ஆப்ரஹாம் லிங்கன் அவர்களுக்கு 24 வயது நடந்த சமயத்தில் நடந்த ஒரு சம்பவம்..
அவர் இளம் வயதில் தபால்துறையில் வேலை செய்து வந்தார்..
சில காரணங்களுக்காக அந்த தபால் நிலையம் தற்காலிமாக மூடப் பட்டது..
சில காலம் கழித்து ஓர் அரசாங்க அதிகாரி அந்த தபால் நிலையம் வந்து கணக்குகளை எல்லாம் சரி பார்த்தார்..
அப்படி பார்க்கும்போது கணக்கில் பதினொரு டாலர் மீதி கையிருப்பு இருக்க வேண்டியதை கண்டு பிடித்தார்..
அந்த அதிகாரி ஆப்ராகாம் லிங்கன் வீட்டுக்கு சென்று அவரிடம் பதினொரு டாலர் மீதி கையிருப்பு இருக்க வேண்டும் என்றும்,அந்தப் பணம் அரசாங்க கஜானாவுக்கு செல்ல வேண்டும் என்று சொன்னார்..
உடனே ஆப்ரகாம் லிங்கன் அவர்கள் வீட்டிற்குள் சென்று ஒரு பழைய இருப்புப் பெட்டியை எடுத்து வந்தார்..
அதில் இருந்த பையை வெளியில் எடுத்து அதில் இருந்த பணத்தை கொட்டினார்..
அதில் சரியாக பதினொரு டாலர் இருந்தது..அந்தப் பணத்தை அந்த அதிகாரியிடம் சேர்த்தார்..
நேர்மை,நாணயம் என்பதற்கு லிங்கன் வாழ்வில் இச்சம்பவம் ஓர் உதாரணம்..
ஆம்.,நண்பர்களே.,
நாம் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கும் நல்ல பழக்க வழக்கங்கள் அவர்களின் வாழ்நாள் முழுவதும் உதவுகின்றது..
நேர்மை- நாணயம்- சுய ஒழுக்கம் என்பன போன்ற நல்ல பழக்கங்களை குழந்தைகளுக்கு கற்பிக்கப்பட்டால் அவை அவர்களை நாளைய உயர்ந்த மனிதர்களாக உருவாக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக