மறைந்த தமிழ் எழுத்தாளர்
"பிரபஞ்சனின்"பிறந்த நாள் இன்று(27.4.20)
ஒரு சமூகத்தை உயிர்ப்போடும்,
சிந்தனையோடும் வைத்திருப்பது
எழுத்தாளர்களின் எழுத்துக்கள் தான் என்றால் மறுப்போர் இல்லை.
அந்த வகையில் எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களின் எழுத்து தமிழ் சமூகத்தை உயிர்ப்போடும்,அறிவோடும்,
சிந்தனையோடும் வைத்திருந்தது என்றால் அது மிகையில்லை.
நடிகர்களையும்,அரசியல்வாதிகளையும்,விளையாட்டு துறை சேர்ந்தவர்களை கொண்டாடுவதை
விட ஒரு படி மேல் எழுத்தாளர்களை கொண்டாட வேண்டும்.
அவர்கள் தான் நம்முடைய வாழ்வியலையும்,வாழ்க்கை முறைகளையும் உலகிற்கு
கொண்டு செல்பவர்கள்.
ஆயிரம்,இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் நம்முடைய முன்னோர்களின் வாழ்வு எவ்வாறு இருந்தது.
நம்முடைய நிலமும்,வீரமும்,விவேகமும் எப்படி அமைந்திருந்ததை அறிந்து கொள்ள முடிகிறது என்றால்.
அது அன்றைய எழுத்தாளர்கள் எழுதி
வைத்த காரணத்தினால் தான்.
மனித இனமும்,சமூகமும் எவ்வாறு அமைய வேண்டும் என்பதை
திருக்குறள் மூலம் நாம் நாம் தெரிந்து கொள்ள முடிகிறது என்றால் அது திருவள்ளூவர் எழுதி வைத்ததால் தான்.
எனவே எழுத்தாளர்கள் ஒரு சமூகத்திற்கும் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்து அவர்களை போற்றி பாதுகாப்போம்.
இன்றைக்கு நம்மை விட்டு எழுத்தாளர் பிரபஞ்சன் மறைந்து விட்டார் என்பதை நினைக்கும் போது.எவ்வளவு பெரிய எழுத்தாளுமை நம்மை விட்டு போகிறது.
தமிழை பற்றியும்,தமிழினத்தை பற்றியும்,பெண்ணினத்தின் ஆளுமை பற்றியும்,அவர் எழுதிய எழுத்துக்கள் எப்பொழுதும் எதிர்கால தலைமுறையுடன் சொல்லி கொண்டும், பேசிக் கொண்டும் இருக்கும் என்றால் அது மிகையான கற்பனை அல்ல எதார்த்த உண்மைகள்.
எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களுக்கு நம்முடைய அறிவான,சிந்தனை மிக்க இரங்கலை தெரிவித்து கொள்வோம்.
நன்றி: திரு.கா.கு.இலக்கியன், முகநூல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக