ஜூலை 17 : வரலாற்றில் சில மைல் கற்கள்
கிரிகோரி காலண்டர்படி ஜூலை 17 இந்த ஆண்டின் 198வது நாள். இந்த ஆண்டில் இன்னும் 167 நாட்கள் உள்ளன.
முக்கிய நிகழ்வுகள்
180: வட ஆப்பிரிக்காவில் இன்றைய டுனீஷியாவில் சில்லியம் பகுதியில் பன்னிரண்டு பேர் கிருத்துவர்களாக மாறியதற்காக கொல்லப்பட்டனர்.
1048: இரண்டாம் டமாஸ்கஸ் போப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1203: நான்காவது சிலுவைப்போரில் கான்ஸ்டாண்டிநோபிள் கைப்பற்றப்பட்டது. பைஜாண்டிய மன்னர் மூன்றாம் அலெக்சியோஸ் ஏஞ்ஜெலோஸ் தலைமறைவானார்.
1402. அவர் பிறந்த யுகத்தின் பெயரால் இளைய சக்கரவர்த்தி என்று அழைக்கப்பட்ட ஜூ டி சீனாவின் மிங் வம்ச அரசராக பதவியேற்றார்.
1429: ஜான் ஆப் ஆர்க் போராதிடத்தைத் தொடர்ந்து, எழாம் சார்லஸ் பிரான்சு நாட்டின் மன்னராக முடிசூட்டப்படுகிறார்.
1762: ரஷ்யாவின் ஜார் மன்னர் மூன்றாம் பீட்டரின் படுகொலையைத் தொடர்ந்து இரண்டாம் கேத்தரின் முடிசூட்டப்படுகிறார்.
1867: ஹார்வர்ட் பல் மருத்துவக் கல்லூரி மாசாசூசெட்ஸ் மாநிலத்தின் போஸ்டன் நகரில் நிறுவப்படுகிறது.
1902: நியூ யார்க் மாநிலத்தில் பஃபலோ நகரில் வில்லிஸ் கேரியர் முதலாவது குளிர்சாதனப் பெட்டியை உருவாக்குகிறார்.
1917: இங்கிலாந்தின் அரசர் ஐந்தாம் ஜார்ஜ் ஒரு பிரகடனத்தின் மூலம் பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் ஆண்கள் விண்ட்ஸர் என்ற குலப்பெயருடன் விளங்குவர் என்று அறிவிக்கிறார்.
1918: இரஷ்ய மன்னர் இரண்டாம் நிக்கலசம் அவரது குடும்பத்தினரும் எகேடரின்பர்க் நகரில் போல்ஷெவிக்குகளால் படுகொலை செய்யப்படுகின்றனர்.
1918: டைடானிக் கப்பலில் இருந்து 705 பேரைக் காப்பாற்றிய கார்பேத்தியா கப்பல் ஐயர்லாந்திற்கு அருகே ஜெர்மானியர்களால் மூழ்கடிக்கப்பட்டதில் ஐவர் உயிரிழப்பு.
1936: ஸ்பெயினில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இடது சாரி அரசாங்கத்திற்கு எதிராக படைவீரர்களின் புரடசி உள்நாட்டுப் போரின் ஆரம்பமாக அமைகிறது.
1918: டைடானிக் கப்பலில் இருந்து 705 பேரைக் காப்பாற்றிய கார்பேத்தியா கப்பல் ஐயர்லாந்திற்கு அருகே ஜெர்மானியர்களால் மூழ்கடிக்கப்பட்டதில் ஐவர் உயிரிழப்பு.
1936: ஸ்பெயினில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இடது சாரி அரசாங்கத்திற்கு எதிராக படைவீரர்களின் புரடசி உள்நாட்டுப் போரின் ஆரம்பமாக அமைகிறது.
1944: சான் பிரான்சிசஸ்கோ வளைகுடாவில் சிகாகோ துறைமுகத்திற்கு அருகே போருக்காக வெடிமருந்துகளை ஏற்றிச் சென்ற இரண்டு கப்பல்கள் மோதி 320 பேர் உயிரிழப்பு.
1945: இரண்டாம் உலகப் போர்: நேச நாடுகளின் தலைவர்கள் சர்ச்சில், ட்ரூமன் மற்றும் ஸ்டாலின் ஜெர்மானிய நகரமான பாட்ஸ்டாமில் கூடி, தோற்கடிக்கப்பட்ட ஜெர்மனியின் எதிர்காலம் பற்றிப் பேச்சு வார்த்தை நடத்துகின்றனர்.
1955: அமெரிக்க கலிபோர்னியா மாகாணத்தில் அனா ஹெய்ம் நகரில் வால்ட் டிஸ்னி அவரது டிஸ்னி உலகத்தைத் திறந்து வைக்கிறார்.
1968: அப்துல் ரஹ்மான் ஆரிஃபின் அரசு தூக்கி எறியப்பட்டு, அஹமது ஹசன் அல்பக்கர் புதிய அதிபராக நியமிக்கப்படுகிறார்.
1973: ஆப்கானிஸ்தானின் அரசர் மொஹம்மது ஷாகிர் ஷா இத்தாலி நாட்டில் மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கையில், அவரது ஒன்று விடட சகோதரர் மொஹம்மது தாவூத் கான் ஆடசியைக் கைப்பற்றுகிறார்.
1975: அமெரிக்க அப்போல்லோ மற்றும் ரஷிய சயூஸ் விண்கலங்கள் விண்வெளியில் சோதனை முறையில் முதன் முறையாக இணைப்பு
1976: கிழக்கு தைமூர் இந்தோனேஷியாவுடன் இணைக்கப்பட்டு, அதன் 27வைத்து மாநிலமாகிறது.
1976: கனடாவின் மான்ட்ரீல் நகரில் தொடங்கப்பட்ட கோடை ஒலிம்பிக் போட்டிகள் 25 ஆப்பிரிக்க நாடுகள் பகிஸ்கரித்ததைத் தொடர்ந்து சிக்கலுக்குள்ளானது.
1979: நிக்கராகுவா நாட்டின் சர்வாதிகாரி பதவி விலக்கிவிட்டு, அமெரிக்காவில் மியாமிக்கு தப்பி ஓட்டும்.
1984: அமேரிக்காவில் குடிப்பதற்கு அனுமதி 18 வயதிலிருந்து 21 வயதாக மாற்றம்.
1999: பப்புவா நியூ கினி நாட்டில் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியில் 2700 பேர் உயிரிழப்பு.
2006: இந்தோனேசிய ஜாவா தீவில் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஏற்படட சுனாமியில் 668 பேர் உயிரிழப்பு மற்றும் 9000 காயமடைந்தனர்.
2014: மலேசியன் ஏர்லைன்சின் 777 போயிங் விமானம் உக்ரைன் அருகே விபத்துக்குதானதில் அதில் பயணம் செய்த 298 பேர் உயிரிழப்பு.
2015: ஈராக்கில் தியாலா பகுதியில் நடந்த தற்கொலைப் படையினரின் குண்டுவெடிப்பில் 120 பேர் உயிரிழப்பு மற்றும் 130 பேர் காயம்.
பிறப்பு: ஜூலை 17ம் நாள்
1487: ஈரான் நாட்டில் முதலாம் இஸ்மாயில் பிறந்தார்.
1698: பிரெஞ்சு கணிதவியல் வல்லுனரும், தத்துவ ஞானியுமான பியரி லூயி மாபெர்டூஸ் பிறந்தார்.
1714: ஜெர்மானிய தத்துவ ஞானி அலெக்ஸ்சாண்டர் கிறிஸ்டியன் பவும்கார்ட்டன் பிறந்தார்.
1831: சீனப் பேரரசர் ஜியானபெங் பிறந்தார்.
1888: உக்ரைனிய இஸ்ரேலி நோபல் பரிசு பெற்ற நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், கவிஞர் ஷ்மூயல் யோசேப் அக்னான் பிறந்தார்.
1889: அமெரிக்க வழக்கறிஞரும், பெரிமேசன் துப்பறியும் நாவல்கள் எழுதி புகழ் பெற்றவருமான ஏர்ல் ஸ்டான்லி கார்ட்னர் பிறந்தார்.
855: போப்பாண்டவர் நான்காம் லியோ மறைந்தார்.
1762: ரஷிய மன்னர் மூன்றாம் பிடடர் மறைந்தார்.
1790: ஸ்காட்லாந்தைச் சேர்ந்த உலகப் புகஹாஸ் பெற்ற பொருளாதார நிம்புணரும் தஸ்த்துவ ஞானியுமான ஆடம் ஸ்மித் மறைந்தார்.
1912: பிரஞ்சு கணிதமேதையும், இயற்பியலாளரும், பொறியியலாளருமான ஹென்றி பாயின்கரே மறைந்தார்.
1918: ரஷிய அரச குடும்பமான, ரோமனோவ் குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
2009: அமெரிக்க பத்திரிகையாளரும், டிவி நிகழ்ச்சி தொகுப்பாளருமான வால்டர் க்ரோங்கைட் மறைந்தார்.
தென்கொரியாவில் அரசியலைப்பு சட்டம் உருவான நாள்
ஸ்லோவாக்கியா சுதந்திர தினம்
சர்வ தேச நீதி நாள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக