

பயனுள்ள குறிப்புகள்

சிரிப்புத்தான் வருகைதையா!

சிரித்து வாழவேண்டும் !


மாநகராட்சி மாணவர்களுக்கு சத்துணவு திட்டத்தை
" இஸ்கான் " என்ற ஹிந்து அமைப்பிடம் ஒப்படைத்துள்ளது அரசு
இது கண்டிக்கத் தக்கது

                             - வை.கோ

* 8,5,0000 மாணவர்களுக்கு உணவளிக்கிறது இஸ்கான்
மஹா ராஷ்டிரத்தில் மட்டும்

* 400 கலோரி சத்து உறுதி செய்யபட்டது .

* உணவு தினமும் தர சோதனைக்கு
உள்ளாகிறது

* வாரம் முழுவதும் ஒரே விதமான உணவு மெனு இல்லை.

* இஸ்கான் சமயலறை ஊழியர்களுக்கு எல்லா வாரமும் மருத்துவ பரிசோதனை கட்டாயம்

* தயாரிப்பு டெலிவரி ஊழியர் சம்பளம் , வாகன பராமரிப்பு
சமயலறை பராமரிப்பு போக ஒரு தட்டு உணவுக்கு அவர்கள் பெறும் அரசு மான்யம் வெறும் 4.50 பைசா .

* தினமும் 4 1/2 டன் அரிசி பயன்படுத்தப் படுகிறது

* தினமும் 15-20 டன் உணவு
தயாரிக்கப்படுகிறது..

* 50 வாகனம் மூலம் டெலிவரியாகிறது

*மஹாராஷ்டிராவில்  1225 பள்ளிகளுக்கு இப்போது
உணவளிக்கப்படுகிறது.

* இதை நாடு முழுமையும் விரிவு படுத்தி தினம் 8,50,000 குழந்தைகளுக்கு செய்ய திட்டமுள்ளது .

    இப்படி ஒரு அசுர சாதனையை
செய்பவர்களை " ஹிந்து மத " அமைப்பு என விமர்சனம் செய்யும்  நாலாம்தர அரசியல் வாதிகள் மனசாட்சியை தொட்டு சொல்லட்டும் உங்கள் தொகுதியில் நீங்கள் பதவி வகித்த காலத்தில் செய்த நன்மை என்ன ?

    இதில் முட்டாள் தனமாக
கேட்கும் கேள்வி " இஸ்கான்
உணவில் முட்டை வழங்கப்படுமா "
முட்டைமட்டுமே சத்து என
மூளையில் திணிக்கப்பட்ட விஞ்ஞான விளைவு இந்த கேள்வி.

எளிமையான பதில்
தலைக்கு 3-6 லட்சம் வாங்கிக்கொண்டு நியமனம் செய்தீர்களே அவர்கள் செய்வார்கள் .

 இறுதியாக

" அன்னம் பஹீ குர்வித "
"உணவை பெருக்கி பகிர்ந்துண்ணுங்கள் "என்கிறது ரிக் வேதம் .

நீங்கள் புலம்பிகொண்டே இருங்கள் ! நன்மை நடந்து கொண்டே இருக்கும்