2 ஜூலை, 2020

இன்றைய தத்துவமேதை : ஹெராகிளீட்டஸ்

ஹெராகிளிடஸ் (HERACLITUS)


”மாற்றம் ஒன்றே மாறாதது” என்ற இந்த பொன்மொழியைச் சொன்னவர் ஹெராகிளிடஸ் (HERACLITUS) – என்ற கிரேக்க அறிஞர். (படம் மேலே) இவர் கிரேக்கத்தில் சொன்னதை ஆங்கிலத்தில் “மாற்றம் ஒன்றே மாறாதது (Change is the only immutable)” மற்றும் “மாற்றம் ஒன்றே நிலையானது  (Change is the only constant)” என்று இரண்டு விதமாக மொழிபெயர்த்தனர். இன்னும் சிலர் “There is nothing permanent, except Change” என்றும் எழுதினர்.


ஹெராகிளிடஸ், Ephesus  என்ற நகரில் (இது ஆசியா மைனர் என்ற இடத்தில், தற்போதைய துருக்கி நாட்டில் உள்ளது) ஒரு செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவர். சுதந்திரமான சிந்தனையாளர். உலகளாவிய ஒரு சக்தியின் மேல் நம்பிக்கை உள்ளவர். தனிமை விரும்பி. புலம்பல் ஞானி (Weeping Philosopher) என்று அழைக்கப்பட்டவர். தனக்கென்று பின்தொடரும் மாணவர் பட்டாளம் ஏதும் இல்லாதவர். இவரது காலம் கிறிஸ்து பிறப்பதற்கு முன்னர் (கி.மு 535 – கி.மு 475) ஆகும்.

நன்றி : திரு நேயம் சத்யா,  தத்துவங்களத் தேடி,  வாட்ஸ்அப் குழு 

கருத்துகள் இல்லை: