20 நவ., 2017

அன்றாட வாழ்வில் அபாயங்கள்:-9: குளிர்பானங்கள்

குளிர்பானங்கள்

ஆங்கில இந்து பேப்பரில் பக்கம் 5ல் கோக்க கோலா முழுப்பக்க விளம்பரம் இருந்தது. ஒரே ஒரு டப்பா (Box). எதுக்கு ஒரு பக்கத்துக்கு விளம்பரம் என உற்றுநோக்கினால் கீழே நான்கு வரிகளில் சின்னதாய் சில விபரங்கள், அவைகள் கீழ் வருமாறு....

terms and conditions:
contains no fruit; added flavours, artificial sweeteners.
this carbonated water contains an admixture of #aspartame and #acesulfame_potassium.   not recommended for children.

என்ன இது அஸ்பர்டேம்?
என்ன இது அசேசல்பேம் பொட்டாசியம்?
குழந்தைக்கு உகந்தது அல்ல என்று வேறு இருந்தது!

சரி என இணையத்தில் தேடிப்பார்த்தேன், இந்த இரு இரசாயணங்களின் பக்கவிளைவுகள் சாதாரண தலைவலி முதல் மிகக்கொடிய புற்றுநோய் வரை நம் உடலில் ஏற்படுத்தக்கூடியது என்றும் அதோடு பல்வேறு நோய்கள், உடல் உபாதைகள் ஏற்படுத்தக்கூடியது எனப் பட்டியல் நீண்டது!

பலமுறை நானே எழுதியுள்ளேன் குளிர்பானங்கள் பூச்சிமருந்துகளுக்கு சமம் என நண்பர்களோடு திரையரங்கு சென்றால் கூட அங்கு குளிர்பானம் வாங்கினால் அதன் தீங்கை எடுத்துச்சொன்னால் நம்மை தான் ஏதோ வேற்றுகிரக வாசிகள் போல பார்க்கின்றனர்.

விவசாயத்துக்கு தண்ணி இல்ல,
குடிக்க நிலத்தடி தண்ணி கிடையாது கேன் தண்ணி தான், இவ்வளவு பிரச்சனை நாட்டுக்கு!
பல நோய் பிரச்சனை உடலுக்கு!

ஆனாலும் நம் நாட்டின் படித்த, அறிவுசீவிகள் கூட இந்த கருமத்தை வாங்கி குடிப்பதை கண்டால் ஏன் இவர்கள் இன்னும் சாகாம இருக்காங்கனு தோனுது?
நம்மையும் நாட்டையும் பாதுகாக்கவேண்டிய அரசியல்வாதிகளோ மக்களுக்கு குடிக்க தண்ணியல்ல, ஆறுகளில் அண்டை மாநிலத்தான் தடுப்பணைகளை கட்டி தண்ணய மடக்கிப்புட்டான், ஆனாலும் ஆற்றுப்படுகைகளில் ஆழ்குழாய் அமைக்க அனுமதிச்சிட்டாங்க, நீதிமன்றமும் ஆத்துதண்ணிய கோகோ கோலாகாரனுக்கு தரச்சொல்லுது  இப்படி

குளிர்பானம் குடித்து விவசாயத்தை கொன்று உடலையும் கொல்வதற்கு பதில் நேரடியாக விசத்தை வாங்கி குடிப்பதற்கு என்ன கேடு இவர்களுக்கு?

நன்றி.இந்து பத்திரிகைக்கு

Posted as received in my WhatsApp page

கருத்துகள் இல்லை: