15 ஜூலை, 2018

வரலாற்றில் சில மைல் கற்கள்-10: ​ஜூலை ​15

​ஜூலை ​15 - வரலாற்றில் சில மைல் கற்கள்​​

ஜூலை 15ம் நாள் கிரிகோரியன் காலண்டர்படி வருடத்தின் 196வது நாள் (லீப் வருடமெனின் 197வது நாள்). இன்னும் இந்த வருடத்தில் 169 நாட்கள் உள்ளன.

​நிகழ்வுகள்

கிபி 70: இந்த நாளில் ரோமானியர்களுக்கும் யூதர்களுக்குமான போரில் பல முயற்சிகளுக்குப் பின், ரோமானியப் பேரரசர் டைடஸ் தன்னுடைய படைகளுடன் ஜெருசலேம் நகரின் வாயில்களைத் தகர்த்து, ஜெருசலேம் நகருக்குள் புகுந்தார்.

​1099 : முதலாம் சிலுவைப் போரில் கிறித்துவப் படை வீரர்கள் ஜெருசலேம் நகரை வீழ்த்தி, திருக்கல்லறைத் தேவாலயத்தைக் கைப்பற்றினர்.

​1149: ஜெருசலேம் நகரில் புதுப்பிக்கப்பட்ட திருக்கல்லறைத் தேவாலயம் மக்களுக்காக திறக்கப்பட்டது.

​1741: இந்த நாளில் அலெக்ஸி சிரிக்கோவ் தென்கிழக்கு அலாஸ்காவை கண்டடைந்தார். அவரது சிறுபடை ஒன்று அலாஸ்காவில் காலடி எடுத்து வைத்தது. ஐரோப்பியர்கள் முதன்முதலில் அலாஸ்காவில் நுழைந்தனர்.​

​1815: நெப்போலியன் போனபார்ட் தோல்விக்குப் பின் ஆங்கிலேயரிடம் எச்.எம்.எஸ்.பெல்லரபோன் கப்பலில் சரணடைந்தார்.​
1823: ரோம் நகரின் தொன்மை வாய்ந்த ரோமன் கத்தோலிக்கர்களின் செயிண்ட் பால் தேவாலயம் தீ விபத்தில் எரிந்தது.
1888: ஜப்பானில் புக்குஸீமா பகுதியில் பண்டாய் எரிமலை வெடித்துச் சிதறியதில் கிட்டத்தட்ட 500 பேர் உயிரிழந்தனர். 

​1910: எமில் கிரேப்பலின் தனது கிளினிகல் சைக்கியாட்ரி ( CLINICAL PSYCHIATRY) புத்தகத்தில்  அல்ஜய்மர்(Alzheimer) நோய் பற்றி எழுதுகிறார். தனது சகா அலாய்ஸ் அல்ஜய்மரின் (Alois Alzheimer)பெயரை அந்த நோய்க்குச் சூட்டுகிறார்.
1916: அமெரிக்காவில் சியாட்டில் நகரில் வில்லியம் போயிங்கும் ஜார்ஜ் கோன்ராட் வெஸ்டர்வெல்ட்டும் பஸிபிக் ஏரோ ப்ராடக்ஸ் கம்பெனியை நிறுவுகின்றனர். பின்னர் அந்த நிறுவனம்  போயிங் நிறுவனமாக உருவெடுக்கிறது.​
​1954: போயிங் 367-80 விமானம் பறக்கவிடப்பட்டது. இது போயிங் 707 மற்றும் சி-135 வரிசை விமானங்களின் முன்னோடி.
​1955:  பதினெட்டு நோபல் பரிசு பெற்றவர்கள் அணு ஆயுதங்களுக்கு எதிரான மைனாவ் பிரகடனத்தை வெளியிடுகின்றனர். தொடர்ந்து மேலும் 34 நோபல் பரிசு பெற்றர்கள் அதில் கையெழுத்திடுகின்றனர்.

1959: அமெரிக்காவில் மாபெரும் உருக்காலை வேலை நிறுத்தப் போராட்டம். அமெரிக்கா வெளி நாடுகளிலிருந்து அதிக அளவில் உருக்கு இரும்பை இறக்குமதி செய்யவேண்டிய நிலை ஏற்படுகிறது.


1975: அமெரிக்
காவின் அப்போல்லோ-சோவியத் ரஷ்யாவின்
 சயூஸ் விண்கலங்கள் ​விண்வெளி வீரர்களுடன் ஏவப்படுகிறது. இது அமெரிக்காவும் ரஷ்யாவும் இணைந்து நடத்திய விண்வெளிச் சோதனை. இதுவே அப்போல்லோ விண்கலங்கள், சாட்டர்ன் ஏவுகணைகளின் இறுதிச் சோதனையாக அமைந்தது.
2003: ஏ.ஓ.எல்.டைம் வார்னர் நெட்ஸ்கேப் கலைக்கப்படுகிறது. மோஸில்லா நிறுவனம் நிறுவப்படுகிறது.
​2006: உலகின் மிகப் பெரிய சமூக வலைத்தளம் டுவிட்டர் ​தொடங்கப்படுகிறது.

​பிறப்பு


​980: ஜப்பானியப் பேரரசர் இச்சிஜோ​ பிறந்தார்.
1455: கொரிய மகாராணி யூன்(Yun) பிறந்தார்.
​1471: எத்தியோப்பியப் பேரரசர் எஸ்கந்தர் பிறந்தார்.​
​1611: ஜெய்பூரில் முதலாம் ஜெய் சிங் மஹாராஜா பிறந்தார்.​
1606:  உலகப் புகழ்பெற்ற டச்சு ஓவியர் ரெம்ப்ராண்ட் பிறந்தார்.
1796: அமெரிக்க தொன்மவியல் அறிஞரும், நாட்டுப்புறக்கதைகள் மற்றும் செவிவழிக்கதைகளைத் தொகுத்தவருமான தாமஸ் புல்பின்ச் பிறந்தார்.

1903: இந்தியாவின் தமிழகத்தின் பெருந்தலைவர், கர்மவீரர் காமராஜர் பிறந்தார்.​

1919: பிரிட்டனின் புகழ் பெற்ற நாவலாசிரியரும், தத்துவ ஞானியுமான ஐரிஸ் முர்டோக் அயர்லாந்தில் பிறந்தார்.

1930: அல்ஜீரிய-பிரெஞ்சு தத்துவ ஞானியும், இலக்கிய விமர்சகருமான ஜாக் டெரிடா பிறந்தார்.​

​1933: புகழ் பெற்ற மலையாள எழுத்தாளரும், திரைக்கதை அமைப்பாளருமான எம்.டி.வாசுதேவன் நாயர் பிறந்தார்.​
​1961: ஹாலிவுட் நடிகர் பாரஸ்ட் விட்டேகர் பிறந்தார்.​

இறப்பு​

​1299: நார்வே நாட்டின் அரசர் இரண்டாம் எரிக் மறைந்தார்.

1904: உலகப் புகழ் பெற்ற சிறுகதை, நாவல் எழுத்தாளர் மற்றும் நாடக ஆசிரியருமான அண்டன் செக்காவ் மறைந்தார்.

​1919: ஜெர்மானிய நோபல் பரிசு பெற்ற அறிவியல் அறிஞர் ஹெர்மன் எமில் பிஷர் மறைந்தார்.



Excerpt from ​
Wikipedia, the free encyclopedia ​
Grateful thanks to Wikipedia, the Free Encyclopedia

கருத்துகள் இல்லை: