3 செப்., 2020

நூல்மயம் : எஸ்ராவின் துணையெழுத்து

என் பள்ளி காலங்களில் துணை எழுத்தைப் படித்துவிட்டு எஸ்.ராவை சந்திக்க வேண்டும் என ஆவல். நான் எதிர்பாராத விதமாக அவரை சந்திக்க நேர்ந்தது பேச தயக்கம் அருகில் பார்த்துவிட்டு ஆட்டோகிராப் வாங்கிட்டு பேசாமல் வந்துவிட்டேன்.இரண்டாவது முறையாக சந்தித்தம்போது ஒரு வழியா தயக்கத்தை தவிர்த்து அவர் எழுதிய கதா பாத்திரங்களை எல்லாம்மே கேட்கலாம்னு போனா தயக்கத்தால் ஒரு சிரிப்பு சிரிச்சுட்டு போட்டோ எடுத்துட்டு வந்துட்ட, 3முறையா சந்தித்தம்போது எப்டியோ பேசி ஆகணும்னு அவரிடம் நீங்க எழுதியதில்லே உங்களுக்கு பிடிச்ச புத்தகம் எது சார் என்று கேட்டேன். அதற்கு எஸ்.ரா துணை எழுத்து எனக் கூறினார். புத்தகம் படிச்சுட்டு அதில் உள்ள பிரமிப்பு ஒவ்வொரு எழுத்தாளர்களை சந்திக்கிறபோது இருப்பதில்லை. 

எஸ்.ரா மிகவும் பிடிக்க, படிக்க காரணம் துணை எழுத்தில் அன்பின் விதைகள் ஒரு கதையை மட்டும் நீங்களே படிச்சு பாருங்க உங்களுக்கும் பிடிக்கும்.

கையில் ஒரு முகவரியை வைத்துக்கொண்டு நடுத்தர வயது பெண் ஒருவரும் 12 வயது சிறுவனும் எனது தெருவில் யாரையோ தேடிக் கொண்டிருந்தார்கள். குழப்பத்துடன் தெருவில் நின்று கொண்டிருந்தார்கள் அருகில் இறங்கி, யாருடைய முகவரி என்று பார்த்தபோது 'பூமிநாதன், நான்காவது தெரு' என்று மட்டும் இருந்தது. வீட்டு எண் இல்லை.யார் பூமிநாதன்? என்று யோசித்தபடியே, அவர் என்ன வேலை செய்கிறார்? என்று கேட்டேன். தங்களுக்குத் தெரியாது என்று அவர்கள் சொன்னார்கள். எந்த ஊரில் இருந்து வந்தவர், எத்தனை வருடமாக இருக்கிறார்? என்று கேட்டதற்கு தெரியாது என்றே சொன்னார்கள். 

அவர் பெயரை இதுவரை யாரும் கேட்டுக் கொள்ளவே இல்லை. ஒருவேளை அவராகத்தான் இருக்க கூடும் போலிருந்தது புதிதாக ஆரம்பிக்கப்பட்ட பாலர் பள்ளிக்கு அவர்களை அழைத்துக் கொண்டு போனபோது வாட்ச்மேன் கேட் அருகே நின்று கொண்டிருந்தார். 50 வயதைக் கடந்திருக்கும் வெளிறிப்போன காக்கி உடுப்பு அணிந்து இருந்தார் அவர் தான் பூமிநாதன் என்று தெரிந்தது. அவரை பலமுறை பார்த்திருக்கிறேன், இரவில் பாதி இருட்டில் கேட் அருகே உட்கார்ந்து கொண்டு எதையாவது வாசித்துக் கொண்டிருப்பார். 

அந்தப் பெண் ஒரு காகிதகட்டை விரித்து அதில் இருந்து ஒரு பழைய தினசரி பேப்பரை காட்டியபடி, என் கணவர் பெயர் கிருஷ்ணமூர்த்தி அவருக்கு சிறுநீரக அறுவை சிகிச்சைக்காக பண உதவி கேட்டு பேப்பரில் விளம்பரம் கொடுத்து இருந்தோம். நீங்கள் கூட நூறு ரூபாய் அனுப்பிருந்தீர்கள்' என நினைவுபடுத்தினால். அவர் இயல்பாக, அப்படியா? இப்போ சுகமாயிட்டாரா! என்று கேட்டார். அந்த பெண்மணி தனது பையிலிருந்து ஒரு கல்கண்டு பாக்கெட்டும் எலுமிச்சை பழம் ஒன்றை எடுத்து நீட்டினாள், அவர் புரியாதவரைபோல, இவையெல்லாம் எதற்கு? என்று கேட்டார். போன வருஷம் இதே மாசம் அறுவை சிகிச்சை நடந்தது. அப்போ பணம் அனுப்பி உதவவுனீங்க. உங்க தயவுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியல. அவர் குணமாகி, இப்போ வேலைக்கு போக ஆரம்பிச்சிட்டாரு. அதான், உங்களை பார்த்து சேவிச்சிட்டு போகலாம்னு வந்தோம். அவர்கள் பேசிக்கொண்டிருந்தபோது புரிந்தது கணவரின் அறுவை சிகிச்சைக்கு உதவி செய்தவர்கள் ஒவ்வொருவராக பார்த்து பார்த்து தாயும் பிள்ளையும் நன்றி சொல்லிக்கொண்டு வருகிறார்கள். இதுவரை 20க்கும் மேற்பட்டவர்கள் அவர்களை சந்தித்து விட்டார்கள் வியப்பாக இருந்தது. 

பேப்பர்ல 'உதவி தேவை'ன்னு விளம்பரம் கொடுக்காங்கன்னா, நம்மள மாதிரி நாலு பேரு படிப்பாங்க, உதவி செய்வாங்கன்னு நம்பித்தானே செய்யறாங்க.எனக்கும் படித்தவுடனே மனசு துவண்டு போயிடும் சார், அதான். மாத சம்பளத்தில் 50, 100 ஏதோ ஒரு நாலஞ்சு பேருக்கு அனுப்பி வைப்பேன். பெத்த பிள்ளைகள் எல்லாம் சௌக்கியமா இருக்குது. பள்ளிகூடத்துல 1500 ரூபாய் சம்பளம் தராங்க. காசை பொத்தி பொத்தி வச்சு என்ன செய்யப்போகிறோம்? நம்மால் முடிந்ததை செய்யணும் இல்லையா என்றபடி அவர் பூர்த்தி செய்து வைத்திருந்த மணியார்டர் பாரத்தை எடுத்துக்காட்டினார். 

எனக்கு குற்ற உணர்வாக இருந்தது. ஒவ்வொரு நாளும் காலை பேப்பரில் எத்தனை மெடிக்கல் அப்பீல் விளம்பரங்களை பார்க்கிறேன். அவையெல்லாம் யாரோ படிப்பதற்காக என்று எவ்வளவு எளிதாக கடந்து போயிருக்கிறேன். ஏன் அவை என்னை பாதிக்கவே இல்லை. அந்த விளம்பரங்களில் எந்த ஒன்றுக்கும் பத்து ரூபாய்கூட அனுப்பியது இல்லையே! தயக்கம் காரணமாகவோ.. இல்லை, உதவி என்றால் பல்லாயிரம் ரூபாய் அனுப்புவதுதான் என்று எனக்கு நானே பொய்யான ஒரு காரணத்தை நம்பி வந்திருக்கிறேனா? யோசிக்க யோசிக்க தாழ்வு உணர்ச்சி உண்டானது. அவர் பேசிக்கொண்டே இருந்தார். 

ஒரு செடியை வெச்சாக்கூட, அதுல 100 பூ பூக்குது. வாசனையா இருக்குது. ஒரு தென்னை மரத்தை வெச்சா வாழ்நாள் பூரா காய்ச்சு தள்ளிக் கொண்டே இருக்கு. இயற்கையில் அதுகளுக்கு மற்றவர்களுக்கு பிரயோஜன படுற மாதிரி அமைப்பு இருக்கு. மனுஷன் மட்டும்தான் ஒவ்வொண்ணுக்கும் கணக்கு பார்த்துகிட்டு, யாருக்கும் பிரயோஜனம் இல்லாமல் போயிட்டு இருக்கான். சொல்றது சரிதானே சார்? 

நான் அவரது சொற்களை மனதில் நிரப்பிக் கொண்டே இருந்தேன். நெடுநேரம் இருவரும் அமைதியாக இருந்தோம். நான் கூச்சத்தை துடைத்தெறிந்து விட்டு கேட்டேன். அந்த விளம்பரம் உங்களிடம் இருக்கிறதா? 

உலகில் அன்பை விடவும் மிருதுவான பகிர்தல் வேறு ஏதேனும் இருக்கிறதா என்ன? நன்றியும் நேசமும்தானே அன்பின் எளிய வெளிப்பாடுகள்.

நன்றி :

கருத்துகள் இல்லை: