சித்த மருந்தென்னும் போதினிலே இன்ப தேன் வந்து பாயுது காதினலே...
அமைச்சர் பாண்டியராஜன், "தண்டையார்பேட்டை மண்டலத்தில் கரோனா தொற்று பரிசோதனை செய்வதற்காக ஐந்து முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் வியாசர்பாடியிலுள்ள அம்பேத்கர் கல்லூரியில் அமைக்கப்பட்ட முகாமில் முற்றிலும் தமிழ் முறையான சித்தா மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சையளிக்க இங்கு 224 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இங்கு நோயாளிகளுக்கு முற்றிலும் சித்தா மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. கரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பில் சித்த மருத்துவம் ஒரு பெரும் பங்காக இருக்கும். உலகத்திற்கே சித்த மருத்துவத்தின் மூலம் தேவையான தடுப்பு மருந்தை தமிழ்நாடு அளிக்கும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது.”
எத்துனை நம்பிக்கைகள்...இது போன்ற பொன்னான வாய்ப்பை சித்த மருத்துவர்கள் மிகச்சரியாக பயண்படுத்துவார்கள் என நம்புகிறேன்.
COVID 19 மருத்துவ சேவை செய்ய முன்வந்த மருத்துவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக