24 ஜன., 2020

திருக்குறள் எண் : 64.

அதிகாரம் : மக்கட்பேறு.

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்.

பொருள் : 

தன் குழந்தையின் இனிய மென்மையான கையால் துழாவப் பெற்ற எளிய கூழும்,
அமிழ்தை விட பெற்றோருக்கு இனிமை தரும்.

இனிய காலை வணக்கம் உறவுகளே🙏🙏🙏🙏


இன்று:

தேசிய பெண் குழந்தைகள் தினம்🙏🙏

ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 24-ம் தேதியை, தேசிய பெண் குழந்தைகள் நாளாக அனுசரிக்கிறது இந்திய அரசு. 

பெண் குழந்தைகள் சமூதாயத்தில் சந்திக்கும் பிரச்னைகளைப் போக்கும் விழிப்புணர்வு நாளாக இந்தத் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

கல்வியில் சரியான அங்கீகாரமின்மை, ஊட்டச்சத்து குறைபாடு, மருத்துவம் 
மற்றும் சுகாதாரமின்மை, 
கல்வி பயிலும் இடங்களில் பாதுகாப்பின்மை,
பாலியல் தொல்லை குழந்தைத் திருமணம்
சம உரிமை மறுக்கப்படுதல்
எனப் பல பிரச்னைகளைப் பெண் குழந்தைகள் அன்றாட வாழ்வில் சந்தித்து வருகின்றனர்.

 மனிதர்களின் வாழ்நாளில் குழந்தைப்பருவமே மகிழ்ச்சியானது என்பார்கள். 
ஆனால் நம் தேசத்தில் பெண் குழந்தைகள் எத்தனை இடையூறுகளையும் பிரச்னைகளையும் தாண்டியே பெரியவர்கள் ஆகிறார்கள்.

வாட்ஸ்அப்பில் பெற்றது. 

கருத்துகள் இல்லை: