வரலாற்றில் சில மைல் கற்கள்-1: செப்டம்பர் 11
வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப் பார்ப்பது எவ்வளவு சுவையாக இருக்கிறது. அப்படிப் புரட்டிப் பார்த்தால் என்ன என்ற எண்ணத்தால் இந்தப் புதிய பகுதியைத் தொடங்குகிறேன்.
இன்று 2012ம் வருடம் செப்டம்பர் பதினோராம் நாள்.
கட்டற்ற கலைக் களஞ்சியமான விக்கிபீடியாவில் (Wikipedia, the free Encyclopedia) இந்த நாளைக் காண்போம் என்று தேடினால், அப்பா! எவ்வளவு தகவல்கள்! வரலாறு பதிவாகிய நாட்களிலிருந்து அண்மைக் காலம் வரை செப்டம்பர் பதினோராம் நாளில் நடந்த நிகழ்வுகள் பலவற்றை ஒற்றை வரியில் பதிவாகியுள்ளன. அவற்றில் குறிப்பாக ஏதாவது பற்றி ஆழமாகத் தெரியவேண்டுமா, அந்த ஒற்றை வரியைச் சொடுக்கினால் போதும்.
அந்தப் பதிவுகளைக் காணுமுன், நான் அறிந்த சிலவற்றை இங்கே பதிகிறேன்.
முதலில் இன்று மகாகவி பாரதியின் நினைவு நாள். பாரதியின் மேல் கொண்ட மாளாக் காதலால் அதை நான் நினைவில் கொண்டிருக்கின்றேன். மேலும் நாட்காட்டிகள் அனைத்துமே பாரதி திருவுருவப் படத்துடன் அதைப் பறைசாற்றின. பாரதியை நினைத்த மாத்திரத்தில் மனச்சோர்வுகள் பறந்து, மனதில் ஒரு உற்சாகம். அவரது எழுச்சியூட்டும் பாடல்கள் மனதில் ஓடலாயின. வலையில் தேடியதில் கிடைத்த சில தகவல்கள்:
இன்று மகாகவியின் 91வது நினைவு நாள். (கும்மாச்சி என்ற தமிழ் இணையதளத்தில் பாரதி நினைவு நாள் பற்றி, சிறப்பான பதிவைப் படித்தேன். இந்த இணையதளத்தின் உப தலைப்பான, அன்பே சிவம் என்ற வரிகள் மனதிற்கு மகிழ்வைத் தந்தது. அடுத்து அதன் கொள்கை வரிகள்:
"முடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும், உதவுவதற்கு எல்லை இல்லை"
என்ற வரிகள் பாராட்டத்தக்கவை. இனி இதன் பதிவுகளை மின்அஞ்சலில் பெறவேண்டி எனது பெயரைப் பதிவு செய்துகொண்டேன்.) அதன் உரலி:
எனக்கு மிகமிகப் பிடித்த பாரதியின் சில வரிகளோடு ம்காகவியைப் பற்றிய இந்தப் பதிவினை நிறைவு செய்கிறேன்.
அன்பிற் சிறந்த தவமில்லை.
அன்புடையார் இன்புற்று வாழ்தல் இயல்பு.
அடுத்து, கூகுள் குரூப்பில் பாரதி நினைவு நாள் பற்றிய பதிவும் பிடித்திருந்தது. அதன் உரலி:
https://groups.google.com/forum/#!msg/illam/dvxfOimm1ec/vimoCi5NBoQJ
அடுத்து, அமெரிக்காவின் சிகாகோ நகரில் சர்வ மத மாநாட்டில் சுவாமி விவேகானந்தர் சிறப்புரையாற்றி, இந்து மதம், இந்தியர்கள் மற்றும் இந்தியாவின் பெருமையை உலகம் உணரவைத்த நாள். விவேகானந்தரை வழிபடும் ஒரு பக்தன் என்ற முறையில் பெருமையோடு அந்த நாளை நினைத்துப் பார்க்கிறேன். அந்த சிறப்புரை திரு கே.எம்.தர்மலிங்கம் அவர்களது வலைப்பூவில் சிறப்பாக தமிழில் மொழி பெயர்த்துத் தரப்பட்டுள்ளது. அதன் உரலி:
சுவாமிஜியின் சிகாகோ சொற்பொழிவும், அதைப் பற்றி அவர் தனது சீடர் அழசிங்கப் பெருமாளுக்கு எழுதிய கருத்து பற்றியும் ஆங்கிலத்தில் படிக்க:
சுவாமிஜியைப் பற்றிய் இந்தப் பதிவினை நிறைவு செய்யுமுன், எனக்கு மிகமிகப் பிடித்த வாழ்வையும், மரணத்தையும் பற்றிய் அவர்களது பொன்மொழி:
பலமே வாழ்வு; பல்மின்மையே மரணம்.
அன்பே வாழ்வு; வெறுப்பே மரணம்.
விரிந்துகொண்டே போதலே வாழ்வு; சுருங்கிக் கொண்டே போவது மரணம்.
Strength is Life, Weakness is Death.
Love is Life, Hatred is Death.
Expansion is Life, Contraction is Death.
எதிர்மறைகளான வாழ்வையும், மரணத்தையும் இதைவிடச் சிறப்பாக யாரும் சொல்லியிருக்க முடியாது.
மூன்றாவதாக, இந்த நாள் அமெரிக்காவின் நியூயார்க் நகரின் இரட்டைக் கோபுரங்களைத் தகர்த்து பயங்கரவாதிகள் உலகையே நிலைகுலைய வைத்த நாள். இதுபற்றிய அனைத்துத் தகவல்களையும் மிகச் சிறப்பாகத் தொகுத்து, படங்களுடன் கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியா அற்புதமாக தந்துள்ளது. அதன் உரலி:
அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதல் பற்றிய இந்தப் பதிவினை நிறைவு செய்யுமுன் இது தொடர்பான எனது சிந்தனைகள் சில:
ஆப்கானிஸ்தானை ரஷ்யா ஆக்கிரமித்தபோது, அதை அங்கிருந்து வெளியேற்றுவதற்காக ஒசாமா பின் லாடனையும், அல்கொய்தாவையும் வளர்த்துவிட்டது அமெரிக்க அரசுதான். ஆயுதங்களையும், பணத்தையும் வாரி வாரி வழங்கியது. பயிற்சிகள் வழங்கியது. பல வகைகளில் உதவியது. வளர்த்த கடா மார்பில் பாய்வது போல், ரஷியா ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறிய்பின், பின் லாடனும், அல்கொய்தாவும் அமெரிக்காவிற்கு எதிராகத் திரும்பினர். இதிலிருந்தும், நான் படித்தவற்றிலிருந்தும், எனது 63 வருட வாழ்விலிருந்தும் நான் கற்றுக்கொண்ட முக்கிய பாடங்களில் ஒன்று – நமது லட்சியம் எவ்வளவு சீரியதாக இருந்தாலும், நாம் பின்பற்றும் வழிமுறைகள் (Ways and Means) மிகச் சரியாக இருக்கவேண்டும். தவறான பாதையை, தவறான வழிமுறைகளைப் பின்பற்றி சரியான இலக்கை ஒருபோதும் அடைய்முடியாது. சமயத்தில் இலக்கு கிட்டியது போல் தோன்றினாலும், அது நிலைக்காது; அதன் பின்விளைவுகள் மிகமோசமாக இருக்கும்.
இன்றைய உலகில் உள்ள அராஜகம், அக்கிரமம், அநீதி, வ்ன்கொடுமைகள் அனைத்திற்கும் முக்கிய காரணம், சரியான வழிமுறைகளைப் பின்பற்றாததால் உண்டானவையே என்று எனக்குத் தோன்றுகிறது. “எப்படியாவது அடைதல்” (Somehow) என்பது எவ்வளவு ஆபத்தான, இழிந்த எண்ணம். தனி மனிதனிலிருந்து, அரசு அமைப்புகள், அரசியல்வாதிகள் என்று அனைவருக்குமே இது பொருந்தும். இந்த விழிப்புணர்வு எப்போது ஏற்படுமோ?
இப்போது பிரமிப்பை அளிக்கும் விக்கிப்பீடியாவின் செப்டம்பர் பதினோராம் நாளிற்கான பொதுவான தகவல் கட்டுரை. எவ்வளவு அரிய தகவல்கள்! அந்த நாளில் எத்தனை யுத்தங்கள்! எத்தனை நிகழ்வுகள்!! அந்த நாளில் பிறந்தவர்கள், இறந்தவர்கள், மற்றும் கொண்டாட்டங்கள் பற்றி எத்தனை செய்திகள்!!! அவற்றில் சில மட்டும் கீழே:
1390ம் ஆண்டு இந்த நாளில் லித்துவேனியாவில் நடந்த யுத்தத்தில் வில்னியஸ் நகரை டாய்டானிக் வீரர்கள் முற்றுகை.
1609ம் ஆண்டு இந்த நாளில் ஹென்றி ஹட்சன் மன்ஹாட்டன் தீவைக் கண்டுபிடித்தது.
1609ம் ஆண்டு இந்த நாளில் வியன்னா யுத்தம்.
1697ம் ஆண்டு இந்த நாளில் ஜென்டா யுத்தம்.
1709ம் ஆண்டு பிரிட்டன், நெதர்லாந்து மற்றும் ஆஸ்திரியா பிரான்சுக்கு எதிராக நடத்திய மால்பிலாக் யுத்தம்.
ஏழாண்டுகளாக ந்டைபெற்ற யுத்தத்தில், 1758ம் ஆண்டு இந்த நாளில் செயின்ட் காஸ்ட்டில் நடைபெற்ற யுத்தத்தில் பிரான்சு பிரிட்டிஷ் படைகளை விரட்டியடித்தது
1803ம் ஆண்டு டெல்லியில் நடந்த யுத்தத்தில் ஆங்கிலப் படைகளை எதிர்த்து மராத்திய் வீரர்கள் வீரப்போர் புரிந்தது.
1813ம் ஆண்டு பிரிட்டிஷ் துருப்புகள், வாஷிங்டன் டி சி-யை கைப்பற்ற மவுண்ட் வெர்னோனை அடைந்தது
1814ம் ஆண்டு பிளாட்ஸ்பர்க் நகரில் அமெரிக்கப் படை பிரிட்டிஷ் படையினை வெற்றி கண்டது
1914ம் ஆண்டு ஆஸ்திரேலியா ஜெர்மானியப் படைகளை பீட்டா பகாவில் நடந்த யுத்தத்தில் வென்று, நியூ பிரிட்டன் மேல் படையெடுத்தது.
1919ம் ஆண்டு அமெரிக்கப் படைகள் ஹோண்டுராஸ் நாட்டை முற்றுகையிட்டது.
1939ம் ஆண்டு இரண்டாம் உலகப்போரில் கனடா ஜெர்மனிக்கு எதிராக போரிடுவதாக அறிவித்தது.
1944ம் ஆண்டு இரண்டாம் உலகப் போரில் இந்த நாளில் ஐக்கிய நாட்டுப் ப்டைகள் ஜெர்மனியில் மேற்கு எல்லையில் நுழைந்தன.
1961ம் ஆண்டு இந்த நாளில் உலக விலங்குகளுக்கான நிதியம் துவங்கப்படுதல்
1965ம் ஆண்டு இந்த நாளில் இந்திய-பாகிஸ்தான் யுத்தத்தில் இந்தியப் படைகள் லாகூருக்கு அருகிலுள்ள பர்க்கி நகரைக் கைப்பற்றின.
1973ம் ஆண்டு சிலியில் இராணுவப் புரட்சி. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சல்வடோர் அல்லண்டே அரசை இராணுவம் கைப்பற்றி, அல்லண்டேயைக் கொன்றது.
இன்றும் உலகப் புகழ் பெற்ற கார்ல் ஜெய்ஸ் லென்ஸை உருவாக்கிய கார்ல் ஜெய்ஸ் 1816ம் ஆண்டு இந்த நாளில் பிறந்தார்.
புகழ்பெற்ற அமெரிக்க சிறுகதை எழுத்தாளர் ஓ.ஹென்றி 1862ம் ஆண்டு இந்த நாளில் பிறந்தார். (அவரது “கிறிஸ்துமஸ் பரிசு” என்ற சிறுகதை எனக்கு மிகவும் பிடித்தது.)
1885ம் ஆண்டு இந்த நாளில் புகழ் பெற்ற ஆங்கில் எழுத்தாளர் டி.எச்.லாரன்ஸ் பிறந்தார். (அவரது “மரக்குதிரை ஓட்டுபவன்” என்ற சிறுகதை எனக்கு மிகவும் பிடித்தது).
காந்திஜியின் சீடர், பூதான இயக்கத்தின் தந்தை, வினோபா பவே 1895ம் ஆண்டு இந்த நாளில் பிறந்தார். (நான் போற்றி வணங்கும் ம்கான்களில் இவரும் ஒருவர்.)
இப்படிப் பல தகவல்கள். செப்டம்பர் பதினோராம் நாள் பற்றிய அனைத்துச் செய்திகளையும் முழுமையாகப் படித்து மகிழ:
இதுபோல ஒவ்வொரு நாளின் வரலாறு பற்றியும் எழுத ஆசைதான். ஆனால் எவ்வளவு நேரம் தேவைப்படுகிறது. சரி, அப்படியே நேரம் மிகச் செலவு செய்து எழுதினாலும், எவ்வளவு பேர் படிக்கப் போகிறார்கள். அப்படியே படித்தாலும் எத்தனை பேருக்குப் பிடிக்கப்போகிறது? இப்படியெல்லாம் சிந்திக்க ஆரம்பித்தால் எழுதுவதையே நிறுத்திவிட வேண்டியதுதான். ஏனெனில் பெரும்பாலும் யாரும் படித்து, கருத்துச் சொல்வதில்லை.
Virtually, there is no feedback.
பார்க்கலாம்.
மனமார்ந்த நன்றிகள்: கும்மாச்சி இணையதளம், கூகுள் குரூப்ஸ், திரு கே.எம்.தர்மலிங்கம், அத்வைத யோகா இணையதளம் மற்றும் கட்டற்ற கலைக்களஞ்சியமான் விக்கிபீடியா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக