வரலாற்றில் சில மைல் கற்கள்: ஆகஸ்ட் முதல் தேதி
(விக்கிப்பீடியாவை அடிப்படையாகக் கொண்டு)
கிரிகோரியன் காலண்டர்படி (Gregorian Calendar) இந்த ஆண்டின் 213வது நாள். இந்த ஆண்டில் இன்னும் 152 நாட்கள் பாக்கி உள்ளன.
முக்கிய நிகழ்வுகள்
30 கி.மு. ஆக்டேவியன் (பின்னாளில் அகஸ்டஸ்) எகிப்தின் அலெக் ஸாண்டிரியா நகரைக் கைப்பற்றி அதனை ரோமானியக் குடியரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த நாள்.
527 கி.ப். ஜஸ்டினியன் பைஜாண்டைன் சாம்ராஜ்யத்தின் தலைவரான நாள்.
1291 சுவிஸ் கூட்டமைப்பு உருவான நாள்.
1291 சுவிஸ் கூட்டமைப்பு உருவான நாள்.
1498 கிறிஸ்டோபர் கொலம்பஸ் வெனிசூலாவிற்குள் காலடி
எடுத்த வைத்த நாள். காலடி எடுத்து வைத்த முதல்
ஐரோப்பியர்.
எடுத்த வைத்த நாள். காலடி எடுத்து வைத்த முதல்
ஐரோப்பியர்.
1714 ஜார்ஜ் மன்னர் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் பேரரசரான
நாள். பிரிட்டனில் ஜார்ஜிய வம்சம் (Georgian Era)
ஆரம்பமான நாள்.
ஆரம்பமான நாள்.
1774 பிரிட்டனின் அறிவியல் மேதை பிராண வாயுவைக்
(Oxygen) கண்டுபிடித்த நாள்.
(Oxygen) கண்டுபிடித்த நாள்.
1834 பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் அடிமைத்தனம்
ஒழிக்கப்பட்ட நாள்.
1842 அமெரிக்க பிலடெல்பியா மா நிலத்தில் லம்பார்டுத்
தெருவில் கலகம் வெடித்த நாள்.
1876 கொலராடோ அமெரிக்க ஐக்கிய நாட்டின் 38வது
மாநிலமாக இணைந்த நாள்.
1894 ஜப்பானிற்கும் சீனாவிற்கும் இடையே கொரியா
யாருடையது என்ற போட்டியால் யுத்தம் வெடித்த நாள்.
1911 ஹேரியட் கும்ப்லி அமெரிக்காவின் முதல் பெண்
விமான ஓட்டியாக அங்கீகரிக்கப்பட்ட நாள்.
1914 ஜெர்மானியப் பேரரசு ரஷ்யப் பேரரசிற்கு எதிராக
போர்ப் பிரகடனம் செய்த நாள்.
முதலாம் உலகப் போரின் தொடக்கம்.
1927 நான்சாங் கலவரத்தைத் தொடர்ந்து
குவாமிண்டாங்கும் சீன பொதுவுடமைக் கட்சிக்கும்
இடையே மோதல் துவங்கி, சீனாவின் உள் நாட்டுப்
போராக மாறிய நாள்.
1936 ஜெர்மனியில் பெர்லின் நகரில் ஹிட்லர் தலைமை
தாங்க, 11வது ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பம்.
1943 இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கப் படை
ரோமானிய எண்ணெய்க் கிணறுகளைக் கைப்பற்ற
நடத்திய "ஆபரேஷன் டைடல் வேவ்" (Operation Tidal
Wave) தோல்வியடைந்த நாள்.
Wave) தோல்வியடைந்த நாள்.
1944 இரண்டாம் உலகப் போரில், போலந்தில் வார்ஸா
நகரில் ஜெர்மனிக்கு எதிராக புரட்சி வெடித்த நாள்.
1946 இரஷ்ய விடுதலைப் படை என்ற பேரில் நாஜி
ஜெர்மனியுடன் ஒத்துழைத்த தலைவர்கள் மாஸ்கோ
நகரில் மரணதண்டனை விதிக்கப்பட்ட நாள்.
1960 இஸ்லாமாபாத் பாகிஸ்தானின் தலைநகராக
அறிவிக்கப்பட்ட நாள்.
1964 பெல்ஜியன் காங்கோ, காங்கோ ஜனநாயகக்
குடியரசாக ஆன நாள்.
1966 சீனாவில் கலாசாரப் புரட்சி தொடக்கம். கலாச்சாரப்
புரட்சி என்ற பெயரில் அறிவுஜீவுகளும் மற்றவர்களும்
கொல்லப்படுவது ஆரம்பமான நாள்.
1968 ஹஸானல் போல்க்கியா ப்ரூனய் நாட்டின் 29வது
சுல்தானாக முடிசூட்டிக் கொண்ட தினம்.
1981 அமெரிக்காவில் எம்டிவியின் (MTv) ஒளிபரப்பு
ஆரம்பம்.
ஆரம்பம்.
2004 பராகுவே நாட்டில் அஸன்சியான் நகரில் ஒரு சூப்பர்
மார்க்கெட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 396 பேர்
கொல்லப்பட்டனர்.
முக்கிய பிறப்பு
10 கி.மு. ரோமானியப் பேரரசர் க்ளாடியஸ் (Claudius)
பிறந்த நாள்.
பிறந்த நாள்.
126 கி.பி. ரோமானியப் பேரரசர் பெர்டினாக்ஸ் (Pertinax)
பிறந்த நாள்.
பிறந்த நாள்.
992 கொரிய மன்னர் ஹையான்ஜோங் (Hyeonjong)
பிறந்த நாள்.
பிறந்த நாள்.
1068 சீனப் பேரரசர் டைஸூ (Taizu) பிறந்த நாள்.
1377 ஜப்பானியப் பேரரசர் கோ-கொமாட்ஸூ
(Go-Komatsu) பிறந்த நாள்.
(Go-Komatsu) பிறந்த நாள்.
1520 போலந்து மன்னர் இரண்டாம் சிகிஸ்மூண்ட்
(Sigismund) பிறந்தநாள்.
(Sigismund) பிறந்தநாள்.
1819 உலகப் புகழ் பெற்ற அமெரிக்க எழுத்தாளரும்,
கவிஞருமான ஹெர்மன் மெல்வில் பிறந்த நாள்.
1878 கிரேக்க நாட்டின் தத்துவ ஞானியும், பிரதம
மந்திரியுமான கான்ஸ்டண்டினோஸ்
லோகோதீட்டோபவுலோஸ் பிறந்த நாள்.
1885 ஹங்கேரிய-ஜெர்மானிய வேதியல் நிபுணரும்
நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானியுமான ஜார்ஜ்
ஹெவிஸி பிறந்த நாள்.
1932 புகழ் பெற்ற இந்தி நடிகை மீனாகுமாரி பிறந்த நாள்.
முக்கிய இறப்பு
30 கி.மு. புகழ் பெற்ற ரோமானியத் தளபதியும்
கிளியோபாட் ராவின் காதலருமான
மார்க் அண்டனி இறந்த நாள்.
527 கி.பி. பைஸாண்டைன் பேரரசர் முதலாம் ஜஸ்டின்
மறைந்த நாள்.
1714 பிரிட்டிஷ் பேரரசின் மஹாராணி ஆனி (Queen Anne)
மறைந்த நாள்.
மறைந்த நாள்.
1920 இந்திய விடுதலைப் போராட்டத் தலைவர்
பால கங்காதர திலகர் மறைந்த நாள்.
1970 உலகப் புகழ் பெற்ற ஜெர்மானிய மருத்துவரும்,
உடற்கூறு வல்லுனரும், நோபல் பரிசு பெற்ற
அறிவியல் மேதையுமான ஆட்டோ ஹென்ரிச்
வார்புர்க் மறைந்தார். (இவர் கண்டறிந்த மகத்தான
உண்மைய அமிலத் தன்மையே அனைத்து நாட்பட்ட
நோய்களுக்கும் அடிப்படை. காரத்தன்மை
(அல்கலைன்) உடையவர்களை நோய்கள் எளிதில்
அண்டாது என்பதாகும்.)
2016 ரோமானிய ராணி ஆனி மறைந்த நாள்.
விடுமுறை மற்றும் கொண்டாட்ட நாட்கள்
லெபனானில் படைவீரர்கள் தினம்
சீனாவில் மக்கள் விடுதலைப் படை தொடங்கப்பட்ட நாள்.
அஸர்பெய்ஜானில் அஸர்பெய்ஜானிய மொழி தினம்
பிரிட்டனில் அடிமைத்தனம் ஒழிக்கப்பட்ட நாள்.
வியட் நாமிலும், கம்போடியாவிலும் வெற்றி நாள்
(தேர்ந்தெடுக்கப்பட்டவை மட்டும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக