1 ஜூலை, 2020

முழுமையான இன்பத்தோடு வாழ்வோம்!

[6/30, 21:07] Suri Jio: இலக்கணம்,
சூத்திரம் என எழுதி வைத்துச் சென்றதல்ல இந்த வாழ்வு! 

அடுத்த நொடியில், அடுத்த நிமிடத்தில் நிகழப்போகும் எதுவும் எவராலும் உணர முடியாத கோடிக்கணக்கான சுவாரஸ்யங்கள் நிறைந்த வாழ்வில்..
பொருள் தேட ஒரு கூட்டம், 
அதைத் திருட ஒரு கூட்டம், 
அதைப் பாதுகாக்க ஒரு கூட்டம்,
அதற்கு திட்டமிட ஒரு கூட்டம்,
அவர்களிடம் அடிமையாய் ஒரு கூட்டம்!!

அடுத்த நொடியில் 
நாம் சென்று கொண்டிருக்கும் இரயில்
தடம் புரண்டு போகலாம்!
பயணித்துக் கொண்டிருக்கும் பேருந்து
பழுதாகி நிற்கலாம்!
தலைமேல் சுழன்று கொண்டிருக்கும் 
மின்விசிறி கழன்று விழலாம்!
இவை நடக்க வாய்ப்புகள் குறைவு என்று நீங்கள் சொல்லலாம்!
நடக்கவே நடக்காது என்று உங்களால் உறுதியாகக் கூற முடியுமா??!!

மொத்த வாழ்க்கையில கோபம், வெறுப்பு, அவமானம், வஞ்சம், ஏமாற்றம், தோல்வி, வலி, பழி, துன்பம், சோகம், பொறாமை போன்றவற்றைக் கழித்தால் மீதமிருப்பது சொற்ப நாட்களோ அல்லது மணித்துளிகளோ அதையாவது அர்த்தத்துடன் வாழ்ந்தோமா நாம்!

கணவன் மனைவி கருத்து வேறுபாடு!
பக்கத்து வீட்டுக்காரனுடன் வேலிச்சண்டை!
பக்கத்து வயலானுடன் வரப்புச் சண்டை!
பக்கத்து ஊரானுடன் வம்புச் சண்டை!
பக்கத்து மாநிலத்தானுடன் தண்ணீர் சண்டை!
பக்கத்து நாட்டானுடன் எல்லைச் சண்டை!
ஆயிலுக்கும், ஆயுதத்திற்குமென ஆயுசுக்கும் சண்டை!!
குழாயடியில் குடுமிப்பிடிச்சண்டை!
மாமியார் மருமகள் சண்டை!
நாத்தனார் கொழுந்தியால் சண்டை!
போலீஸ் வக்கீல் சண்டை!
முன்னாள் இந்நாள் அமைச்சர் சண்டை!
யார் பெரியவன் எனும் சண்டை!
இன்னும் இன்னும் ஏராள சண்டைகள்!!

இதோ இப்பதிவை வாசித்துக் கொண்டிருந்த அந்த இரண்டு நிமிட சுவாரஸ்யமே நமது மொத்த மகிழ்ச்சியான வாழ்க்கை என எண்ணும் மனம் இருந்தாலே போதும் நாம் வாழும் வாழ்வு அர்த்தமானதாகவும், ஆயிரம் மடங்கு மகிச்சியானதாகவும் இருக்கும்!!

அனைத்தையும் மறந்து அந்த சில மணித்துளி வாழ்க்கையை முழுமையான இன்பத்தோடு வாழ்வோம்!!

நன்றி: திரு DuRai & Facebook
.

கருத்துகள் இல்லை: